புதன், மார்ச் 02, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம்

    
           ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட 'திருமுக்குளம்' என அழைக்கப்படும் ஒரு குளம் ஸ்ரீவில்லிபுத்தூரின் மேற்குப்பக்கத்தில் இருக்கிறது. த்ற்போது (நவம்பர்,2010 - ஜனவரி, 2011) வரலாறு காணாத அளவு நிறைந்திருக்கிறது. அதற்காக 22.1.11 எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொகுத்தளித்திருக்கிறேன்.


                     திருமுக்குளம் பெயர்க்காரணம்:
      திருமுக்குளத்தின் உள்ளே 'ஒன்றுக்குள் ஒன்றாகமூன்று குளங்கள் உள்ளனநீர் முழுதுவதும் வற்றினால் பார்க்க முடியும்கங்கையமுனைசரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் இருப்பதாக மக்களிடையே நம்பிக்கை.
           இது நான்கு பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய குளம். கீழ்பக்கக்கரையில் 'தீர்த்தவாரி மண்டபம்' அமைந்துள்ளது.


           அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட 'இரட்டை வினாயகர் கோவில்' இருக்கிறது.


            கிழக்கு கரையில் தென் கிழக்கு மூலையில் பத்ரி மஹால் என்ற கல்யாண மண்டபம் இருக்கிறது. இது ஆண்டாள் கோவிலுக்கு பாத்தியப்பட்டதா அல்லது தனியார் மண்டபமா என தெரியவில்லை.


             கீழ்கரையில் மக்கள் குளிப்பதற்கு 8(எட்டு) படித்துறைகள் இருக்கின்றன.
இந்தக்குளம் எல்லாத் தரப்பு மக்களும் குளிப்பதற்கும் அனைவரும் நீச்சல் பழகுவதற்கும் உபயோககரமாகயிருக்கிறது.


            இங்கு நீர் நிரம்பினால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும்பான்மையான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இந்தக்குளத்தை நன்கு பராமரித்தால் தகுந்த பாதுகாப்புகளுடன் 'படகு சவாரி'  செய்தால், குளத்தை பராமரிக்க வருமானம் ஈட்டலாம். இதை ஆண்டாள் கோவில் நிர்வாகமும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியும், சுற்றுலாத்துறையும், அரசாங்கமும் கவனிக்கலாம். குளத்தைச்சுற்றி வேலி போட்டு, 24 மணி நேரமும் காவலர்கள் பராமரிக்க வேண்டும். ஏ.கே.சி.கொண்டல்வண்ணன் போன்ற நல்ல உள்ளங்கள் இங்கு இருக்கிறார்கள்.குள்த்தின் தெற்கு கரை 9(ஒன்பது) படித்துறைகள் கொண்டது. சிறுவர்களின் ஆனந்த குளியல், கும்மாளம், நீச்சல், டைவிங் பாருங்கள்.
            குளத்தின் நடுவில் மண்டபம் இருக்கிறது. தெற்கு கரையிலிருந்து நடு மண்டபத்திற்கு தூரம் குறைச்சல் - சிறுவர்கள் ந்டு மண்டபத்தின்
உச்சியில் இருப்பதை படத்தில் பாருங்கள்            குளத்தின் மேற்கு கரையில் குளிப்பதற்கு 1 படித்துறை தான் இருக்கிறது. ஆண்டாள் நீராட்டு மண்டபம் சிறப்பாக அமைந்திருக்கிறது.
            இதில் ஆண்டாள் நீராட்டு உற்சவம் மார்கழி மாதம் நடைபெறும். தை மாதப்பிறப்பன்று திருவிழா நிறைவு பெறும். மண்டபத்தின் படங்களையும், ஸ்ரீ ஆண்டாள் திருவிழா காட்சிகளையும் காணுங்கள்.            மேற்குக்கரையில் முன்பு 'அரசாங்க சுற்றுலா மாளிகை' இருந்த்து; தற்போது ஒரு தனியார் நர்ஸிங் கல்லூரி நடைபெறுகிறது.


                                          ஸ்ரீவில்லிபுத்தூரின் மிகச்சிறப்பான அம்சம்:

              படத்திலிருக்கும் 'கூட்டுறவு பால் பண்ணை' மிகுந்த காலத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பெருமையான 'பால்கோவா' உற்பத்தி இங்கு தான் முதலில் துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பெருமை இவர்களுக்கு தான் சேரும். தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பால்கோவா உற்பத்தியாளர்களில் 75% இங்கிருந்து தொழில் கற்றவர்களாகத்தான் இருக்கும்.


            வடக்கு கரையில் 3(மூன்று) படித்துறைகள் இருக்கின்றன். ஒரு ஆஞ்சனேயர் கோவில் இருக்கிறது. அந்த்க்கோவிலில் இரண்டு ஆஞ்சனேயர் சன்னதிகள் இருக்கின்றன.


            வட கரையின் ஒரு பக்கத்தில் 'இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ' தட்சிணாமூர்த்தி கோவில் ஒன்று உள்ளது. இந்த்க்
கோவில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிற்து. இதன் சிறப்பம்சம் -' இந்தக்கோவிலிருந்து பார்த்தால் மடவார்வளாகம் சிவன் கோவில்
கோபுரத்தின் பார்வையில்' அமைந்திருக்கிற்து.           திருமுக்குளத்த்ற்கு மேற்கு, பால் பண்ணைக்கு பின் புறம், எங்கள் ஊரின் மற்றொரு சிறப்பம்சான 'சி.எம்.எஸ் மேல் நிலைப்பள்ளி'
அமைந்திருக்கிற்து. இந்தப்பள்ளி 1856 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.            இந்த்ப்பள்ளியில் படித்தவர்கள் மிக உன்னத நிலையில் இருக்கிறார்கள் (முழு விபரம் தெரியவில்லை - 1962ல் எனக்கு இந்தப்பள்ளியில் 9ம் வகுப்பு
சேர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. ஜாதி மதம் வேறுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பினரையும் சேர்த்து ஆதரவு கொடுத்த அருமையான கிறிஸ்தவ பள்ளி - (அல்ல ஆலயம்). எனக்கு இந்த பள்ளியின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இன்றும் இருக்கிறது.

            படத்தில் இருக்கும் பழைய கட்டிடம் முன்பு 'தமிழ் நாடு மின்சார வாரியத்தின் தளவாடங்கள் இருப்பு வைக்கும் கிட்டங்கி'யாக உபயோகப்பட்டது. சர்ச் மாதிரி அமைப்பில் இருக்கிற்து. முழு விபரம் தெரியவில்லை.


            இந்த குளத்தை சுற்றி 'வாக்கிங்' செல்வதற்கு சிறந்த இடம். வாக்கிங் சென்ற மாதிரியும் இருக்கும், ஆண்டாள் தெப்பத்தை சுற்றிய புண்ணியமும் கிடைக்கும். இங்கு 'தெப்பத்திருவிழா' மூன்று நாட்கள் நடைபெறும். மிகச்சிறப்பாக இருக்கும். அப்போது இது பற்றிய பதிவு
படங்களுடன் எழுதுகிறேன்.

                                                .இது தமிழில் முதல் பதிவு.
      இதற்கு எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர்களுக்கு எனது நன்றி.குமுதத்தில் தான் பதிவு பற்றிய செய்தியும், 'முதல் பத்து பதிவர்கள்' என்ற கட்டுரையும் படித்தேன்அதனால் பதிவு பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளிலும் வந்தால் சிறப்பாக இருக்கும்நான் அதிஷா பதிவுகளை படித்து அவருடன் தொடர்பு கொண்டேன்.அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டதுதமிழில் கணினியில் தட்டச்சு செய்வது பற்றியும் அவரிடம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்; கற்றுக் கொண்டேன்மிக்க நன்றி இனிய நண்பர் அதிஷாவிற்கு.

      அடுத்து, முகமறியா எனது இனிய நண்பர் திரு ரோமிங் ராமன் அவர்களுக்கு, ஒரு பதிவிற்கான மறுமொழியில் திரு. சுஜாதாவின் 'இரத்தம் ஒரே நிறம்' புத்தகம் எனக்கு தேவை எனவும், அது பற்றிய விபரம் தெரிந்தவர்கள் எனக்கு பதிப்பகம், விலை முதலிய விபரங்கள் தெரிவிக்கும்படியும் என்னைப் பற்றிய விபரங்கள் கொடுத்திருந்தேன்அவர் என்னை போனில் தொடர்பு கொண்டு புத்தகத்தை வாங்கி அனுப்பினார்பணம் அனுப்புவதற்கு அவரது முகவரி மறுபடியும் மறுபடியும் கேட்டும் தரவில்லைஎங்களது தொலைபேசி நட்பு தொடர்கிறதுதமிழில் கணினியில் தட்டச்சு பழகுவதற்கு அவரும் எனக்கு நிறைய உதவி செய்தார்நன்றி இனிய நண்பர் திரு ரோமிங் ராமன் அவர்களே.

      அடுத்து 'துளசி தளம்' பதிவை தொடர்பாக படித்து வருகிறேன்.  அவர்களது பதிவை படிக்கும் போது நாமும் அவர்களோடு சேர்ந்து பயணம் செய்வது போல் இருக்கிறது.  தேவைப்பட்ட இடங்களில் புகைப்படங்கள் சேர்த்து, நல்ல செய்திகளை தொகுத்து, ஏற்படும் இடையூறுளையும் தொகுத்து (the practical difficulties & how to solve them), அருமையாக அளித்து வருகிறார்கள்.  எனக்கு பதிவு எழுதுவதற்கு அவர்களது பதிவு தான் ஆதர்ஷம் (idol).  உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

     அடுத்து எனது குடும்பத்தினருக்கு, எனது மனைவி திருமதி. உமா காந்திக்கு, எனது முதிய வயதிலும் இந்த பதிவு எழுதுவதற்கு என்னுடனே கூட வந்து விபரங்கள் சேகரிப்பதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் உதவி செய்ததிற்கு, உமாவுக்கு வார்த்தைகள் காணாது நன்றி சொல்ல.

     எனது தம்பி மகன் இராஜவேலுக்கு, திருமுக்குளத்தை சுற்றி புகைப்படங்கள் எடுப்பதிலும். இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவி செய்ததற்கும், மிக்க நன்றி இராஜவேல்.

     இந்த பதிவை தாங்கள் நேரமிருக்கும் போது படித்து நிறை, குறை தெரிவியுங்கள்.  


                                      நன்றி.

101 கருத்துகள்:

 1. அருமையான முதல் பதிவு.. வாழ்த்துக்கள்.. உங்கள் பதிவுக்கு உருதுனையாய் இருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 2. Good one , nice photos,,
  Expecting from you about senpaga devi aruvi and thiruvannamali temple story next time,,,

  All the best Mr. Rathinavel

  -Gopal(prakash's friend)

  பதிலளிநீக்கு
 3. மிகச்சிறந்த நடை!! அருமையான புகைப்படங்கள்.. குறிப்பாக குளத்தில் குதிக்கும் சிறுவர்கள்... அடுத்த பதிவாக - தொடர்ச்சி என்று சொல்லலாமா?- அங்கே திருவண்ணாமலையின் சிறப்பையும் எழுதுங்களேன்!!(அங்கிருக்கும் திருவண்ணாமலை நிறைய பேருக்குத் தெரியாது- எனக்கும் ரொம்ப நாள்!)

  திசம்பர் 2010 இறுதி வாரத்தில்தான் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து(மார்கழி என்பதால்)ஆண்டாளையும் ரங்கமன்னாரையும் தரிசித்து விட்டு வந்திருந்தேன்.. ஆண்டாளின்(அடுத்த முறை வந்தால் எல்லா வசதியும் பெற்றுக்கொள்ள) அருளால்தான் சென்னை வந்த பின்பு அங்கிருந்தே ஒரு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார்.இந்த ஆசிரியரை இதுவரை பார்த்தது கூட இல்லை.. ஆனாலும் எத்தனை அன்பு.கண்கள் பனித்தன.. இதயம் இனித்தது
  (பெட்டி கண்டல்ல...நிஜ அன்பு கண்டு!)

  பதிலளிநீக்கு
 4. Great minds have a trait of appreciating simple things - You just proved you are one of them. Excellent work - Congratulations

  - Pravin (Prakash friend)

  பதிலளிநீக்கு
 5. Our heartfelt congrats on your contribution in bringing our Srivi to limelight! We were enthralled to read about the place we belong to. Though we see things around us for long years it takes effort to write about them. Hats off to your efforts in promoting our town and its traditional values!
  We are eager to see more good things.

  anushyasathiamoorthy

  பதிலளிநீக்கு
 6. புகைப்படங்களும், எழுத்து நடையும் இயல்பாக, அருமையாக இருக்கின்றன.ஆண்டாள் உற்சவக்கட்சிகள் நேரில் பார்த்தது போல் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 7. மிக அருமை அண்ணா.. இந்தப் பதிவு சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் .. பெயரை வைத்து நான் சின்னவரென்று நினைத்தேன்.. :))

  பதிலளிநீக்கு
 8. திருமுக்குளத்தை பற்றி மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.என்னை எழுதுவதற்கு பரிந்துரைத்தீர்கள்.இவ்வளவு நன்றாக அருமையாக புகைப்படத்துடன் என்னால் கண்டிப்பாக எழுதியிருக்க முடியாது.
  உங்களது கருத்துகளை எழுத்துகளை புதிய வலைப்பூ ஒன்றைத் தொடங்கி நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் ஐயா.தொடர்ந்து எழுதுங்கள்.
  இந்த இடுகை கொஞ்சம் பெரியதாக இருப்பதால் இரண்டு பாகமாக எழுதியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.இது எனது கருத்துதான் ஐயா.மற்றபடி நமது ஊரின் பெருமையை சொல்லி இருப்பது மிகவும் மகிழ்ச்சி.வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 9. ஸ்ரீவில்லிபுத்தூரின் வரலாறில் கொஞ்சம் படித்த திருப்தி கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 10. தமிழ்மணத்தில் உங்கள் வலை தள முகவரியை கொடுத்து இணைத்து விடுங்க. உங்கள் மின் அஞ்சல் முகவரி கேட்கும்.

  இது போல தொடர்ந்து எழுதுங்க. உங்கள் வயதில் நான் இப்படி ஆர்வமாக இருப்பேனா? என்று யோசித்துப் பார்க்கின்றேன்.

  நல்வாழ்த்துகள் அய்யா.

  பதிலளிநீக்கு
 11. முதல் பதிவு என்பதை நம்ப இயலவில்லை. எழுத்து நடை சரளமாக வந்திருக்கிறது.வாழ்த்துக்கள்! சென்னையில் இருக்கும் எங்களைப் போன்றோருக்கு ஸ்ரீ வில்லிப்புத்தூரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை உண்டாக்கிவிட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 12. நல்ல செய்திகள், படங்கள் நிறைந்த நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீவில்லிப்புத்தூரை சுற்றிக் காண்பித்து விட்டீர்கள் அய்யா...நல்ல இருக்கு...தொடர்ந்து எழுதுங்கள்...உங்களுக்கு உதவிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 14. மிக அருமையான முதல் பதிவுங்க நண்பரே,,வாங்க வாங்க,, நமக்கு துணை யாரையும் காணவில்லை என ஏங்கித் தவித்தேன். எனது பதிவையும் படித்து கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிங்க..

  பதிலளிநீக்கு
 15. ஒட்டுமொத்த திருவில்லிபுத்தூரையே
  தங்கள் ஒரு பதிவின் மூலம் தெரிந்து கொண்டோம்
  புகைப் படங்களும் விளக்கங்களும் அருமை
  தொடர வாழ்த்துகிறேன்
  என் பதிவுக்கு தங்கள் வருகைக்கும்
  வாழ்த்துக்கும் நன்றி
  தொடர்ந்து சந்திப்போம்

  பதிலளிநீக்கு
 16. தொடர்ந்து எழுதுங்கள் அய்யா!திருவில்லிப்புத்தூர் பேருந்து நிலையக் கழிவறை தண்ணி வசதி இல்லாமல் இருந்ததே,இப்ப வசதிகள் எப்படி அய்யா?

  பதிலளிநீக்கு
 17. //முதல் பதிவு என்பதை நம்ப இயலவில்லை. எழுத்து நடை சரளமாக வந்திருக்கிறது.//

  முத‌ல் ப‌திவிலேயே அம‌ர்க்க‌ள‌ம். போட்டோக்க‌ளும் அத‌ற்கான‌ வ‌ர்ண‌னைக‌ளும் க‌ல‌க்க‌ல். க‌ண்டிப்பாக‌ எழுதுங்க‌ள். இன்னும் த‌மிழ் ப‌திவுல‌க‌த்தில் எழுத்தாள‌ர்க‌ளுக்கு ப‌ஞ்ச‌ம்தான்,.. சிற‌ப்பாக‌ எழுதுங்க‌ள்.வாழ்த்துக்க‌ள் ஐயா

  பதிலளிநீக்கு
 18. பதிவும், புகைப்படமும் அருமை. பகிர்விற்கு நன்றிகள் பல.
  நான் பள்ளிப் படிப்பை ஸ்ரீ வில்லி யில் இருந்துதான் தொடங்கினேன்.

  பதிலளிநீக்கு
 19. அடடடா கலக்கல் அட்டகாசமான போட்டோக்கள்....!!!
  வாழ்த்துகள் அய்யா......
  தொடர்ந்து எழுதுங்கள்....

  பதிலளிநீக்கு
 20. அருமையான புகைப்படங்களுடன்
  சிறப்பான தகவல்கள்.
  எட்டியிருந்தும் அருகிருந்ததுபோல
  காணவைத்த உங்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 21. அன்புள்ள ஐயா
  உங்கள் ப்ரொஃபைலை படித்தேன்.இன்று இங்கே வந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்து வளர்ந்த ஊர். மிகவும் பிடிக்கும்.நிறைய எழுதுங்கள்.உங்கள் ஊர் காரரான இவரையும் வாசியுங்கள்.http://saravanakumarpages.blogspot.com/2011/02/2-motorcycle-diaries-2004.html

  பதிலளிநீக்கு
 22. முதல் பதிவா ? நம்ப முடியவில்லை . மிக அழகானப் படங்கள், விவரணை என்று. இதுவரை கோவிலைப் பற்றி மட்டுமே கேள்விப் பட்டிருந்தேன். புதிய தகவல் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 23. முதன்முறையாக வருகிறேன்,ஐயா,
  ஸ்ரீவில்லிப்புத்தூர் பற்றி அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். அதிலும் கீழக்கரை படித்துறையும் அதில் டால்பின்களாக துள்ளி விளையாடும் சிறுவர்களும் தெளிந்த நீரும் இப்பவே ஸ்ரீவில்லிப்புத்தூர் வா..வா..என்று அழைக்கிறது. அடுத்தமுறை நெல்லை வரும் போது ப்ரோக்ராம் லிஸ்டில் இதையும் சேர்த்துக்கொள்வேன்.

  அந்த படங்கள் எல்லாம் துல்யம்!

  பதிலளிநீக்கு
 24. எங்களூர் என்று எப்பொழுதும் ஏங்கும் திருவில்லிபுத்தூர் குளமும் என் எட்டு வயது வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது.
  ஒரு சின்ன எலிமெண்டரி பள்ளியும் இருந்தது. அதில் மூன்றாம் வகுப்பு வரை படித்தேன்.
  1954ல் அந்தத் திருவூரை விட்டவள்.நினைவில் தேக்கிவைத்த நினைவுகள் தான்.பார்க்கலாம் அவளுக்காச்சு எனக்காச்சு.
  அங்கிருந்த போது என் தாயார் கருத்தரித்ததால் எனக்கு என் தந்தை எனக்கு ஆண்டாள் என்று பெயர் வைத்தார்.
  இப்போது குளத்தைப் பார்க்கும் போது கண்களில் நீர் கட்டுகிறது,.
  மிக மிக நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 25. நன்றி பிரகாஷ்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 26. நன்றி திரு கோபாலகிருஷ்ணன்.
  உங்களது பாராட்டுக்கு நன்றி. அடுத்து செண்பகத்தோப்பு, திருவண்ணாமலை, மடவார்வளாகம், மலைக்கொழுந்தீச்வரர் கோவில் (மூவரை வென்றான்) என வரிசையாக எழுதுகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. நன்றி திரு ரோமிங் ராமன்,
  தங்களது பாராட்டுக்கு நன்றி. அடுத்து திருவண்ணாமலை, தெப்ப தேரோட்டம், ஸ்ரீ ஆண்டாள் கோவில், மடவார்வளாகம், இங்கு மற்ற நல்ல விஷயங்களை தொடர்ந்து எழுதுகிறேன். தங்களது வருகையை எதிர்பார்க்கிறேன்.
  வணக்கம்.

  பதிலளிநீக்கு
 28. நன்றி பிரவீன்.
  தங்களது பாராட்டுக்கு நன்றி. எனது பதிவை எல்லோரும் படிக்க முயற்சி எடுத்ததற்கு மிக்க நன்றி.
  தொடர்ந்து எழுதுகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 29. நன்றி திருமதி அனுஷ்யாதேவி,
  தங்களது பாராட்டுக்கு நன்றி. நீங்களும் உங்களது வெளி நாட்டு அனுபவங்களை எழுதுங்கள். உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது.
  தொடர்ந்து எழுதுகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. நன்றி திருமதி இராஜ ராஜேஸ்வரி,
  பாராட்டுக்கு நன்றி. தங்களது பதிவை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். தொடர்ந்து எழுதுகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 31. நன்றி திருமதி தேனம்மை லெட்சுமணன்,
  தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. நான் பதிவுக்கு புதியவன்; சிறியவன். தொடர்ந்து எழுதுகிறேன். படித்து நிறை, குறை, யோசனைகள் சொல்லுங்கள்.
  வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 32. நன்றி திருமதி ஜிஜி.
  நீங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு எழுதியதற்கு எனக்கு பதில் இல்லை. நான் ஒருவரிடம் கேட்ட கட்டுரையும் வரவில்லை. அது நல்லதாகப் போய் விட்டது. பின்பு நானே எழுதினேன். உங்களது பதிவுகளையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.
  அடுத்து நமது ஊரின் முக்கிய இடங்களை பற்றி தொடர்ந்து எழுதுகிறேன். இது பெரிய பதிவு தான். முதல் பதிவு. தங்களது யோசனைக்கு நன்றி.
  ஊருக்கு வரும்போது எங்களது விருந்தினராக குடும்பத்துடன் வரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
  வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 33. அருமையான முதல் பதிவு.. வாழ்த்துக்கள் ரத்னவேல் சார்.கேபிள் சங்கர்

  பதிலளிநீக்கு
 34. திரு.ரத்னவேல் அவர்களுக்கு,மின்னஞலில் உங்கள் பதிவு பார்த்து மகிழ்ந்தேன்.நீங்கள் கொடுத்து வைத்தவர். முதல் பதிவு என்கிறீர்கள் நம்ப முடியவில்லை.கணினி இயககுவது எழுதுவதை தட்டச்சு செய்வது,ப்டங்களை பிரசுரிப்பது இவற்றுக்கு உதவ உறவுகளும் நட்பும் இருக்க உம் பாடு ஜோர்தான். வெவ்வேறு விஷயங்களை பதிவிடுங்கள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 35. நன்றி திரு விமலன்.
  தொடர்ந்து எழுதுகிறேன். நீங்களும் எழுதுங்கள். எனக்கு தொடர்ந்து அனுப்புங்கள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 36. நன்றி திரு ஜோதிஜி.
  தமிழ் மனத்தில் இணைத்து விட்டேன். உங்களை மாதிரி நல்ல நண்பர்கள் இருக்கும்போது எனக்கு சிரமம் இல்லை.
  அடுத்து பிராவிடண்ட் பண்ட் பற்றி எழுதுகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 37. திரு வே. நடனசபாபதி.
  பாராட்டுக்கு நன்றி ஐயா.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 38. நன்றி திரு இளையோன்.
  தங்களது பாராட்டுக்கு நன்றி. ஸ்ரீ வில்லிபுத்தூரில் தண்ணீர் கஷ்டம் ஓரளவு தீர்ந்து விட்டது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 39. நன்றி திரு ஜோதி.
  எங்கள் ஊரில் எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தொடர்ந்து எழுதுகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 40. நன்றி திரு நாஞ்சில் மனோ.
  தங்களது மெயிலுக்கு விஷயங்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 41. நன்றி திரு. டாக்டர் கே.எம்.முருகானந்தம் அவர்களே.
  தங்களது பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுகிறேன். எனக்கு பிடித்த நல்ல விவரமான பதிவுகளில் உங்களது பதிவுக்கு தான் முதல் இடம்.
  தங்களது தொடர்பால் தங்களது நண்பர் எனக்கு தமிழ் கணினியில் தட்டச்சு செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தார்.
  எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 42. நன்றி திரு கீதப்பிரியன்.
  தங்களது பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுகிறேன். திரு சரவணனுடன் தொடர்பில் இருக்கிறேன். அவர் சிவகாசிக்காரராம். எனக்கு பிறந்த ஊர் சிவகாசி தான்.
  எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 43. நன்றி திரு கார்த்திக் லட்சுமி நரசிம்ஹன்.
  தங்களது பாராட்டுக்கு நன்றி. எங்கள் ஊரைப்பற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தொடர்ந்து எழுதுகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 44. நன்றி திருமதி நானானி.
  தங்களது பாராட்டுக்கு நன்றி. புகைப்படங்கள் ராஜவேல் எடுத்தது. ஸ்ரீ வில்லிபுத்தூரைப் பற்றி இன்னும் தொடர்ந்து எழுதுகிறேன்.
  அடுத்து திருநெல்வேலி வரும்போது எங்களது விருந்தினராக குடும்பத்துடன் எங்கள் ஊருக்கு வரும்படி கேட்டுக் கொள்கிறோம். உமாவும் திருநெல்வேலி தான். எனது விபரங்கள் 'என்னைப்பற்றி' பகுதியில் இருக்கின்றன. தங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.
  வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 45. நன்றி திருமதி வல்லி சிம்ஹன்.
  தங்களது பாராட்டுக்கு நன்றி. ஸ்ரீ வில்லிபுத்தூரைப் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.
  நீங்கள் சிவகுருநாதன் ஆரம்பப்பள்ளியில் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நானும் ஐந்தாம் வகுப்பு வரை அங்கு தான் படித்தேன்.
  வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 46. நன்றி திரு கேபிள் சங்கர்.
  தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 47. நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் ஐயா.
  தங்களது பாராட்டுக்கு நன்றி. எங்களது ஊரைப்பற்றியும் இதர விஷயங்கள் பற்றியும் தொடர்ந்து எழுதுகிறேன்.
  மீண்டும் நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 48. நன்றி திரு சண்முகவேல்.
  தங்களது வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 49. சிறப்பான பதிவு,முதல் பதிவிலே அசத்தியிருக்கிறீர்கள்,தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 50. நன்றி ஐயா.கண்டிப்பாக வருகிறேன்.எனக்கு திருமுக்குளம் படங்கள் கிடைக்கவில்லை.அதனால் தங்களிடம் படங்கள் இருந்தால் அனுப்புமாறு கேட்டிருந்தேன்.மேலும் விவரங்கள் தெரிந்தால் அனுப்புமாறு மெயில் அனுப்பி இருந்தேன் ஐயா.தங்களுக்குக் கிடைத்ததா என்று தெரியவில்லை.தாங்கள் எடுத்துள்ள புகைப்படங்கள் மிக அருமையாக உள்ளன.எப்பொழுது அடுத்த பதிவு எழுதப் போறீங்க?காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 51. முதல் பதிவிலேயே கலக்கலாய் நல்ல பல தகவல்கள் எழுதி இருக்கீங்க அய்யா. நெடுநாட்களாக போக வேண்டும் என நினைத்துக் கொண்டு இருக்கும் ஊர். அடுத்த முறை தமிழகம் வரும்போது கண்டிப்பாக வரவேண்டுமென்ற நினைப்பை அதிகப்படுத்தியுள்ளது உங்கள் பகிர்வு. படங்களும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதி எங்களுக்கெல்லாம் விருந்து படைக்க வேண்டுகிறேன்.

  நட்புடன்

  வெங்கட் நாகராஜ்
  புது தில்லி.
  www.venkatnagaraj.blogspot.com

  பதிலளிநீக்கு
 52. அன்புள்ள அய்யா !
  தாங்கள் எழுதி இருந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம் கட்டுரையை படித்தேன்! நானும் ஸ்ரீவில்லிபுத்தூர் தான் அய்யா ! நானும் , என் நண்பர்கள் சிலரும் சேர்ந்து கிரீன் லீவ்ஸ் என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் மூலம் ஊரில் நிறைய மரங்கள் நடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறோம் ! இப்போது சில இடங்களில் மரங்களும் வைத்துள்ளோம் ! அதைப்பற்றிய விவரங்களை நீங்கள் இந்த இணைப்பில் காணலாம் !

  http://ramvinothbabu.blogspot.com/2011/02/blog-post_25.html

  நீங்களும் உள்ளூர் தான் என்பதால் உங்களிடம் இதை சொல்கிறேன் ! உங்களால் முடிந்த உதவியை எங்களுக்கு செய்யுங்கள் !
  மேலும் நம் ஊரில் இருக்கும் திருமலை நாயக்கர் மஹால் பற்றியும் நான் எழுதி இருக்கிறேன் ! அதையும் படித்துப் பாருங்கள் !
  திருமலைநாயக்கர் மகால் - ஸ்ரீவில்லிப்புத்தூர்". - http://ramvinothbabu.blogspot.com/2011/03/blog-post.html

  உங்கள் அனுபவத்தில் இருந்து பல விசயங்களை எங்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் ! உங்கள் எழுத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் !

  பதிலளிநீக்கு
 53. அருமையோ அருமை.

  இது உங்க முதல் பதிவுன்னே நம்ப முடியலை. சரளமான நடை. நிறையத் தகவல்கள்.

  குளமும் படங்களும் அட்டகாசமா இருக்கு. பார்க்காத குறை தீர்ந்தது. இருட்டிவிட்டதால்
  கோவிலை மட்டுமே பார்த்தோம்.

  என்னைக்கூட நினைவில் வைத்து நன்றி சொல்லிட்டீங்களே!!!!

  பயணப்பதிவுகளும் ஊர்ப் பதிவுகளும் தொடரட்டும்.

  இனிய பாராட்டுகளும் மனமார்ந்த வாழ்த்து(க்)களும்.

  பதிலளிநீக்கு
 54. அட்டகாசமான இடுகை.. எக்கச்சக்கமான தகவல்கள். அழகான படங்கள்.

  தொடருங்க :-)

  பதிலளிநீக்கு
 55. புகைப் படங்களும் விளக்கங்களும் அருமை
  தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன்.

  முதல் பதிவே அருமையாக தொகுத்துள்ளீர்கள்..பாராட்டுக்கள்..

  http://niroodai.blogspot.com

  பதிலளிநீக்கு
 56. முதல் பதிவிலேயே கலக்கலாய்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 57. அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

  தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

  அன்புடன்,

  வலைச்சரம் நிர்வாகம்.

  பதிலளிநீக்கு
 58. இனிய நண்பருக்கு,
  வேர்களுக்கு உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
  தொடரட்டும் உங்கள் நட்பு !
  பாண்டியன்ஜி சென்னையிலிருந்து... 9884127328

  பதிலளிநீக்கு
 59. புகை படமும் கட்டுரையும் அருமை. அடிக்கடி எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
 60. வணக்கம் ஐயா உங்களை போன்ற பெரியவர் வாழ்த்து தெரிவித்தமை எனக்கு மகிழ்ச்சி உங்களது முதல் பதிவு மாதிரி தெரியவில்லை முயன்றால் முடியது ஏதும் இல்லை உங்களை போன்றவர்கள் வலை உலகில் வருவது மிகவும் நல்லது எனது வாழ்த்துகள் மிக மிக அருமை நன்றி ஐயா .

  பதிலளிநீக்கு
 61. புகைப் படங்களும் விளக்கங்களும் அருமை
  தொடர்ந்து எழுதுங்கள்.

  முதல் பதிவே அருமையாக தொகுத்துள்ளீர்கள்..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 62. ரத்னவேல் அய்யா, ஸ்ரீவில்லிபுத்தூர் பற்றி நிறைய தகவல்களை தந்தமைக்கு நன்றி. இதற்கு தாங்கள் அதிக நேரம் எடுத்து இருப்பீர்கள் என்று நன்றாக தெரிகிறது. வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 63. முதல் பதிவா? அருமை .
  நான் எத்தனையோ முறை தென்காசிக்கு ஸ்ரீ வில்லிபுதுரை கடந்து போயிருக்கிறேன்.ஆனால்,சுற்றிப் பார்த்ததில்லை .இனி பார்ப்பேன் .பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 64. நான் எனது சிறு வயதில் இந்த ஊரில் ஒரு வருட காலம் இருந்துள்ளேன்.
  இந்த பதிவு என்னை எனது சிறு வயது நிகழ்வுகளுக்கு அழைத்து சென்று விட்டது.
  பதிவும் படங்களும் சுவாரசியமாகவும் அருமையாக வந்துள்ளது.பகிர்விற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 65. நன்றி திரு வெங்கட்ராஜ் அவர்களுக்கு.
  தமிழகம் வரும்போது ஸ்ரீ வில்லிபுத்தூர் வரும்படி கேட்டுக்கொள்கிறேன். குடும்பத்துடன் எங்களது விருந்தினர்களாக எங்கள் ஊருக்கு எங்கள் வீட்டுக்கு வரும்படி மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன். 'என்னைப்பற்றி' விபரங்கள் பதிவில் இருக்கின்றன.
  வணக்கம்.

  பதிலளிநீக்கு
 66. நன்றி திரு வினோத் பாபு,
  உங்களைப்போன்ற இளைஞர்களின் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள். உங்களது பதிவை 'புதிய தலைமுறை', தினமலர், இந்து, குமுதம் போன்ற பத்திரிகைகளுக்கு அனுப்பியிருக்கிறேன். திரு அதிஷாவுக்கு போன் செய்தேன். எனது மகன்களுக்கும் தகவல் சொல்லியிருக்கிறேன். உங்களது வெற்றிக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 67. வணக்கம் திருமதி துளசி கோபால் அவர்களுக்கு.
  புது வீட்டுக்கு வந்த முதல் 'சிறப்பு விருந்தினராக" உங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
  அடுத்து செண்பகத்தோப்பு, திருவண்ணாமலை, மற்றும் 'மலைக்கொழுன்தீஸ்வரர் கோவில்" என ஒரு குடைவரை கோவில் ஒன்றும் இருக்கிறது. நல்ல பதிவுகளுக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தொடர்ந்து எழுதுகிறேன்.
  எனது தல மேம்பாட்டுக்கு தங்களது யோசனைகளை சொல்லுங்கள். புதிய பதிவு போடும்போது எந்தெந்த தளங்களில் இணைக்கவேண்டும் என கூறுங்கள்.
  உங்களது பதிவு தான் எனக்கு 'ரோல் மாடல்' அம்மா.
  மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 68. நன்றி திருமதி அமைதிச்சாரல்.
  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. தொடர்ந்து எழுதுகிறேன்.
  வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 69. நன்றி மலிக்கா.
  தங்களது பாராட்டுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள் அம்மா.

  பதிலளிநீக்கு
 70. நன்றி திரு பாண்டியன்ஜி
  தங்களது வாழ்த்துக்கு நன்றி.
  நான் நல்ல பதிவுகளை தேடித் தேடி படித்துக்கொண்டிருக்கின்றேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 71. நன்றி மோகன்குமார்.
  தங்களது கிரிக்கெட் பற்றிய பதிவு அருமை. தாங்கள் சுஜாதாவின் ரசிகர் என நினைக்கிறேன். திரு சுஜாதா எழுதிய கடிதம என்னிடம் இருக்கிறது. எனது மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது முகவரியை தெரிவித்தால் அந்த கடிதத்தின் நகலை அனுப்பி வைக்கிறேன். அந்த கடிதத்தை பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அந்த கடிதம் தான் நான் அவருக்கு 'நாடார் மகாஜன வரலாறு' புத்தகம் அனுப்ப காரணமாக இருந்தது.
  வாழ்த்துக்கள் மோஹன்குமார்.

  பதிலளிநீக்கு
 72. நன்றி திரு சாருஜன்.
  தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 73. நன்றி வலைச்சரம்
  எனது தளத்தை 'சிறந்த தளமாக" தேர்ந்தெடுத்தற்கு மிக்க நன்றி. எனது தளத்தை தங்களது வலைச்சரத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். தங்களது பேட்ஜை எப்படி இணைப்பது என என மின்னஞ்சல் கொடுங்கள்; இணைத்துக் கொள்கிறேன்.
  அடுத்து செண்பகத்தோப்பு பற்றி எழுதுகிறேன்.
  வணக்கம்.

  பதிலளிநீக்கு
 74. நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் ஐயா.
  தங்களது பாராட்டுக்கு நன்றி. இது கூட்டு முயற்சி. தொடர்ந்து எழுதுகிறேன்.
  வணக்கம்.

  பதிலளிநீக்கு
 75. தங்களது பாராட்டுக்கு நன்றி சிவகுமார்.
  இது ஒரு கூட்டு முயற்சி. எல்லோரது உழைப்பும் இருக்கிறது. தொடர்ந்து எழுதுகிறேன்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 76. தங்களது பாராட்டுக்கு நன்றி திரு. மைதீன்.
  திருமுக்குளம் பேருந்து செல்லும் பாதையில் இல்லை. நீங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் பேருந்திலிருந்து ஆட்டோ அமர்த்திக்கொள்ளலாம். குளத்தை சுற்றி வருவதற்கு முப்பதிலிருந்து நாற்பது ரூபாய் கேட்பார்கள்.
  வணக்கம்.

  பதிலளிநீக்கு
 77. தங்களது வருகைக்கு நன்றி ராஜிம்மா
  நீங்கள் இங்கு இருந்தது மிக்க மகிழ்ச்சி. அடுத்து செண்பகத்தோப்பு பற்றி எழுதுகிறேன்.
  வாழ்த்துக்கள் ராஜிம்மா.

  பதிலளிநீக்கு
 78. அருமை...நானும் திருவில்லிப்புத்தூருக்கு வந்ததாக இனிமேல் சொல்லிக் கொள்ளலாம் போல இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 79. ஸ்ரீவில்லிப்புத்தூரின் பல்வேறு சிறப்புகளை பட்டியலிட்டுள்ளீர்கள்...அழகிய புகைப் படங்கள்...முதல் முயற்சி என்று நம்ப முடியவில்லை. தனியார் கட்டிடம் போல பொலிவுடன் காணப் படும் பொது மருத்துவமனை பற்றி எழுத விட்டு விட்டீர்கள்! தொடர்ந்து எழுதுங்கள்...

  பதிலளிநீக்கு
 80. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 81. முதல் பதிவா இது !! நிசமாவுமா ? நம்பவே முடியலேங்க..!!
  நானும் மூச்சு முட்ட் முட்ட முப்பது வருசமா எழுதிக்கினே கீரேன்.
  மூணு வார்த்தை முழுசா வர்ற மாட்டேங்கறதே !!!

  நாடெங்கிலும்
  நல்லவை எங்கு நடப்பினும்
  நாலு வார்த்தை எழுதுங்கள். அதை
  நாள்தோறும் செய்யுங்கள்.

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  பதிலளிநீக்கு
 82. நன்றி திரு அருண் காந்தி.
  நன்றி திரு நெல்லை ராம்.
  நன்றி திரு ஸ்ரீ ராம்.
  ஸ்ரீ வில்லிபுத்தூரை பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.
  நன்றி திரு சுப்பு ரத்தினம்.

  பதிலளிநீக்கு
 83. முதல் பதிவென்றே சொல்ல முடியா வகையில் அருமையான படங்களுடன் சிறப்பாய்த் தொகுத்திருக்கிறீர்கள் நம்மூர் பற்றிய கட்டுரையை. தொடரட்டும் ஐயா.

  பதிலளிநீக்கு
 84. தெளிவான கட்டுரை,படங்களும் அருமை!

  பதிலளிநீக்கு
 85. பின்னூட்டத்திற்கு நன்றி
  மார்ச் 2க்குபின் தாங்கள் ஏன் பதிவிடாமல் உள்ளீர்கள்
  தங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

  பதிலளிநீக்கு
 86. ஆஹா.. குளத்தை நேரில் சுற்றி வந்தது போல் இருக்கிறது. எனக்குக் கடவுள் நம்பிக்கை குறைந்து விட்டது.(கடவுளின் பேரால் செய்யப்படும் களவாணித் தனங்களால்).. ஆனால் கோயில்கள், சிற்பக் கலைகள், பழங்கால வாழ்க்கை முறை போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. நான் பல கோயில்களுக்கும் சென்றிருக்கிறேன். திருவன்னாமளைக்கும் கூட.. மறுபடியும் செல்லும் ஆசையைத் தூண்டி விட்டீர்கள். மிகத் தெளிவான நடையில் சரளமாக எழுதி இருக்கிறீர்கள். படங்கள் சரியான இடங்களில் இடம்பெற்று அசத்துகின்றன.. தொடந்து இதுபோன்ற பல விஷயங்களைப் பதியுமாறு வேண்டிக் கொள்கிறேன்..

  பதிலளிநீக்கு
 87. மிக்க நன்றி திரு சாமக்கோடாங்கி.
  மனந்தளராதீர்கள். இருக்கும் நல்லவற்றை பாராட்டுவோம். தொடர்ந்து எழுதுகிறேன்.
  என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
  rathnavel_n@yahoo.co.in
  rathnavel.natarajan@gmail.com
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 88. ஐயா....இவ்ளோ கடைசியா வந்திருக்கேன்.வணக்கம்.முதல் பதிவே நல்லாயிருக்கு.இன்ன்னும் தொடருங்கள் சந்திப்போம் !

  பதிலளிநீக்கு
 89. இந்தக்குளத்தை நன்கு பராமரித்தால் தகுந்த பாதுகாப்புகளுடன் 'படகு சவாரி' செய்தால், குளத்தை பராமரிக்க வருமானம் ஈட்டலாம். இதை ஆண்டாள் கோவில் நிர்வாகமும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியும், சுற்றுலாத்துறையும், அரசாங்கமும் கவனிக்கலாம்.

  அந்த ஒரு தவரினை மட்டும் செய்து விட வேண்டாம்.இயற்கை அழகு கெட்டுவிடும்,பாப்கார்ன்,டெட்ராபேக் ,பிளாஸ்டிச் பாக்கெட் என்று , குளம் குட்டையாகிவிடும்...கங்கை யமுனை சரஸ்வதி வற்றி விடுவார்கள்...

  பதிலளிநீக்கு
 90. சகோதரரே உங்கள் பதிவு மிகவு அற்ப்புதம் என்னக்கு எப்படி சொல்வது என்றே புரியவில்லை மொத்ததி நன்று நன்று வாழ்க வளமுடன் மென் மேலும் சிறப்பாக வளர்ச்சிபெற எல்லாம் வல்ல மடவார் விலக சிவனை வணங்கி வேண்டி கொள்கிறேன் subburajpiramu@gmail.com

  பதிலளிநீக்கு
 91. வாழ்த்த வயதில்லை . ஆசீர்வதியுங்கள் அய்யா இந்தச் சிறியேனை.
  படங்களும் செய்திகளும் அருமை. குளத்தில் இப்போதும் தண்ணீர் இருக்கிறதா? கண்ணுக்கு குளுமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 92. http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html

  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 93. அன்று தப்பவிட்ட ஸ்ரீவில்லிபுத்தூரை இன்று வலைச்சரத்தின் மூலம் பிடித்துவிட்டேன்.அருமை.

  பதிலளிநீக்கு
 94. படங்களும் செய்திகளும் அருமையாக இருக்கின்றன.. இவ்வளாவு தண்ணீரை இனி எப்போது பார்க்கப்போகிறோம்? CMS ஸ்கூலுக்கு பக்கத்தில் இருக்கும் அந்த கட்டிடத்தை பற்றி நானும் அறிய முற்பட்டேன்.. அங்கிருக்கும் யாருக்கும் தெரியவில்லை..

  பதிலளிநீக்கு
 95. அருமையான முதல் பதிவு.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு