வியாழன், ஜனவரி 12, 2012

பற்களைப் பற்றிய ஒரு பதிவு


திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் எனது முகநூல் நண்பர்.  அவர் மருத்துவம் சம்பந்தமாக நிறைய அருமையான கட்டுரைகள் எழுதி வருகிறார்.  பற்களைப் பற்றிய ஒரு அருமையான கட்டுரை முகநூலில் எழுதியிருக்கிறார்.  எனது வேண்டுகோளின் பேரில் எனது பதிவாக வெளியிட அனுமதி கொடுத்திருக்கிறார்.  எனவே ‘பற்கள் பற்றிய கட்டுரையை எனது பதிவாக வெளியிடுகிறேன்.  படித்துப் பார்த்து தங்களது கருத்துகளை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.


ஆலும், வேலும் பல்லுக்கு உறுதி...நாலும், இரண்டும் சொல்லுக்கு உறுதி என்பது சொலவடை. பேஸ்புக்கின் சொல்லின் செல்வர்களாகிய நாம், நமது பற்களைப் பற்றிய சில முக்கிய குறிப்புகளையும், பாதுகாப்பினையும் தெரிந்து கொள்வோம். படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

பற்கள்:

1. பற்களின் தோற்றம் : ஆரோக்கியமான மற்றும் முழுமையாக உருவாகிய பற்கள் வெள்ளை நிறமாக இருக்காது. இருக்கவும் கூடாது. சிறிது பழுப்பு நிறமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? பலமான பற்கள் சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும். அதனால் கவலைப்படாதீர்கள்.!

2. வளர்ச்சி: குழந்தைப் பருவம் முதல்...!

அ. கீழ் முன்வெட்டுப் பற்கள் – 6 மாதம் முதல் 15 மாதம் வரை

ஆ.பக்கவாட்டு வெட்டுப்பற்கள் – 9 மாதம் முதல் 15 மாதம் வரை

இ. கீழ்த்தாடை முதல் அரைக்கும் பற்கள் – 12 மாத அளவில்

ஈ. கீழ்த்தாடை இரண்டாம் அரைக்கும் பற்கள் -20 மாத அளவில்

உ. கீழ்த்தாடை அரைக்கும் பற்கள் – 16 மாத அளவில்

ஊ. நிரந்தரப் பற்கள்:

மைய வெட்டுப்பல் – 6-7 வயதில்

பக்க வெட்டுப்பல் – 7-8 வயதில்

கோரைப் பற்கள் – 9-10 வயதில்

முதல் "முன்" கடைவாய்ப் பற்கள் – 10-12 வயதில்

இரண்டாம் "முன்" கடைவாய்ப் பற்கள் – 11-12 வயதில்

முதல் கடைவாய்ப் பற்கள் – 6-7 வயதில்

இரண்டாம் கடைவாய்ப் பற்கள் – 11-13 வயதில்

மூன்றாம் கடைவாய்ப் பற்கள் – 17..18 வயதில். சில சமயம், இந்தப் பற்கள் சுமார் ஓரிரு ஆண்டுகள் தாமதமாக முளைக்கலாம்.

பற்களில் ஏற்படும் காரை மற்றும் இன்பெக்ஷன்: உமிழ் நீரில் உள்ள ஜீலீ 7 ன் அளவு குறையுமானால், அதிலுள்ள கால்சியம் மற்றும் உப்புச்சத்து...பற்கள், மேல் படிந்து காரையாக மாறிவிடும். இது ஆரம்பத்தில் படிமமாக்கப்பட்டு, கடினமாகும். ஈறு உள்ள இடத்தில் தங்குவதால், ஈறினை உறுத்தி வலியை ஏற்படுத்தும். இந்தக் காரை..மஞ்சளாகவும், கருப்பாகவும், இளநீலமாகவும் இருக்கும். இது பற்களின் மேல் படிவதால் பயோரியா வியாதி ( பாக்டீரியல் இன்பெக்ஷன்) ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்ல, பற்களை சரியாகச் சுத்தம் செய்யாதவர்களின் பற்களிலும் கரை படியும்!

பல் பிடிங்கிய பிறகு :பற்கள் எடுத்த இடத்தில் வைக்கப்பட்ட பஞ்சினை சுமார் ஒரு மணி நேரம் கழித்து நீக்கிவிட வேண்டும்.நாக்கையோ, விரலையோ பயன்படுத்தி பல் எடுத்த இடத்தை நோண்டக் கூடாது. டாக்டரின் ஆலோசனையில்லாமல் ஐஸ்கட்டி வைப்பதை தடுக்க வேண்டும்.பற்கள் எடுத்த ஆறு மணி நேரத்திற்குப் பின், வெந்நீரில் சிறிது சமையல் உப்புக் கலந்து வாய் கொப்பளிக்கலாம். தொடர்ந்து இரத்தக் கசிவு இருக்குமேயானால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 

உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்

உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல்  வாழ்த்துகள்.


மிக்க நன்றி.

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  2. அருமையான தகவல்.
    அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. பல்லு போன சொல்லு போச்சு...
    பயனுள்ள விவரங்களை தாங்கிய தங்கள் பதிவுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. பல் பற்றிய பயனுள்ள அருமையான தகவல்கள் ஐயா,
    நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  6. பயனுள்ள பகிர்வு. மிக்க நன்றி.

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. பல்லுப்போனால் சொல்லும் போய்விடுமே !

    பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கு மருத்துவத் துறையின் மீது அபாரமான காதல். ஆன்மீகத்தை அடுத்து இந்த பதிவுகள் வருகிறது. எல்லாம் பயனுள்ளவைதான்.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  10. தகவல்கள் களஞ்சியமாக இங்கே கிடைக்கப் பெற்றேன் ஐயா.
    பகிர்வுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  11. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதற்கு நீங்கள் உதாரணம் பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. ''பலமான பற்கள் சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும்''. - அப்பாடா இப்பதான் கொஞ்சம் நிம்மதி....
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு