இனிய
நண்பர்களே,
எங்கள் ஊர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு - ஸ்ரீ ஆண்டாள் கோவில், பெரிய கோபுரம், அருமையான தேர்,
இன்னும் நிறைய கோவில்கள், அது பற்றி அவ்வப்போது எழுதுகிறேன்.
எங்கள் ஊரில்
நேர்மையான வியாபார ஸ்தலங்கள் நிறைய இருக்கின்றன, செய்யும் தொழிலே தெய்வம் – ஆம்,
நான் எழுதும் ஸ்தாபனங்கள் நடத்துபவர்கள் அவர்கள் தொழிலை அவ்வளவு புனிதமாக நடத்துகிறார்கள். நான் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுத நினைத்த ஸ்தாபனங்கள்
= ஏ.எல்.நாறாயண அய்யர் ஜவுளிக்கடை, கதிரவன் ஹோட்டல், இ.கே.எஸ்.மெடிக்கல்ஸ், வெங்கடேஸ்வரா
பால் கோவா கடை (ஸ்ரீ ஆண்டாள் கோவில்
அருகில்), ஏ.கே.சி.ஸ்டோர் – எனக்குத் தெரிந்தவை இவை, இன்னும் நான் தெரிந்து
கொள்ளும் போது, கற்றுக் கொள்ளும் போது மற்ற நிறுவனங்களைப் பற்றி எழுதுகிறேன்.
இந்த பதிவில்
நான் எழுதப் போவது – ஏ.கே.சி. ஸ்டோர்ஸ், (ஏ.கே.சின்னையா நாடார் மில் வளாகம்), சாத்தூர்
ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர்.
இந்த ஸ்தாபனம்
67 ஆண்டுகள் கடந்த நிறுவனத்திலிருந்து தோன்றியது.
முதலில் அரிசி ஆலையாக துவங்கினார்கள்.
திரு சின்னையா நாடார் என்ற மாமனிதரால் அரிசி ஆலை, அரிசி வியாபாரம் துவங்கப்
பட்டது. அவரது ஒவ்வொரு மகன்களும் தனித்
தனியாக வெவ்வேறு துறைகளில் கவனம் செலுத்தும் போது – திரு ஏ.கே.சி.கொண்டல் வண்ணன் –
அரிசி விற்பனைப் பிரிவு துவக்கினார்.
கொஞ்சம் கொஞ்சம் பலசரக்குகளும் சேர்த்து வைத்தார். அந்த சமயத்தில் மிகவும் சின்ன கடை, அரிசி
மூடைகள் முன்னால் விரித்து வைக்கப் பட்டிருக்கும். கண்ணுக்கு தெரியும் கொஞ்சம் இடங்களில்
பலசரக்குகளை பேக் செய்து அடுக்கி வைத்தார். அந்த கடையிலேயே ஒரு பெரியவர் உட்கார்ந்து முறம்
வைத்து பலசரக்குகளை புடைத்து சுத்தம் செய்து கொண்டிருப்பார். அது
அப்போது முன்னோடியான புது முயற்சி (innovative idea). எனக்கு
என் தம்பி திரு ராமராஜன் – ஏ.கே.சி. ஸ்டோரில் பலசரக்குகள் எல்லாம் நன்றாக இருக்கின்றன, 10% வரை விலை
குறைவாக இருக்கிறது, இரு சக்கர வாகனத்தில் சென்று நிறுத்தி வாங்க வசதியாக
இருக்கும் என்று எனக்கு சிபாரிசு செய்தார்.
அது வரை எங்கள் வீட்டிற்கு கொள்முதல் எல்லாம் எங்கள் குடும்பத் தலைவி
திருமதி உமாகாந்தி அவர்கள் தான்.
எனது தம்பி
சொன்னதுக்கப்புறம் நான் செல்ல ஆரம்பித்தேன்.
அவர்கள் அடுக்கியிருந்த தோரணை, அவர்களின் கனிவு, சுறுசுறுப்பு, விலைச்
சலுகைகள், ஏதாவது offer உடன் சரக்கு வந்தால் அந்த free gifts சேர்த்து
கொடுத்து விடுவார்கள். நீங்கள் கேட்கவே
வேண்டியதில்லை. நல்ல வியாபாரம் இருந்தது. அங்கு இருப்பவர்கள் எல்லாம் நெருங்கிய
நண்பர்கள் என்பதை விட, நெருங்கிய உறவினர்களாக, நமது குடும்பத்தில் ஒருவர் போல் ஆகி
விட்டார்கள்.
நான்
சொன்னேன், நல்ல பெரிய சூப்பர் மார்க்கெட் மாதிரி மாற்றுங்கள் என்று சொன்னேன்,
அதற்கு அவர்கள் அருகில் உள்ள கிட்டங்கியை அப்படித் தான் மாற்றுகிறோம் என்றார்கள்.
நான்
சொன்னேன், நல்ல பெரிய சூப்பர் மார்க்கெட் மாதிரி மாற்றுங்கள் என்று சொன்னேன்,
அதற்கு அவர்கள் அருகில் உள்ள கிட்டங்கியை அப்படித் தான் மாற்றுகிறோம் என்றார்கள்.
அவர்கள் சேவைகள் (service)
பேசுகின்றன
நண்பர்களே, ஆச்சரியப்
படுவீர்கள். காலை 7.15 மணிக்கு சென்றால்
கடை திறந்திருக்கும். அந்த குடும்பத்
தலைவர் திரு கொண்டல் வண்ணன் பொருட்களை எடுத்து ரேக்குகளில் அடுக்கி வைத்துக்
கொண்டிருப்பார். சுத்தம் செய்யும் பெண்மணி
சுத்தம் செய்யும் வேலைகளை ஆரம்பித்திருப்பார்.
அவரது மகன்கள் இருவர் 7.30 மணிக்கு வந்து விடுவார்கள். மற்ற ஊழியர்கள் 9 மணிக்கு மேல்
வருவார்கள். இவர்களும் கடையில் பொருட்களை
அடுக்குவது, என்னைப் போல சரக்குகள் எங்கு இருக்கிறது என்ற விபரங்கள் தெரியாதவர்கள்
வந்தால் அவர்களுக்கு சரக்கு எடுத்துக் கொடுப்பது போன்ற பணிகளும், பில் போடுவது
போன்ற பணிகளும் செய்வார்கள். ஆச்சரியமாக
இருக்கும். அந்த அதிகாலை வேளையில்
குளித்து, திருநீறு அணிந்து வருவார்கள், மனதுக்கு நிறைவாக இருக்கும். அவர்கள் உபசரிப்பு மறக்க முடியாத நினைவு. அவர்களுக்கு அவர்கள் கடைக்கு வரும் எல்லா
வாடிக்கையாளர்களும் VIPs தான்.
என்னுடன் பணி
புரியும் பெண்மணியை இவர்கள் கடை சிபாரிசு செய்தேன். இங்கு வாங்கிக் கொண்டிருந்தார். புதிதாக இன்னொரு சூப்பர் மார்க்கெட் வேறு
பகுதியில் ஆரம்பித்திருந்தார், இன்னொரு நபர்.
அந்த பெண்மணி அந்த புது கடைக்கு சென்று பார்த்து விட்டு, அங்கு பேருக்கு
மட்டும் ஏதோ வாங்கி விட்டு திரும்ப இந்த கடைக்கே வந்து விட்டேன் என்றார். ஏன் என்றேன், ஏ.கே.சி.ஸ்டோரில் உள்ள மன நிறைவு
இல்லை என்றார். நான் அதற்கு சொன்ன காரணம் –
இங்கு எல்லோரையும் VIP ஆக நடத்துகிறார்கள், அதனால் தான் என்றேன். கனிவான உபசரிப்பு, காலையிலிருந்து இரவு கடை
அடைக்கும் வரை அதே கனிவு, சிடுசிடுப்பு கிடையாது.
நான் ஒரு தடவை
அரிசி வாங்க சென்றேன். அரிசி மூடை இல்லை,
அருகிலுள்ள கிட்டங்கியிலிருந்து எடுத்து வர வேண்டியதிருந்தது, நான் பிறகு
வருகிறேன் என்றேன். சற்று இருங்கள்
என்றார் அவர்களது மூன்றாவது மகன் திரு விவேக்.
கிட்டங்கிக்கு சென்றார், 75 கிலோ உள்ள மூடையை அவரே முதுகில் வைத்து ஒரு
லோடுமேன் போல (in a professional way) தூக்கி வந்தார். எனக்கு தாங்க
முடியாத ஆச்சரியம். இவர்கள் வெற்றியின்
பின்னணி இது தான் – எந்த வேலையும் கேவலம் இல்லை.
யார் இருந்தாலும், இல்லையென்றாலும் இவர்கள் கடை இயல்பாக நடைபெறுகிறது. வேலை செய்யும் பெண்மணிகள் விடுமுறையில் சென்று
விட்டால் அவர்கள் வீட்டு பெண்மணிகள் வந்து கவனிக்கிறார்கள். குடும்பத்தலைவரின் மனைவி, மருமகள்கள் அனைவரும்
வருகிறார்கள், திறம்பட பணியாற்றுகிறார்கள்.
இது எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
திரு
ஏ.கே.சி.கொண்டல் வண்ணன் அவர்களைப் பற்றி – ஒரே வார்த்தையில் சொன்னால் மாமனிதர்,
இப்படி மனிதர்களுக்காகத் தான் மழை பெய்கிறது.
இவர் கோவில் திருப்பணி கமிட்டி, பள்ளிகள் கமிட்டி, மக்களுக்கு நன்மை தரும்
செயல்கள் எல்லாவற்றிலும் இருக்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
மடவார்வளாகம் என்று ஒரு புராதன அருமையான சிவன் கோவில் (அருள்மிகு வைத்திய நாத
ஸ்வாமி உடனுறை சிவகாமி அம்மன் திருக்கோவில்) இருக்கிறது.
இங்கு 2 தெப்பங்கள் இருக்கின்றன, ஒன்று கோவில் அருகில் இருக்கிறது. மற்றொன்று தூர்ந்து போய் இருந்தது. கோவில் அருகில் இருந்த குளத்தை அருமையாக
பராமரிப்பு செய்து, தளத்தில் நல்ல சிமிண்ட் பூச்சு பூசி சுற்றிலும் வேலி கட்டி,
குளிப்பதை தடை செய்து அருமையாக்கினார்கள்.
எதிரில் உள்ள குளத்தை சீர் செய்து பிரமாதமாக்கி விட்டார்கள். மன்னர் காலத் திருப்பணி போன்றிருக்கிறது.
சிவன்
கோவிலுக்கு நன்கொடை கொடுத்தால் குடும்பத்துக்கு ஆகாது என்று ஒரு தப்பான
அபிப்பிராயம் இருக்கும் போலும், அதனால் இவர் கடையில் ஒரு போர்டு வைத்திருந்தார்,
நோட்டீஸ்கள் வினியோகித்தார். சிவன்
கோவிலுக்கு செய்தால் புண்ணியம், 140 ரூ கொடுத்தால் ஒரு சிமிண்ட் மூடை வாங்கிக்
கொடுக்கலாம் என நிறைய விபரங்கள் கொடுத்தார்.
இவர் கடையில் வந்து நிறைய பணம் கட்டி திருப்பணியில் எல்லா வகை மக்களையும் (all categories of people) பங்கு பெறச்
செய்தார். திருமுக்குளம் சீரமைப்பிலும்
இவரது பணி மகத்தானது. கரிசல்குளம்
பகுதியில் பள்ளி ஒன்று கட்டிக் கொண்டிருக்கிறார்.
நீங்கள் இவரிடம் விபரம் கேட்கப் போனால் இவருக்கு பேச நேரம் கிடையாது;
உட்கார்ந்து சரக்கு அடுக்குதல், பழைய பொருட்களை கழித்தல் போன்ற வேலைகளில்
அர்ப்பணிப்பு உணர்ச்சியுடன் இருப்பார்.
வணக்கம் சொல்லக் கூட அவருக்கு நேரம் இருக்காது. ஆஹா.
அருமை.
சுந்தர
மகாலிங்கம் மலையிலும் இவர்களுக்கு அன்னதான மடம் இருக்கிறது. ஒவ்வொரு அமாவாசைக்கும் சென்று வருகிறார். அங்கும் இவர்கள் பணி மகத்தானது.
நான் எங்கள்
வீட்டு விசேஷங்கள், குழந்தைகள் மண விழா நாள், பிறந்த நாள் போன்றவற்றுக்கு
திருச்செந்தூருக்கு பணம் அனுப்புவேன்.
இப்போது எனக்கு இவர்கள் கடை தான் கோவில்.
இங்கு பணம் கொடுத்து ரசீது வாங்கிக் கொள்வேன். சுந்தர மகாலிங்கம் அன்ன தானத்துக்கு சென்று
விடும்.
நான் இருதய நோய் வந்து சரியான உடன் வெளியில் சென்று வர வேண்டும் என்று முதலில்
சென்றது இவர்கள் கடை தான், கால் பிடிப்பினால் சிரமப்பட்டு ஒரு வாரம் வரை வெளியில்
செல்ல முடியுமா, வேலைக்கு போகலாமா என நினைத்து வெளியில் முதலில் சென்றது இவர்கள்
கடை தான். என்னப் பொறுத்த வரை – இவர்களது அருமையான
ஸ்தாபனம், எனக்கு கோவில் போல.
திரு கொண்டல்
வண்ணன் அவர்களுக்கு மூன்று மகன்கள் – மூத்தவர் திரு அரவிந்த், இரண்டாவது திரு
சிவானந்தம், மூன்றாவது திரு விவேக்.
அனைவரும் பட்டை தீட்டிய வைரங்கள். அனைவருடன்
எனக்கு நட்பு இருக்கிறது, இது நான் மிகவும் பெருமைப் படும் விஷயம். உங்களுடன் நான் கொண்டிருக்கும் நட்பினால்
மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மிகவும் பெருமைப் படுகிறேன் நண்பர்களே.
இந்த பதிவை
படித்து உங்கள் பின்னூட்டங்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் போது ஸ்ரீ ஆண்டாள்
கோவிலும் பாருங்கள், இந்தக் கடையையும் வந்து பார்த்துச் செல்லுங்கள். நன்றி நண்பர்களே.
