உண்மைக்கதை
திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் எனது முகநூல் நண்பர். அவர் ‘மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை '– என ஒரு சிறுகதை அவரது முகநூல் பக்கத்தில் 21.12.2011 நாள் எழுதியிருக்கிறார். இது உண்மைக்கதை. ஒரு மருத்துவரின் வாழ்வில் நடந்த்து. நண்பரின் அனுமதி வாங்கி பதிவாக வெளியிடுகிறேன். திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.
திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் எனது முகநூல் நண்பர். அவர் ‘மருத்துவம் என்பது ஒரு தொழில் அல்ல – ஒரு சேவை '– என ஒரு சிறுகதை அவரது முகநூல் பக்கத்தில் 21.12.2011 நாள் எழுதியிருக்கிறார். இது உண்மைக்கதை. ஒரு மருத்துவரின் வாழ்வில் நடந்த்து. நண்பரின் அனுமதி வாங்கி பதிவாக வெளியிடுகிறேன். திரு இராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.
மருத்துவமனை ஒன்றில்...தொலைபேசி அழைப்பின் பேரில் மிக அவசரமாக நுழைந்த
அறுவை சிகிச்சை நிபுணர்...தனது உடைகளை அதற்கேற்ப மாற்றி கொண்டு...அறுவை
சிகிச்சை அரங்கினுள் நுழையும் போது...ஒரு இளைஞர் மேஜை மீது சிகிச்சைக்கு
தயாராக காத்துக் கொண்டிருப்பதையும், வெளியே உள்ள வராந்தாவில் மிக வேகமாக
நடந்து கொண்டிருந்த அவரது தந்தையையும் கண்டார்.!
இளைஞரின் தந்தை மருத்துவரைப் பார்த்தவுடன்...மிகவும் கோபமாக...உங்களுக்கு
எல்லாம் பொறுப்பே இல்லையா...!எனது மகனின் உயிர் ஆபத்தில் உள்ளது...!ஏன்
இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்.! என்று கத்தினார்.
மருத்துவர் அவரைப் பார்த்து புன்னகையுடன்..."என்னை மன்னித்து விடுங்கள்".!
நான் மருத்துவமனைக்கு வெளியே இருந்த படியால், தொலைபேசி அழைப்பின் பேரில்
மிக விரைவாக வந்துள்ளேன். தாங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்தால்..நான் எனது
சிகிச்சையை தொடங்கலாம்...என்றார்.!
மீண்டும் கோபமாக இளைஞரின் தந்தை...டாக்டரிடம்..என்னை பொறுமையாக
இருக்கச் சொல்கிறீர்களா.! இதே உங்களது மகனாக இருந்தால்..அல்லது உங்கள் மகன்
இது போன்ற தாமத்தால் இறந்து விட்டால், இதே பொறுமையுடன் தான்
இருப்பீர்களா...! என்று கேட்ட்டார்.
மருத்துவர் மீண்டும் புன்னகையுடன்...அவரிடம்.."நாங்கள் எடுத்துக் கொண்ட
உறுதிமொழிப்படி நடந்து கொள்வோம்"...(சில வரிகளை ஆங்கிலத்தில் இருந்து
மொழிபெயர்ப்பது கடினம் என்பதால், அப்படியே அளித்திருக்கிறேன்)...
“I will
say what Job said in the Holy Book “From dust we came and to dust we
return, blessed be the name of God”. Doctors cannot Prolong Lives. We
only Treat the Patient...God Heals them..!
இப்போது நீங்கள் உங்கள்
மகனுக்காக சிறிது நேரம் பிரார்த்தனை செய்யுங்கள். அதற்குள் நான் சிகிச்சையை
தொடங்கி விடுகிறேன்...என்றார்.
மீண்டும் இளைஞரின் தந்தை.."அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்வது சுலபம்", நாம்
அந்த நிலையில் இருந்தால் தான் புரியும் என்று கோபமாக முணுமுணுத்தார்.!
பின்னர்...சிகிச்சையை தொடங்கிய மருத்துவ நிபுணர்...சில மணி நேரங்களுக்கு
பின்னர்...அரங்கிலிருந்து வெளியே வந்து...அதே புன்னகையுடன் இளைஞரின்
தந்தையிடம்..சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டது...உங்கள் பிரார்த்தனை
பலித்திருக்கும்...மற்ற விஷயங்களை உதவியாளரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று
கூறி விட்டு, அவரது பதிலை எதிர்பார்க்காமல் மிக வேகமாக வெளியேறினார்.
தொடர்ந்து...இளைஞரின் தந்தை உதவியாளரிடம்...ஏன் இவர் இப்படி மோசமாக நடந்து
கொள்கிறார். ஒரு சில நிமிடங்கள் கூட தாமதிக்க முடியாதா.! நான், எனது
மகனுடைய உடல் நிலை பற்றி கேட்டுக் கொள்வேன் அல்லவா என்றார்!...அதே
கோபத்துடன்.
அந்த இளம் உதவியாளர், கண்களில் நீர் பெருக கூறினார்...இளைஞரான அவரது மகன்
நேற்று ஒரு சாலை விபத்தில் அகால மரணமடைந்து விட்டார். தொலைபேசி தகவலுக்கு
பிறகு, உங்களது மகனுடைய சிகிச்சைக்காக அவர், தனது மகனின் இறுதி சடங்குகளை
நிறுத்தி விட்டு...வந்து...சிகிச்சை அளித்து...உங்கள் மகனது உயிரை
காப்பாற்றிய அந்த தந்தை ( டாக்டர்) தனது மகனுடைய இறுதி சடங்குகளை நிறைவேற்ற
செல்கிறார் என்றார்.!!!
2. "நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு"... என்பவை தெய்வப் புலவரின் வாக்கு அன்றோ.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு
செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி
பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக்
கொள்கிறேன்.
Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள்
பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.
உங்களது Email
id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது
உங்கள் inbox க்கு வந்து விடும்.
தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
மிக்க நன்றி.
ஐயா மனதைத் தொட்ட பதிவு. என்னுடைய முகநூலில் பகிர்ந்துள்ளேன்.
பதிலளிநீக்குஐயா மிக நல்ல கதை இது. தன்னலம் கருதாத இம்மாதிரியான சில டாக்டர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலான டாக்டர்களும் பெரும்பாலான மருத்துவமனைகளும் மிக மோசமான வணிகநிறுவனங்களாக மாறி நெடுநாட்கள் ஆகிவிட்டன என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்தானே?
பதிலளிநீக்குஇப்படியும் சிலர் இருப்பதால்தான்
பதிலளிநீக்குமழையும் பெய்கிறது
பூமியும் விளைகிறது
தரமான விஷயத்தை மட்டுமே பதிவாக்கித் தருவது
என்கிற தங்கள் கொள்கை மனம் கவர்கிறது
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனமார்ந்த நன்றி
த.ம 1
இந்த கதையை நான் முன்னாலேயே ஆங்கிலத்தில் படித்து இருக்கிறேன். அதை நீங்கள் தமிழில் வெகு அழகாக தந்தமைக்கு நன்றி. எதையும் நம் தமிழில் படிக்கும் போது அதன் சுகமேதனிதான். இந்த கதையில் வந்த டாக்டரை போல நிஜ வாழ்க்கையில் 1% இருப்பது அபுர்வமே. டாக்டர்கள் தாங்கள் தான் மனித உயிரை காப்பாற்றுவதாக கருதுகிறார்கள் அப்படி அவர்கள் நினைக்கும் போது கடவுள் அவர்களை பார்த்து சிரிக்கிறார். உண்மையில் ஒரு நல்ல டாக்டர் க்ர்வம் கொள்ள மாட்டார். டாக்டரால் எல்லா உயிரையும் காப்பாற்ற முடியாது ஆனால் கடவுளுக்கு அடுத்த படியாக எல்லா உயிரையும் காப்பாற்றுபவன் அழுக்கடைந்த துணியை உடுத்தி கொண்டு எந்த பெருமையும் பேசாத ஒரு சாதாரண விவசாயி என்பதை எல்லோரும் மறந்து விடுகிறார்கள்
பதிலளிநீக்கு1. "உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்".
பதிலளிநீக்கு2. "நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு"... என்பவை தெய்வப் புலவரின் வாக்கு அன்றோ./
மனமார்ந்த நன்றி
மனதை நெகிழச் செய்த பதிவு.
பதிலளிநீக்குஇப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்பது
பெருமையான விஷயம்.
ஆனால் இப்போது எல்லாம் நோயாளி என்றால்
அவரை ஒரு எந்திரம் & பணம் தரும் ATM
என்று எண்ணித்தான்
சிகிச்சை அளிக்கிறார்கள்.
Arumai. Tamilmanam Vote 3.
பதிலளிநீக்குபின்னூட்டம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி...நண்பர் ஒருவர் தெரிவித்தது போல், இது ஆங்கிலத்திலிருந்து, தமிழுக்கு, பேஸ்புக் நண்பர்களுக்காக மொழிமாற்றம் செய்யப்பட்டது. அனேகமாக, பகிர்வு செய்து 1 மாதத்திற்கு மேல் ஆகியிருக்கும். இது ஒரு சாதாரன பகிர்வு தான். தொடர்ந்து 2 வருடங்களாக தினமும், ஒரு உபயோகமான பகிர்வை செய்து வருவது வழக்கம். விருப்பம் உள்ளவர்கள், சமயம் கிடைக்கும் போது, மதிப்பிற்குறிய நண்பர் ரத்னவேல் அவர்களின்...டைம்லைனில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.இனிய இரவு வணக்கம்...நட்புகளே...:-)
பதிலளிநீக்குமனதை நேகிழ செய்த பதிவு ஐயா
பதிலளிநீக்குபதிவின் தலைப்பே பல செய்திகளை சொல்லுகிறது
மனதைப் பிசைகிறது.
பதிலளிநீக்குமனசை தொட்ட கதை
பதிலளிநீக்குஅபூர்வ மருத்துவர்.
பதிலளிநீக்குமனம் வலிக்கிறது.
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சரத்தில் டாக்டரின் உண்மை கதை
பதிலளிநீக்குமனதை நெகிழ வைத்த டாகடர்..
நல்ல மருத்துவருக்கு பாரட்டுக்கள், வாழ்த்துக்கள்.
மிக உருக்கமான சம்பவம். தெய்வம் போலவும் மனிதர்கள் உள்ளனர்.இடுகைக்கு நன்றி வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
நல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்குஇத்தகைய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுதான் ஐயா பெரும்பாலோனோர் உழைக்கிறோம்..
பதிலளிநீக்குசில புல்லுருவிகளால் ஒட்டு மொத்த துறையுமே வசைபாட படுவது மருத்துவ சமுதாயத்தை தவிர வேறு எங்கிலும் இல்லை...
இது இன்னொரு சம்பவம்..நடை சரியாக இல்லாவிட்டாலும் எனக்கு இன்றளவும் மனதிற்கு பக்கமான இடுகை..மரண அறிவிப்பு.
ஒரு மருத்துவன் சார்ந்த சிறுகதை தான்...
மனசை தொட்ட பதிவு
பதிலளிநீக்குபணத்திற்குமுன் மனிதநேயமும் கடமையும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறதைத் தான் இன்று பெருவாரியாகக் காண முடிகிறது. டாக்டர்களின் மனதைச் சலவை செய்ய(அந்த ஆழ்மன பண வெறியைப் போக்க) உங்களின் இந்தப் பதிவு உதவலாம். ஆனால் எந்த டாக்டராவது பார்க்க வேண்டுமே.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குவாழ்த்துகள்.
நல்ல மருத்துவர்களும் இருக்கிறார்கள். நான் இன்று உயிரோடு இருப்பது - திரு K.காமராஜ். M.D., (இருதயம் & சர்க்கரை), கனிலட்சுமி மருத்துவ மனை, பேருந்து நிலையம் அருகில், தெய்வானை நகர் முகப்பில், சிவகாசி. 626123 -
எங்கள் குலதெய்வம் என்றால் அவர் தான். எனது பையன் கள் சென்னையிலிருந்து மருத்துவம் பார்க்க இங்கு தான் வருகிறார்கள்.
மிக்க நன்றி.
தத்துவ சிந்தனைகள் : மருத்துவம்- Medicine in Tamil
பதிலளிநீக்கு