சனி, ஜூலை 30, 2011

ஸ்ரீ வில்லிபுத்தூரில் நரிப்பாறை - குகைக்கோவில்
(திருவண்ணாமலை அருகில்)

 
ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் மலை மேல் அமைந்த திருவண்ணாமலை கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் (நின்ற கோலத்தில்) கோவில் இருக்கிறது.  அந்த கோவிலைப் பற்றி எழுதும்படி திரு ரவீந்திரன் கிருஷ்ணசாமி (ரிஷி ரவீந்திரன்) அவர்கள் அன்புக் கட்டளையிட்டார் 


அது பற்றி விபரங்கள் சேகரிக்க, புகைப்படங்கள் எடுக்க நாங்கள் 17.7.2011 அன்று சென்றோம்.  கேமரா சற்று பழுதாகி விட்டது.  அனைத்து புகைப்படங்களும் எடுப்பது இயலாது என்று நினைத்தோம்.  எனவே முதலில் மற்றவைகளை எடுப்போம் என்று முடிவு செய்தோம்.  முதல் கட்டமாக நரிப்பாறை என்ற குகைக்கோவிலுக்கு சென்றோம்.  திருவண்ணாமலைக்கு செல்லும் வழியில் சற்று விலகி இருக்கிறது.  நிறைய வருடங்களுக்கு முன்பு பள்ளிக் குழந்தைகள் (நடந்து செல்லும் காலத்தில்) சுற்றுலா செல்வதற்கு கூட்டிச் செல்வார்கள். நல்ல சோலை மாதிரி இருக்கும்.  பக்கத்தில் உள்ள பம்ப்செட் கிணற்றில் நீர் இருக்கும். குடிப்பதற்கு அங்கு எடுத்துக் கொள்ளலாம்.

நான் அங்கு சென்று நிறைய வருடங்கள் இருக்கும்.  முன்பு செல்லும்போது ஒரு குகை இருக்கும்.  யாரும் அங்கு செல்வதில்லை.
தற்போது நிறைய மாற்றங்கள்.  சோலை போன்ற தோற்றங்கள் போய் விட்டன.  சுற்றிலும் கட்டடங்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் செங்கல் சூளைகள்.  புகை நாற்றம் நிறைய.  ஒரே ஏமாற்றம்.  ஏக்கப் பெருமூச்சு.இனிமேல் கோவிலுக்கு செல்வோம். நரிப்பாறை குகைக் கோவிலுக்கு செல்லும் வழி என்று ஒரு தகவல் பலகை இருக்கிறது. வழியில் சிறு தெய்வங்கள் இருக்கின்றன.முன்பு சற்று இளைப்பாறுவதற்காக இடம் இருந்தது.  அது இப்போது கோவிலாக மாறி விட்டது.  அங்கு ஒரு பெரியவர் இருந்தார்.  அவர் ஸ்ரீ வில்லிபுத்தூர் என்று சொன்னார்.  எங்களை குகைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.நான் இது வரை அந்தக் கோவிலுக்குள் சென்றதில்லை. உயரம் கம்மி.  எனவே குனிந்து தான் செல்ல வேண்டியிருந்தது. 
அங்கு ஸ்ரீதர் சுவாமிகள் படம் நிறுவப் பட்டிருக்கிறது. நாகராஜருக்கு ஒரு சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது.  குகையின் ஒரு மூலையில் அகஸ்தியருக்கும், ஸ்ரீ ராமனுஜருக்கும் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அதற்கு எதிர் மூலையில் ஒரு சின்ன குகை போன்ற அமைப்பு இருக்கிறது.  அந்த இடத்தில் நல்ல காற்று வருகிறது.  அங்கு தீபம் வைக்க சொன்னார்.  அந்த பெரியவரால் அந்த இடத்திற்கு போக முடியவில்லை.  மிகவும் குறுகலான இடம்.  எனது தங்கை மகன் அருண் அங்கு சென்று தீபம் ஏற்றினான்.  

 
அந்த குகையில் நான், எனது மனைவி திருமதி உமா காந்தி, எனது தங்கை மகன்கள் (இரட்டையர்கள்) அருண், அஷோக், எனது செல்லப் பேரன் தீபன் சக்கரவர்த்தி (எங்களது மகள் ஜெயசுதாவின் மகன்(மதுரை)), எங்களது ஆட்டோ ஓட்டுனர் அனைவரும் தரிசனம் செய்தோம்.  எங்களுக்கு இது ஒரு பெரிய கொடுப்பினையாக கருதுகிறோம்.  திரு ரிஷி ரவீந்திரன் அவர்களுக்கு எனது நன்றி.  இந்த பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.  (கேமரா சரியாக இருந்தால் இங்கு வந்திருக்க மாட்டோம் - எனவே எந்த இடையூறும் இடையூறு அல்ல).

அந்த பெரியவரைப் பற்றி:

அவரது பெயர் என்ன என்று கேட்டோம்.  அவரது பெயர் பிள்ளையார் என்று சொன்னார். பத்து வருடங்களாக பேச்சு வராமல் மௌனமாக இருந்ததாகவும் அதனால் மௌன சாமிகள் என்று சொல்வார்கள் என்றும் சொன்னார்.  இயற்பெயர் வெள்ளைச்சாமி என்று சொன்னார்.  எங்களது சத்தம் கேட்டு வந்ததாக சொன்னார்.  அவர் வந்திராவிடில் எங்களுக்கு இந்த குகை அனுபவம், தரிசனம் கிடைத்திருக்காது.  பின்பு அருகில்  உள்ள கோவிலுக்கு கூட்டி சென்றார்.  அங்கு நித்தியானந்த சுவாமிகள், ஸ்ரீதர் சுவாமிகள், பழனி மூட்டை சுவாமிகள் படங்கள் இருந்தன.  ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.  நல்ல தரிசனம் செய்தோம்.  சற்று கீழே பிள்ளையார் கோவில் இருந்தது.  அங்கு சென்றோம்.
  உள்ளே நுழையும்போது புதிதாக மலை மேல் ஒரு கோவில் தெரிந்தது.   அங்கு செல்வோம்.  பாலசுப்ரமணிய கோவில் என்று இருக்கிறது.  செல்வதற்கு நிறைய படிக்கட்டுகள் இருக்கின்றன.  இந்த கோவில் ஸ்ரீ வில்லிபுத்தூர் சாலியர் சமுதாயத்தினரால் நன்கு  பராமரிக்கப்பட்டு  வழிபாட்டு வருகிறது.  கோவில் மூடியிருந்தது. நரிப்பாறையிலிருந்து பார்த்தால் ஒரு பெரிய கட்டிடம் தெரிந்தது.  என்ன என்று விசாரித்தோம்.  அது ஒரு கிறிஸ்தவ கோவில் என்று சொன்னார்கள்.  இந்த பத்து வருடங்களுக்குள் தான் வந்திருக்க வேண்டும்.  அங்கு சென்றோம்.  


அவர்களிடம் அனுமதி கேட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். 
புனித வனச் சின்னப்பர் ஆலயம் என்று சொன்னார்கள்.  கோவில் நல்ல அமைப்பில் இருந்தது.  நன்கு  பராமரிக்கப்பட்டு வருகிறது.  போக்குவரத்து பாதைகளும் நன்கு சீராக உள்ளன.  அந்த புகைப்படங்களை தொகுத்திருக்கிறோம். 
 மக்கள் நிறைய   வேனில் வந்து மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி, சமைத்து சாப்பிட்டு விட்டு தங்கி செல்கிறார்கள்.


இங்கு முடித்து விட்டு தரகுமலை மாதா கோவில் ஒன்று மலை மேல் இருக்கிறது.  செல்லும் வழியில் சித்தர் பீடம் என்று ஒரு அமைப்பு இருக்கிறது.  இவைகளை புகைப்படம் எடுக்கிறோம்.  விபரங்களை அடுத்த பதிவில் தருகிறோம்.

இந்த பதிவை படித்து விட்டு நிறை குறை எழுதுங்கள்.  Google Connect Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  உங்கள் மின்னஞ்சல் முகவரியை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் புதிதாக பதிவிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

இந்த பதிவிற்கு புகைப்படங்கள் எடுக்க உதவிய அருண், அசோக் அவர்களுக்கும், இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய திருமதி ரமாமணி அவர்களுக்கும் நன்றி.


 மிக்க நன்றி

45 கருத்துகள்:

 1. அற்புதம்.. உங்கள் பதிவுகளில் மிகவும் விளக்கமாய் படங்களுடன் பதிவிடுவது அந்த இடத்திற்கே போன உணர்வையும் போகத் தூண்டுதல் தரும் விதமாகவும் அமைந்துள்ளது.. நன்றி

  பதிலளிநீக்கு
 2. எங்களை அங்கேயே கூட்டி சென்றுவிட்டீர்கள் ரத்னவேல் சார்...
  சிறு வயதில் உங்கள் ஊர் பக்கம் தளவாய்புரத்தில் இருந்த நினைவுகளை கிளறி விட்டீர்கள்...நன்றி...

  பதிலளிநீக்கு
 3. எங்களுக்கு இது ஒரு பெரிய கொடுப்பினையாக கருதுகிறோம்.--
  அழ்கான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
  சிரத்தையான குழுவுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 4. பெரிய மற்றும் அறிய படங்களுடன் ஒரு நல்ல பதிவு ...! நேரில் சென்று பார்த்த திருப்தி கிடைத்தது. வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 5. படங்களுடன் ஒரு நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 6. ஐயா இன்றுதான் தங்கள் வலைப்பதிவை பார்த்தேன்.மிகவும் அற்புதமான படங்களுடன் பதிவுகள் நன்றாக உள்ளன.தொடருட்டும் உங்கள் சேவை.

  பதிலளிநீக்கு
 7. பெரிய மற்றும் அறிய படங்களுடன் ஒரு நல்ல பதிவு ...! நேரில் சென்று பார்த்த திருப்தி கிடைத்தது. வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 8. படங்களோடு பதிவு பாடமாய அமைந்திருக்கின்
  றது. மிக்க நன்றிகள் ஐயா!

  பதிலளிநீக்கு
 9. படங்கள் தான் பதிவின் தரத்தை பெரிதாக பறை சாற்றி கண்ணை கொள்ளை கொள்கிறது மிக்க நன்றி ஐயா..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

  பதிலளிநீக்கு
 10. எனது பதிவில் தங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்

  http://suharaji.blogspot.com/2011/07/16-x-3.html

  பதிலளிநீக்கு
 11. நரிப்பாறை குகைக்கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஐயா
  இதோ உங்கள் பதிவின் மூலம் நிறைய செய்திகள் அறிந்துகொண்டேன்.
  படங்கள் இயற்கை எழில்கொஞ்சுகின்றன.
  அருமை.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் இருந்து சுற்றுலா ( சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்) திருவண்ணாமலை சென்ற நினைவு. கடந்த காலத்தை நினைவு படுத்தியவுடன் மனதை பிசைந்தது போல் ஒரு உணர்வு. ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து படித்த பள்ளி, சுற்றிய இடங்கள், ஆண்டாள் கோவில், மடவார் விளாகத்தில் உள்ள சிவன் கோவில் ஆகியவற்றை பார்க்க ஆவலாக இருக்கிறது. பல ஆண்டுக்கு முன் நான் அங்கு வந்த போது எனது ஊர் எனக்கு அன்னியமாக பட்டது. நான் சிறிய வயதில் பார்த்த இடங்கள் எல்லாம் மாறி
  இருந்தது. நான் பிறந்து வளர்ந்த வீட்டை அடையாளம் கண்டுகொள்ளவே மிகவும் கஷ்டப்பட்டேன். அந்த அளவுக்கு வீடுகளும் இடங்களும்
  மாறி இருந்தன. பிறந்த மண்ணை உங்கள் ப்ளாக் இல் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ந்து போனேன். நன்றி. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 13. இந்த கருத்துரையை எழுதியது சங்கரநாராயணன் வயது 57 URL பல முறை சரியாக அடித்தும் "URL contains illegal Charcters " என்றே வந்தது. ஏன் என்று தெரியவில்லை. ஆகவே " annoymous " தேர்வு செய்து அனுப்ப வேண்டியதாகி விட்டது. Sorry

  பதிலளிநீக்கு
 14. நல்ல பகிர்வு . மிக்க நன்றி ஐயா..:)

  பதிலளிநீக்கு
 15. போட்டோக்கள் அருமையாக இருக்கின்றன. நல்ல விவரங்கள். நேரில் பார்த்தது போன்ற உணர்வு வந்தது.

  பதிலளிநீக்கு
 16. அன்பு ரத்னவேல் அவர்களுக்கு,

  மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது... எத்தனை நாளாச்சு தாய் தகப்பனைப் பாத்து, மனைவி குழந்தைகளை பாத்துன்னு ஒரு ஏக்கம் வருமே அது மாதிரி இருந்தது. அந்த பெரியவர்களின் பெயர்கள் வினோதமாயும் அழகாயும் இருந்தது... மதுரைன்னு பேர் பரவலாக புழங்குவது போல, ஸ்ரீவில்லிபுத்தூர்னு ஒரு பேரோ அல்லது பிள்ளையார் என்ற பேரோ நான் கேள்விப்பட்டதே இல்லை...
  அந்த மேற்குத் தொடர்ச்சி மலை, ஆகாசத்துக்கே பாலூட்டுவது போன்ற அதன் திறந்த மாரும், அதன் கீழே தென்னைமரங்களும், திருநாமலையில் இருந்தாலும் தெளிவாய் தெரியும்... நரிப்பாறையின் தொன்மை போலவே அதில் இருக்கும் அந்த பழுத்த பெரியவரின் முகமும். ரொம்பவும் முன்னால் போயிருக்கிறேன்... நரிப்பாறைக்கு, ஆனால் நீங்கள் சொன்னது போல இத்தனை சிறுதெய்வங்களை பார்த்தது இல்லை... அல்லது ஞாபகம் இல்லை... தரகுமலை வேதக்கோயில் பற்றித் தெரியும் ஆனால் போக வாய்த்ததில்லை இது வரை... நீங்க போயிட்டு வாங்க! நாங்களும் போயிட்டு வர்றோம்... பதிவினூடே...

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 17. ரத்னவேல் அவர்களே! ஸ்ரீவில்லிபுதுர் அருகிலேயே இவ்வளவு தகவல் களா? உங்கள் பதிவும் பணியும் அருமை. ---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 18. அருமையான பதிவு. மகாலிங்கமலை பற்றியும் நல்ல தங்கள் கிணறு உள்ள மகாராஜபுரம் பற்றியும் பதிவிடுங்கள். முக்கியமாக மகாலிங்கமலை.

  பதிலளிநீக்கு
 19. அருமையான படங்கள்.... அழகான இடங்கள்...... நிறைய தகவல்கள்..... தொடருங்கள்.....

  பதிலளிநீக்கு
 20. பதிவெழுத மெனக்கெடுபவர்கள் நம்மூரில் கொஞ்சமே கொஞ்சம் பேர். பதிவைப் படிக்கையில் உங்கள் மெனக்கெடல் புரிகிறது.

  என் நண்பர் உங்களூர்ப் பெண்ணை மணமுடித்தவர் உங்கள் ஊர் அருகில் உள்ள திருவண்ணாமலை பற்றி சொல்கையில்... அட, எனக்குத் தெரிந்தது அருணாசலேஸ்வரர் வீற்றிருக்கும் திருவண்ணாமலைதானே என்று ஆச்சர்யப்பட்டேன். உங்கள் பதிவு படிக்கையில் அவர் சொன்ன தகவல்கள் ரீவைண்டில் ஓடின.

  விரிவான தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. மிக நல்ல பகிர்வு. மிகப் பெருமையாக உள்ளது. உங்கள் சேவை மனப்பான்மைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 22. ஐயா அருமையான பகிர்வு உங்களுடன் நாங்களும் வந்தது போல் இருந்தது. உங்கள் பதிவை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளோம்...

  பதிலளிநீக்கு
 23. நல்ல பதிவு எனது சரிய பிராயத்தை ஞாபக படுத்தியது.எனது சிறியவயதில் இங்கெல்லாம் சுற்றி இருக்கிறேன்.மறுபடியும் அந்த இடங்கள் எல்லாம் பார்த்த மாதிரி இருந்தது மிக்க மகிழ்ச்சி.பாரட்டுக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 24. ஆலய தரிசனம் அருமை ,

  நேரில் பார்த்த உணர்வு தந்தது படங்களை பார்க்கும் பொழுது .

  பதிலளிநீக்கு
 25. நல்ல பதிவு.கோயிலை நேரில் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 26. அழகாக அனுபவித்து எழுதியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 27. குகைக்கோயில் தரிசனம் தங்கள் எங்களை நேரில் அழைத்து சென்று காட்டியது போல் இருந்தது...ஆன்மீக தரிசனத்திற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 28. நேரில் போய் பார்த்த அனுபவம். நன்றி!

  பதிலளிநீக்கு
 29. நல்ல பதிவு. படங்களோடு தங்களது விளக்கங்களைப் படிக்கும்போது கூடவே யாரோ வழிகாட்டி வந்து சொல்வதுபோல் உள்ளது. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 30. ஐயா!
  இரமணி சகோதரரின் அறிமுகத்தால்
  என் வலை கண்டு வந்து வாழ்த்திய
  தங்கள் அன்புக்கு முதற் கண் நன்றி!
  பதிவு கருத்தையும் படங்கள்
  கண்ணையும கவர்ந்தன
  மீண்டும் சந்திப்போம்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 31. //(கேமரா சரியாக இருந்தால் இங்கு வந்திருக்க மாட்டோம் - எனவே எந்த இடையூறும் இடையூறு அல்ல).//
  எதையும் நன்மையாக சிந்தித்தால், அது நன்மையாகவே முடியும்.

  பதிலளிநீக்கு
 32. நேரில் சென்று பார்த்த உணர்வை தந்து விட்டீர்...
  என் மனையாளின் ஊர் சிவகாசிதான்....
  மறுமுறை சிவகாசி வரும்போது இந்த கோவிலுக்கும் செல்ல முயல்வேன்...நன்றி

  பதிலளிநீக்கு
 33. படங்களுடன் நல்ல பதிவு நன்றி

  பதிலளிநீக்கு
 34. அருமையான படங்கள், சிறப்பு சுற்றுலா போய் வந்த உணர்வு நன்றி அய்யா வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 35. நேரில் போய் தரிசனம் செஞ்ச உணர்வு.. இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் படங்களெல்லாம் ரொம்ப அருமையாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 36. இயற்கை வளத்தோடு படங்கள் அருமையா வந்திருக்கு.எவ்வளவு அழகாக உணர்வோடு எழுதுகிறீர்கள் ஐயா.மிக்க நன்றி !

  பதிலளிநீக்கு
 37. மிகவும் அழகான படங்களுடன் அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 38. .. உங்கள் பதிவுகளில் மிகவும் விளக்கமாய் படங்களுடன் பதிவிடுவது அந்த இடத்திற்கே போன உணர்வையும் போகத் தூண்டுதல் தரும் விதமாகவும் அமைந்துள்ளது.. நன்றி
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 39. திரு ரத்னவேல் அவர்களே! நமது மாவட்டத்துக்காரர் என்ற வகையிலும் தங்களது நரிப்பாறை குறித்து படத்துடன் கூடிய பதிவும் என்னை மனம் கவர்ந்தது. நானும் கூட சிறு வயதிலிருந்து புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமைக்கு அங்கு வருவது உண்டு. ஒரு கம்பத்தில் விளக்கெண்ணை ஊற்றி திரி வைத்து விளக்கு போட்டுவிட்டு பெருமாளை தரிசனம் செய்வோம். அப்போதெல்லாம் விளைச்சலில் இருந்து வத்தல், பருத்தி என சூறை போடுவார்கள். நாங்கள் பொறுக்கியிருக்கிறோம். மேலே நெல் போன்ற அனைத்து தானியங்களும் நிறைந்த காணிக்கையாக செலுத்தப்பட்டிருக்கும். ஒரு மூலையில் பெரிய செருப்பு கிடக்கும். அதை எடுத்து வயிற்றில் காலில் கையில் அடித்துக்கொள்வார்கள்.

  பதிலளிநீக்கு
 40. கண்டிப்பா வந்து பாக்கனும்னு தோணுது,,,,,,

  பதிலளிநீக்கு
 41. Shanmuganathan swaminathanசனி, ஆகஸ்ட் 13, 2011

  உண்மையில் அற்புதம். எனக்கு சிறு வயதில் ஸ்ரீவில்லிபுத்தூருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் , பழைய ஞாபகங்கள் அலை மோதின. நீங்கள் போட்டோக்களை சரியாக பிடிக்க வில்லை என்று சொல்வது போல் உணர்ந்தேன். உண்மையில், அவை மிக இயல்பாகவும், நேரில் பார்த்த அ...னுபவத்தை கொடுக்க வல்லதாகவும் அமைந்திருந்தன. திருவண்ணாமலை சிறு வயதில் அடிக்கடி போயிருக்கிறேன். அங்கு ஒரு குளமோ, ஏரியோ இருந்தாக ஞாபகம். அதோடு, அந்த கோவிலில் பெரிய சாமி செருப்புகளை பார்த்ததாகவும் நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 42. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 43. I am very glad to share about your clear reporting about Thiruvalliputhur car festival with excellent photograps.shortly I will send my book details as per your request. thank u sir. vanakkam.

  பதிலளிநீக்கு
 44. நம்ம ஊரிலிருந்து இப்படிஒரு வலைப்பூ மலர்ந்து வருவது எனக்கு இதுவரையிலும் தெரியாமல் போச்சே.இப்படிக்கு ஆன்மீகக்கடல்

  பதிலளிநீக்கு