பேராசிரியர் திருமதி மோகனா
சோமசுந்தரம் அவர்கள் ஹீமோபீலியா (Hemophilia) பற்றி முகநூலில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அந்த கட்டுரையை அவரது அனுமதியின் பேரில் எனது பதிவாக வெளியிடுகிறேன். தாங்கள் படித்துப் பார்த்து தங்களது கருத்தை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
அந்த கட்டுரையை அவரது அனுமதியின் பேரில் எனது பதிவாக வெளியிடுகிறேன். தாங்கள் படித்துப் பார்த்து தங்களது கருத்தை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

ஏப்ரல் 17 ,உலக ஹீமோபிலியா
தினம்:

ஹீமோபிலியா (Hemophilia ) என்பது
இரத்தம் தொடர்பான ஒரு
பரம்பரை
நோய். இது ஆண்களிடமிருந்து ஆண்களுக்கு மட்டுமே வரும்.
இதில் பெண்கள் ஹீமோபிலியா நோயின் சுமப்பாளர்களாக மட்டுமே
இருப்பார்கள். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஏதாவது ஒரு காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறத்
தொடங்கினால்,
இரத்தம்
நிற்காது; இரத்தம்
உறையாது. தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பொதுவாக நம் உடலில் ஒரு வெட்டும்
காயம் பட்டு இரத்தம் வெளிப்பட்டால், இரத்தம்
வெளிக் காற்றைச் சந்தித்த நொடியிலேயே, அதனுடன் தொடர்பு கொண்டு, இரத்தம் உறைந்துவிடும். இதுதான்
இயல்பு. அப்படி இன்றி தொடர்ந்து இரத்தம் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டே இருந்தால், இரத்த
இழப்பு ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும்.

இரத்தம் உறையாமை நோய்க்கான வேதிப்பொருள். Factor viii

இரத்தம்
உறைதலின் காரணிகள்
பொதுவாக இரத்தம் உறைவதற்காக, மரபணுவில் உள்ள ஒரு காரணி (clotting factor
VIII ) இரத்தத்தில் இருக்கும். இது
இரத்தம், இரத்தக் குழாய்க்குள் இருக்கும் போது செயல்படாது ; இரத்தம் குழாயை விட்டு வெளியேறினால் தான் இரத்தம் உறையும்.
உயிர் காப்பதற்கான இயற்கையின் ஓர் ஏற்பாடு இது. சிலரது உடலில் இந்த காரணி ஏதோ ஒரு காரணத்தினால்
இல்லாமல் இருக்கலாம்/குறைபாடு இருக்கலாம். .அவர்களுக்கு இரத்தம் உறையாது. மேலும்
இரத்தம் உறைவதற்கான காரணி, "X" குரோமோசோமில்தான் உள்ளது .நம் உடலில் ஆண் பெண் பாலினத்தை நிர்ணயிக்க, ஆண் உடலில் "XY" குரோமோசோமும், பெண்ணிடம் "XX" குரோமோசோமும், உள்ளன.

நமது உடல் செல்லும், உட்கருவும், அதற்குள் உள்ள குரோமோசோமும்
உள்ளன.

நமது உடல் செல்லும், உட்கருவும், அதற்குள் உள்ள குரோமோசோமும்

ஆண், பெண்ணுக்கான குரோமோசோம்கள். பெண்:XX,ஆண் XY குரோமோசோம். ஆணின் குரோமோசோம்தான் எல்லா குரோமோசோம்களிலும் சிறியது. இது , காலப்போக்கில் அளவில் சிறியதாகி விட்டது.

ஆணின்
:XY குரோமோசோம்.
பெண்ணின்XX குரோமோசோம்

பாலினம் உருவாதல். இதனை நிர்ணயம் செய்வது ஆணின் விந்தணுவில் உள்ள X மற்றும் Y சுமந்து வரும் தனித்தனி விந்தணுக்களே..!
மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும், 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இதில் 22 ஜோடி குரோமோசோம்கள், உடல் நிலைக்கும் ஒரே ஒரு ஜோடி
குரோமோசோம் மட்டும் பாலினத்தை நிர்ணயிக்கிறது .உடலின் ஒவ்வொரு செல்லிலும், இந்த பாலின குரோமோசோம்கள் உள்ளன. கரு உருவாகும்போது, பாலினம் நிர்ணயிக்கப் படுவது, ஆணின்
விந்து சுமந்து வரும் X மற்றும் Y உள்ள விந்தணுக்களால்தான்.! X குரோமோசோம் இரு
பாலினத்திலும் உண்டு. இதில் X குரோமோசோமில்தான் இரத்தம் உறையும் காரணி உள்ளது. இதில்
ஏதாவது குறைபாடு இருந்தால், இரத்தம் உறையாது. ஆனால்.
ஆணுக்கு ஒரே ஒரு X குரோமோசோம் உள்ளதால், அதில் உள்ள குறைபாடு படக்கென
வெளிப்படும். பெண்ணுக்கு இரண்டு X குரோமோசோம்கள் உள்ளதால், ஏதாவது ஒரு குரோமோசோமில் குறைபாடு
இருந்தாலும் ,
மற்றது சமாளித்துக் கொள்ளும், பிரச்சினை வெளியில் தெரியாது. ஆண்களின் X குரோமோசோமில்
குறைபாடு/பாதிப்பு இருந்தால் அது உடனே வெளியில்
தெரியும். அதனால்தான் வியாதி வருகிறது. அப்படி ஒரு நோய் தான் ஹீமோபிலியா என்னும் இரத்தம் உறையாமை நோய். இது பரம்பரை பரம்பரையாக ஆண்களிடம்
மட்டுமே வரும். பெண்கள் இந்த நோய்க்கான காரணியைச் சுமந்து, தன் குழந்தைகளிடம் இறக்கி விடுவார்கள்.

இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி

விக்டோரியா மகாராணியின்
சந்ததிகளில்.. இரத்தம் உறையாமை பாதிப்பு உள்ளவர்கள் வட்டப் புள்ளியில்
குறியிடப்பட்டவர்கள். இரத்தம்
உறையாமை நோய் இங்கிலாந்தில் உள்ள அரச பரம்பரையில் காணப்பட்டது. இந்த நோயின் மரபணு
விக்டோரியா மகாராணியிடம் இருந்தது. அவர்தான் தாராளமாக தன் இளவரசர்களுக்கெல்லாம் தந்தார். அவர்களுக்கு இரத்தம் உறையாமை நோய் வந்து
கஷ்டப்பட்டார்கள். இறந்தும் போனார்கள். . இது
அரச பரம்பரையில் வந்ததால் இதனை பெருமையுடன் அரச வியாதி (Royal Disease) என அழைத்தனர். முதன் முதலில் இதனைப் பற்றிய பதிவு இரண்டாம்
நூற்றாண்டில் பாபிலோனியாவில் உள்ளது. அவர்கள் குழந்தைகளுக்கு சுன்னத் செய்யும் போது, தொடர்ந்து குழந்தைகளின் இறப்பு நேரிட்டதால் இந்த நோயைப்
பற்றிக்
கண்டுபிடித்தனர். இன்று உலகில் இந்த வியாதியுடன் இருந்தாலும் சிலருக்கு அதன்
தன்மை தெரியாது. வியாதி பற்றியும் தெரியாது. (எங்கள் பழனியில் கூட ஒரு பையன் இந்த
நோயுடன் உள்ளான். அவனது பெற்றோருக்கு இந்த நோயின் தன்மை, தீவிரம் தெரியாது. ஒரு மருத்துவர் தான் இதனை அறிந்து தக்க
தருணத்தில் ஆலோசனை தந்துள்ளார்). இரத்த உறவில் திருமணம் செய்வதால்தான், இந்த பரம்பரை நோய் அதிகரிக்கிறது. இது பரம்பரை நோய், மரபணு மூலம் வரும் என்பதால், இந்த நோய்க்கு மருந்தே கிடையாது. ஆனால், கவனத்துடன் இருந்தால், இதனைக் கட்டுப் படுத்தலாம்.
முக்கியமாக இரத்த உறவுக்குள் திருமணம் நடக்காமல் இருந்தால், இப்படிப் பட்ட இறப்பு நிகழும் நோய்களை தவிர்க்கலாம். இதன்
முக்கிய காரணம் மரபணுவில் உள்ள சிக்கல்தான். இது இரத்த உறவு திருமணம் மூலம்
அதிகரிக்கிறது.

இரத்தம் உறையாமை நோயை 2 வயதுக்கு முன்னே கண்டறிதல்

பாதிப்பு ஏற்படும் இடங்கள்
உலகில் 75 % இரத்தம் உறையாமை நோய் உள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை கிடையாது. இவர்களைப்
பற்றிய சரியான கணக்கெடுப்பும் கிடையாது. இரத்தம் உறையாமை நோயில் மூன்று வகை உண்டு.
உலக ஹீமோபிலியா அமைப்பு, 1963 ல், கனடாவிலுள்ள மாண்ட்ரியலில்
உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக நல நிறுவனத்தால் அங்கீகரிப்பட்ட அமைப்பாகும். இதில்
113
நாடுகள் உறுப்பினராக
உள்ளன.இரத்தம் உறையாத நோயாளிகளுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக, 1998 லிருந்து, ஏப்ரல் 17 ம் நாள் உலக இரத்தம் உறையாமை தினம், கடைப் பிடிப்பது என தீர்மானிக்கப் பட்டு, அது நடைமுறையிலும் இருந்து வருகிறது. இரத்தம்
உறையாமை அமைப்பின் நிறுவனரான பிரான்க் ச்சானபெல் ( Frank Schnabel) லின் பிறந்த நாளான ஏப்ரல் 17 ம்
நாளையே,
அந்த நோயுற்ற மக்களுக்காக கடைப்பிடிக்கின்றனர்.


இரத்தம் உறையாமை நோயினால், பாதிப்பு ஏற்படும் பகுதிகள்

இரத்தம் உறையாமை நோயின் சிகிச்சை

இரத்தம் உறையாமை நோய்க்கு மரபணு சிகிச்சை இரத்தம் உறையாமை நோய்
வந்தவர்களின் வாழ்நாள் குறைவு.அதிகமாக, 11 வயது வரை தான் இருப்பார்கள்.
வியாதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், கொஞ்ச காலம் வாழலாம். 2006
ம் ஆண்டு கணக்குப்படி, அமெரிக்காவில் 13
,500௦௦
பேர் இரத்தம் உறையாமை நோயால் அவதிப்படுகின்றனர். இங்கிலாந்தில் 50,௦௦௦ 000,000பேர் இந்த நோயுடன் உள்ளனர். உலகில் பொதுவாக,5
,௦௦௦000
௦௦௦ ஆண்களுக்கு ஒருவர்
வீதம் இந்நோய் பாதிப்பு வருகிறது. இந்தியாவில் 1,000௦௦௦
ஆண் குழந்தை பிறப்புக்கு, 32 குழந்தைகளுக்கு இரத்தம் உறையாமை நோய் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்
இந்தியாவில் 1,300 புது இரத்தம் உறையாமை நோய் உண்டாகிறது. பெங்களூரில் 51
.31 லட்சம்
மக்கள் தொகையில், இதுவரை 400௦௦ குடும்பங்களில் மட்டுமே இரத்தம் உறையாமை நோய்
உள்ளதாக தெரியவருகிறது. இந்நோய் எத்தனை பேருக்கு உள்ளது என்ற சரியான கணக்கெடுப்பு
இல்லை.தமிழ் நாட்டிலும் எத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.
உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குநன்றி !
இதனை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இத்தனை விரிவாக - படங்களுடன் - இன்று தான் பார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.
நீக்குஎன்னா பதிவு சார் .
நீக்குகலக்கல்
அருமையான
தகவல் .
நன்றி
மு. ஞானேந்திரன்
திருநெல்வேலி .
மிக அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி சார். மோகனாம்மாவுக்கும் நன்றி.
பதிலளிநீக்குதகவல்கள் பகிர்வினிற்கு நன்றி ரத்ன வேல் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குuseful post sir!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குவாழ்த்துகள்.
அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பயனுள்ள தகவல்கள்..
பதிலளிநீக்குபகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நல்ல பல பயனுள்ள தகவல்கள் தரப்பட்டுள்ளன. மிக்க நன்றி.
பதிலளிநீக்குஇதுவரை மிக மேலோட்டமாக மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை, மிக விரிவாக தந்தமைக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா அவர்களுக்கு ,
பதிலளிநீக்குஅறிவியல் சார்ந்த மற்றும் விழிப்புனர்வுமிக்க கட்டுரை பதிப்பித்ததற்கு மிக்க நன்றி .
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குவாழ்த்துகள்.
ரத்தம் உறையாமை நோய் என்கிற ஹீமோஃபீலியா பற்றிய நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன், ஐயா..நன்றி பகிர்வுக்கு.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குவாழ்த்துகள்.
ரொம்பவே பாவம்தான் பாதிக்கப்பட்டவங்க.
பதிலளிநீக்குis there any remedy for this disease?
பதிலளிநீக்குநெருங்கிய சொந்ததில் மணம் முடிக்க வேண்டாம் என்று சொல்வார்கள். ஏதாவது ஊணம் வரும் என்று தான் கேள்வி பட்டுள்ளேன், ஆனால் மிகவும் அரிய பல் தகவல் கள் கொடுத்து இருக்கீறீஙக நன்றி
பதிலளிநீக்குதென் இந்தியாவில் சொந்தத்தில் திருமணம் செய்யும் வழக்கம் அதிகம் என்று கேள்வி பட்டேன்.
பதிலளிநீக்குஇந்த அருமையான விளக்கமிள்ள பதிவு பல வாசகர்களை சென்றடைய வேண்டும்.
பயனுள்ள பதிவு. பிள்ளைகள் திருமணத்தின் போது நினைவில் கொள்கிறேன் ஐயா.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குவாழ்த்துகள்.
விழிப்புணர்வு பகிர்வு.பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்கள் கொடுமையாக உள்ளது.இந்த இறத்தம் உறையாமை நோய் இருப்பவர்களெல்லாம் சொந்தத்தில் திருமணம் செய்தவர்களின் பிள்ளைகள் மட்டும்தானா?
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.சொந்தத்தில் தான் எங்க பக்கம் அநேக திருமணம் நடைபெறுகிறது.வருங்காலத்திலாவது மாற்றங்கள் வரவேண்டும்.விழிப்புணர்வு பகிர்வு.
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு .மிகவும் நன்றி அய்யா .
பதிலளிநீக்குநிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. இடுகைக்கு
பதிலளிநீக்குநன்றி ! vaalthukal.
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
நீக்குவாழ்த்துகள்.
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நிறைய தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குநன்றி !
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
பதிலளிநீக்குநன்றி
யாழ் மஞ்சு
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_16.html
good news...thanks for the information
பதிலளிநீக்குநல்ல கருத்து
பதிலளிநீக்குஎனக்கு ஒரு சந்தேகம் என் அப்பா சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டவர் ஆனால் அவர் மகனாகிய எனக்கு எவ்வித வியாதியும் வேறெதுவும் இல்லை?
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரி தான். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். ஊனமுற்றோர், மூளை வளர்ச்சிக் குறைபாடுள்ளவர்கள் - இப்படி இருப்பவர்களை விசாரித்துப் பாருங்கள். சொந்தத்தில் திருமணம் செய்த்வர்கள் தான் பெரும்பான்மை.
நீக்குநான் வேலை செய்வது ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலை, எனவே நிறைய தொழிலாளர்களுடன் பழக வேண்டிய சந்தர்ப்பம், அவர்களைப் பற்றிய தகவல்கள் அலுவலக பயன்பாடுகளுக்காக திரட்ட வேண்டிய பணி. நிறைய குறைபாடுகள் உள்ளவர்களை அணுகும் போது சொந்தத்தில் திருமணம் செய்தவர்களாகத் தான் இருக்கிறார்கள்.கூடுதல் விபரம் வேண்டுமென்றால் உங்கள் போன் எண் கொடுங்கள், பேசுகிறேன். நன்றி. வாழ்த்துகள்.
தங்களின் பகிர்வுக்கும் கட்டுரை ஆசிரியர் மோகனாம்மாவுக்கும் நன்றி.
பதிலளிநீக்குhttps://www.scientificjudgment.com/