Dr M.K.Muruganandhan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dr M.K.Muruganandhan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 13, 2012

நடைப்பயிற்சி பற்றி டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களின் பதிவு


நடைப்பயிற்சி பற்றி எனது மதிப்பிற்குரிய நண்பர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் கட்டுரையை அவரது அனுமதியுடன் எனது பதிவில் வெளியிடுகிறேன்.  
Profile Picture
கவிஞர் திரு வதிரி சி ரவீந்திரனின் கவிதைத் தொகுப்பில் இருந்த நடைப்பயிற்சி பற்றிய ஒரு கவிதையை மேற்கோள் காட்டி இந்த கட்டுரையை எழுதியிருக்கிறார்.  இந்த கட்டுரையை வெளியிட அனுமதித்த டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களுக்கு எங்கள் இதயங்கனிந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.
  நட்புக்கு எல்லையில்லை.
நடைப் பயிற்சி என்பது சாதாரணமான அனைவரும் செய்யக் கூடிய பிரச்சனைகள் அற்ற  ஒரு உடற் பயிற்சியாகும். ஆனால் அதே நேரம் உடலுக்கு உச்ச நிலையில் நன்மைகளை அளிக்கக் கூடியது.

எந்த வயதினரும், எத்தகைய உடல் நிலையினரும் எந்த நேரத்திலும் செய்யக் கூடிய ஒரு இலகுவான பயிற்சி.  தெருக்களில், மைதானங்களில், கடற்கரையில், கோயில் வீதிகளில் என எங்குமே செய்யக் கூடியது.  இவை எதும் கிட்டாவிட்டால் வீட்டினுள் கூட சமாளித்துச் செய்யலாம்.  தொடர் மாடிவீடுகளின் மொட்டை மாடிகள் காற்றோட்டம் கொண்ட மற்றொரு வசதியான இடமாகும்.
அதற்குப் பயிற்சி பெற வேண்டியதில்லை, ஆசிரியர்கள் வழிகாட்டிகள் எதுவுமே வேண்டியதில்லை.  நீங்களாகவே செய்யக் கூடியது.
அத்தோடு எந்த ஆபத்தும் அற்ற பயிற்சி எனவும் சொல்லலாம்.
இதனால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் கிட்டுகின்றன.

·         குருதியில் உள்ள கெட்ட கொலஸ்டரோல் ஆன Lower low-density lipoprotein (LDL) னைக் குறைக்க உதவுகிறது.

·         குருதியில் உள்ள நல்ல கொலஸ்டரோல் ஆன Raise high-density lipoprotein (HDL) லை அதிகரிக்க உதவுகிறது.

·         பிரஷர் எனப்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது அவசியம்


·         நீரிழிவு வராமல் தடுப்பதற்கும், ஏற்கனவே நீரிழிவு இருந்தால் அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் நிறையவே பங்களிக்கிறது.

·         அதிகரித்த எடையைக் குறைக்கவும், எடை அதிகரிக்காமல் தடுக்கவும் நடைப் பயிற்சி மிகவும் நல்லது.

·         மனதில் அமைதியையும் சாந்தத்தையும் கொண்டு வரவும் உதவும்.

·         உடல் உறுதியாகவும் நலமாகவும் இருக்க இதைவிட சுலபமான பயிற்சி எதுவும் கிடையாது.

அண்மையில் வதிரி சி. ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்‘ கவிதைத் தொகுதியைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.  இதில் ஒரு கவிதை நடத்தல் பற்றியதாகும்

தொடர்ந்து எப்படி நடப்பர் என்பதை இனிதே சொல்கிறார்.
வேறென்ன செய்வர்..



தொடர்ந்து சொல்கிறார்

 கவிதை இவ்வாறு நிறைவுறுகிறது.

“..முதிர்ச்சி என்பது மனதினில் தெரியும். நடையினில் இல்லை.” என்கிறார்.
பல நல்ல கவிதைகளை இலகுவான தமிழில் வாசகனிடம் கொண்டு செல்லும் நல்ல கவிதைத் தொகுப்பாகும்.
அருமையான கவிதை.
இருந்த போதும் அக் கவிதையின் இறுதி வரியுடன் கருத்து ரீதியாக எனக்கு உடன்பாடு  இல்லை.
“நடத்தல் என்பது பயணத்தின் இறுதிப்படியே” என்கிறார்.
அல்ல.  அது நலமான உறுதியான மகிழ்ச்சியான வாழ்வுக்கான முதற்படி என்பேன்.
அதனால் தான் இப்பொழுது நடப்பவர்களில் பலர் முதியவர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதினரும் இளைஞர்களும் கூட.
ஆம்.  நடைப் பயிற்சி அனைவருக்குமானது.  நலமான உடலைக் கொடுக்கும்.

இனிமையான கவிதையையும்,  இதைப் போன்ற பல கவிதைகளையும் கொடுத்த நண்பர் வதிரி சி. ரவீந்திரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.






















திங்கள், ஜனவரி 30, 2012

சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை


எனது முகநூல் நண்பர் டாக்டர் திரு M.K.முருகானந்தன் அவர்கள் ‘சிறுநீரக கற்களை தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை என்று எழுதிய கட்டுரையை அவரது அனுமதியுடன் எனது பதிவாக வெளியிடுகிறேன். டாக்டர் திரு M.K.முருகானந்தன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படித்துப் பார்த்து தங்களது கருத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது.
இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது.
அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன.
நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன.
சுவையும் அதிகம்.
போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது.
உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது.

நாம் ஏன் உணவு உண்கிறோம்?

நமது அன்றாட வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே எமக்கு உணவு தேவைப்படுகிறது.
நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும்,  நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை.
அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும்.
ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது.
தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு,  உயர் இரத்த அழுத்தம்,  கொலஸ்டரோல்,  இருதய நோய்கள்,  அதீத எடை,  புற்று நோய் போன்ற பலநோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிறுகச் சிறுக கொல்லுகின்றன.

ஆரோக்கியமான உணவு முறை

இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும்.

உணவின் அளவு


ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான்.
இதனால் தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.

வெற்றுக் கலோரி வேண்டாம்


இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஷாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.


எவை ஆரோக்கியமானவை?

உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.
ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும்.
கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உட்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும்.
இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற் கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.
புதிய ஆய்வு


ஆனால் இப்பொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது.
கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும்.
Brigham and Women’s Hospital லில் உள்ள Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும்.
சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.


எமது சூழலில் அதிகம்


எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள்.
எமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.
வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பார தூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.
சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 

உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மிக்க நன்றி.






>