முகநூல் எனக்கு கொடுத்த அருமையான கொடை எனது மகள் திருமதி
ஜோஸ்பின் பாபா. அவர்களது அறிமுகம் வித்தியாசமானது.
எனக்கு கொழும்பு டாக்டர் திரு முருகானந்தம் அவர்கள் முகநூல் நண்பர். அவர் முகநூலில் திருமதி ஜோஸ்பின் பாபா அவர்களின் பதிவை புகழ்ந்து எழுதி படிக்கும்படி கேட்டிருந்தார். அந்த பதிவு தான் பத்மநாபபுரம் அரண்மனை. அதற்கு நான் எழுதிய பின்னூட்டம்.
திருவனந்தபுரம்
மன்னர்களால் AD 1601 ல் 187 ஏக்கர் சுற்றுப் புறம் கொண்டு 7 ஏக்கர் நிலைப்பரப்பில்
கட்டப்பட்டது. தற்போது கேரளா அரசுவின்
தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத் தக்கது.
அங்கு கட்டணம் 40 ரூபாய். அரண்மனை நிலைகொள்ளும் தாலுக்குக்கு (Toll) செலுத்த வேண்டும். பின்பு அரண்மனைக்குள் நுழைய பெரியவருக்கு 25 ரூபாய் சிறியவர்களுக்கு
10 ரூபாய் என்று வசூலிக்கின்றனர். அரண்மனை வளாகம் நம் தமிழக சுற்றுலா பயணிகளால்
நிரம்பி வழிந்திருந்தது.
சிலர் மலையாள
அன்போடு கொஞ்சும் தமிழில் விவரிக்கும் போது சில பெண்கள் எரிச்சலுடனும் சொல்லியும் சொல்லாமலும்
விரட்டி விட்டு கொண்டிருந்தனர்.
அரண்மனை வரவேற்பறை கருப்பட்டி, சுண்ணாம்பு, முட்டை
வெள்ளைக்கரு கொண்டு உருவாக்கப் பட்டது
என்று அதன் சிறப்பை மூச்சு விடாது ஒரு பெண்
விவரிக்க ஒரு ஆண் வழிகாட்டி போட்டி நடப்பது போன்று ஆங்கிலத்தில் பக்கத்தில் நின்றே
ஆட்களிடம் விவரித்து கொடுக்க ஆரம்பித்தார்.
நம்ம
சேலம் ஊர் ஆசாமி தான் உணர்ச்சி வசப்பட்டு
ஆகா அற்புதம் நம்மவர்களால் இப்படி ஒரு அரண்மனையை
கட்ட இயலுமா என்று புல்லரித்து பேச வேறு ஒரு பெண் ஆமாம், இப்போதுள்ள மொசைக், மார்பிள் தரையை விட குளிர்ச்சியாக இருக்கின்றது
என்று பரவசப்பட்டு தன் மதிப்பெண்ணயும் பதித்துக் கொண்டார். விளக்கி கொண்டிருந்தவர் அப்படி
எல்லாம் சொல்வதற்கு இல்லை, செட்டி நாடு பக்கம் பல வீடுகள் இதே போல் கலை நயத்துடன் உள்ளது
தற்போது இவ்விதம் கட்ட நினைத்தாலும் செலவு
கட்டுக்குள் அடங்காது என்று தன் கருத்தை விளக்கினார்.
பழமையான முல்லை, செம்பருத்தி செடிகளுடம் அரண்மனை நம்மை கடந்த நூற்றாண்டிற்கு
இட்டு செல்கின்றது என்றால் மிகையாகாது.
என அவர்கள் அறை சன்னல்கள் சொல்லாத கதையும் சொல்லியது.
பதவிக்கு என அவர்கள் குடும்பத்திற்குள் சண்டையிட்டு
மடிந்ததும் ராஜ குடும்ப பெண்கள் தங்கள் நாக்கை பிடுங்கி மரணத்தை தழுவிய அரண்மனை
வழியே தான் நடந்து செல்கின்றோம் என்று அங்குள்ள பொருட் காட்சி மண்டபம் நினைவுறுத்தியது.

எனக்கு கொழும்பு டாக்டர் திரு முருகானந்தம் அவர்கள் முகநூல் நண்பர். அவர் முகநூலில் திருமதி ஜோஸ்பின் பாபா அவர்களின் பதிவை புகழ்ந்து எழுதி படிக்கும்படி கேட்டிருந்தார். அந்த பதிவு தான் பத்மநாபபுரம் அரண்மனை. அதற்கு நான் எழுதிய பின்னூட்டம்.
அருமையான பதிவு.
நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். நன்கு, நிறைய விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.
நன்றி அம்மா.
வாழ்த்துக்கள்.
நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். நன்கு, நிறைய விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.
நன்றி அம்மா.
வாழ்த்துக்கள்.
இந்த
பதிவு மூலம் தான் எங்கள் நட்பு தொடர்ந்தது.

நான்
நேரில் பார்த்ததை விட இவர்கள் அருமையாக, விபரமாக விளக்கியிருக்கிறார்கள். அவர்களது அனுமதியின் பேரில் இந்த பதிவை வெளியிடுகிறேன். மிக்க மகிழ்ச்சி. எனது மகளுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
இனிமேல் திருமதி ஜோஸ்பின் பாபா உங்களை அரண்மனைக்கு
அழைத்துச் செல்கிறார்.
புலியூர்குறிச்சியில் இருந்து 4 கிலோ மீட்டருக்குள்,
அல்லது கன்னியாகுமரியில் இருந்து 35 கி.மி பயணம் செய்தால் பத்மநாப அரண்மனை http://en.wikipedia.org/wiki/Padmanabhapuram_Palace வந்து விடலாம்.
கேரளத்து சேச்சிமார் கன்னத்தில் கை கொடுத்து தமிழக
அம்மாக்கள் உயிர் போகும் அளவுக்கு கத்தி பேசுவதை அவதானித்து கொண்டு இருந்தனர்.
ஒரு காலத்தில் திருவனந்தபுரம் அரசர்களால் மக்கள் அடக்கி
ஆளப்பட்டு மேலும் சாதாரண பெண்கள் மேல் சட்டை அணியக் கூடாது என்று மறுத்த ராஜவம்சம்
என்ற நினைப்புடன் அரண்மனை வாசல் அடைந்த போது அழகிய பெண் சிலைகள் நம்மை வரவேற்றது.
என் மகனிடம் வுட் ஒர்க்(wood work) அழகாக உள்ளதா என்ற போது அவன் நோஸ் கட்டை பார்த்தீர்களா என்று மறு கேள்வி கேட்டான். எரிச்சலுடன் அவனை
நோக்கிய போது கல் சிலையின் மூக்கு சிமின்டினால்
ஒட்டியுள்ளதை சுட்டிக் காட்டினான். டிக்கட்டை
காவலாளியிடம் கொடுத்து உள்ளே புகுந்தோம். சேலம்
பயணிகள் ஒரு டிக்கட்டுக்கு என "சின்ன பையன்" தானே அவனுக்கு டிக்கட்டு வேண்டுமா
என்று மல்லிட்டு கொண்டிருந்தனர். கடைசியில் காவலாளியும் போய்க்கோ, போய்க்கோ என்று பொறுமை
இழந்து வழி விட்டார். தமிழன்னா சும்மாவா?
அரண்மனையில் ஒவ்வொரு அறையிலும் தமிழ், மலையாளம், ஆங்கில
மொழிகளில் விவரிக்க ஆட்கள் அமர்த்தப் பட்டிருந்தனர்.
விரும்பும் திசையில் திருப்பி வைக்க கூடிய ஒரு தொங்கும்
விளக்கும் அதன் அடியில் கல்லால் ஆன பாத்திரம் வைக்கப்பட்டிருப்பதையும் காட்டி கதைத்து கொண்டிருந்தனர். நம் தமிழ் ஆசாமி
ஒருவர் இவர்கள் சொல்வது உண்மைதானா என்று தெளிவு படுத்த விரும்பி விளக்கின் மேல் கை
வைத்ததும் அப்பெண் நீங்கள் தொடக்கூடாது இது பழமையானது
ஆசாரமானது என்று கோபம் கலந்த அவசரத்துடன் அவசரஅவசரமாக
தொடுவதை தடுத்தார். அரண்மனை
127 அறைகள் கொண்டதும் 450 வருடங்களுக்கு முன்பு வெறும் மண்ணால் கட்டப்பட்டு மார்த்தாண்ட
ராஜா காலத்தில் புதுப்பிக்கப் பட்டுள்ளது என்பதையும் தெளிவாக கூறி நம்மை அடுத்த அறைக்கு செல்லப் பணித்தனர்.
பின்பு ஒரு இடுங்கிய படிகள்
வழியே மேல் நிலைக்கு அனுமதித்தனர். அரசன் தர்பார் மண்டம், குறைகேட்கும் அறை, அரசனின் படுக்கையறை, அரண்மனை பெண்களின் அலங்கார கண்ணாடி,
கட்டில், மஹா ராணியின் சாப்பாட்டு அறை, அவருடைய கழிவறை என நாமும் அன்று மன்னரின் உறவினர்களாகி சுற்றி வந்தோம்.
குளிக்கும் அறையில் கல் தொட்டிகள் , அரைக்கும்
அரைகற்கள், எண்ணை தொட்டிகள் போன்றவையும் காண்பிக்க
பட்டது. அரசி தன் கணவர்-மன்னரை
தர்பாரில் இருக்கும்போது நோக்கும் சிறிய துவாரம் கொண்ட ஜன்னல்கள், அதே போல் அரசி குளித்து
விட்டு ஆலயத்திற்கு பூஜைக்கு வரும் தனி வழி, நடனம் கண்டு களியூறும் ஒரு சிறிய மரத்திலான
அறை என்று எல்லாம் வேலைப்பாடுகளும் சிறப்பாக மேலும் எளிமையான அழகுணர்ச்சியுடன் செய்யப்
பட்டிருந்தது.
அம்மா ராணியின் படுக்கை அறை என்று காட்டி தந்தவரிடம் அம்மா ராணி என்றால் யார் என்று தன் நியாயமான
சந்தேகத்தை எழுப்பியதும் ராஜாவின்றே அம்மா
என்று அவர் பதில் உரைத்தவுடன் ஓஹோ ராஜா மாதாவா
என்று சேலம் பயணிகள் தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டு அடுத்த அறைக்கு முன்னேறினர்.
ஒரு மண்டபத்தில் தரை செம்பருத்தி மருதாணி இலையால்
சாயம் பூசப்பட்டு சிவப்பு நிறத்தில் கம்பீரமாக
காட்சி தந்தது. அதன் ஒரு தூண் வாஸ்துப் படி
பலாமரத்தில் செய்யப் பட்டிருப்பதும் மற்று அனைத்தும் தேக்கு போன்ற மரத்தில் செய்யப்
பட்டதாகவும் கூறினர்.
மன்னர் படுக்கையறையில் 64 வகை மரங்களினால் ஆன கட்டில் காட்டி தந்தனர். கட்டிலை
பற்றி விளக்கிய பெண் மன்னரின் ஆவி அங்கு இருப்பது போல் ராஜபக்தியில் உருகி நின்று கதைத்துக்
கொண்டிருந்தார். கீழ் மாடியில் விருந்தினர்,
மேல் மாடியில் அரச குடும்பத்தினர் தங்கி வந்ததாகவும்,
நாலாவது மாடியில் பூஜை அறை என்பதால் நீங்கள் செல்ல இயலாது என்று உருக்கமாக கூறினார்.
127
அறைகளில் 60 அறைக்குள் மக்களுக்கு காண திறந்து விட்டுள்ளனர். மற்ற அறைகள் என்ன நிலையில்
உள்ளது என்று தெரியவில்லை.
சுற்றுப்புறம், உள்பகுதி எல்லாம் சுத்தமாக பாதுகாப்பது
மட்டுமல்லாது
திருவனந்தபுரம் அரச பரம்பரை பிரிட்டிஷாருடன் இணக்கத்தில்
கழிந்தவர்கள் என்பதால் அரண்மனையின் ஒரு கல்லு கூட கேடு வராது அன்று போல் இன்று காட்சி
தருகின்றது. வெளிநாட்டு
விருந்தினர்களை வரவேற்க என மேற்கத்திய கலை நயத்துடன் அறை அமைத்துள்ளனர்.
தன் பிரஜைகள் தங்கள் குறைகளை சொல்ல அரண்மனை முற்றத்தில்
நின்று கூவி சொல்வதும் மன்னர் மட்டுபாவில் இருந்து யானை மேல் இருந்து கேட்பது போல்
அமைப்பு உள்ளது. சாதாரண பிரஜையின் நிலை அன்றும் இன்றும் என்றும் ஒன்று தான் என தெள்ள
தெளிவாக எடுத்துரைத்தது.
மேலும் மகா ராணிகள் மன்னர்
தவிர மற்றோர் கண்களில் படக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்துள்ளனர் என்பதும்
ராணிக்கு என்ற தனி நடைபாதை, சாப்பாட்டு அறை
அடுத்தது எங்கள்
பயணம் ஜெயின்களுடைய சித்தாறல் மலைக் கோயில் நோக்கி சென்றது. அங்கு தான் கோயில் வளாகத்தில்
எதிர்பார்க்காத ஒரு சாட்சி கண்டு அதிர்ந்தோம். அதை பற்றி அடுத்த பதிவில் கதைக்காமல்
விட்டு விடுவேனா!!!!
இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில்
(Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த பதிவின் link
களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். இதன்
link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள்
பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.
நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து
விடும்.
மிக்க
நன்றி.
உங்களது மகளும் எனது தோழியுமான திருமதி ஜோஸபின் அவர்களின் எழுத்து திறமை என்னை வியக்க வருகிறது. அவர்கள் ஒரு நாள் மிகச் சிறந்த புகழ் பெற்ற ஜர்னலிஸ்டாக வருவார்கள் என்பது எனது எதிர்பார்ப்பு. இதை பலமுறை அவரிடம் சொல்லி இருக்கிறேன். மீண்டும் அதை உங்கள் தளம் மூலம் சொல்லுகிறேன். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குந்ண்பா தங்கள் ஊக்கம் ஊட்டும் பின்னூட்டத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.நன்றி வணக்கங்கள்.
நீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
நீக்குநல்ல பதிவு. மீண்டும் போய் வந்த,
பதிலளிநீக்குமீண்டும் செல்ல தூண்டுகின்ற பதிவு.
வருஷம் 16 திரைப்படத்தில் இந்த
அரண்மனையை நன்றாகவே
காண்பித்திருப்பார்கள்
நன்றி மகிழ்ச்சிகள்.
நீக்குSuperb article... Want to visit this palace on my next trip for sure.... Thank you Rathnavel sir and josephine ma'am
பதிலளிநீக்குநன்றி வணக்க்ங்கள் நண்பா!
நீக்குஇது வரையில் கேரளா போனதில்லை.
பதிலளிநீக்குஇந்த கட்டுரை மூலம் , மன்னரை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை அறிய முடிந்தது குறித்து நன்றி.
நன்றி மகிழ்ச்சிகள். நாகர்கோயிலை சுற்றி பல அரிய காணதகுந்த இடம் உண்டு.
நீக்குhttp://josephinetalks.blogspot.in/search/label/Travel-%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
பதிலளிநீக்குஎன் பயண அனுபவங்கள் அடைங்கிய பதிவு!
அருமையாக விபரித்திருக்கிறார். நேரில் வந்து பார்த்துவிட்டு போனதுபோல் ஒரு உணர்வு
பதிலளிநீக்குதங்கள் ஆக்கபூர்வமான பின்னூட்டம் பெற்றமைக்கு நன்றி வணக்கங்கள்.
நீக்குஅருமையாக விபரித்திருக்கிறார். நேரில் வந்து பார்த்தது போன்ற உணர்வு மேலிடுகிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பா தங்கள் பின்னூட்டம் பெற்றமைக்கு!
நீக்குதமிழன்னா சும்மாவா?
பதிலளிநீக்குசிறப்பான படங்களுடன் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
ஜொஸஃபைன் அவர்களுக்கு! பத்மனாபபுரம் அரன்மணை பர்ரிய உங்கள் பதிவும் படங்களும் அருமை.சமணர்கள்பற்றிய உங்கள் பதிவையும் படிக்க விரும்புகிறேண்.வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்
பதிலளிநீக்குவிரைவில் சென்று வந்து எழுதுகின்றேன். ஐயா! தங்கள் பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது.
நீக்குமிகவும் நல்ல பகிர்வு
பதிலளிநீக்குமிக்க நன்றி!
நீக்குநன்று சுற்றி பார்த்த அனுபவத்தை விட மேலானது
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி! இன்னும் ஒரு பயணத்திற்க்கு தயாராக தங்கள் பின்னூட்டன் ஊக்கம் அளிக்கின்றது!
நீக்குit recal my journey at padmanama palace
பதிலளிநீக்குமகிழ்ச்சிகள்!
நீக்குமிக நன்றாக சகோதரி யொசபின் விவரம் தந்துள்ளனர். நேரில் சென்று வந்தது போல ஒரு உணர்வு. மிக நன்றி. ஐயாவுக்கும் சகோதரிக்கும். நல்வாழ்த்து.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
மிக்க மகிழ்ச்சி சகோதரி தங்கள் பின்னூட்டம் பெற்றமைக்கு.
நீக்குபதமஞாப அரன்மனை பற்றிய விபரங்களை இன்னமும் தெளிவாக தங்களிடம் எதிர்பார்த்தேன்.
பதிலளிநீக்குsnrmani@rediffmail.com
அப்படியா ஒரு முறை கூட சென்று வர சொல்கின்றீர்களோ?
நீக்குஅருமையாக எழுதி இருக்கிறார்!
பதிலளிநீக்குமகிழ்சி மகிழ்சி! நண்பா!
நீக்குநன்றி என்னுடைய நெல்லை நண்பரே!
பதிலளிநீக்குஅன்பின் ஜோசஃபின் பாபா - அருமையான் நேர் காணல் போல விளக்கங்கள் - ஒவ்வொரு காட்சியை பற்றிய விளக்கமும் அருமை. பதிதேன் இரசித்தேன் - பகிர்வினிற்கு நன்றி ரத்னவேல்
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள் ஜோசஃபின் பாபா
நல்வாழ்த்துகள் ரத்ன வேல்
நட்புடன் சீனா
பின் தொடர்பதற்காக
பதிலளிநீக்கு