வெள்ளி, ஜனவரி 13, 2012

மகரிஷி மகேஷ் யோகி பற்றி ஒரு பதிவு

எனது முகநூல் நண்பர் திரு ராம சுப்ரமணியம் நாகேஸ்வரன் இன்றைய முகநூலில் ‘மகரிஷி மகேஷ் யோகி பற்றி ஒரு அருமையான கட்டுரை எழுதியிருக்கிறார்.  மனவலிமை, பிரார்த்தனையால் என்னென்ன சாதிக்க முடிந்த்து என்று எழுதியிருக்கிறார்.  படித்துப் பாருங்கள்.  எனது பதிவாக வெளியிட அனுமதி அளித்த எனது இனிய நண்பர் திரு ராம சுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றி.  இந்த மாமனிதர் எனக்கு நண்பராக நான் பெற்றது நான் செய்த புண்ணியம் தான்





1962 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டது. சீனப்படையினர் இந்திய வீரர்களையும்,ஆயுதங்களையும் கைப்பற்றி முன்னேறிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் இங்கிலாந்தில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்தார்.அங்குள்ள மக்களிடம்,
“போரின் காரணமாக எனது இந்திய‌ நாடு சண்டையில் ஈடுபட்டுள்ளது. எனவே உடனடியாக நான் இந்தியா போக வேண்டும்” என்று சொல்ல,அங்குள்ள மக்கள் மகரிஷியிடம்,“உங்கள் ஞாபகார்த்தமாக ஏதாவது ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும்” என்று கேட்டனர்.உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு டேப் ரெக்கார்டரை எடுத்து வருமாறு பணித்தார்.



Science of being and art of Living என்ற தலைப்பின் கீழ் ஆன்மீக சொற்பொழிவாற்றி அவர்களுக்கு அளித்தார்.பின்னர் அச்சொற்பொழிவைப் புத்தக வடிவில் Penguin என்ற நிறுவனத்தினர் வெளியிட்டனர்.அது அவர்களுக்குக் கோடிக்கணக்கில் டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது என்பவை செய்திகள்.!


இந்தியா வந்த மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களை சந்தித்து,“இப்போரை என்னால் தடுத்து நிறுத்த முடியும்.ஆனால்,நான் சொல்கிறபடி சில செயல்களை போர் நடக்கும் இடத்தில் செய்ய உங்களால் முடியுமா?” எனக் கேட்டார்.!


அதற்கு இந்திய ஜனாதிபதி, “முடியாது...எங்கள் அரசு ஒரு சாமியார் பின்னால் போய்விட்டதாக மற்ற கட்சிகள் அவதூறு கூறுவார்கள்.ஆகவே,அரசு சம்பந்தப்படாமல் தாங்களே தனியாக எதுவும் செய்து போரைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று பாருங்கள்” என தனது இயலாமையை வெளியிட்டார்.



உடனே,மகரிஷி மகேஷ்யோகி அவர்கள்,தனது செயலாளர் தேவேந்திராவுடன் போர் நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மலைக்குகைக்குள் சென்றார். அவ்விடம்,“இந்தப் போர் நடப்பதற்கு சீனாவில் உள்ள ஒரு மனித மூளையே காரணம்.அவர் மனதை மாற்றிவிட்டால் போதும். அதை தியானம் செய்து மாற்றப் போகிறேன்.நான் வெளியில் வரும்வரை காவலாக இரு.யாரையும் உள்ளே விடாதே” என்று கூறி உள்ளே சென்றுவிட்டார்.




பின்,24 மணி நேரம் கழித்து வெளியே வந்த மகரிஷி மகேஷ்யோகி பக்கத்திருந்த ஊருக்குச் சென்று தினசரிப் பத்திரிகை வாங்கி வா என்று அனுப்பி வைத்தார்.பத்திரிகை வங்கிப்படித்த மகரிஷியின் செயலாளருக்கு ஆச்சரியமாக இருந்தது.ஆம்,சீனா சண்டையை நிறுத்தி விட்டது.தன் படைகளை இந்தியாவின் எல்லையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டது.



இதைப் படித்ததும் அவரால் நம்ப முடியவில்லை; ‘இப்படியும் நடக்குமா?’ என்று ஆச்சரியத்தில் அதிர்ந்து போனார். என்னாலும் நம்ப முடியவில்லை. எனவே தான் கீழே அதன் ஆதாரங்களை கொடுத்திருக்கிறேன்.!

நன்றி:மகரிஷியின் ஆழ்நிலை தியானம்,பக்கம்71,72.வெளியீடு:மணிமேகலைப் பிரசுரம்,சென்னை 4.விலை:ரூ.80/-




யோகக்கலை “ஆழ்நிலை தியானம்” எனும் Transcendental Meditatior (T.M.) இதன் செயல் முறையை எளிமையாக செய்யக்கூடிய மந்திர ஜபமாக மாற்றி உலகப்புகழ் பெறுமாறு வளர்த்தவர் மகரிஷி மகேஷ் யோகி (1917 – 2008) அவரால் 1955 ல் ஆழ்நிலை தியானம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1957 ல் மகரிஷி உலக சுற்றுப்பயணம் செய்து இந்த தியான முறையை பரப்பினார். 1959 ல் அவர் ‘அகில உலக தியானஸ்தாபனம்’ என்ற அமைப்பை துவங்கி, 1961 லிருந்து ஆழ்நிலை தியானத்தை பயில்விக்க, பல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். வேகமாக பரவிய ஆழ்நிலை தியானம் குறிப்பாக அமெரிக்கர்களை மிகவும் கவர்ந்தது. 1998 ல் மகரிஷியின் ஸ்தாபனத்தால் 1000 பயிற்சி கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன. 40 லட்ச ஜனங்கள் இந்த தியான முறை கற்றனர். மகரிஷியின் ஸ்தாபனத்தின் சொத்துக்கள் / பண இருப்பு – 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஒரு பில்லியன் என்றால் இலட்சம் கோடி! சுமார் மூன்றரை இலட்சம் கோடி அமெரிக்கன் டாலர்கள். எம்பூட்டுன்னு தெரியலையே...! அனேகமா ரவி சாருக்கு Ravi Nag..தெரிந்திருக்கும்.!


ஆழ்நிலை தியானம் பிரசித்த பெற்ற யோக முறை மட்டுமல்ல. மிக அதிகமாக ஆராய்ச்சிகள் நடத்தப்பெற்ற தியான முறையாகும். பல ஆய்வுகள் இதனால் குறிப்பிடும்படியான பயன் ஏதுமில்லை, தவிர மற்ற தியான முறைகளை விட இது சிறந்ததல்ல என்கின்றன. ஏனைய ஆய்வுகள் ஆழ்நிலை தியான மந்திரங்களால் பலனுண்டு என்கின்றனர். உண்மையில் நமக்கு ஒன்றுமே இது பற்றி தெரியாது.! எனவே அந்த சங்கதிகளுக்குள் நாம் செல்ல வேண்டாம்.


மகரிஷி மகேஷ் யோகி: ஜனவரி 12...1917...பிரவரி 5...2008. (91ம் அகவை) ...இன்று (நேற்று) அவரது 95ம் பிறந்தநாள். ஒரு சிறு நினைவு கூறல்.


இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 

உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்

உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய பொங்கல்  வாழ்த்துகள்.


மிக்க நன்றி. 

31 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. இதுவரை அறியாத அருமையான தகவல்
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  3. எனதினிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  4. பகிர்வுக்கு நன்றி.
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  5. த்யானம் செய்யும் மகிமை.
    அருமையான எல்லோருக்கும் பயன்படப் போகும் பதிவு.
    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நாள்நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  6. யோகமும்,தியானமும் மனித உடலுக்கும்,மனதுக்கம் மிக,மிக நல்லது,உடல் உழைப்பு அதை விட பண் மடங்கு நல்லது.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாசனி, ஜனவரி 14, 2012

    அருமையான தகவல்...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
    பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  8. 1982 முதல் இன்று வரை ஆழ்நிலை தியான்ம் செய்கிறேன்.
    இது பற்றி தொ.போ.மி அவர்கள் 2 புத்தகம் எழுதியுள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
  9. 1982 முதல் இன்று வரை ஆழ்நிலை தியான்ம் செய்து வருகிறேன்.

    ஆழ்நிலை தியானம் பற்றி திரு.தொ.போ.மீ. அவர்கள் 2 புத்தகங்கள் எழுதியுள்ளார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  10. இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  11. இல்லத்தில் உள்ளத்தில் உள்ள அனைவருக்கும் தமிழ புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் . இடுகைக்கு பாராட்டுகள் .

    பதிலளிநீக்கு
  12. தியானத்தில் நல்ல பலன்களை பெறலாம்.
    அதை விளக்கும் அருமையான பகிர்வு.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  13. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  14. தங்களின் பகிர்விற்கு எனது மனம் கனிந்த நன்றிகள் .இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. ஆழ்நிலை தியானத்தை என்னுடைய பதினாறு வயதிலே நண்பன் ஒருவனுடன் இணைந்து சென்று முறைப்படி கற்றுக் கொண்டேன். மூன்று வருடங்கள் தொடர்ந்து செய்த பொழுதிலும் ஒரு சில மன உளச்சல்களை சரியாக கையாள முடியவில்லை. 1980ம் வருடத்தில் நிகழ்ந்த நிகழ்வு. பிறகு வேதாத்திரி மகரிஷி அவர்களின் SKY தியானப் பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகு மனதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
    காலப் போக்கில் இந்த முறையும் தியானத்தின் துவக்கமே என்று புரிய ஆரம்பித்தது.

    மஹரிஷி மகேஷ் யோகி அவர்களைப் பற்றிய போரை நிறுத்திய செய்தி கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும் எப்படி என்று விளக்க இன்று ஆட்கள் இல்லை. இந்தக் கலையை வேறு யாரும் கற்றுக்கொள்ளவில்லையா? அப்படியானால் லஞ்சத்தை மட்டுமாவது ஒழிக்க வழி இருந்திருக்குமே? எத்தனையோ கேள்விகளுக்கு விடையுமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  16. வணக்கம்,
    தங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
      வாழ்த்துகள்.

      நீக்கு
  17. ஆழமான பயனுள்ள பகிர்வு ஐயா.. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
      வாழ்த்துகள்.

      நீக்கு
  18. தங்களுக்கும் இனிய குடும்பத்தினர்
    அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
      வாழ்த்துகள்.

      நீக்கு
  19. ஆழமான பயனுள்ள பகிர்வு ஐயா.. பாராட்டுக்கள்.

    தங்களுக்கும் இனிய குடும்பத்தினர்
    அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு