ஞாயிறு, ஏப்ரல் 09, 2017

கேரள பயணம் (15.1.17 – 17.1.17)


This Post / Blog is dedicated to our  Elder Son Shri Vijayavel Rathnavel who had planned & made the Tour A Grand Success & also fulfilled my ambition to visit Kerala with Family Members (thought during my 1981 Visit).

தைப்பொங்கல் விடுமுறைக்கு எங்கள் மூத்த மகன் திரு விஜயவேல் குடும்பத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்திருந்தார்.  சில மாதங்கள் முன்னதாக எங்களுக்கு போன் செய்து பொங்கலுக்கு கொல்லம் (கேரளா) பகுதி பயணம் செய்யலாமா, ஏற்பாடு செய்கிறேன் என்றார்.  நாங்கள் சம்மதித்தோம்.
நான் 1981 இல் சபரிமலை செல்லும் போது யோசித்தேன், இந்த பகுதிகளில் குழந்தைகளுடன், குடும்பத்துடன் பயணிக்க வேண்டுமென, அதை எங்கள் மூத்த மகன் நிறைவேற்றினார்.

15.1.17 தைப்பொங்கல் அன்று MUNROE ISLAN (QUILON DISTRICT) நோக்கி பயணம் செய்தோம்.  காலை 6.30 மணி வாக்கில் கிளம்பினோம்.  தென்காசியில் காலை உணவு முடித்தோம். 










தென்மலை (கேரளா) காலை 9.30 மணி வாக்கில் சென்றடைந்தோம்.  அங்கு கேரள அரசாங்கத்தால் Thenmalai Eco Park மிக  அருமையாக பராமரிக்கப் படுகிறது.  மீன்கள் காட்சியகம் இருக்கிறது, படங்கள் எடுக்க அனுமதியில்லை.  இன்னும் நிறைய சுற்றுலாத் தளங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

Thenmalai Eco Park எங்கள் மூத்த மகன் திரு விஜயவேல் குடும்பத்தினரையும் எனது மனைவியையும் அழைத்துச் சென்றார்.  ஏற்ற இறக்கமாக இருப்பதால் நான் உடன் செல்லவில்லை.  திரு இரா முருகவேள் அவர்களது ‘எரியும் பனிக்காடு’ (Red Tea) படிக்க ஆரம்பித்தேன்.  ஒரு இடத்தில் மட்டும் நாங்கள் நின்று படம் எடுத்துக் கொண்டோம்.  கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் பொழுது போக்கி விட்டு வந்தார்கள்.  அங்கு நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன, முடிந்த வரை எனது மனைவியும், எங்கள் மூத்த மருமகளும் படங்கள் எடுத்துக் கொண்டு வந்தார்கள், தேர்ந்தெடுத்த படங்களை இந்த பதிவின் முடிவில் ஏற்றியிருக்கிறேன்.  அற்புதமான சூழல் அங்கு.







அங்கிருந்து கிளம்பி 2 மணி நேரங்கள் கழித்து நாங்கள் தங்க வேண்டிய இடத்திற்குச் சென்றோம். 










Lake n River, An SKB Resort, MUNROE ISLAND

Tripadvisor. Kerala



For contact: Mr AMAL SKB GM – 91 99953 24323  //  99956 03410

இந்த இடம் பற்றி ஒரு பக்கம் ஏரி, ஒரு பக்கம் நதி – இடையில் அமைந்திருக்கிறது.  அவர்களது தளத்தையும் பாருங்கள், கட்டண விபரங்கள் இருக்கின்றன.
அற்புதமாக இருக்கிறது  (கூவத்தூரும் இப்படி இருக்குமோ?).  வெளி நாட்டினர் வந்து மாதக்கணக்கில் வந்து தங்குகிறார்கள், அமைதியாக பொழுதைக் கழிக்கிறார்கள்.  முன்னதாக ரிசர்வ் செய்து விட்டு செல்லலாம். 

அன்று மாலை சுமார் 4.45 மணி வாக்கில் படகு சவாரி செய்தோம்.   கிட்டத்தட்ட 2 மணி நேரங்கள் படகு சவாரி செய்தோம்.  நீர் நிலைகளை அருமையாக பராமரிக்கிறார்கள்.  சூரியன் மறையும் காட்சி, MANGROVE FOREST அனைத்தும் படங்கள் எடுத்தோம்.  நிறைய கழுகுகள் இருக்கின்றன, நமது ஊர்ப்பக்கம் கழுகுகளைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. 
அந்த விடுதியிலே உணவு ஏற்பாடு செய்கிறார்கள்.  அவர்கள் சமையலுக்கும் நாம் பழகிக் கொள்ள வேண்டும்.


































மறு நாள் (16.1.17) எங்களது திட்டம் –

1.    முந்திரித் தொழிற்சாலை பார்க்க வேண்டும்

2.     திருமுல்லாவரம் பீச் செல்ல வேண்டும், அதில் உள்ள ‘தட்டுக்கடை சந்திரன் பிள்ளை (மீன்கள் மட்டும்)’  சென்று மதிய உணவு அருந்த வேண்டும்.

முந்திரித் தொழிற்சாலை

அருகிலுள்ள முந்திரித் தொழிற்சாலை சென்றோம்.  படங்கள் எடுக்க அனுமதி கிடையாது.  எதற்கும் பதில் சொல்லவும் யோசிக்கிறார்கள்.  எனவே நான் பார்த்து உணர்ந்ததிலிருந்து: எங்கள் ஊர் தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கும் இதற்கும் வேறுபாடு இல்லை.  பெண்கள் தான் பிரதான தொழிலாளர்கள்.   தீப்பெட்டித் தொழிற்சாலையில் மெழுகு அடுப்பு (இப்போது மாறி விட்டது), இங்கு முந்திரிக் கொட்டைகளை வறுக்க பெரிய அடுப்பு & இயந்திரங்கள் பயன்படுத்துகிறார்கள்.  எண்ணை ஊற்றி முந்திரிக் கொட்டைகளை வறுத்து உடைக்கிறார்கள், உடைத்த பின் முந்திரிப்பருப்புகளிலிருந்து தோலை உரிக்கிறார்கள்.  பின்பு உடைசல்களைப் பிரித்து, சைஸ் வாரியாக பிரிக்கிறார்கள்.  Labour Intensive Industry.

சந்திரன் பிள்ளை தட்டுக்கடை திருமுல்லாவரம் பீச்


பின்பு திருமுல்லாவரம் பீச் சென்றோம்.  அந்தக்கடையில் மலையாளத்தில் சின்ன போர்டு தான் இருக்கிறது.  நாம் சென்றதும் சமையலறைக்கு கூட்டிச் சென்று சுத்தம் செய்து மசால் தடவி தயாராக வைத்திருக்கும் மீன்களை காண்பிக்கிறார்கள்.  நாம் தேர்ந்தெடுத்து சொன்னதும் விலை விபரம் சொல்கிறார்கள்.  நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பெரிய தட்டில் கொண்டு வந்து வைக்கிறார்கள்.  அங்கு அது தான் பழக்கம் போலும், நாம் அதற்கு பழகிக் கொள்ள வேண்டும்சிவப்பு அரிசி சோறு, கப்பைக் கிழங்கு பொரியல், சாம்பார் (அதிலும் மீன் கிடக்கிறது).  கடல் உணவுகள் மட்டும் தான் இங்குகோழி, ஆடு போன்றவைகள் கிடையாதுஇங்கு சாப்பிட கோஷ்டி கோஷ்டியாக வருகிறார்கள்.  5 நண்பர்கள் சுற்றி உட்கார்ந்து கொண்டு மீன், நண்டுகளை மிகவும் ரசித்துச் சாப்பிடுகிறார்கள்  பார்க்க வேண்டிய காட்சிகள்மிகவும் ரசித்தோம்.

இரவு உணவு விடுதியில்நம்மிடம் கேட்டுத் தயார் செய்கிறார்கள்கேரளத்தில் சப்பாத்தி சொன்னால், சப்பாத்தி தனி விலை, குருமா, கிழங்கு தனி விலைஅதனால் சொல்லும் போது சப்பாத்தி எத்தனை, குருமா எத்தனை பிளேட் என சொல்ல வேண்டும்ஓரளவு பரவாயில்லை.
மறு நாள் (17.1.17) காலை உணவு விடுதியில் முடித்து விட்டு (காலை உணவு விடுதிச் செலவு). கணக்கு முடித்து விட்டு கிளம்பினோம்.
 
9.30 மணி வாக்கில் விடுதியை விட்டு கிளம்பினோம், 10.30 மணி வாக்கில் கொட்டாரக்கரா விநாயகர் கோவில் சென்றோம்முன்னால் பெரிய தெப்பம், நிறைய மரங்கள், நாகலிங்க மரங்கள், பூக்களுடனும், காய்களுடன் பார்த்தோம்சிறப்பு தரிசனம் என இல்லாமல் கோவில் மிகச் சிறப்பாக இருந்ததுதரிசனம், பிரசாத விநியோகம் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது.  காசு பிடுங்கல்  இல்லை.  நிஜமாகவே கோவிலுக்குச் சென்ற உணர்வு இருந்தது. 







கொட்டாரக்கராவிலிருந்து 11.30க்கு கிளம்பினோம்.

1.45 மணி வாக்கில் செங்கோட்டை பார்டர் கடை வந்தடைந்தோம்.  இவர்களது கிளைகள் -  ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற ஊர்களில் இருக்கின்றன.  ஆனால் செங்கோட்டை கடையில் உள்ள ருசி, பரிமாறல் இல்லை.  இந்த 2 ஊர்களிலும் இவர்கள் பரிமாறலையும், ருசியையும் அவர்களது தலைமை இடத்தை பின்பற்ற வேண்டும்.  

மாலை 4 மணி வாக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைந்தோம்.  சிறு குழந்தைகளுக்கு வாந்தி போன்ற சிரமங்கள் இருந்தன.  கிளம்பும் போது எல்லாவற்றுக்கும் முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும்.

கேரளா பற்றி:

சாலையோர ஆக்கிரமிப்புகள் இல்லை, வண்டிகள் நிறுத்துவது ஏதாவது ஒரு பக்கத்தில் நிறுத்தி ஒழுங்கு பராமரிக்கிறார்கள். 

சாலையோரங்களில் குப்பைகளோ, பாலிதீன் கழிவுகளோ இல்லை.

நமது ஊர் மாதிரி பார்த்த இடங்களில் எல்லாம் டாஸ்மாக் போர்டுகள் இல்லை.

நமது ஊரில்  வடைக்கடைகள் பெருகியிருப்பது போல் , கேரளாவில் எங்கு பார்த்தாலும் லாட்டரி டிக்கெட் விற்பனை பெருகியிருக்கிறது.

நீர் நிலைகளைப் பராமரிப்பதில் மிகவும் அக்கறை கொள்கிறார்கள்.  நாம் அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.

ஃப்ளெக்ஸ் போர்டுகள் இல்லை.

அடிக்கடி கேரள பயணம் மேற்கொள்ள வேண்டும்.  நாங்கள் சென்றது ஜனவரி, எனவே வறட்சி தான்.  இங்கு செப்டம்பர் – டிசம்பர் கால கட்டங்களில் தகுந்த முன்னேற்பாடுகளுடன் பயணம் செய்ய வேண்டும்.

இதில் உள்ள படங்கள் அனைத்தும் எடுத்தது எனது மனைவி திருமதி உமாகாந்தி தான். 
I was a Silent Spectator, அவ்வளவு தான்.

I have to thank our Beloved Daughter Malini Shravan (UK)  for writing this post/blog.  When phoned to me on 4.4.17 she insisted me to write my experiences, Thank You, I will write more for you.

Also I have to thank our Beloved Daughter Banu Sasinthana & family members who are touring Kerala next month, this may be some informative to them.  Best Wishes my Beloved Daughter Banu Sasinthana.

எடுத்த படங்களில் தேர்ந்தெடுத்த படங்களை இணைத்திருக்கிறேன். 

நன்றி நண்பர்களே.

(பயணத்துக்கு முன்னதாக ஒரு யோசனை.  காமிரா, பேட்டரியில் போதிய அளவு சார்ஜ் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.  சார்ஜ் செய்வதற்கான பின் என எல்லா உபகரணங்களும் சேர்த்து எடுத்துக் கொள்ளூங்கள்.
போர்டு இருக்கும் இடத்தின் அருகில் இருந்து எடுத்தால் நினைவுக்கு வர எளிதாக இருக்கும்.
ஒரு சின்ன நோட்டு வைத்துக் கொண்டு நினைவுக்கு குறித்துக் கொள்ளூங்கள்.
தகுந்த மருந்து, மாத்திரைகள், எலெக்ட் ரால், அயோடெக்ஸ் போன்றவைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
சென்று வந்து எழுதுங்கள், மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பயணம் சிறக்க வாழ்த்துகள்).