வியாழன், ஆகஸ்ட் 04, 2011

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

(EMPLOYEES PROVIDENT FUND)
 பிரச்னைகளும் தீர்வுகளும்
பாகம் - 4

குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரங்கள் நகர்ப்புறங்களை சென்றடையவில்லையா?

இது இன்னுமொரு பிரச்னையும் தீர்வும்.  இந்த தொழிலாளியின் மரணம் நடந்தது 4.6.1992 ஆம் நாள்.  அப்போது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில்  தொழிலாளர்கள் இறக்கும்போது வேலையில் இருந்தால் தான் பென்ஷன் வழங்கப்படும்.  குடும்ப பென்ஷன் கிடையாது.  குடும்ப பென்ஷன் திட்டம் 16.12.1995 நாளன்று அமலுக்கு வந்தது.
 
இந்த தொழிலாளர் இறக்கும்போது வயது 39 இருக்கும்.  அவரது மனைவியின் வயது 36.  இவர் இறக்கும்போது ஏழு குழந்தைகள் இருந்தார்கள்.  பெயர் கொடுக்கவில்லை.  வயது விபரங்கள், ஆண், பெண் விபரங்கள் கொடுத்திருக்கிறேன்.

      குழந்தை        -   வயது
  1.    ஆண்       -     18
  2.    பெண்         -      16
  3.     பெண்         -      13
  4.     பெண்         -       9
  5.     பெண்         -       8
  6.     பெண்         -       6
  7.     ஆண்        -     2 
  8.  
யோசித்துப் பாருங்கள். அவரது மனைவியின் வயது முப்பத்தி ஆறு. ஒரு வங்கி வாசலில் வைத்து பழங்கள் விற்றுக் கொண்டிருப்பவர். அந்த தொழிலாளி  இறக்கும்போது ஏழு குழந்தைகள் (இரண்டு ஆண் குழந்தைகள் & ஐந்து பெண் குழந்தைகள்) பதினெட்டு வயதிலிருந்து இரண்டு வயது வரை. அவரது குடும்பத்தின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.  எவ்வளவு பரிதாபம். 

ஒரு கேள்வி.  குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரம் பெரிய மாநகரங்களில் மட்டும் நின்று விட்டதா?  நகர்ப்புறங்களை சென்றடையவில்லையா? 



மருத்துவ மனைகளில் போய் பிரசவம் பார்க்காமல் வீட்டிலேயே  மருத்துவச்சிகளை வைத்து பிரசவம்  பார்ப்பதால் அரசாங்கத்தின் கண்களில் இருந்து தப்பி விடுகிறதா?  இது ஒரு பெரிய பிரச்னை தான்.  1992 உடன் நின்று விடவில்லை.  இப்போதும் (2011) இருக்கிறது. நான் நேற்று கேள்விப்பட்ட தகவல் கிட்டத்தட்ட ஒரு நாற்பத்தி ஏழு வயது பெண்மணி ஒருவருக்கு ஏழாவது குழந்தை (பெண்) இருபது நாட்களுக்கு முன்பு பிறந்திருக்கிறது.  கேலி செய்யவில்லை.  மிகவும் தீவிரமான பிரச்னை.  அரசாங்கம் மட்டுமல்ல எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம்.

இனிமேல் நமது விஷயத்திற்கு வருவோம்.  அந்த உறுப்பினர் மருத்துவமனை சென்று வரும்போது வழியில் மயக்கம் வரும்போல் இருக்கிறது என்று சொல்லி உட்கார்ந்து இருக்கிறார்.  அப்படியே சரிந்து விழுந்து இறந்து விட்டார்.  எல்லாம் முடிந்த பிறகு எங்களை அணுகினார்கள்.  நாங்கள் எல்லா ஆவணங்களையும் வாங்கி அனுப்பி பென்ஷன் வாங்கிக் கொடுத்தோம். 

அவரது மனைவிக்கும், அவரது முதல் இரண்டு குழந்தைகளுக்கும் பென்ஷன் கிடைத்தது.  ஒரே தடவையில் (at a time) இரண்டு குழந்தைகளுக்கு கிடைக்கும்.  அந்த குழந்தைகளுக்கு இருபத்தைந்து வயது ஆகும் போது அடுத்த குழந்தைகளுக்கு இயல்பாக (automatically) பென்ஷன் வர ஆரம்பிக்கும். 

இது தொழிலாளர்களுக்கு நல்ல ஒரு திட்டம்.  எங்களைப் போன்ற குறைந்த சம்பளம் வாங்கும்  தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு மிகவும்  அருமையான திட்டம்.

தொழிலாளர் பணியில் இருக்கும்போது இறந்தால் மாநில அரசாங்கத்திலிருந்து அப்போது ஈமக்கிரியை செலவுகளுக்காக முன்னூறு ரூபாய் கொடுத்தார்கள்.  இப்போது அந்த தொகை 2500 கொடுக்கிறார்கள்.  அந்த தொகையை ஒரு மொத்தத் தொகையாக (as a lump sum amount) ரூபாய் ஒரு லட்சமாக கொடுக்கலாம். இந்த உதவி 
குடும்பத் தலைவனை/
குடும்பத் தலைவியை/
உழைக்கும் மகனை/
உழைக்கும் மகளை - 
இழந்து நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்களுக்கு மாபெரும் உதவியாக இருக்கும்.  இதை அரசாங்கமும், தொழிற் சங்கங்களும், தொழிலார்களும் வற்புறுத்த வேண்டும்; கேட்டுப் பெற வேண்டும்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக எழுதுங்கள்.  உங்களது பெயரை Followers ஆக Google Connect இல் பதிந்து கொள்ளுங்கள்.  Email address என்ற கட்டத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Inbox க்கு வந்து விடும்.





இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய திருமதி ரமாமணி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

மிக்க நன்றி.

28 கருத்துகள்:

  1. தொழிலாளர் வைப்பு நிதி பற்றிய
    பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும்
    புரியாத புதிராகவே இருக்கும் இந்த வைப்புநிதி
    பற்றி நிறைய செய்திகள் தெரிந்துகொண்டேன் ஐயா.
    பொது வைப்புநிதி (PUBLIC PROVIDENT FUND)பற்றியும் செய்திகள் வெளியிட்டால்
    உபயோகமாக இருக்கும்.
    இது எனது வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அய்யா பழைய பதிவுகளுக்கு லிங்க் கொடுத்தால் எளிதாக பார்க்கமுடியும். EPF பற்றி தேடிக் கொண்டேயிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. எல்லோருக்கும் பயன் படும் ஒரு முக்கியமான தகவல்.. குடும்பக்கட்டுப்பாட்டைப் பொருத்தமட்டில் பெண்கள் கல்வியை உயர்த்துவதே சிறப்பான செயல்பாட்டிற்கு வழி செய்யும்.. இதை தவிர காட்டானுக்கு வேறு மார்க்கம்தெரியவில்லை..!!??

    பதிலளிநீக்கு
  4. இனிமேல் நமது விஷயத்திற்கு வருவோம். அந்த உறுப்பினர் மருத்துவமனை சென்று வரும்போது வழியில் மயக்கம் வரும்போல் இருக்கிறது என்று சொல்லி உட்கார்ந்து இருக்கிறார். அப்படியே சரிந்து விழுந்து இறந்து விட்டார்./
    அவருடைய சாவும் ஒரு வித்தியாசமானது...

    ஐயா நல்ல பொதுநல சிந்தனையுள்ள பதிவு...
    பென்சன் என்பது மிகவும் நல்லதுதான்....
    பகிவிற்கு அன்புடன் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  5. நல்ல பயனுள்ள பதிவு அய்யா...
    இதன் முந்தைய மூன்று பதிவுகளையும் இணைத்தால் இன்னும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  6. http://rathnavel-natarajan.blogspot.com/2011/06/employees-provident-fund.html
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/06/employees-provident-fund_18.html
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/06/employees-provident-fund_28.html
    The above are links – Part I, 2 & 3.
    Please read the previous Blogs.

    பதிலளிநீக்கு
  7. நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்களுக்கு மாபெரும் உதவியாக இருக்கும். இதை அரசாங்கமும், தொழிற் சங்கங்களும், தொழிலாளர்களும் வற்புறுத்த வேண்டும்; கேட்டுப் பெற வேண்டும்.


    ..... உண்மை. இந்த பயனுள்ள திட்டம், பலருக்கு போய் சேரும் வண்ணம் உதவ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. மக்கள்தொகைப்பெருக்கத்தை கட்டுப்படுத்தணும்ன்னா அதைப்பத்திய விழிப்புணர்வை முதல்ல ஏற்படுத்தணும். ஒரு குடும்பத்தில் ஏழு குழந்தைகள்னா கஷ்டமில்லையா!!

    அருமையான இடுகை.

    பதிலளிநீக்கு
  9. சாதாரணமாக ஆஸ்பத்திரிகளில் மடர்னிடி அசிஸ்டன்ட் என்ற பணியில் இருக்கும் பெண்கள் வாராத்துக்கு குறைந்தது மூன்று நாட்கள் ஹவுஸ் விசிட் என்ற பெயரில் ஒவ்வொரு ஏரியா வுக்கும் சென்று ஸ்பாட் அட்வைஸ் மற்றும் மருத்துவம் பார்க்க வேண்டும். இப்படிப் பார்த்திருந்தாலே வீட்டிலேயே பிரசவம் பார்த்திருந்தாலும் கண்ணில் பட்டிருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. ஓய்வு பெற்றவர்களுக்கு உதவும் பதிவு!

    வலை வந்து கருத்துரை வழங்கினீர்
    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. நல்ல முக்கியமான பதிவு. பலருக்கு உதவக் கூடியது ஐயா!..
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  12. பயனுள்ள தகவல்கள்.மொத்த தொகை(lump sum) ஒரு இலட்சம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடுள்ளது ரொம்ப நல்ல விஷயம்.அதை கேட்டு பெற வேண்டும் என்பது சரி,ஐயா.

    பதிலளிநீக்கு
  13. ஐயா நானும் இப்பதான் உங்க பக்கம் வரேன். பதிவு நல்லா இருக்கு. நானும் பழைய காலத்துமனுஷிதான்
    அந்தக்காலத்ல எல்லாம் குடும்ப கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கலே. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 5, 6 குழந்தைகள் இருப்பது சகஜம். எனக்கே 5 குழந்தைகள் . 50 வருஷம் முன்பு கல்யானம்.ஓய்வு ஊதியம் கொடுப்பது பற்றி இன்னும் விழிப்புணர்வு வரனும் நானும் குடும்ப பென்ஷந்தான் வாங்கி வரேன் என் கணவர் மத்திய அரசில் வேலை செய்தவர்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல அரிய தகவல்களைப் பகிர்ந்து வரும் தங்களுக்கு நன்றிகள் பல. பல குடும்பங்கள் தங்களை வாழ்த்தும்.

    பதிலளிநீக்கு
  15. நல்லதொரு உபயோகமான பதிவு

    பகிர்வுக்கு நன்றி அய்யா

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. நல்ல பதிவு ஐயா... நிறைய பேருக்கு இந்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை.

    பதிலளிநீக்கு
  17. மிக முக்கிய விழிப்புணர்வு பதிவு. பகிர்தலுக்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  18. மிகவும் பயனுள்ள திட்டம் ரத்னவேல் ஐயா..

    பலரும் பயன்பெற ., உதவ., ப்லாகில் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  19. நல்ல விழிப்புணர்வு பதிவு.பாரட்டுகளும் வணக்கங்களும்

    பதிலளிநீக்கு
  20. மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு ஐயா.

    இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. மிகவும் பயனுள்ள பகிர்வை அனைவரும் அறியும்வண்ணம் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.பலகுடுபத்தினருக்கும் இந்த செய்தி சென்றடைய வாழ்த்துக்கள்......

    பதிலளிநீக்கு
  22. ayya enathu peyar suresh anal enathu pf kanakkil manikandan eantru enathu sellapeyar ollathu athanal ennal vangi kanakku open panna mudiyavillai etharkku oru vali sollunga

    பதிலளிநீக்கு
  23. Rathnavel .Natarajan to suresh
    show details 15:33 (1 hour ago)
    Thank You. Consult your Management & act according to their ideas. My idea is - get Certificate from VAO that Suresh & Manikandan are one person - and with the Certificate open account with Post Office or Bank & apply for PF claims. When furnishing details to anybody - it may be Govt or factories - we must give correct details otherwise we have to suffer a lot.
    Blessings.
    If you have any doubts - please contact me over phone - 9443427128.

    பதிலளிநீக்கு
  24. உங்கள் ஒவ்வொரு இடுகையும் படித்து வருகிறேன். அனைத்தும் அருமை. பயனுள்ளவை. உங்கள் பணியும் எழுத்தும் சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. sir vanakkam im samy from madurai.im a owner of a small furniture manufacturing company,ennidam 15 workers work seikerarkal,anal avarkal anaivarum contract workaga parkerarkal,avarkalukku pf pedikka asai padukeren,pedikka mudiuma?my mail kmsamy2020@yahoo.co.in,plz vilakkam thara vendukeren.nantri

    பதிலளிநீக்கு