Medical Care லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Medical Care லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 11, 2012

பன்றிக் காய்ச்சல் பற்றிய பதிவு

எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்கள் பன்றிக் காய்ச்சல் பற்றிய ஒரு அருமையான பதிவு எழுதியிருக்கிறார்கள்.  அவர்களது அனுமதியுடன் எனது தளத்தில் வெளியிடுகிறேன். திரு ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.

ஸ்வைன் ப்ளூ: ஸ்ப்ரெடிங் இன்புளூயன்சா: ""ஹீமாக்ளூடினின்"" & ""நியூராமினிடேஸ்"" என்ற போலிஷ் வார்த்தைகள் தாம் இந்த இன்ப்ளூயன்சாவை குறிப்பது. பன்றி காய்ச்சல் என்று அழைக்கப்படும் இன்புளூயன்சா எச் 1 என் 1...தனது ஆ.என்.ஏ. அமைப்பை மாற்றிகொள்ளும் வைரஸ்...ஏ,பி,சி என 3 வகைப்படும்.

1. ஏ டைப்...லேசான காய்ச்சல் தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு, சளி, இருமல்... சாதாரண காய்ச்சல் தான். தகுந்த மருத்துவ ஆலோசனையுடன், பாரசிட்டமால், லிவோபிளாக்சாசின் போன்ற மருந்துகள் போதும். தகுந்த ஓய்வு முக்கியம்.


2. பி டைப்....மேலே சொன்ன அறிகுறிகள் தவிர, அதிக காய்ச்சல், தொண்டை வலி...டாமிப்ளூ சரியான விகிதத்தில், மருத்துவ ஆலோசனையுடன், தொடர்ந்து கொடுக்க வேண்டும். ஓய்வு அவசியம்.

3. சி டைப்....அனைத்து அறிகுறிகள் தவிர...மூச்சு திணறல், சளியுடன் ரத்தம், லாஸ் ஆப் அபிடைட். உடனே பரிசோதனை, டாமிப்ளூ மற்றும் தகுந்த மருத்துவ ஆலோசனை, ஓய்வு அவசியம்.

வேறு சில மருந்துகள் தகவலுக்காக மட்டும்: ரிலின்சா...10 வயதுக்கு மேல் மட்டும். ரெட்ரோவைரல்ஸ்...ஜனாமிவிர் & ஆசால்டாமிவிர். வாக்சிப்ளூ ஊசிகள்..18 முதல் 60 வயது வரை. நாசஓவாக்...மூக்கு வழியாக...3 வயதுக்கு மேல் மட்டும். அனைத்து மருந்துகளும் தகுந்த மருத்துவ ஆலோசனைப்படியே வழங்கப்பட வேண்டும்.

டாமிப்ளூ மாத்திரைகளையும், தேவையில்லாமல் பயன்படுத்துவது ஆபத்து என்று உலக சுகாதார மையம் எச்சரித்து உள்ளது.


நோய் பரவும் முறைகள்,அறிகுறிகள்,தடுப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு. 

அ. தும்மல்,  இருமல்....காற்றின் மூலம் இன்ப்ளூயன்சா பரவுகிறது.!

ஆ. மூக்கு சளியை கண்ட இடத்தில் சிந்துவது.! 



பன்றி காய்ச்சல் அறிகுறிகள்: 

நோய் தாக்கியவர்களுக்கு சளி, வறட்டு இருமல், கடுமையான காய்ச்சல், உடல் வலி, மூக்கு, கண்...பாகங்களில் இருந்து தண்ணி கொட்டும்.! 

தவிர்ப்பது:

அ. பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் சிகிச்சை, மருத்துவ மனைகளில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 

ஆ. பரவாமல் தடுக்க முகமூடி அணியலாம். வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடன் கை, கால்களை சுத்தமாக கழுவுதல்.

இ. நோயாளிகளின் ஆடைகளை தனியாக டெட்டால் போன்ற கிருமி நாசினி கலந்த கொதிக்கும் நீரில் துவைத்தல். 

ஈ. காய்ச்சல், இருமல், தலைவலி இன்னபிற குறியீடுகள் தென்பட்டால் உடனே தகுந்த மருத்துவ சிகிச்சை அவசியம்.

உ.  தற்போதைய வெப்ப சூழ்நிலை இந்தக் காய்ச்சலை பரப்பும் கிருமிகளுக்கு ஏற்றதல்ல.  எனவே தேவையில்லாமல் யாரும் பயப்பட வேண்டாம்.


இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 


உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மிக்க நன்றி.



புதன், பிப்ரவரி 01, 2012

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)


பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் ஹீமோபீலியா (Hemophilia)  பற்றி முகநூலில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
  அந்த கட்டுரையை அவரது அனுமதியின் பேரில் எனது பதிவாக வெளியிடுகிறேன்.  தாங்கள் படித்துப் பார்த்து தங்களது கருத்தை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

ஏப்ரல் 17 ,உலக ஹீமோபிலியா தினம்:




ஹீமோபிலியா (Hemophilia ) என்பது இரத்தம் தொடர்பான ஒரு
பரம்பரை நோய்.  இது ஆண்களிடமிருந்து ஆண்களுக்கு மட்டுமே வரும்.
இதில் பெண்கள் ஹீமோபிலியா  நோயின் சுமப்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள்.  இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஏதாவது ஒரு காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறத் தொடங்கினால்,  இரத்தம் நிற்காது;  இரத்தம் உறையாது.  தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பொதுவாக நம் உடலில் ஒரு வெட்டும்  காயம் பட்டு இரத்தம் வெளிப்பட்டால்,  இரத்தம் வெளிக் காற்றைச் சந்தித்த நொடியிலேயே, அதனுடன் தொடர்பு கொண்டு, இரத்தம் உறைந்துவிடும்.  இதுதான் இயல்பு. அப்படி இன்றி தொடர்ந்து இரத்தம் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டே இருந்தால்,  இரத்த இழப்பு ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும். 



இரத்தம் உறையாமை நோய்க்கான வேதிப்பொருள். Factor viii 



இரத்தம் உறைதலின் காரணிகள்

பொதுவாக இரத்தம் உறைவதற்காக,  மரபணுவில் உள்ள ஒரு காரணி (clotting factor VIII ) இரத்தத்தில் இருக்கும். இது இரத்தம், இரத்தக் குழாய்க்குள் இருக்கும் போது செயல்படாது ; இரத்தம் குழாயை விட்டு வெளியேறினால் தான் இரத்தம் உறையும். உயிர் காப்பதற்கான இயற்கையின் ஓர் ஏற்பாடு இது. சிலரது உடலில் இந்த காரணி ஏதோ ஒரு காரணத்தினால் இல்லாமல் இருக்கலாம்/குறைபாடு இருக்கலாம். .அவர்களுக்கு இரத்தம் உறையாது. மேலும் இரத்தம் உறைவதற்கான காரணி, "X" குரோமோசோமில்தான் உள்ளது .நம் உடலில் ஆண் பெண் பாலினத்தை நிர்ணயிக்க, ஆண் உடலில் "XY" குரோமோசோமும், பெண்ணிடம் "XX" குரோமோசோமும்,   உள்ளன.




நமது உடல் செல்லும், உட்கருவும், அதற்குள் உள்ள குரோமோசோமும்
   உள்ளன.


நமது உடல் செல்லும், உட்கருவும், அதற்குள் உள்ள குரோமோசோமும்



ஆண், பெண்ணுக்கான குரோமோசோம்கள். பெண்:XX,ஆண் XY குரோமோசோம். ஆணின் குரோமோசோம்தான் எல்லா குரோமோசோம்களிலும் சிறியது. இது , காலப்போக்கில் அளவில் சிறியதாகி விட்டது.

 
ஆணின் :XY குரோமோசோம். பெண்ணின்XX குரோமோசோம்


பாலினம் உருவாதல். இதனை நிர்ணயம் செய்வது ஆணின் விந்தணுவில் உள்ள X மற்றும் Y சுமந்து வரும் தனித்தனி விந்தணுக்களே..!


மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும்,  23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இதில் 22 ஜோடி குரோமோசோம்கள்,  உடல் நிலைக்கும் ஒரே ஒரு ஜோடி குரோமோசோம் மட்டும் பாலினத்தை நிர்ணயிக்கிறது .உடலின் ஒவ்வொரு செல்லிலும், இந்த பாலின குரோமோசோம்கள் உள்ளன. கரு உருவாகும்போது, பாலினம் நிர்ணயிக்கப் படுவது, ஆணின் விந்து சுமந்து  வரும் X மற்றும் Y உள்ள விந்தணுக்களால்தான்.! X  குரோமோசோம்    இரு பாலினத்திலும் உண்டு.  இதில் X  குரோமோசோமில்தான் இரத்தம் உறையும் காரணி உள்ளது. இதில் ஏதாவது குறைபாடு இருந்தால், இரத்தம் உறையாது.  ஆனால். ஆணுக்கு ஒரே ஒரு X  குரோமோசோம் உள்ளதால், அதில் உள்ள குறைபாடு படக்கென வெளிப்படும்.  பெண்ணுக்கு இரண்டு X  குரோமோசோம்கள்  உள்ளதால், ஏதாவது ஒரு குரோமோசோமில் குறைபாடு இருந்தாலும் , மற்றது சமாளித்துக் கொள்ளும், பிரச்சினை வெளியில் தெரியாது.  ஆண்களின் X குரோமோசோமில் குறைபாடு/பாதிப்பு இருந்தால் அது உடனே வெளியில் தெரியும். அதனால்தான் வியாதி வருகிறது. அப்படி ஒரு நோய் தான் ஹீமோபிலியா என்னும்  இரத்தம் உறையாமை நோய். இது பரம்பரை பரம்பரையாக ஆண்களிடம் மட்டுமே வரும். பெண்கள் இந்த நோய்க்கான காரணியைச் சுமந்து,  தன் குழந்தைகளிடம் இறக்கி விடுவார்கள். 


இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி 


விக்டோரியா மகாராணியின் சந்ததிகளில்.. இரத்தம் உறையாமை பாதிப்பு உள்ளவர்கள் வட்டப் புள்ளியில் குறியிடப்பட்டவர்கள். இரத்தம் உறையாமை நோய் இங்கிலாந்தில் உள்ள அரச பரம்பரையில் காணப்பட்டது. இந்த நோயின் மரபணு விக்டோரியா மகாராணியிடம் இருந்தது. அவர்தான் தாராளமாக தன் இளவரசர்களுக்கெல்லாம்     தந்தார். அவர்களுக்கு இரத்தம் உறையாமை நோய் வந்து கஷ்டப்பட்டார்கள். இறந்தும் போனார்கள்.  . இது அரச பரம்பரையில் வந்ததால் இதனை பெருமையுடன் அரச வியாதி (Royal Disease) என அழைத்தனர். முதன் முதலில் இதனைப் பற்றிய பதிவு இரண்டாம் நூற்றாண்டில் பாபிலோனியாவில் உள்ளது. அவர்கள் குழந்தைகளுக்கு சுன்னத் செய்யும் போது, தொடர்ந்து குழந்தைகளின் இறப்பு நேரிட்டதால் இந்த நோயைப் பற்றிக்  கண்டுபிடித்தனர்.  இன்று உலகில் இந்த வியாதியுடன் இருந்தாலும் சிலருக்கு அதன் தன்மை தெரியாது. வியாதி பற்றியும் தெரியாது. (எங்கள் பழனியில் கூட ஒரு பையன் இந்த நோயுடன் உள்ளான். அவனது பெற்றோருக்கு இந்த நோயின் தன்மை, தீவிரம் தெரியாது. ஒரு மருத்துவர் தான் இதனை அறிந்து தக்க தருணத்தில் ஆலோசனை தந்துள்ளார்). இரத்த உறவில் திருமணம் செய்வதால்தான், இந்த பரம்பரை நோய் அதிகரிக்கிறது. இது பரம்பரை நோய், மரபணு மூலம் வரும் என்பதால், இந்த நோய்க்கு மருந்தே கிடையாது. ஆனால், கவனத்துடன் இருந்தால், இதனைக் கட்டுப் படுத்தலாம். முக்கியமாக இரத்த உறவுக்குள் திருமணம் நடக்காமல் இருந்தால், இப்படிப் பட்ட இறப்பு நிகழும் நோய்களை தவிர்க்கலாம். இதன் முக்கிய காரணம் மரபணுவில் உள்ள சிக்கல்தான். இது இரத்த உறவு திருமணம் மூலம் அதிகரிக்கிறது.


இரத்தம் உறையாமை நோயை 2 வயதுக்கு முன்னே கண்டறிதல் 


பாதிப்பு ஏற்படும் இடங்கள்

உலகில் 75 % இரத்தம் உறையாமை நோய் உள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை கிடையாது. இவர்களைப் பற்றிய சரியான கணக்கெடுப்பும் கிடையாது.  இரத்தம் உறையாமை நோயில் மூன்று வகை உண்டு. உலக ஹீமோபிலியா  அமைப்பு, 1963 ல், கனடாவிலுள்ள மாண்ட்ரியலில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக நல நிறுவனத்தால் அங்கீகரிப்பட்ட அமைப்பாகும். இதில் 113 நாடுகள் உறுப்பினராக உள்ளன.இரத்தம் உறையாத நோயாளிகளுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக,  1998 லிருந்து, ஏப்ரல் 17 ம் நாள் உலக இரத்தம் உறையாமை தினம், கடைப் பிடிப்பது என தீர்மானிக்கப் பட்டு, அது நடைமுறையிலும் இருந்து வருகிறது.  இரத்தம் உறையாமை அமைப்பின் நிறுவனரான பிரான்க் ச்சானபெல் ( Frank Schnabel)  லின் பிறந்த நாளான ஏப்ரல் 17 ம் நாளையே,  அந்த நோயுற்ற மக்களுக்காக கடைப்பிடிக்கின்றனர்.  




 
இரத்தம் உறையாமை நோயினால், பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 


இரத்தம் உறையாமை நோயின் சிகிச்சை


இரத்தம் உறையாமை நோய்க்கு மரபணு சிகிச்சை இரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின் வாழ்நாள் குறைவு.அதிகமாக, 11 வயது வரை தான் இருப்பார்கள். வியாதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், கொஞ்ச காலம் வாழலாம்.  2006 ம் ஆண்டு கணக்குப்படி, அமெரிக்காவில் 13 ,500௦௦ பேர் இரத்தம் உறையாமை நோயால் அவதிப்படுகின்றனர். இங்கிலாந்தில் 50,௦௦௦ 000,000பேர் இந்த நோயுடன் உள்ளனர்.  உலகில் பொதுவாக,5 ,௦௦௦000 ௦௦௦ ஆண்களுக்கு ஒருவர்  வீதம் இந்நோய் பாதிப்பு வருகிறது. இந்தியாவில் 1,000௦௦௦ ஆண் குழந்தை பிறப்புக்கு, 32 குழந்தைகளுக்கு இரத்தம் உறையாமை நோய் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1,300 புது இரத்தம் உறையாமை நோய் உண்டாகிறது. பெங்களூரில் 51 .31 லட்சம் மக்கள் தொகையில், இதுவரை 400௦௦ குடும்பங்களில் மட்டுமே இரத்தம் உறையாமை நோய் உள்ளதாக தெரியவருகிறது. இந்நோய் எத்தனை பேருக்கு உள்ளது என்ற சரியான கணக்கெடுப்பு இல்லை.தமிழ் நாட்டிலும் எத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை. 

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 

உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மிக்க நன்றி.





திங்கள், ஜனவரி 30, 2012

சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை


எனது முகநூல் நண்பர் டாக்டர் திரு M.K.முருகானந்தன் அவர்கள் ‘சிறுநீரக கற்களை தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை’ என்று எழுதிய கட்டுரையை அவரது அனுமதியுடன் எனது பதிவாக வெளியிடுகிறேன். டாக்டர் திரு M.K.முருகானந்தன் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படித்துப் பார்த்து தங்களது கருத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது.
இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது.
அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன.
நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன.
சுவையும் அதிகம்.
போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது.
உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது.

நாம் ஏன் உணவு உண்கிறோம்?

நமது அன்றாட வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே எமக்கு உணவு தேவைப்படுகிறது.
நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும்,  நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை.
அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும்.
ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது.
தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு,  உயர் இரத்த அழுத்தம்,  கொலஸ்டரோல்,  இருதய நோய்கள்,  அதீத எடை,  புற்று நோய் போன்ற பலநோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிறுகச் சிறுக கொல்லுகின்றன.

ஆரோக்கியமான உணவு முறை

இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும்.

உணவின் அளவு


ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான்.
இதனால் தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.

வெற்றுக் கலோரி வேண்டாம்


இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஷாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.


எவை ஆரோக்கியமானவை?

உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.
ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும்.
கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உட்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும்.
இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற் கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.
புதிய ஆய்வு


ஆனால் இப்பொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது.
கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும்.
Brigham and Women’s Hospital லில் உள்ள Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும்.
சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.


எமது சூழலில் அதிகம்


எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள்.
எமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.
வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பார தூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.
சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 

உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மிக்க நன்றி.






>