ஞாயிறு, டிசம்பர் 11, 2011

தைராய்டு பற்றிய பதிவு


டாக்டர் K.M.முருகானந்தம், கொழும்பு (ஸ்ரீலங்கா) நகரைச் சேர்ந்தவர்.  எனக்கு முகநூல் நண்பர்.  டாக்டர் முருகானந்தம் அவர்கள் நிறைய நோய்கள் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறார்.  எனது வேண்டுகோளுக்கிணங்க அவரது பதிவுகளை எனது பதிவில் வெளியிட அனுமதி கொடுத்திருக்கிறார்.
எனவே தைராய்டு நோய் பற்றிய அவரது கட்டுரையை எனது பதிவாக வெளியிடுகிறேன்.  டாக்டர் K.M.முருகான்ந்தம் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.

தொண்டையில் கழலை இல்லை, தைரொயிட் நோயா ?

"கை கால் உளைவு, களைப்பு, உடம்பு நோ, சோம்பல், தூக்கக் குணம், மலச்சிக்கல், உடம்பு பாரமாக இருக்கு, தசைப்பிடிப்பு ...." என்று சொல்லிக் கொண்டே போனாள்.


அந்தப் பெண்மணியின் நோய் அறிகுறிகள் தண்டவாளம் போல முடிவின்றி நீண்டு கொண்டே போயின. அவரை நோட்டமிட்டேன்.

வயது அய்ம்பது இருக்கும். 'வதனமே சந்திரபிம்பமோ' என்பது போல உருண்ட வட்ட முகம், கொழுத்த உடம்பு, வரண்ட தோல், சற்றுக் கரகரத்த குரல், அதிகம் கொட்டியதால் அடர்த்தி குறைந்த தலை முடி.
அவர் கூறிய அறிகுறிகளையும், நான் அவதானித்த குறிகளையும் இணைத்துப் பார்க்கும் போது இவருக்கு தைரொயிட் சுரப்பியின் செயற்பாடு குறைவாக இருக்கலாமோ எனத் தோன்றியது.
இவற்றுடன்

·                     குளிர் சுவாத்தியத்தைத் தாங்க முடியாத தன்மை
·                     மறதி
·                     மனச் சோர்வு
·                     தசைப் பிடிப்பு போன்ற அறிகுறிகளும் சேர்ந்திருப்பதுண்டு. 
நாடி பிடித்துப் பார்த்தபோது நாடித் துடிப்பு சற்றுக் குறைந்திருந்தமை எனது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இளம் பெண்களுக்கு மாதவிடாய்க் குழப்பங்களும் ஏற்படுவதுண்டு.
"
உங்களுக்கு தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பி வேலை செய்வது குறைவு போல இருக்கு. இரத்தம் பரிசோதித்துப் பார்ப்போம்" என்றேன்.
"
எனக்கு தொண்டையில் வீக்கம் ஒன்றும் கிடையாதே. ஏன் தைரொயிட் நோய் என்கிறீர்கிறீர்கள்?" என என் முடிவில் சந்தேகம் எழுப்பினார்.
தைரொயிட் என்பது எமது தொண்டைப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. இதனால் தைரொயிட் நோய் என்றாலே தொண்டைப் பகுதியில் கழலை என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாயிருக்கிறது.
பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்த அயடின் குறைபாட்டால் வரும் தொண்டைக் கழலை (Goitre) தான் பலரின் ஞாபகத்திற்கு வரும். எனவே அவரது சந்தேகத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது.
சுரப்பியில் வீக்கம் எதுவும் இல்லாமலே பல தைரொயிட் நோய்கள் வருவதுண்டு. அது

·                     குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் கைபோதைரொயிடிசம் (Hypothyroidism),
·                     அதிகம் சுரப்பதால் ஏற்படும் கைபேர்தைரொயிடிசம் (hyperthyroididm) ஆகியவை இத்தகையவே.
தொண்டையில் உள்ள தைரொயிட் சுரப்பியில் வீக்கம் (கழலை)இருந்தால் அது முன்பு குறிப்பிட்ட

·                     அயடின் குறைபாட்டால் ஏற்படும் கட்டியாகவோ, அல்லது 
·                     நீர்க் கட்டியாகவோ (Cyst) இருக்கலாம். 
·                     புற்று நோயாலும் அவ்விடத்தில் கட்டி தோன்றலாம். 
எனவே தைரொயிட் சுரப்பியில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படலாம் என்பதை நாம் உணர வேண்டும். அவற்றிற்கு வெவ்வேறு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. எத்தகைய சிகிச்சை தேவையென வைத்தியர்தான் தீர்தானிக்க முடியும்.
மேற் கூறிய பெண்ணுக்கு இரத்தப் பரிசோதனைகள் செய்தபோது அது சுரப்பியின் குறைச் செயற்பாட்டால் வரும் நோய் (Hypothyroidism) என்பது தெளிவாகியது. தைரொக்சின் (Thyroxine) மாத்திரைகள் கொடுத்தபோது அறிகுறிகள் நீங்கிக் குணமாகியது.
ஆயினும் அம் மருந்தை அவர் பெரும்பாலும்

·                     வாழ்நாள் முழுவதும் உபயோகிக்க வேண்டி நேரிடும். 
·                     காலையில் வெறும் வயிற்றில் போட வேண்டிய மாத்திரை அது. 
·                     மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து மருந்தின் அளவை தீர்மானிக்க வேண்டியிருக்கும்.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.


47 கருத்துகள்:

  1. மிக அருமையான பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  2. கண்ணிற்குக் தெரியாத தைரொயிட் சுரப்பி பற்றிய தகவல் மிகப் பெரிது. மிக்க நன்றி வாழ்த்துகள் வைத்தியருக்கும், ஐயா இரத்தினவேல் அவர்களுக்கும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  3. அருமையான தகவல்.
    அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விவரம். எடுத்து வெளியிட்டதற்கு நன்றி. கழலை என்று புதுச்சொல்லும் கற்றேன், உங்கள் தயவில்.

    பதிலளிநீக்கு
  5. பயன்மிக்க அருமையான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    த.ம 2

    பதிலளிநீக்கு
  6. மிகவும் பயனுள்ள தகவல் ஐயா ,பகிர்வுக்கு மிக்க நன்றி

    த.ம 3

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு எனது முகநூலில் பகிரந்துள்ளேன் நன்றி....

    பதிலளிநீக்கு
  8. மிகவும் தேவையான பகிர்வு.நன்றி ஐயா !

    பதிலளிநீக்கு
  9. மிகவும் பயனுள்ள பகிர்வு.பகிர்தலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. அருமை ஐயா!
    பதிவுதோறும் இவ்வாறு பயனுள்ள
    செய்தி தருவது தங்களுக்குப்
    பெருமை ஐயா!

    த ம ஓ 5


    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. தைராய்ட் குறையை பற்றி மிக அபூர்வமான தகவல்களுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  12. அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பயன் மிக்க பகிர்வு. நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  13. மிகசிறந்த மருத்துவ விழிப்புணர்வு பதிவு நன்றி .

    பதிலளிநீக்கு
  14. மிகவும் பயனுள்ள பதிவு. என் அம்மாவுக்கு இந்தப் பிரச்சனை இருந்தது. மருந்து மாத்திரைகள் தயவால் குணமாயிற்று. இன்றுதான் நோயின் முழுவிவரங்கள் அறிந்துகொண்டேன். மருத்துவருக்கும் பகிர்ந்த தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  15. நல்ல விழிப்புணர்வு பதிவு. வருமுன் காப்பது சிறந்த்தல்லவா? நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  16. Nilaa Magal nilaamaghal@gmail.com
    05:02 (1 hour ago)

    to me
    தங்கள் பதிவில் கருத்துரையிட தொழில்நுட்ப சிக்கல் ஏதோ எனக்கிருக்கிறது.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/12/blog-post.html
    (இப்பதிவிற்கான எனது கருத்தை இம்மின்னஞ்சலில் இணைக்கிறேன்.)

    உப‌யோக‌மான‌ ப‌திவு. தைராய்டு ப‌ற்றிய‌ விள‌க்க‌மும் அறிகுறிக‌ளும் தெளிவு. ஒருகால‌த்தில் நானும் ஹைப்போதைராய்டு நோயால் பாதிக்க‌ப்ப‌ட்டிருந்தேன். எல்த்ராக்சின் என்ற‌ மாத்திரை இர‌ண்டு வ‌ரை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ம‌ருத்துவ‌ரால் உய‌ர்த்த‌ப்ப‌ட்ட‌து. ஆண்டுக‌ளும் இர‌ண்டு க‌ழிந்த‌து. ஆயுள் வ‌ரை எடுக்க‌ வேண்டுமென‌ ப‌ர‌வ‌லாக‌க் கூறின‌ர். ஆனால் மாத்திரைக‌ளை உண‌வு உண்ட‌பின் தான் எடுத்த‌ ஞாப‌க‌ம். பிற‌கு ஹோமியோப‌திக்கு மாறி முற்றிலும் ச‌ரியான‌து.

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள அய்யா அவர்களுக்கு ,
    வணக்கம்.தங்களின் பதிவு நன்றாக உள்ளது .மேலும் ,தாங்கள் இது போன்ற பதிவுகளை ,பதிய வேண்டுகிறேன் .மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் ஐயா, இப்போதுதான் முதல்முறையாக உங்கள் தளம் வருகிறேன். நல்ல சிரைத்தை எடுத்து பதிவு பண்ணுகிறீர்கள். வளமுடன் தொடர வாழ்த்துக்ள்.

    பதிலளிநீக்கு
  19. அவர் பெயர் (டொக்டர்) M.K.முருகானந்தன். K.M.முருகானந்தம் என்று ஆரம்பத்தில் உள்ளது. பதிவுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  20. இன்றைக்கு தேவையான கருத்துகளை மருத்துவமாக உங்களால் சிறப்பாக பதிவு செய்யப் படுகிறது இடுகைக்கு பாராட்டுகள் நன்றி ....

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஐயா.. இப்போதுதான் முதல்முறையாக உங்கள் தளம் வருகிறேன்..அருமையான பதிவு..இனி தொடர்ந்து வருகிறேன்..

    வரவை எதிர்பார்க்கிறேன்..

    செத்தபின்புதான் தெரிந்தது..

    பதிலளிநீக்கு
  22. மருத்துவ கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து பதிந்து வருகின்றீர்கள் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  23. தைராய்ட் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு.

    பதிலளிநீக்கு
  24. நண்பர்களுக்கு
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    நொடியாய்ப் பிறந்து
    மணித் துளியாய் மறைந்து
    புது ஆண்டாய் மலர்ந்த
    பொழுதே....
    வறண்ட வாழ்வும்
    தளர்ந்த கையும்
    உன் வரவால்
    நிமிர்ந்து எழுதே!
    புது வருடம் பிறந்தால்
    வாழ்வு மாறும்-என
    ஏங்கித் தவிக்கும்
    நெஞ்சம்..
    உன் வரவே
    நெஞ்சின் தஞ்சம்!
    இறந்த காலக்
    கவலை அதனை
    மறந்து வாழ
    பிறந்து வா வா
    என் புதிய வாழ்வே
    விரைந்து வா வா!
    அழுதுவிட்டேன்
    ஆண்டு முழுதும்
    முயன்று பார்த்தேன்
    விழுந்து விட்டேன்
    அழுத நாளும் சேர்த்து
    மகிழ்ந்து வாழ
    எழுந்து நின்று
    இமயம் வெல்ல
    இனிய ஆண்டே
    இன்றே வா வா
    நன்றே வா வா!

    அன்புடன் இனியவன்

    பதிலளிநீக்கு
  25. உபயோகமான தகவல்களுக்கு இனிய நன்றி!!

    பதிலளிநீக்கு
  26. ஓய்வாக இருந்தால் இதனையும் வாசித்து பாருங்களேன்

    ஆட்டிறைச்சி குணங்கள் அறிந்து கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  27. பயன் தரும் மருத்துவ சேதியை மருத்துவரிடமிருந்து பெற்று பதிவாக்கியமை அருமை...
    தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவ தகவல்.

    பதிலளிநீக்கு
  28. [புத்தாண்டு வாழ்த்துக்கள்]

    பதிலளிநீக்கு
  29. நல்ல தகவல் ஐயா.அருமை...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  30. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மலரும் புத்தாண்டு மகிழ்ச்சியை அள்ளித்தர வாழ்த்துகின்றோம்.

    பதிலளிநீக்கு
  31. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  33. மனம் நிறைந்த 2012ன் அன்பு வாழ்த்துகள் ஐயா !

    பதிலளிநீக்கு
  34. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  35. பயனுள்ள பகிர்வு.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  36. நல்ல கருத்துகள் அடங்கிய பயனுள்ள பகிர்வு.
    இனிய வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  37. புத்தாண்டுப் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
    நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  38. எனது கட்டுரையைப் பகிர்ந்ததற்கு நன்றிகள் பல.
    மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  39. மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது..நன்றி...புத்தாண்டு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  40. ஐயா,
    எனது மனைவிக்கு தாங்கள் கூறியது போலவே உள்ளது. இதற்க்கு சித்த மருத்துவத்தில் என்ன மருந்து உட்கொள்ளலாம் என்று கூறினால் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் ....... .நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு