பேராசிரியர் திருமதி
மோகனா சோமசுந்தரம் அவர்கள் சர்க்கரை நோய் & உணவு முறைகள், மருத்துவம் பற்றி : சர்க்கரை – சர்க்கரை –
சர்க்கரை நோய் : என்று ஒரு
அருமையான கட்டுரை அவர்களது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்கள். அவர்களது அனுமதியிடன் எங்களது பதிவாக
வெளியிடுகிறோம். படித்துப் பார்த்து
உங்களது கருத்துக்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏதாவது விளக்கம் வேண்டும் என்றால் அவர்களுக்கு
அனுப்பி பதில் வாங்கி பதிவு செய்கிறேன்.
சர்க்கரை...சர்க்கரை...சர்க்கரை நோய்...
-பேரா.சோ.மோகனா
வாப்பா பாலா, கையிலே என்ன பொட்டலம்?
அட .எல்லாம் ஒனக்கு பிடிச்ச அயிட்டம் தான்பா.
அட போப்பா, டாக்டர் என்ன சர்க்கரை பக்கமே போகக் கூடாதூன்னுட்டார்.
சரி சரி. கவலைப்படாத. சக்கரையை ஒம்பக்கம் அனுப்பிடலாம், நீ போக வேண்டாம்.
இங்க பாரு நானே நொந்து நூலாயிருக்கேன். நீ வேற நக்கல் பண்றியே.. சரிப்பா...சரிப்பா.. இனிப்புன்னு எப்படி வளைச்சு மண்டுவே. இப்ப அதெல்லாம் போச்சா. சரி. அண்ணனுக்கு ஒரு டீ வாங்கிடு வா தங்கம். சர்க்கரை இல்லாம. நமக்கெல்லாம் 4 டீ வாங்கிடு...
அண்ணே... இங்க தம் டீ தாண்ணே! சர்க்கரை போடாம கெடக்காது.
சரி பாலா... இன்னிக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க...தம் டீ சாப்பிடு.. சரிப்பா...
சர்க்கரையின்... நிலை....!
கி.பி. 2000க்குள் உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 17.8 கோடி; மக்கள் தொகையில் 2.8%.2003ல்-18.9 கோடி; இது கி.பி.2030ல் இருமடங்காகி 35 கோடியைத் தாண்டும் என்ற தகவல் நம்மை ஏகமாய் மிரட்டுகிறது . அது போகட்டும்.. இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா?
- 1995ல்..1.9கோடி;
- 2005ல்-3.5கோடி;
- 2007ல்..4கோடி;
- 2008 ஜுன் 8ம் நாளின்படி... 4.1கோடி(உலகஅளவில் 24.0கோடி).
- கி.பி.2025ல், வெற்றிகரமாக 7கோடியை எட்டும்
என உலக நல நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அப்போது உலகில் இந்தியா, சீனா, அமெரிக்கா மூன்று நாடுகளுமே சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் முன்னணியில் இருக்குமாம்...!
அதெல்லாம் சரி..! சர்க்கரை நோய் என்றால்..என்னப்பா.. என்கிறீர்களா? நாம் உட்கொள்ளும் அனைத்து உணவும், உணவு மண்டலத்தில் செரிமானம் ஆகிறது. உட்கிரகித்தல் மூலம் இரத்தத்தில் சர்க்கரையாக கலக்கிறது. ஆமப்பா; நீங்கள் இட்லி சாப்பிட்டாலும் சரி, நெய் உருண்டை தின்றாலும் சரி, அல்வா முழுங்கினாலும் சரி...மட்டன், மீன்.. என எது போட்டு தாக்கினாலும் சரி, அது இறுதியில் சர்க்கரையாக மாற்றப்பட்டே, இரத்தத்தில் கலக்கிறது. இரத்தம் மூலம்தான் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் வேண்டிய சக்தி அளிக்கப்படுகிறது. இந்த சுழற்சியில், இரத்ததில் உடலுக்குத் தேவையானது போக அதிகப்படியான சர்க்கரை இருந்தால் என்ன ஆகும் தெரியுமா? நம் வயிற்றுப் பகுதியில் வயிற்றுக்குக் கீழே கணையம் என்ற சுரப்பி உள்ளது.
இந்த சுரப்பியில் ’இன்சுலின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது இரத்தததில் காணப்படும் அதிகமான சர்க்கரையை, கிளைகோஜனாக மாற்றி, எதிர்கால சேமிப்பு களனாக வைத்துவிடுகிறது. இந்த இன்சுலின் போதாவிட்டாலோ, சரிவர வேலை செய்யாவிட்டாலோ..நமக்கு தாங்கமுடியாத ரோதனைதாம்பா! அதன்பெயர்தான் ...சர்க்கரை வியாதி..! என்ன அருமையான பேருப்பா.இது. . நாம சர்க்கரை சாப்பிட முடியாத நிலைமைக்கு இப்படி ஒரு பெயராம். ..!
சர்க்கரை நோய். நமது வாழ்க்கை முறை தொடர்பான வியாதியாகிவிட்டது இப்போது? பொதுவாக சர்க்கரை நோய் பரம்பரை நோய் என்று கூறப்பட்டாலும், பரம்பரையாக வரும் என்றாலும் இன்று அதையெல்லாம் தாண்டி
ஏன்...சர்க்கரை நோய்...!
இந்த சுரப்பியில் ’இன்சுலின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது இரத்தததில் காணப்படும் அதிகமான சர்க்கரையை, கிளைகோஜனாக மாற்றி, எதிர்கால சேமிப்பு களனாக வைத்துவிடுகிறது. இந்த இன்சுலின் போதாவிட்டாலோ, சரிவர வேலை செய்யாவிட்டாலோ..நமக்கு தாங்கமுடியாத ரோதனைதாம்பா! அதன்பெயர்தான் ...சர்க்கரை வியாதி..! என்ன அருமையான பேருப்பா.இது. . நாம சர்க்கரை சாப்பிட முடியாத நிலைமைக்கு இப்படி ஒரு பெயராம். ..!
சர்க்கரையின்...காரணி..!
சர்க்கரை நோய். நமது வாழ்க்கை முறை தொடர்பான வியாதியாகிவிட்டது இப்போது? பொதுவாக சர்க்கரை நோய் பரம்பரை நோய் என்று கூறப்பட்டாலும், பரம்பரையாக வரும் என்றாலும் இன்று அதையெல்லாம் தாண்டி
- குண்டாக இருப்பவர்களுக்கும்
- நவீன உணவு & துரித உணவு உட்கொள்பவர்களுக்கும்
- மற்றும் வாழ்க்கை முறையும்தான் முக்கிய காரணிகள
உணவும்..சர்க்கரைநோயும்...!
மருத்துவர்களின்...கணிப்பு...!
நம்மை வாட்டி, வதைத்து, சித்திரவதைப் ப்டுத்தி மிரட்டும் சர்க்கரை நோய் மூன்று வகைப்பட்டது
- சிலருக்கு பிறவியிலேயே, இன்சுலின் சுரக்காமல் இருப்பதும் உண்டு. இவர்கட்கு குழந்தையிலிருந்தே சர்க்கரை நோய் பாதிக்கிறது. சிலருக்கு அவர்கள் உடம்பில் சுரக்கும் இன்சுலின் அளவு போதாது. இவர்களிடம் 40 வயதுக்குள் சர்க்கரைநோய் சரணடையும். இது முதல்வகைச் சர்க்கரை நோய்.
- உடல்பருமன், பரம்பரை, உடல்செயல்பாடு குறைதல், நகர்மயமாதலும், உணவுப்பழக்கமும், மன அழுத்தம், போன்றவற்றால் பலர்க்கு நடுத்தர வயதைக் கடந்தும், சர்க்கரைநோய் குஷியுடன் உடலில் தங்கி ஓய்வெடுக்கிறது. இது இரண்டாம் வகையாகும்.
- உலகிலுள்ள சர்க்கரை நோயாளிகளில் 90% பேர் இந்த வகையினரே! முன்றாவது வகை கருவுற்றிருக்கும் பெண்களிடம் மட்டும் தாய்மை பேறு காலத்தில் எட்டிப்பார்த்துவிட்டு, பிறகு ஓடியே போய்விடும். இவர்களுக்கு முதுமையிலும், இவர்களின் குழந்தைகளுக்கும் பிற்க்காலத்தில் சர்க்கரை வியாதி வரும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
உண்மை...அறியாத...மக்கள்..!
உறுப்புகளை...சிதைக்கும்...சர்க்கரை நோய்...!



