சனி, ஏப்ரல் 23, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு     ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம் பதிவிற்கு பின்பு   'செண்பக தோப்பு'  பற்றி பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தோம். எனது இனிய நண்பர் வருங்கால வைப்பு நிதி ஆய்வாளர் திரு தனபால் அவர்கள் அவரது ஆணையாளரின் மகளும் அவரது கல்லூரி தோழியும் 'மலை வாழ் மக்களது வாழ்க்கை முறை'  பற்றி அவர்களது ஆய்வுக்காகவும் அவர்களை நேர்காணல் செய்ய வேண்டும் எனவும் அதற்கான உதவிகள் செய்ய முடியுமா என கேட்டார்கள். எங்களது இனிய நட்பு கடந்த முப்பது வருடங்களுக்கு மேற்பட்டது. எனவே ஏற்பாடுகள் செய்ய  ஆரம்பித்தோம்.

சாம்பல் நிற அணில்
முன் ஏற்பாடுகள்
     பொதுவாக காட்டுப்பகுதிகளுக்குள் செல்வதற்கு முன் வன இலாகாவில் அனுமதி பெற வேண்டும். செண்பக தோப்பு சாம்பல் நிற அணில்கள்  சரணாலயம்' . எனவே முதலில் 'The Warden, Srivilliputtur Grizzled Squirrel Sanctuary, Madurai Road, Opposite Co-operative Mill Buss top, Srivilliputtur. 626 125இவர்களுக்கும் மனுவின் நகல் 'The Range Officer, Wild Life Sanctuary, Near CMS School Play Ground, Shenbagathoppu Road, Srivilliputtur. 626 125அனுப்ப வேண்டும். இவர்களை அணுகி அனுமதி பெற்றுக் கொண்டு செல்ல  வேண்டும்.


செண்பகதோப்பு செல்வதற்கு முன்
      இது சரியான  வனப்பகுதி. எனவே ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்தே  'உணவு ,   தண்ணீர், நொறுக்குத்தீனிகள்என தேவையானவைகள்  அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும். பேருந்து வசதி காலை ஆறு மணிக்கு ஒரு தடவையும் மாலை ஆறு மணிக்கு ஒரு தடவையும் தான் இருக்கிறது. எனவே இங்கிருந்தே ஆட்டோ அல்லது  டாக்சி ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆட்டோ சென்று திரும்புவதற்கு  200-250 கேட்பார்கள். கூடுதல் நேரம் எடுத்தால் செலவு கூடும். நான் சிபாரிசு  செய்யும் எனது ஆட்டோ நண்பர்கள்: திரு முனியராஜ் (ஆறுமுகனார் ஆட்டோ) 99769 05415 & 98942 0028 திரு முருகன் (கலியனாண்டி ஆட்டோ) 98421 26886 - இருவர்களும் சகோதரர்கள் - இவரது இன்னொரு சகோதரர் டாக்சி வைத்திருக்கிறார்: திரு சங்கர்:  98943 16119). எனவே வருபவர்கள் முன்பாகவே இவர்களிடம் தொடர்பு கொண்டு வந்தால் எளிதாக இருக்கும்.எனவே அந்த மாணவிகள் இருவரும் மதுரையிலிருந்து காலை  9.00  மணிக்கு வந்தார்கள். நாங்கள் ஆட்டோவில்(20.3.2011) கிளம்பி சென்றோம். இங்கிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இயற்கை சூழ் மலை அடிவாரம். செண்பக தோப்பு வரை அருமையான சாலை வசதி இருக்கிறது.

செண்பக தோப்பில் மலை வாழ்மக்கள்(பளியர்கள்) குடியிருப்பு உள்ளது. அவர்களது குடியிருப்பில் நல்ல சாலை வசதியிருக்கிறது. கிட்டத்தட்ட  24 வீடுகள் இருக்கின்றன. தெரு விளக்கு சூரிய ஒளி (solar panelமூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.வீடுகளுக்கு மின்சார இணைப்பு  கொடுக்கப்பட்டிருக்கிறது. நியாயவிலைக்கடை (RationShop) ஒன்று 

அமைந்திருக்கிறது. நீர் மேல் நிலை தொட்டி ஒன்று அமைந்திருக்கிறது .  பாலர் பள்ளி ஒன்று (மாத குழந்தையிலிருந்து வயது குழந்தைகள் முடிய) அமைந்திருக்கிறது. ஒரு கல்யாண மண்டபம் (Community Hallஒன்று அமைந்திருக்கிறது. 

மலை வாழ் மக்களின் குழந்தைகளின் படிப்பு
     இவர்களது குழந்தைகள் இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 'வள்ளலார் இல்லம்' என்ற தொண்டு நிறுவனத்தில் உள்ள பள்ளிக்கு நடந்து செல்கிறார்கள். அங்கு ஐந்து முடிய படிக்க வசதியிருக்கிறது. ஐந்துக்கு மேல் படிப்பதற்கு மம்சாபுரம் செல்கிறார்கள். அங்கிருந்து பள்ளி வேன் வருகிறது. சில குழந்தைகள் பேருந்தில் சென்று ஸ்ரீவி குரு ஞான சம்பந்தர் மேல் நிலைப்பள்ளிக்கு செல்கிறார்கள் (நான் அங்கு தான் படித்தேன்). மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 15-20 இருக்கும். கூடுதல் படிப்பு எட்டு முடிய இருக்கும். 
நிறைய குழந்தைகளுக்கு ராஜபாளையம் ராம்கோ குரூப் (Madras Cements) நிறைய உதவி செய்வதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட  120  பேர்களுக்கு  படிப்பு,  வேலை வாய்ப்பு ஏற்பாடு போன்றவை ராஜபாளையத்தில் செய்திருப்பதாக சொல்கிறார்கள். வீடுகள் கட்டுவதற்கும் அவர்களது முயற்சியும்உதவியும் அதிகம் என்கிறார்கள். மலைவாழ் மக்கள் ராம்கோ குரூப்பை பற்றி மிக உயர்வாக சொல்கிறார்கள்.
மதுரை அண்ணா நகரில் அமைந்துள்ள சோகோஸ் ட்ரஸ்ட் (Socos Trust)  நன்கு உதவுவதாக சொல்கிறார்கள்.
நமது மாநில காவல் துறை உயரதிகாரி திருமதி. லத்திகா சரண் அவர்களது வருகையையும் அவர்கள் எல்லோரிடமும் எளிமையாக பழகும் முறையையும் உதவிய முறையையும் (immediate arrangement for ration cards - normally it will take 2-3 months or more) வெகுவாக சொல்கிறார்கள். வாழ்க திருமதி லத்திகா சரண். இவர்களுக்கு மருத்துவ வசதி என்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் அல்லது மம்சாபுரம் தான் செல்ல வேண்டும். 

மலை வாழ் மக்களை (பளியர்) பற்றி
     அவர்களது குடியிருப்புமின்சார வினியோகம்சாலை வசதிவாழ்க்கை  தரம் நன்றாக இருக்கின்றன. அவர்கள் நகருக்கு சென்று வருவதற்கு பேருந்து வசதிகள் போதுமானதாக இல்லை. மினி பஸ் வசதிகள்  ஏற்படுத்தலாம்.நல்ல உள்ளம் படைத்த 'தொண்டு நிறுவனங்கள்' அவர்களுடன் பேசி வாரம் ஒரு முறை 'நடமாடும் மருத்துவ குழு'  மூலம் மருத்துவ வசதி செய்து கொடுக்கலாம். இது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

 அவர்கள் முன்னேறுவதற்கு சிறு தொழில் வளர்ச்சிகள் ஏற்படுத்தி கொடுத்து தொண்டு நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து செய்யலாம். ஆர்வமுள்ள இளைஞர்கள் குழுக்களாக இணைந்து அவர்களுடன் பேசி அவர்களது குழந்தைகளுக்கு  கணினிகணிதம்ஆங்கிலம் கற்றுக் கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தலாம். அவர்களை நன்கு மதித்து பழகுங்கள்.
பேச்சியம்மன் கோவில்
     முன்பு தெரியும் வளைவு 'பேச்சியம்மன் கோவிலுக்கு' செல்லும் பாதை. முன்புறம் அழகிய வினாயகர் கோவில் ஒன்று உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பேச்சியம்மன் கோவில் இருக்கிறது.
 மக்கள் வேன் களிலும் இரு சக்கர வாகனங்களிலும் பயணம் செய்கிறார்கள். காலையில் பரிவாரமாக சென்று மதியம் சமைத்து சாப்பிட்டு விட்டு மாலை திருபுகிறார்கள்.

பேச்சியம்மன் கோவில் பக்கத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. சமைப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். நல்ல சோலை போன்ற இடமாக இருக்கிறது. குழந்தைகள் விளையாட, மற்றவர்கள் நல்ல பொழுது போக்க (in a relaxed mood) நல்ல இடமாக இருக்கிறது.பேச்சியம்மன் கோவில் பக்கத்திலுள்ள ஆற்றங்கரையிலிருந்து எடுத்த புகைப்படங்கள். ஒரு சிறுமி ஆனந்தமாக நீந்தும் காட்சி. 
அங்கிருந்து மலையின் கம்பீர தோற்றம். மரங்களின் பச்சைப் பசேர் என கண்ணை கவரும் தோற்றம்.
பூக்களின் கண்ணைக்கவரும் தோற்றம்.. கோவிலின் அழகு தோற்றத்தை பாருங்கள். அதிலுள்ள கல்வெட்டு.திரும்பி வரும் வழ்யிலுள்ள பாலம். ஒரு பசு மாடு எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கதிரும்பி போஸ் கொடுக்கிறது.


செண்பகதோப்பிலிருந்து வரும் வழியில்
     திரும்பி வரும் வழியில் சாலை வசதி நன்றாக இருக்கிறது. தனியாரது மினரல் வாட்டர் பிளான்ட் ஒன்று அமைந்திருக்கிறது. ஒரு பாழடைந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. வேலி போட்டு பாதுகாத்து வைத்திருக்கிருக்கிறார்கள். கருப்பசாமி கோவில் ஒன்று இருக்கிறது.
 எங்கள் ஊரின் மற்ற சிறப்பான 'வள்ளலார் இல்லம்' அமைந்திருக்கிறது. அதைப் பற்றி தனி பதிவு போடுகிறேன்.
 ஆட்டுப் பண்ணை ஒன்று அமைந்திருக்கிறது. அது ஒரு சிறப்பம்சம். வள்ளலார் இல்லம் பதிவுடன் சேர்த்து விபரங்கள் கொடுக்கிறேன். மொட்டைப்பத்தான் கண்மாய் அமைந்திருக்கிறது. எங்கள் ஊர் நீர் நிலை அமைந்திருக்கிறது. கோட்டைக்காளியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. கான்வென்ட் மடம் அமைந்திருக்கிறது. எங்கள் ஊர் இரு பள்ளிகளின் விளையாட்டு மைதானங்கள் அமைந்திருக்கின்றன. வனச்சரக அலுவலகம் அமைந்திருக்கிறது.
அங்கு செல்பவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
     பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்லாதீர்கள். மது அருந்துதல் போன்ற செயலை அங்கு போய் செய்யாதீர்கள். அங்குள்ள மரங்களை, காய் கனிகளை பூக்களை பறிக்காதீர்கள். இரைச்சல் போடாதீர்கள். நீங்கள் கண்காணிக்கப் படுவீர்கள். வனக்காவலர்களின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாவீர்கள். அங்குள்ள சட்டத்திற்கு மதிப்பு கொடுங்கள்.
வனத்தில் செல்ல அனுமதி அளித்த வன இலாகாவினருக்கும், எங்களுடன் ஆய்விற்கு வந்த மாணவிகள் செல்வி.சுஸ்மா ஷர்மா, செல்வி.சவேரா மாகி அவர்களுக்கும், மலைவாழ் மக்கள் குடியிருப்பில் விபரங்கள் தந்து எங்களை நன்கு உபசரித்த திரு கோபால் அவர்களுக்கும், அங்குள்ள பாலர் பள்ளியின் ஆசிரியையும் திரு முத்தையாவின் மனைவியும் ஆகிய திருமதி சின்னத்தாய் அவர்களுக்கும், எங்களுக்கு ஆட்டோ செலுத்தி வந்த எங்களது குடும்ப நண்பர் திரு முருகனுக்கும், அவர் எங்களுடன் வந்து புகைப்படம் எடுக்க உதவியாக இருந்ததற்கும் மிக்க நன்றி. வழக்கம் போல் இவ்வளவுக்கும் உறு துணையாக இருந்த எனது மனைவி திருமதி உமா காந்திக்கும், எனது தம்பி மகன் எனது பாசப்பிள்ளை ராஜவேலுக்கும் எனது
மனப்பூர்வ நன்றி.


                               நன்றி.புதன், ஏப்ரல் 13, 2011

தமிழில் பட்டாசு பற்றிய முதல் புத்தகம்

பட்டாசின் வேதியியலும் செய்முறை தத்துவங்களும்பட்டாசு பற்றியும், பட்டாசு தயாரிப்பில் உபயோகிக்கப்படும் மருந்துப் (வேதிப்) பொருட்கள் (மூலப் பொருட்கள்) பற்றியும், பட்டாசு தயாரிப்பில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் பற்றியும் தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம்.


இந்த புத்தகத்தை திரு. P.தனசேகரன். M.Sc., முன்னாள் வேதியில் துணைப் பேராசிரியர் (அய்ய நாடர் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி, - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்) எழுதியிருக்கிறார். இவர் கல்லூரியிலிருந்து வியாபாரத்திற்கு 1976 ஆம் வருடம் வந்தார். பின்பு பேரியம் நைட்ரேட் (Barium Nitrate) தயாரிப்பிலும் பட்டாசிற்கான மூலப்பொருட்கள் பற்றிய ஆலோசனை கூறுவதிலும் அதற்கான 'பரிசோதனைக்கூடம்' (Laboratory) ஏற்படுத்தி நல்ல பணியில் ஈடுபட்டார். இதனால் இவருக்கு பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் எல்லா தரப்பு மக்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. எனவே தனது முப்பத்தைந்து வருட அனுபவங்களை, பட்டாசு தயாரிப்பில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக, அதில் ஈடுபடும் தொழிலாளர்களும் படிக்கும் படியாக எளிய அழகு தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் எல்லா கல்லூரிகளிலும், எல்லா பள்ளிகளிலும், எல்லா தொழிற்சாலைகளிலும், எல்லா பட்டாசு வியாபாரிகளிடமும், எல்லா பட்டாசு உபயோகிப்பாளர்களிடமும் (நாம் தான் - நமது குழந்தைகள் தான்) இருக்க வேண்டும். இந்த புத்தகத்தை எல்லோரும் படித்து பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறேன். பக்கங்கள் 144. விலை ரூ.200/-- எனவே ரூ 200 மணி ஆர்டர் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் அல்லது ராஜபாளையத்தில் மாற்றத் தக்க செக் அல்லது டிராப்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Smt N.R.Uma Gandhi,
7-A, Koonangulam Devangar North Street,
SRIVILLIPUTTUR. 626 125 (Virudhunagar Dt).
Ph 04563 262 380 // 94434 27128
Email id: rathnavel_n@yahoo.co.in

rathnavel.natarajan@gmail.com

தங்களது பணம் கிடைத்த மூன்று நாட்களுக்குள் புத்தகம் கூரியரிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலமாகவோ அனுப்பப் படும். எங்களது முதல் நல்ல முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி. வணக்கம்.