செவ்வாய், நவம்பர் 29, 2011

கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோவில்


ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரயில் பாதையில் (மதுரை – செங்கோட்டை மார்க்கம் சுமார் அறுபத்திரெண்டு கிலோமீட்டர் தொலைவில் கடையநல்லூர் அமைந்துள்ளது.







சாலை வழியில் மதுரை- செங்கோட்டை சாலையில் சுமார் அறுபத்தி ஐந்து   கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடையநல்லூருக்கு முந்தைய பேருந்து நிறுத்தம் கிருஷ்ணாபுரத்தில் இறங்க வேண்டும்.  

கடையநல்லூர் ரயில் நிலையத்திலிருந்தும், கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்தும் ‘ஷேர் ஆட்டோக்கள்  ஓடிக்கொண்டிருக்கின்றன.  



கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் – ‘அருள்மிகு கோபாலகிருஷ்ண சுவாமி வகையறா திருக்கோவில்கள்' என்ற தனியார்களுக்கு பாத்தியப் பட்ட கோவில். தற்போது அரசாங்கத்தின் ‘இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.



ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லலாம்.  இது கடையநல்லூர் ரயில் நிலையம்.  இங்கு கோவிலைப் பற்றிய அறிவிப்பும் இருக்கிறது.  மதுரை செங்கோட்டை பாசஞ்சர் ரயில் மிகவும் வசதியாக இருக்கிறது.  மதுரையில் காலை ஏழு மணிக்கு கிளம்புகிறது.  இங்கு சுமார் பத்து மணிக்கு வந்து சேருகிறது.  அனேகமாக ரயில் முழுவதும் இங்கு காலியாகி விடுகிறது என்று சொல்லலாம்.




திரும்புவதற்கு மதியம் ஒரு மணிக்கு ரயில் இருக்கிறது.  மாலை சுமார் ஐந்து மணிக்கு இருக்கும். 

ரயில் நிலையத்திலிருந்து ‘ஷேர் ஆட்டோக்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து வரை ஓடுகின்றன. மிகவும் நியாயமான கட்டணத்தில் ஓடுகின்றன. பக்தர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட நண்பர்களாக இருக்கிறார்கள்.  நாம் செல்லும் பாதை இருமருங்கும் வயல்கள் இருக்கின்றன. நல்ல உயர்ந்த மரங்கள் வழி நெடுக இருக்கின்றன.நல்ல காற்று. கிட்டத்தட்ட ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் கோவில் இருக்கிறது. நிறைய பக்தர்கள் நடந்து வருகிறார்கள்.நடப்பது அப்படி ஒன்றும் கடினமாக இல்லை. சாலை வசதி நன்றாக இருக்கிறது.

கோவில் அருகில் வந்து விட்டோம். கோவில் வயல்களுக்கு நடுவே பசுமையாக அமைந்திருக்கிறது.







 சாலையிலிருந்து மேற்கே பார்த்தால் மேற்கு தொடர்ச்சி மலை நீண்டு கிடக்கிறது.  அற்புதமான காட்சி.

சாலையில் வடக்கு பக்கத்தில் பெரிய கண்மாய் இருக்கிறது


தற்போது தண்ணீர் இல்லை. கோவில் தெற்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது. அதற்கான புகைப்படங்களை அங்கங்கு இணைத்திருக்கிறோம்.

சாலையிலிருந்து கீழே இறங்கி செல்ல வேண்டும். நல்ல சிமிண்ட் பாதை போட்டிருக்கிறார்கள்.




பக்கத்து தோட்ட்த்து உரிமையாளர்கள் அவர்கள் தோட்டத்தை பாதுகாக்க கம்பி அளி போட்டிருக்கிறார்கள். சுற்றிலும் பசுமையான வயல்கள் – நடுவே கோவில் – மிகவும் அருமையாக இருக்கிறது. 
முன்பே ராஜகோபுரம் அருமையாக கம்பீரமாக இருக்கிறது. 



 கோவிலும் நம்மை ஈர்க்கிறது. நுழைந்தவுடன் இடது பக்கம் இரண்டு ஜீவசமாதிகள் இருக்கின்றன. சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. ஒன்று – சீனிவாச சாஸ்திரிகள் என்று இருக்கிறது


 இரண்டாவது – ஞானாந்த சரஸ்வதி கோபாலய்யர்) – 26.9.1939 என்று இருக்கிறது.


கோவிலுக்குள் செல்வோம்.  முன்பு அர்ச்சனை சீட்டுகள் கொடுக்கிறார்கள்.


நிர்வாகியும் அவர் தான்.அதிகாரி வெளியிலிருந்து வர வேண்டும்.  இவர் தான் இங்கு முழு பொறுப்பு. 
பிரகாரம் சுற்றலாம். மூலையில் வன்னிமரத்தடியில் வினாயகர் இருக்கிறார்.


வன்னி மரத்தடி வினாயகர் விசேஷம் என்கிறார்கள். சுற்றி வந்தால் அருமையான தியான கூடம் இருக்கிறது.


இவையெல்லாம் சமீபத்திய கட்டுமானமாக இருக்கிறது. மூங்கில் மரத்தினடியில் ஆஞ்சனேயர் படங்கள் இருக்கின்றன. சுற்றிலும் பிரார்த்தனை கடிதங்கள் கட்டப் பட்டிருக்கின்றன

 மற்றும் ஒரு சன்னதி இருக்கிறது.


 அருகில் பழைய சிற்பங்கள் இருக்கின்றன



பிரகாரம் சுற்றி வரும் இடத்தில் ஒரு இடத்தில் ஒரு பெரியவர் செந்தூரமும் வெண்ணெயும் குழைத்து நாமம் இடுகிறார்


பிரகாரம் அருமையாக, சுத்தமாக பராமரிக்கப் படுகிறது.அங்கங்கு குடிநீர் குழாய்கள் இருக்கின்றன. கை கழுவதற்கு அமைப்புக்கள் இருக்கின்றன. குப்பைத்தொட்டிகள் இருக்கின்றன. நன்கு பராமரிக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

பிரகாரம் சுற்றி விட்டோம்.சன்னதிக்கு செல்வோம். வரிசையில் நிற்பதற்கு அருமையாக பாதைகள் போட்டு கம்பிகள் வைத்து கட்டப் பட்டிருக்கிறது. நிற்கும் போது காற்று அவ்வளவு சுகமாக இருக்கிறது.



 ஆஞ்சனேயர் தெற்கு பார்த்து காட்சி அளிக்கிறார். அபய ஹஸ்த கோலம்.


அற்புதமாக இருக்கிறார். காணக் கண் கோடி வேண்டும்.திரும்பத் திரும்ப உங்களை வரவழைக்கும் அபூர்வ சக்தி மிக்கவராக இருக்கிறார். இந்த சன்னதியில் பிரசாதமாக ‘திருநீறு’, தீர்த்தம், துளசி வழங்கப் படுகிறது.இது வித்தியாசமாக படுகிறது.விசாரித்ததில், இங்கு யாகம் வளர்த்த இடம் என்கிறார்கள். அதனால் திருநீறு வழங்கப் படுகிறது என்கிறார்கள். ராமாயணத்தில் லட்சுமணனுக்காக மூலிகை தேடி ஆஞ்சனேயர் வரும் வழியில் தாகத்திற்காக இங்கு இறங்கினாராம். ஆஞ்சனேயருக்காக அங்கிருப்பவர்கள் காத்துக் கொண்டிருந்தார்களாம்.இங்கு உள்ள தெப்பம் ஆஞ்சனேயருக்காக தோற்றுவிக்கப் பட்டது என்கிறார்கள். பட்டாஷேபிகத்திற்கு அப்புறம் ராமர், சீதை ஆஞ்சனேயருக்கு காட்சி கொடுத்தார்கள் என்பது வரலாறு. 

அதற்கப்புறம் ஆஞ்சனேயர் இங்கிருந்து வரும் பக்தர்களுக்கு ‘அபய ஹஸ்த கோலத்தில் இருந்து பக்தர்களை ஆசிர்வதிக்கிறார்.


மற்றொரு சன்னதியில் ‘ராமர், சீதை, லட்சுமணன் பட்டாபிஷேகக் கோலம். கிழக்கு பார்த்த கோலம். அருகில் ஆஞ்சனேயர் இருக்கிறார். அற்புதமான சிலை அமைப்பு. அருமையான சன்னதி. அங்கு குங்குமம் பிரசாதமாக வழங்கப் படுகிறது.


இந்த வளாகத்தில் படிக்கட்டுகளுடன் கூடிய அழகிய தெப்பம் அமைந்திருக்கிறது. படிக்கட்டுகளின் பக்கங்களில் இரண்டு குகை போன்ற அமைப்புகள் இருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களால் மூடி வைக்கப் பட்டிருக்கின்றன


ஒரு மூலையில் பைரவர் சன்னதி இருக்கிறது.


இந்த வளாகத்தில் தான் அன்னதானம் நடைபெறுகிறது.
 அரசின் உத்தரவு படி தினம் ஐம்பது நபர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது.

அன்னதானத்தைப் பற்றி:

இங்கு அன்னதானம் சிறப்பாக செய்கிறார்கள்




அந்தப் பணியையும் கோவில் நிர்வாகம் செய்பவர்களே சேர்ந்து செய்ய வேண்டியதிருக்கிறது. அதற்கு அவர்கள் வரும் பக்தர்களை சேர்த்து கொள்ளலாம்.; இது எங்களது யோசனை.கூட்டத்தையும் கட்டுப்படுத்தி, கோவிலையும் நிர்வகித்து, பரிமாறுதலையும் அவர்களே செய்கிறார்கள். மிகவும் சிரமப் படுகிறார்கள்.


இந்த ஸ்தலத்திற்கு சனிக்கிழமைகளிலும், வியாழக் கிழமைகளிலும் நல்ல கூட்டம் வருகிறது என்கிறார்கள்






இந்த பதிவிற்காக எங்களால் நிறைய படங்கள் எடுக்கப் பட்டன.  இந்த புகைபடங்களை எடுக்க உதவிய எனது மனைவி திருமதி உமாகாந்தி அவர்களுக்கும், எனது தங்கை புதல்வர்கள் (இரட்டையர்கள்) அருண் ஸ்ரீராமுக்கும், அஷோக் குமாருக்கும் எங்களது மனப்பூர்வ நன்றிகளும், வாழ்த்துகளும்.

மற்றும் செய்திகளும் புகைப்படங்களும் கீழ்குறிப்பிட்டுள்ள பதிவுகளில் இருந்து எடுத்திருக்கிறோம். அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகள். அந்த பதிவுகளையும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

http://ramchel.blogspot.com/2010/08/krishnapuram-anjaneyar-temple.html

http://prtraveller.blogspot.com/2010/01/kadayanallur-anjaneya-temple.html

http://www.trinethram-divine.com/2011/08/anjaneyar-muthangi-alankaram.html


இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய, எங்களது தள மேம்பாட்டுக்கு நல்ல யோசனைகள், நல்ல விமர்சனங்கள் கூறும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.

மிக்க நன்றி.

61 கருத்துகள்:

  1. ஒரு கோவிலைப் பற்றி உங்கள் பதிவைப் படித்தால் நேரே போன ஆத்ம திருப்தியே வந்து விடுகிறது.. மனப்பூர்வமான நன்றியும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு ஐயா... படங்களும் பதிவும் அருமை.

    முதல் படம் எனக்கு மிகவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  3. ஒரு கோவில் பற்றிய தகவல்கள் அருமை.படங்களும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள அய்யா அவர்களுக்கு ,
    தங்களது இந்த ஆன்மீக பதிவு மிகவும் நன்றாக உள்ளது .நிழற்படங்கள் அனைத்தும் மிக அருமை .
    மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  5. சார் இந்த கோவிலுக்கு என் குடும்பத்தினர் நாளை செல்கின்றனர். வேலை காரணமாக நான் போக முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  6. கோவிலுக்கு சென்று வருவதைப்போன்ற ஒரு அருமையான பதிவு. படங்கள் பேசுகின்றன.

    பதிலளிநீக்கு
  7. முன்பு போலிருந்தால் படித்த உடனேயே பிரயாண ஏற்பாடுகள் செய்திருப்பேன். இப்போதெல்லாம் நினைத்ததை உடனே செய்ய முடிவதில்லை. அந்தப் பக்கம் வர கொடுப்பினை இருந்தால் கடையநல்லூர்வருவேன். பதிவும் படங்களும் மிக நேர்த்தி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. Ravi Sarangan ஜெய் ஸ்ரீமன் நாராயணா. ஆத்ம திருப்தியை தரும் அற்புதமான பதிவு சந்தோஷம் மனம் பூரா குடி கொண்டது. ஸ்ரீராம பக்தன் சிறிய திருவடி ஸ்ரீஆஞ்சனேயன் தங்களுக்கு எப்பொழுதும் சந்தோஷத்தை தருவானாக.

    பதிலளிநீக்கு
  9. Rajsiva Sundar VIKRANTHA SATHVAM ....SAMARTHA SATHVAM ....PRANGYA SATHVAM.....VANAROTHAME NETHAM....RASHAYA PATHAM....THVAIYAI KENI...PRARSHITHAM.....(SITA BLESSED HANUMAN WITH THIS SLOGAM...SO HANUMAN IS VERY FOND OF THIS SLOGAM..)..ANY MISTAKE IS THERE KINDLY EXCUSE ME...

    பதிலளிநீக்கு
  10. அன்பு ரத்னவேல் அவர்களுக்கு,

    கடையநல்லூர் ஆஞ்சனேயர் கோயில் விசேஷமானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அங்கு சென்றதில்லை. அடுத்தமுறை ஸ்ரீவி வரும்போது உங்களை வந்து பார்த்தால், அத்தனை கோயில்களையும் பார்த்துவிட்டது போல இருக்கும், உங்களிடம் அது பற்றி பேசிக் கொண்டிருந்தால் போதும். விஷ்ணு சகஸ்த்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு...

    "ராம ராம ராமேதி;
    ரமே ரமே மனோரமே;
    சகஸ்த்ரநாம தத்துல்யம்;
    ராம நாம வரானனே!".

    இதன் அர்த்தம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம், ராமா என்று ஒரு பெயர் சொன்னால், விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை சொல்வதற்கு ஈடு என்று சிவன் பார்வதியிடம் சொன்னது என்று சொல்வார்கள். அது போல தான் ஆயிரம் கோயில்களை கண்டவர், கண்டதுடன் அதை பிறரின் அக,புற கண்களுக்குள்ளும் எடுத்துச் சென்றவர், உங்களை வந்து சந்தித்தால் போதும் என்று நினைக்கிறேன்.... அருமையான படங்கள்... அருமையான பகிர்வு.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  11. புது இடத்தின் மிக நல்ல விவரணம் ஐயா .மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். தொடரட்டும் பணி.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  12. நல்ல அறிமுகம். பசுமையான வயல்களுக்கிடையில் இவ்வளவு அருமையான , புகழ் மிக்க கோயிலை காண்பது அரிதானதே!

    பதிலளிநீக்கு
  13. நல்ல பகிர்வு ஐயா... படங்களும் பதிவும் அருமை.மனப்பூர்வமான நன்றி

    பதிலளிநீக்கு
  14. நல்ல பகிர்வு. படங்களுடன் பதிவு மிகவும் அருமை. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  15. இதுவரை இந்த கோவிலுக்கு போனதில்லை ஐயா...
    கிராமிய எழில் கொஞ்சும் அழகை படத்தில் பார்த்தால்...
    இப்பவே போகணும் போல இருக்குது ஐயா..
    அருமை.. அருமை...

    பதிலளிநீக்கு
  16. கோவிலைப்பற்றியத் தகவல்களும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  17. நல்ல ஆன்மீகப் பதிவு. கூடவே அழைத்துச் சென்றது போல் ஒரு உணர்வு.

    பதிலளிநீக்கு
  18. It fulfill my inability to visit their directly.Each n every step u have posted with the photographs are excellent. thanks for your noble heart.

    பதிலளிநீக்கு
  19. படங்களும் பகிர்வும் அருமை!..மிக்க நன்றி பகிர்வுக்கு ...

    பதிலளிநீக்கு
  20. கிராமத்துச் சூழலில் அமைந்திருக்கும் இத்தலத்தை மிக அற்புதமான புகைப் படங்கள் மூலம் எடுத்தோ காட்டியுள்ளீர்கள் . புகைப்படம் எடுக்க உதவியவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  21. முழுமையான பதிவு.
    கோடானு கோடி நன்றிகள்

    பதிலளிநீக்கு
  22. வழக்கம் போல பிரமாதம்..
    அன்பு நேயர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
    மார்கழி நெருங்குவதால், தன் உள்ளூர்க் கோவில் பற்றியும் ஆண்டாள் பற்றியும் "திரு.ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்" மிகப் பிரமாண்டமான ஒரு பதிவு தயார் செய்வதாக நேற்று BBC-ல் ஒரு செய்தி வெளியானது.. (ஆதாரங்கள் சுவாமியிடம் உள்ளன -சு.சுவாமி அல்ல!)

    பதிலளிநீக்கு
  23. நல்ல பகிர்வு ஐயா படங்களும் பதிவும் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  24. நேரே சென்று வந்த திருப்தி! மிக்க நன்றி சார்.. பகவத் கிருபை இருந்தால் வரவேண்டும்..

    பதிலளிநீக்கு
  25. வாசித்து முடிக்கும் வரை நான் இந்தியாவில் இருந்தது போன்ற உணர்வு. அருமையான பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  26. ஆஞ்சனேயர் அருள் பூரணமாக கிடைக்கச் செய்தமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  27. தகவலுக்கு மிக்க நன்றி அய்யா
    ஓம் ஹனுமந்தே ஸ்ரீ ராம துதாய நமஹா

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள ஸ்ரீ ரத்னவேல் ஐயா,
    சனிக்கிழமையன்று ஆஞ்சனேய தரிசனம் செய்து வைத்தீர்கள். தங்கள் விஸ்டாரமான விவரிப்பும், படங்களும் மனசுக்கு மிகவும் நிறைவாக உள்ளன,. எங்கள் வீட்டுப் பெரியவர்கள் நினைவு வந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்கு ஆண்டவன் சகல சௌபாக்கியங்களையும் நல்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  29. சனிக்கிழமையன்று ஆஞ்சனேய தரிசனம் செய்து வைத்தீர்கள்.மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  30. ஜெய் ஆஞ்சநேயா
    நல்ல பகிர்வு இது
    படித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்
    நன்றி பகிர்ந்தமைக்கும்
    என் கருத்தி கூற சந்தர்ப்பம் தந்தமைக்கும் ....

    பதிலளிநீக்கு
  31. Shree Garudaazhvaan அருமையான கட்டுரை,ரத்தினவேல்.ஒரே மூச்சில் படித்தேன்.அனுமான் கோயிலில் திருநீறு.ஆச்சரியம்..பிரமிக்க வைக்கும் படங்கள்.அற்புதம் .என்னை அந்தக் கோயிலுக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள் என்பது தான் உண்மை.அபய ஹஸ்த கோலத்தில் காட்சி தரும் ஆஞ்சநேயர்.அருமை.ராமாயணம் வெறும் கதையாயிருந்தால்,என்றைக்கோ காலத்தால் மறக்கடிக்கப்பட்டிருக்கும்.இந்தக் கோயிலுக்கும் ராமாயணத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது.என்பதை உங்கள் கட்டுரையில் தெரிந்து கொண்டேன்..மனதுக்கு இதமாக இருந்தது..

    புத்திர் - பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
    அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்

    பதிலளிநீக்கு
  32. Rupika Kandasamy நிட்சயமாக தங்கள் ஆக்கத்தினைப் படிக்கத் தவறமாட்டேன் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் உங்கள் தொடர் ஆக்கங்களிற்கு.

    பதிலளிநீக்கு
  33. the presentation is very nice and tks for the same . i have visited this temple many times and pl make a presentation of dakshina moorthy temple at puliyarai

    பதிலளிநீக்கு
  34. Muthu Krishnan Krishnan
    ஒரு கோவிலைப் பற்றி உங்கள் பதிவைப் படித்தால் நேரே போன ஆத்ம திருப்தியே வந்து விடுகிறது.. மனப்பூர்வமான நன்றியும் வாழ்த்துகளும்
    muthu

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் ஐயா! பதிவுலகில் புதியவன். இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன். அருமையான தகவலுக்கு நன்றி ஐயா! அருமையான கருத்துக்கள். நானும் ராஜபாளையத்தில் தான் படித்தேன். (1982-85) பகிர்விற்கு நன்றி ஐயா!
    தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."


    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    பதிலளிநீக்கு
  36. படங்களுடன் பகிர்வு அருமை. நன்றி. செல்லும் ஆவலை ஏற்படுத்தி விட்டுள்ளது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  37. அற்புதமான இந்த கோவிலை வீட்டிலிருந்தே தரிசிக்க உதவிய உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை என்றாலும் என்னுடைய நன்றியையும் பாராட்டுக்களையும் உங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  38. மிகவும் அருமையான படமும் பதிவும் ஐயா. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. ஐயா! எங்கள் ஊரில் (பாப்பாகுடி ) கடையநல்லூர்- கிருஷ்ணாபுரம் என்று தான் கூறுவோம்.மிகவும் அருமையான பதிவு ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  40. நல்ல தகவல் ஐயா

    மதுரையிலிருந்து செங்கோட்டை சென்று பல வருடங்கள் ஆகிறது .

    படங்களுடன் விளக்கம் கலந்து நேரில் பார்த்த உணர்வு ஐயா

    தமிழ் மணம் 7 வது வாக்கு

    பதிலளிநீக்கு
  41. அழகிய படங்களுடன் அருமையான பதிவு..நன்றிங்கய்யா!

    பதிலளிநீக்கு
  42. நல்ல பகிர்வு. படங்கள் லோட்ஆக லேட் ஆகிறது.

    பதிலளிநீக்கு
  43. அற்புதமாக இருக்கிறார். காணக் கண் கோடி வேண்டும்.திரும்பத் திரும்ப உங்களை வரவழைக்கும் அபூர்வ சக்தி மிக்கவராக இருக்கிறார்.

    அற்புதமான பட்ங்களுடன் அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  44. கடையநல்லூர் சென்று ஆஞ்சநேயரை நேரில் தரிசித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தங்கள் பதிவைப் படித்தபோது. அதற்காக நன்றி!

    பதிலளிநீக்கு
  45. கடையனல்லூருக்கே சென்று தரிசித்த திருப்தி. கிடைத்தது.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  46. நல்ல பதிவு. படங்களும் நன்றாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  47. வணக்கம்.கடைக்கோடி மக்களைப் பற்றி இந்த ஆஞ்சநேயர் எப்படி எண்ணுகிறாரோ? இறைவன் மனிதனால் சிலை வடிவத்தில் ஒரு நல்ல கற்பனையில் வடிவமைக்கப்பட்டவன் தானே அன்றி வேறு ஏதும் சொல்லுவதற்கில்லை.
    ஒரு சிற்பிக்கு வேண்டிய அளவு கற்பனை இருப்பின் மிக அழகாக எதிர்பார்த்த அளவு கல்லில் சிலை வடிக்க இயலும்.ஆகவே கண்டு களிப்படைய இந்தக் கோவிலில் நிறைய உண்டு.

    பதிலளிநீக்கு
  48. நிறைந்த படங்களுடன் ஆஞ்சநேயர் கோயில் தர்சனம் மகிழ்வுடன் சுற்றி வந்தோம்.

    பதிலளிநீக்கு
  49. கடையநல்லூர் சென்று ஆஞ்சநேயரை நேரில் தரிசித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது தங்கள் பதிவைப் படித்தபோது. அதற்காக நன்றி!

    பதிலளிநீக்கு
  50. படங்களும் பதிவும் வெகு அருமை.
    நேரில் தரிசித்து போன்ற ஒரு திருப்தி.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  51. அன்புமிக்க அய்யா
    தாங்கள் என் வலைப்பூவுக்கு வாசம் செய்து மழை சேமிப்பவள் எனும் என் படைப்பை வாசித்துவிட்டு மனம் மகிழ்ந்தது மட்டுமின்றி அதற்கொரு அருமையான பின்னூட்டமும் இட்டு சென்ற பிறகு இங்கு உங்களின் இந்த வலைப்பூக்கு வந்து பார்வையிட நேர்ந்தது. இங்கன இருந்து என்னால வெறுமன திரும்பிப் போக முடியல நான் பிறந்த கடையநல்லூரில் ஆஞ்சநேயர் ஆலயம் வரை சென்று அந்த அனுபவத்த இங்கே பகிர்ந்த வித்ம் அருமையாக மனசுக்கு பட்டது.. உங்களின் தமிழார்வம், சொல்ல வேண்டிய செய்திகளை அதன் சுவைகுறையாது சொல்லும் திறமை மிகவும் மெச்சக்கூடியது. வாழ்க ஐயா நீங்க பல்லாண்டு... தமிழ் வாழ்க.

    பதிலளிநீக்கு
  52. alagaana matrum arputhamaaana pugaippadangal.. alagaana vivarangal... HATS OFF SIR.. am using some pictures from ur blog... am put credits to ur blog.. Thanks a lot sir..
    Regards,
    G.Udhay.
    www.ourkadayanallur.blogspot.com
    www.facebook.com/i love kadayanallur

    பதிலளிநீக்கு
  53. அருமையாக கோயில் பற்றியும் அங்கு செல்லும் வழிமுறை பற்றியும் பதிவு செய்துள்ளீர்கள்

    பதிலளிநீக்கு