


நிறைய வாகனங்கள் அற்புதமான வடிவமைப்பில் உள்ளன.
நல்ல உயர்ந்த மதில்கள் உள்ளன. சுற்றுப்பிரகாரம், சுற்றில் உள்ள பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவில் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது உள்ள தேர் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. புதிய தேர் பணி துவங்குவதற்காக அறிவிப்பு கோவிலில் இருக்கிறது
அருமையான தெப்பம் வெளியில் இருக்கிறது. பக்கத்தில் பீடம் ஒன்று காணப்படுகிறது. கோவிலுக்கு வெளியில் 'அறிவியல் - ஆன்மீக பாடசாலை' ஒன்று இருக்கிறது.

இந்தக் கோவிலுக்கு அருகிலே பெருமாள் கோவில் ஒன்று இருக்கிறது .
ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கப் பெருமாளுக்கு தனி கோவில் இருக்கிறது. நாங்கள் இதுவரை இப்படி தனி சன்னதி பார்த்ததில்லை.
சிறிய கோவிலாக, பழமையானதாக, உள்ளே நந்தவனத்துடன், அருமையாக
பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தக்கோவிலிலும் சுவர் ஓவியங்கள்
அருமையாக இருக்கின்றன.
புகைப்படங்களை
தொகுத்தளித்திருக்கிறோம்.
புளியங்குடி எலுமிச்சம்பழ வியாபாரத்திற்கு புகழ் பெற்றது என்றார்கள் ( ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா போல) . நாங்கள் சென்ற நேரம் கொஞ்சம் முன்னாடியே சென்று விட்டோம். எலுமிச்சம்பழங்கள் வரவில்லை. ஒரு பேட்டை போல் இருக்கின்றது. கிட்டத்தட்ட நாற்பது கடைகள் இருக்கும். எண்ணிக்கைக்கு வியாபாரம் என்றார்கள். மற்ற ஊர்களில் எடை போட்டு வியாபாரம் - இங்கு எண்ணிக்கை வியாபாரம் என்றார்கள்.
ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலும், ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கப் பெருமாள் தனி சன்னதியும் எங்களை மறுபடியும் ஈர்க்கிறது. அடுத்து செல்லும்போது 'எலுமிச்சம்பழ வியாபாரம்' பற்றி படங்களுடன், வியாபாரிகளிடம் விபரம் கேட்டு தனி பதிவு எழுதுகிறேன்.
புளியங்குடியில் இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்தில் 'கற்பகாம்பாள் கோவில்' மலையில் அமைந்திருக்கிறது என்று சொன்னார்கள். எங்களுக்கு முன்பே தெரியாது. அடுத்து செல்லும்போது விபரங்கள் தொகுத்தளிக்கிறோம்.
இந்த பதிவுக்கு புகைப்படங்கள் எடுத்து உதவிய எனது மனைவி திருமதி உமாகாந்திக்கு நன்றி.
அடுத்து, எனக்கு பதிவை கணினியில் ஏற்ற, புகைப்படங்கள் எடுத்து கணினியில் ஏற்ற உதவி செய்த எனது பாசப்பிள்ளை ராஜவேல் வேலை கிடைத்து சென்னை சென்று விட்டான். அவனை மனசார வாழ்த்துங்கள்
எங்களது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய குடும்ப நண்பர் திருமதி ரமாமணி அவர்கள் தான் இந்த பதிவிற்கும் இனிமேல் நாங்கள் இடும் பதிவுகளுக்கும் எங்களுக்கு ஆலோசனைகளும் உதவிகளும்.
இந்த பதிவை படித்து நிறை குறை எழுதுங்கள். Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.
மிக்க நன்றி.





















