வியாழன், மே 03, 2012

திரு சுஜாதாவின் கடிதம்


நான் திரு சுஜாதாவின் எழுத்துகளை ‘நைலான் கயிறு’ நாவலிலிருந்து படித்து வருகிறேன். எனக்கு ‘தமிழக நாடார் வரலாறு’ என்ற புத்தகம் கிடைத்தது.  திரு சுஜாதாவின் எழுத்தின் மீது உள்ள ஈர்ப்பினால் அவரது பெங்களூர் முகவரிக்கு ‘தமிழக நாடார் வரலாறு’ புத்தகம் அனுப்பி வைக்கவா என்று கடிதம் எழுதினேன்.  ஆச்சரியம்.  3.5.80 நாள் போட்ட ஒரு கடிதம் வந்ததுதிரு சுஜாதாவின் கடிதம் அப்போது ஒரு புத்தகம் அல்லது பார்சல் அனுப்புவது என்பது கடினமான காரியம்.  இப்போது கூரியரில் என்ன வேண்டுமானாலும் அனுப்பி விடுகிறோம்.  அந்த புத்தகத்தை பதிவு தபாலில் அனுப்பினேன். 

க்
சிறிது காலம் கழித்து குமுதத்தில் ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ என்று ஒரு தொடர்கதை துவங்கியது.  ஆரம்பத்தில் அந்த கதாநாயகனின் பெயரை குறிப்பிடும் போது ‘அவன் பெயர் ரத்தினம்’ (எனது பெயரை குறிப்பிட்டிருந்தார்) என்று ஆரம்பித்தார்.  அருமையாக சென்று கொண்டிருந்தது.  திடீர் என   நின்று விட்டது.  ஏன் என்று கேட்டால் அவர் ஆபாசமாக எழுதி விட்டார் என்றார்கள்.  அதில்  உள்ள கதாபாத்திர பெண்மணியை வர்ணிக்கும்போது – அவள் ஓடும் போது அவளது மார்புகள் முயல் குட்டிகள் போன்று துள்ளினஇவை தான் அவர் எழுதியவை.  எதிர்ப்பு கிளம்பியது என்றார்கள்.  இது ஒரு Organised Violence.  ஏன் என்றால் நாடார்கள் பெரும்பான்மையாக இருக்கும்  - அப்போது உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில், அல்லது நெல்லை மாவட்டத்தில் நடக்கவில்லை.  சென்னையைச் சுற்றி சில இடங்களில் புத்தகங்களை எரித்திருக்கிறார்கள்.  சிலர் மொட்டைக் கடிதாசு, தொலைபேசியில் குமுதம் அலுவலகத்திற்கு மிரட்டல்.  அப்போது பேசிக்கொண்டார்கள் – போட்டி வாரப்பத்திரிகையின் ஏற்பாடு என்றும் அதில் ‘தாமரை’ பெயருள்ளவர் ஆசிரியர் குழுமத்தில் இருந்தார் என்றும் அவரது ஏற்பாடு என்றும் சொன்னார்கள். 
பிறகு அதே கதையை ‘ரத்தம் ஒரே நிறம்’ என்று ஆரம்பித்தார்.  அப்போது தாமரை அடங்கி விட்டது போலும்.  ‘ரத்தம் ஒரே நிறம்’ அருமையாக தொடர்ந்தது.  அப்போது குமுதம் விலை 35 காசுகள், கல்கண்டு விலை 15 காசுகள் – எனவே எட்டணா  கொடுத்தால் 2 புத்தகங்கள்.  சனிக்கிழமை  தான் கிடைக்கும்.  படிப்பதற்கு போட்டி இருக்கும்.  எனக்கு மறு நாள் தான் கிடைக்கும்.  சில நேரங்களில் எனது முறை வரும்போது புத்தகம் எங்காவது போய் விடும்.  பின்பு குமுதம் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள்.  ரத்தம் ஒரே நிறம் படிப்பது முடியவில்லை.  நான் காசு போட்டு வாங்கி புத்தகம் படிக்கும் அளவு எனக்கு வசதி இல்லை.  கடந்த வருடம் புத்தக கண்காட்சி சென்னையில் நடக்கும் போது எனது முகநூலில் ‘ரத்தம் ஒரே நிறம்’ புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டேன்.  எனக்கு மதுரையை தாண்டி பழக்கமில்லை.  திரு ரோமிங் ராமன் என்று ஒரு அருமையான நண்பர் மின்னஞ்சலில் எனது முகவரியை கேட்டார்; தொலைபேசியில் பேசினார்.  புத்தகம் என்ன விலை, நான் பணம் அனுப்புகிறேன் என்று சொன்னேன்.  அவர் புத்தகத்தை வாங்கி அனுப்பினார்.  அவரது முழு முகவரி இல்லை.  அவரது பெயரும் சென்னை என்று மட்டும் இருந்தது.  தொலைபேசியில் கேட்டேன் – அவரது முகவரியை தரும்படி.  அவர் அன்புடன் மறுத்து விட்டார்.  ஸ்ரீ ஆண்டாளைப் பார்க்க வரும்போது என்னை வந்து பார்க்கிறேன் என்றார்.  பின்பு ஒரு தடவை வந்தார்.  அது அன்புப் பரிசு என்றார்.  திரு ரோமிங் ராமன் அவர்களுக்கு மனப்பூர்வ நன்றி.
இது தான் அந்த அன்புப் பரிசு.


எனது புத்தகம் வந்ததை சில நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார்.  அவர்கள் தொலைபேசியில் மிரட்டியதை – நகைச்சுவையாக ‘எனக்கு இடது கையால் சவரம் செய்வது சிரமம்’ என்று சொல்லியிருக்கிறார்.
இன்று (3 மே)  திரு சுஜாதா அவர்களுக்கு  பிறந்த நாள்.  இந்த தருணத்தில் அவரது கடிதத்தை வெளியிடுவதில்  மகிழ்ச்சி கொள்கிறேன்.  

எனது பதிவிற்கான Profile இல் இதை கூறியிருக்கிறேன்.
அவர் ஒரு சமுத்திரம்.  நானும் கடுகளவாவது சம்பந்தப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி.
இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.


37 கருத்துகள்:

 1. அருமை அருமை அருமை!
  வாத்தியாரின் பிறந்தநாள் பதிவு இப்படிப்பட்ட நினைவலைகளுடன்!
  சூப்பர் சார்!
  அவர் இன்றும் நம்மோடு அவர் புத்தகங்கள் வாயிலாக வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறார்!

  பதிலளிநீக்கு
 2. தலைவருக்கு நீங்களும் ரசிகராக, வாசிப்பாளராக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. ரத்தம் ஒரே நிறம் புத்தகமாக வந்த புதிதில் வாசித்தது. மீண்டும் வாசிக்கத் தோன்றுகிறது.

  நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 3. Great! ரத்தம் ஒரே நிறம் , சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சித்தப்பாவின் பங்கு அதில் உள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி.
  பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 4. ஐயா,

  உரிய நாளில் உங்களைப்பற்றிய ஒரு அரிய தகவலைப் பகிர்ந்திருப்பது சிறப்பே.

  பதிலளிநீக்கு
 5. பிறந்தநாள் பதிவு நினைவலைகளுக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 6. நல்ல பதிவு, நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையை நான் படித்துள்ளேன். அவரின் /// //நகைச்சுவையாக ‘எனக்கு இடது கையால் சவரம் செய்வது சிரமம்’ என்று சொல்லியிருக்கிறார் ///// அது தான் சுஜாதா. சுஜாதா அவர்களின் "கடவுள்". (உயிர்மெய் வெளியீடு) படித்து பித்து பிடித்து இருக்கிறது தமிழ் வாசகனால் எல்லா காலத்திலேயும் நன்றியுடன் நினைவு வைத்து கொள்ள வண்டிய மிக பெரிய எழுத்தாளர். by B.L.Periyar Kumar

  பதிலளிநீக்கு
 7. சுஜாதா பற்றி அவரின் பிறந்த நாளில் நல்லதொரு பகிர்வு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. நல்ல பதிவு சார் ... கடுகளவேனும் காரம் குறையாதல்லவா ..

  பதிலளிநீக்கு
 9. வெகு அருமை.அதுவும் வாத்தியார் சாரின் பிறந்தநாளை நினைவு கொண்டு அந்த மாபெரும் மனிதரை
  நினைவு பதிவாக இட்டது நன்றி
  கொண்டாட வேண்டிய விஷயம்.ரத்தம் ஒரே நிறம்.எவ்வளவு காண்ட்ரவர்சி. மனுஷன் எவ்வளவு வருத்தப் பட்டிருப்பார்.
  மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. என்பதுகளில் நாடார்களின் கோபத்திற்காளாகி அந்த நாவலை கைவிட்டார் திரு சுஜாதா. அந்த நேரம் அது ஒரு பரபரப்பான செய்தி. தாங்களுக்கு உயிர்மெய் பதிப்பகத்தின் மூலம் அந்த நாவல் கிடைத்திருக்கிறது. முழுமையாக உள்ளதா அது ? என்னதான் அவர் அறிவாளியாக இருந்தாலும் இறுதி நாட்களில் நாலாயிர திவ்யபிரபந்தம் படிக்கச்சொல்லி கேட்டு மரணமடைந்தார்.அவர் ஒரு சனாதனவாதி எனக்கூட சொல்லக்கூடுமோ? தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 11. இந்த சிறப்பு மிக்க நாளில் மிகவும் பொக்கிஷம் போன்ற செய்தி ஒன்றினை பகிர்ந்துகொண்ட உங்களுக்கு நன்றி! நன்றி!!

  பதிலளிநீக்கு
 12. அருமையான பகிர்வு,... வாத்தியாரின் பிறந்த நாளான இன்று அவரது புகழ் போற்றுவோம்...
  மிக்க நன்றி.....
  தங்களுடைய வலைப்பக்க தலைப்பை பார்த்தவுடன் நினைவுக்கு வந்து மீண்டும் படித்த கதை..முன்னுரையிலேயே கலக்கியிருப்பார்... இதை எனது ’’வாத்தியாருக்கு வந்தனம்’’நினைவு நாள் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்,,..

  பதிலளிநீக்கு
 13. தொடராக வந்த போதே வாசித்த கதை. தங்கள் பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. அய்யா வாசித்தேன். சுஜாத்தா அவர்கள் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. எது கிடைத்தாலும் வாசித்து தயக்கமே இல்லாமல் அபிப்பிராயம் சொல்லக் கூடியவர்

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லாவியாழன், மே 03, 2012

  பிறந்தநாள் பதிவு நினைவலைகளுக்கு பாராட்டுக்கள்
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 16. குமுதம் வார ஏட்டில் சில வருடங்களுக்கு முன் சுஜாதா அவர்அவர்கள் ஹக்கு ஹபென் முதலான ஜப்பானிய செய்யுள் வடிவங்களை விளக்கி,வாசகர்களை எழுதப்பணித்தார்,இந்தக்கவிதையின் மையக்கருவின் வரிகளை நான் எழுதி அனுப்பியபோது அது சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குமுதத்தில் பிரசுரமான கவிதைகளில் ஒன்றாக இடம்பெற்று எனக்கு மகிழ்வையும் பெருமையும் சேர்த்தது;இதோ அந்தக்கவிதை

  பிரசவ வேதனை

  *கருவுற்றாள் மனைவி என்றதுமே
  நினைவெல்லாம் அவள் உருவமேயாகி

  காலையில் தாமதமாய் கண்விழித்து

  நேரத்தே துயில் கொளும்வரை
  கண்காணித்து

  செலவைக் குறைத்து
  சிக்கன உண்டியலில் சேர்த்து

  *வயிற்றில் வலியென்றதும்
  தன்நெஞ்சில் வலிகொண்டு

  ஆட்டோ பிடித்து
  மருத்துவமனை சேர்த்து

  மருந்துக் கலைந்து
  மூட்டையாய் வாங்கிக்கொடுத்து

  *வெளியில் காத்திருந்து
  வயிறு காய்ந்து

  ஒரு வழியாக
  ஒரு - வழி - யாக

  குழந்தை பிறந்ததுமே
  நிம்மதி மூச்சுவிட்டு

  *மருத்துவமனை நீங்கும்வேளை

  கட்டணப் பணத்தைப்
  பெட்டியோடு கொடுத்திட்டு

  தாயையும் சேயையும்
  வாடகைக்காரினில் சுமந்து

  *வீடு திரும்பினால்
  வாசலிலே வரவேற்பு ,

  நாளைய கேள்வி-

  பிரசவம் பெண்ணுக்கு
  வேதனை பெண்ணுக்கு மட்டுமா!

  பதிலளிநீக்கு
 17. சிறப்பான பதிவு ! பாராட்டுக்கள் !

  பதிலளிநீக்கு
 18. நீண்டு விடும் வாழ்வதனை
  தீண்டிப் பார்த்து வாழ்ந்துவிடு..
  தீண்ட வரும் நச்சு செயலதனை
  தாண்டி நீயும் வந்துவிடு!
  வேண்டாமய்யா உன் தற்கொலை முயற்சி
  மாண்டவர் மீள்வதில்லை
  பாண்டவர் நெஞ்சுறுதிகொண்டு
  ஆண்டாண்டு வாழ்ந்துவிடு...

  அருமையான கவிதை சகோதரி..

  பதிலளிநீக்கு
 19. சில நினைவுகள் இதம் தரும், சில பெருமிதம் தரும்.அதுவும் ஒரு சிறந்த எழுத்தாளனின் தொடர்பு பற்றிய நினைவுகள் இரண்டையும் தரும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் புத்தகப் பரிசு என்பது மிகவும் விரும்பத்தக்கது. அந்தக் காலத்திலே ஒரு புகழ் பெற்ற எழுத்தாளருக்கு நீங்கள் பரிசு ஒன்றை அனுப்பி அவருடைய கதையின் கதாநாயகனுக்கு உங்கள் பெயர் வைக்குமளவிற்கு மனதில் இடம் பிடித்தது சுவாரசியம்.

  பதிலளிநீக்கு
 21. சுவாரசியமான மிகவும் ரசித்து வாசித்த பதிவு!

  பதிலளிநீக்கு
 22. அட நம்ம தலைவருக்கே புத்தகம் அனுப்பி இருக்கீங்களா ரத்னவேல் சார்.. ரொம்ப சந்தோஷமாக இருக்கு..:)

  பதிலளிநீக்கு
 23. சுஜாதா அவர்களின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்.
  மிகவும் மனம் கவர்ந்த ஆசிரியர். அவர்களுடன் உங்களுக்கு கடித தொடர்பு உண்டு, மேலும் உங்களயே கதாநாயகனாக ஆகியிருக்கிறார் என்று தெரியும் பொழுது சந்தோசமாய் உள்ளது.

  வலைபூவிற்கு நான் புதியவன் என்பதால் தங்கள் அறிமுகம் தற்போது தான் கிடைத்தது. இனி தவறாது வருகிறேன். தங்களைத் தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 24. "கறுப்பு சிவப்பு" தொடர்கதை குறித்த கலாட்டா நினைவிருக்கிறது. ரத்தம் ஒரே நிறம் அதே கதையா?!
  'தாமரை' பெயருடைய எழுத்தாளர் யார் - நீங்கள் ஒன்றும் குற்றம் சாட்டவில்லையே, வெளிப்படையாக எழுத வேண்டியது தானே? (தெரிஞ்சுக்கணும்னு துடிக்கிறேன் ஐயா :)

  பதிலளிநீக்கு
 25. சுவாரஸ்யமான நிகழ்வு. சிறப்பான பதிப்பு.

  பதிலளிநீக்கு
 26. நல்ல பதிவு.நாடார் வரலாறு நூல் எனக்கு தேவைப்படுகிறது.கிடைக்குமிடத்தைத் தெரியப்படுத்த முடியுமா? என் மின்னஞ்சல் முகவரி:editorkomal@gmail.com

  பதிலளிநீக்கு
 27. இந்த புத்தகத்தின் பதிப்பகம் மற்றும் கிடைக்குமிடம் பகிரவும்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 28. சுஜாதா அவர்களின் பிறந்த நாள் அன்று அருமையான தகவல்.அய்யா அவர்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 29. ரத்தினவேல் அய்யாவின் வாழ்க்கை அனுபவங்கள் , சந்தித்திருக்கின்ற மனிதர்கள், அவருடைய தமிழ் ஆர்வம் ,உதவும் மனப்பாங்கு , இவை எல்லாவற்றிற்கும் துணை நிற்கும் அவர் வீட்டம்மா......ஒரு புத்தகமே எழுதலாம் இவரைப் பற்றி. இவர் என் நட்பு வட்டத்தில் இருப்பது எனக்கு மிகுந்த மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது.இனிதே வாழுங்கள் அய்யா .என் உளமார்ந்த வாழ்த்துகள் .

  பதிலளிநீக்கு
 30. திரு.சுஜாதா எழுதிய "கருப்பு சிவப்பு வெளுப்பு" என்ற நாடார்களின் வாழ்க்கை வரலாறை பற்றிய தொடர் குமுதத்தில் வந்ததைக் குறித்தும், எதிர்ப்புகள் காரணமாக அவர் நிறுத்தியதை குறித்தும் அடிக்கடி என் அப்பா சொல்லி இருக்கிறார் சார்.. அது உண்மையாகவும், எழுத்தோட்டம் சிறப்பாகவும் இருந்தது எனக்கூறி அந்த கதையை (பாதிரியார் கதாபாத்திரம் உட்பட) இன்றும் நினைவில் வைத்து விலாவரியாக சொல்வார் சார்.. இடையில் திரு.சுஜாதா இத்தொடரை நிறுத்தியபிறகு பலர்(திரு.சோ உட்பட ) எலுதக்கேட்டுக் கொண்டதையும் சொல்லி இருக்கிறார்.. "அது திரும்ப வந்ததா, அதை ஒட்டி வேறு நாவல் எழுதியிருக்கிறாரா எனத் தெரியவில்லை" எனக்கூறி இருக்கிறார்.. தெரிந்தால் யாரிடமாவது விசாரித்து பெயரை சொல்லும்படியும் கேட்டிருந்தார் சார்.. அது ரத்தம் ஒரே நிறம் தொடராக வந்ததை உங்கள் மூலம் இப்போதுதான் அறிந்தேன் சார்.. உங்களைப்பற்றி ஏற்கனவே அப்பாவிடம் சொல்லி இருக்கிறேன்.. இன்று இந்த பதிவைப் பற்றியும், புத்தகத்தின் பெயரையும் சொன்னபோது உடனே வாங்குவதாகச் சொல்லி சந்தோஷப்பட்டார்.. நன்றி சார் :) ...

  பதிலளிநீக்கு
 31. முன்பு ஒரு முறை சுஜாதா குறித்தான முகநூல் உரையாடலில் எனக்கு இந்த கடிதத்தினை குறித்து தெரிவித்துள்ளீர்கள். நன்றி.
  இராமநாதன்.என்.

  பதிலளிநீக்கு
 32. வாசிப்பு பழக்கத்திற்கு மூலகாரணமே சுஜாதா என்றால் மிகையாகாது.இந்த நாளில் அவரை நினைத்து பார்க்க வைத்தற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. வெகு அருமை. தகவலுக்கு நன்றி !!!
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு