எனது முகநூல் நண்பர் டாக்டர் திரு M.K.முருகானந்தன் அவர்கள் ‘சிறுநீரக
கற்களை தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை’ என்று எழுதிய கட்டுரையை அவரது அனுமதியுடன் எனது பதிவாக வெளியிடுகிறேன். டாக்டர் திரு M.K.முருகானந்தன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படித்துப் பார்த்து தங்களது கருத்தை பதிவு
செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது.
இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது.
அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன.
நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன.
சுவையும் அதிகம்.
போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது.
உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது.
நாம் ஏன் உணவு உண்கிறோம்?
நமது அன்றாட வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே எமக்கு உணவு தேவைப்படுகிறது.
நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும், நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை.
அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும்.
ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது.
தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பலநோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிறுகச் சிறுக கொல்லுகின்றன.
ஆரோக்கியமான உணவு முறை
இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும்.
உணவின் அளவு
ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான்.
இதனால் தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.
வெற்றுக் கலோரி வேண்டாம்
இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஷாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.
எவை ஆரோக்கியமானவை?
உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.
ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும்.
கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உட்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும்.
இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற் கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.
புதிய ஆய்வு
ஆனால் இப்பொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது.
கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும்.
Brigham and Women’s Hospital லில் உள்ள Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும்.
சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.
எமது சூழலில் அதிகம்
எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள்.
எமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.
வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பார தூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.
சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.
உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
>
Very Nice and Informative sir
பதிலளிநீக்குமிக்க நன்றி ரவி சார்.
நீக்குநல்ல ஒரு அருமையான பகிர்வு ஐயா. உணவே மருந்து என நம் முன்னோர்கள் சொன்னது மிகச் சரியே.
நீக்குசிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.
பதிலளிநீக்குஅருமையான பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குமனப்பூர்வ வாழ்த்துகள்.
மிகத் தேவையான பதிவு சார். பகிர்வுக்கு நன்றி.:)
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள தகவல்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குமனப்பூர்வ வாழ்த்துகள்.
அன்பின் இரத்தின வேல் - பயனுள்ள பதிவு - பகிர்வின்ற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குமிகவும் பயனௌள்ள அரிய தகவல்கள் .படித்து பாதுகாக்க வேண்டிய பதிவு.பகிர்தலுக்கு நன்றி!
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள தேவையான பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குமனப்பூர்வ வாழ்த்துகள்.
நீங்கள் தொடர்ச்சியாகத் தரும் அனைத்து மருத்துவ பதிவுகளுமே அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குஅற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பதிலளிநீக்குபொற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து
உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும். (திருக்குறள் - மருந்து அதிகாரம்)
ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிட வேண்டும். நல்ல கட்டுரை.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குமனப்பூர்வ வாழ்த்துகள்.
அருமையான, தேவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்
பதிலளிநீக்குVetha.Elangathilakam
http://kovaikkavi.wordpress.com
முன்னெச்செரிக்கையாய் இருக்க பெரிதும் உதவும்.
பதிலளிநீக்குuseful one i will publish in my wall
பதிலளிநீக்குஅட நீங்க வேற. வீட்டுக்காரம்மா உடம்புக்கு நல்லதுன்னு ஒரு பட்டியல் போட்டு கொடுக்கற சாப்பட பார்க்கும் போது ஏன் வயசு ஆகிக்கிட்ட போகுதுன்னு பயமா இருக்குங்கோ?ஈ
பதிலளிநீக்குநல்ல தேவையான பகிர்வு ஐயா.
பதிலளிநீக்குஇதை அளித்த டாகட்ர் ஐயாவிற்கும், உங்களுக்கும் நன்றி.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குமனப்பூர்வ வாழ்த்துகள்.
நல்ல பதிவு.
பதிலளிநீக்குமிக பயனுள்ள தகவல்கள் ஐயா.பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா ,
பதிலளிநீக்குதங்களின் பகிர்வாக அமைந்த கட்டுரை ஆரோக்கியமாகவும் ,ஆனந்தமாகவும் உள்ளது.தற்காலத்திற்கு ,தேவையான கட்டுரை .மிக்க நன்றி.
தாமத வருகைக்கு மன்னிக்கவும். அருமையான பதிவு. டாக்டரின் ஆலோசனைகள் அருமையானவை. ஆரோக்கிய உணவே எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு என்பதை அழுத்தமாய்ச் சொல்லும் மனம் கவர்ந்த பதிவு சார்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்விற்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குமனப்பூர்வ வாழ்த்துகள்.
//இதனால் தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.//
பதிலளிநீக்குபல வருடங்களுக்கு முன் தமிழ்வாணன், கல்கண்டுவில் இதையே எழுதினார்.
இந்த மாதிரியான முக்கய விசயல்களை சிறு வயதிலிருந்தே சொல்லித் தருவது அவசியம்.
அண்ணே பல விஷயங்களை தெரிஞ்சிகிட்டேன்...குறிப்பா அந்த சிறுநீரக கல் மேட்டர் என் நண்பன் ரொம்ப அவதிப்பட்டார்...எனக்கு பீர் குடிக்கும் பழ்க்கம் முதலில் அதிகம்...அதுவே கல் நிக்காமல் போனதற்க்கு காரணம்னு அந்த டாக்டர் நண்பர் சொன்னாரு..இது எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்கு விளங்கல..அருமயா சொல்லி இருக்கீங்க நன்றி!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குமனப்பூர்வ வாழ்த்துகள்.
அண்ணே பல விஷயங்களை உள்ளடக்கிய பதிவுக்கு நன்றி!
பதிலளிநீக்கு//எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள்.//\\\
பதிலளிநீக்குமிகச்சரியாக சொல்லி இருக்கிறீர்கள்
பயனுள்ள பகிர்வு