தொடர்பதிவு எழுத அழைத்த 'வார்த்தைச் சித்திரங்கள் - http://vaarthaichithirangal.blogspot.com/'
திருமதி ஜிஜி அவர்களுக்கும்
திருமதி ராஜி |
'கற்றலும் கேட்டலும் - http://suharaji.blogspot.com/'
திருமதி ராஜி அவர்களுக்கும் மிக்க நன்றி.
ஸ்ரீ வில்லிபுத்தூர் மண் அவர்களை ஈர்க்கிறது. திருமதி ஜிஜி அவர்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர்காரர். திருமதி ராஜி அவர்கள் குழந்தையாக இருக்கும்போது ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்திருக்கிறார். நான் படித்த நீராவி பள்ளியிலே அவரும் படித்திருக்கிறார். (நீராழி மண்டபத்தில் அமைந்துள்ளது - சிவகுருநாதன் ஆரம்பப்பள்ளி என்று பெயர் - ஆனால் நீராவி பள்ளி என்று தான் அழைக்கப்படுகிறது) அவர்கள் கேட்டதற்கு இணங்க நானும் எனது முதல் தொடர்பதிவான 'முத்தான மூன்று' என்று எழுதுகிறேன்.
- உங்களைப் பற்றி:
- நான் எங்கள் வீட்டில் மூன்றாவது பையன்.
- எனக்கு மகன்கள் மூன்று -
திரு விஜயவேல்
திரு சரவணன்
திரு பிரகாஷ்.
- நான் படித்த பள்ளிகள் மூன்று:
சிவகுருநாத ஆரம்பப் பள்ளி, ஸ்ரீ வில்லிபுத்தூர்.
திரு வி க நடுநிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் (இப்போது மேல் நிலைப்பள்ளி)
குருஞான சம்பந்தர் உயர்நிலைப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர் (இப்போது மேல் நிலைப்பள்ளி)
- பேருந்து , ரயில் பயணங்களின் போது அன்றைய நிலவரங்கள், நாட்டு நடப்பு, பயணங்களில் மாணவ மாணவிகளின் நடவடிக்கைகள், பயணங்களில் அவர்களது துயரங்கள், அதையும் மீறி அவர்கள் நிறைய படிப்பது. ஆகியவற்றை உணர்ந்து கொள்வது.
- நிறைய படிப்பது
- மழலைகள், மாணவ, மாணவிகள், இளைஞர்களுடன் உரையாடுவது.
3. நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்.
- நடைபாதை ஆக்கிரமிப்பு, சாலையில் ஆக்கிரமிப்பு, பிளக்ஸ் போர்டு கட்டி சாலையின் பார்வையை மறைத்தல்.
- திருவிழா போன்ற சமயங்களில் பெரிய ஸ்பீக்கர் கட்டி அலற விட்டு எல்லோரையும் சிரமப்படுத்துவது.
- சாக்கடையில் பாலிதீன், மற்ற கழிவுகளை போட்டு தெருவை நாரடிப்பது. மக்களுக்கு பொறுப்புணர்ச்சி காணாது. மக்கள் தண்டனைக்குத்தான் பயப்படுவார்கள்.
4. பயப்படும் மூன்று விஷயங்கள்.
- புறம் பேசுதல்.
- வதந்தியைக் கிளப்புதல்
- கூட்டம்.
5. உங்களுக்குப் புரியாத மூன்று விஷயங்கள்.
- திரும்ப திரும்ப பண இரட்டிப்பு போன்ற விஷயங்கள் காவல் துறையிலிருந்து விளம்பரம் செய்கிறார்கள். அதையும் மீறி ஏமாந்து பணம் கட்டி திரும்பவும் காவல்துறையில் வந்து புகார் செய்யும் மக்கள்.
- வேலை வாங்க என்று பணம் கொடுத்து ஏமாந்து பிறகு அதை தொலைக்காட்சியில் வந்து புகார் செய்து அதை அவர்கள் உரிமை போல் போஸ் கொடுக்கும் மக்கள்.
- எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை பழி போடும் மக்கள் - நமது கடமையை செய்ய வேண்டும்.
6. உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
- கணினி
- நிறைய புத்தகங்கள்
- தொலைபேசி
7. உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
- நடிகர் மணிவண்ணனின் தரமான நகைச்சுவை நடிப்பு
- அரசியல்வாதிகளின் பேச்சு (அவர்களது ஒரு வார பேச்சுக்களை தொடர்ந்து படித்தால் அவர்கள் தடம்புரள்வது நல்ல நகைச்சுவை)
8. தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
- கணினி கற்றுக் கொள்ள முயற்சி
- புத்தகம் படித்தல் (a lot of home work pending)
- ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதியில் உள்ள முக்கிய இடங்களைப் பற்றி எழுத விபரங்கள் சேகரித்தல், இடங்களுக்கு செல்லுதல்.
9. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
- நமது தமிழ்நாட்டில் உள்ள இடங்களை சுற்றிப் பார்க்க நமது ஆயுள் காணாது - கும்பகோணத்தில் எனது மனைவியுடன் ஒரு மாதம் தங்கி தஞ்சாவூர் பக்கம் உள்ள கோவில்களை நன்கு ஆற அமர்ந்து சுற்றிப் பார்க்க வேண்டும்.
- முடியும் வரை படித்துக் கொண்டே இருத்தல்.
- முடியும் வரை மற்றவர்களுக்கு உதவியாக இருத்தல்.
10. உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்:
- தொடர்ந்து பதிவு எழுதுதல்
- நிறைய படிக்க வேண்டும்.
- முடியும் வரை மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
11. கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
- துயரமான செய்திகள்.
- புறம் பேசுதல்.
- வதந்தி
- கணினியை திருத்தமாக கற்றுக் கொள்ள வேண்டும்.
- போடோஷாப் நன்கு கற்று எனது பதிவிற்கும் நல்ல படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- மலையாள மொழி கற்று அதில் உள்ள நல்ல இலக்கியங்களை படிக்க வேண்டும்
- எனது மனைவி தயாரிக்கும் அருமையான எளிமையான சப்பாத்தி
- எனது அம்மா வைத்த கடலைப் பருப்புக்குழம்பு
- எனது அப்பா தயிர் சேர்த்து பிசைந்து கொடுத்த பழைய சோறு
14. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்:
இல்லை.
15. பிடித்த மூன்று படங்கள்:
- நெஞ்சில் ஓர் ஆலயம்
- வேதம் புதிது
- பிரிவோம் சந்திப்போம்
16. இது இல்லாமல் வாழ முடியாது என்று சொல்லும்படியான மூன்று
விஷயங்கள்:
- அடிப்படை விஷயங்களான - உணவு, உடை, இருப்பிடம் - முக்கியமாக போதுமான பண வசதி.
- வெளி உலக தொடர்பு
- நல்ல நண்பர்கள்
17. தொடர்ந்து எழுத அழைக்கப் போகும் மூன்று நபர்கள்:
நான் கொஞ்சம் நிறைய பேசப் போகிறேன். எனக்கு பதிவுலகமும், முகநூல் உலகமும் கொடுத்த கொடை நிறைய. நல்ல நண்பர்கள், மனதுக்கு அமைதி & சந்தோசம், நல்ல உடல் நலம் (கடந்த நவம்பரில் இதய நோய்க்கு உட்பட்டு விடுமுறையைக் கழிக்க பதிவுலகத்தில் நுழைந்தேன்), நிறைய மகள்கள், நல்ல மகன், எங்கெங்கிருந்தோ தொடர்பு கொள்ளும் நல்ல நண்பர்கள், நல்ல உள்ளங்கள்.
முகநூலில் திரு சபரிசங்கர் என்று ஒரு( மாணவர் ) நண்பர் அறிமுகமானார். அன்றே நல்ல மார்க் எடுத்த எளிய மாணவ மாணவிகள் இருந்தால் உதவுவதாக அறிவுப்பு செய்து எனக்கு கடிதம் அனுப்பினார். எங்களது வீட்டுப் பக்கத்தில் விவேகா என்ற மாணவி 1170/1200 மார்க் எடுத்திருந்தார். அவர்களது பெற்றோர் தையல் தொழில் செய்கிறார்கள். நான் அந்த நண்பருக்கு விபரத்தை தெரிவித்தேன். அவர் திரு குமார் என்ற நண்பரை தொடர்பு கொள்ள சொன்னார். திரு குமார் - நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் உடற்பயிற்சி இயக்குனராக வேலை செய்கிறார். நான் திரு குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விபரங்களை அனுப்பி வைக்க சொன்னார். அனுப்பி வைத்தேன். மறு நாள் காலை எங்கள் வீட்டிற்கு திரு வீரமணி என்று அவருடன் பணி புரியும் நண்பரை அனுப்பி வைத்தார். (அப்போது அவருக்கு அந்த கடிதம் கிடைக்கவில்லை). திரு வீரமணியை மாணவி விவேகா வீட்டிற்கு அழைத்துச் சென்று மாணவியையும் அவரது பெற்றோரையும் சந்தித்து பேச வைத்தோம். அவர்களது வீட்டு நிலைமை, வருமானம் முதலியவைகளை விசாரித்து திரு குமாருடன் அவரது பெற்றோரையும் பேச வைத்தார். அந்த மாணவி கல்லூரியில் சேர்ந்து வந்தவுடன் ரசீதுகள், மற்ற ஆவணங்கள், புகைப்படம் வாங்கி அனுப்ப சொன்னார். அந்த மாணவி குரோம்பேட்டை MIT கல்லூரியில் பொறியியல் 28.7.2011 அன்று சேர்ந்து விட்டார். கிட்டத்தட்ட முப்பத்தி ஆராயிரம் ரூபாய் வரை பணம் கட்டியிருந்தார். நான் ரசீதுகளையும், மற்ற ஆவணங்களையும் அனுப்பி வைத்தேன். அந்த மாணவி கல்லூரியில் சேர்ந்து விட்டார். திரு குமார் அந்த மாணவி ஸ்ரீ வில்லிபுத்தூர் வரும்போது சொல்லச் சொன்னார். அந்த மாணவி இங்கு 14.8.2011 அன்று சுதந்திர தின விடுமுறைக்காக வந்திருந்தார். திரு குமாரை தொடர்பு கொண்டோம். திரு குமார் 15.8.2011 அன்று காலை எட்டு மணிக்குள் அவர்கள் கல்லூரியில் இருக்குமாறு - அந்த மாணவியை அவரது பெற்றோருடன் எங்களையும் அழைத்தார். அந்த மாணவி பெற்றோருடன் அந்த கல்லூரிக்கு சென்றார். விழாவில் அவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறார்கள். விழா முடிந்தவுடன் திரு குமார் எங்களுக்கு தொலைபேசியில் பணம் வழங்கிய விபரத்தையும், அடுத்து நடிகர் திரு சிவகுமார் வரும்போது விழாவில் இன்னும் ஒரு நல்ல அளவு தொகை வழங்குவதாகவும், அந்த விழாவிற்கு நாங்கள் கட்டாயம் வரவேண்டும் என்றும் சொன்னார். எங்களது மகிழ்ச்சிக்கு அளவில்லை. நாங்கள் எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க பட்ட பாடு எங்களுக்கு தான் தெரியும்.
இந்த நல்ல உள்ளங்களை இது வரை பார்க்கவில்லை. எல்லாம் தொலைபேசி, கடிதங்கள் தான். இவ்வளவுக்கும் காரணமான - பதிவுலத்திற்கும், முகநூல் உலகத்துக்கும் - மனப்பூர்வ வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். திரு சபரிசங்கருக்கும், திரு குமாருக்கும் அவர்களது நல்ல அணியினருக்கும் அவரது கல்லூரிக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.
Sabari Shankar (Kanavuku Seyal Koduppom)
http://www.facebook.com/sabari.ஷங்கர்
திரு குமார் அவர்களின் இயக்கத்தின் பெயர் :
விருட்ச ஜன சகாயதா சங்கம்
அவரது இயக்கத்தைப் பற்றி அவரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.
திரு குமார் அவர்களின் இயக்கத்தின் பெயர் :
விருட்ச ஜன சகாயதா சங்கம்
அவரது இயக்கத்தைப் பற்றி அவரை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்து தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன்.
நான் அனைவரையும் வேண்டுகிறேன் - நீங்கள் உங்களுக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு முடிந்த அளவு உதவுங்கள். வாய்ப்பு இல்லாவிடில் இந்த மாதிரி நல்ல அமைப்புக்களுக்கு முடிந்த அளவு முடிந்த சமயம் உதவுங்கள். அவர்கள் தீர விசாரித்து சரியான நபர்களுக்கு தான் உதவுகிறார்கள். அவர்களது தொலைபேசி எண்ணும் கொடுத்திருக்கிறேன்.
திரு குமார் , மதுரை - 94879 48887
திரு சபரி சங்கர், மதுரை -96777 35704
18. தொடர்ந்து எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்:
எனது பதிவுலகில் கிடைத்த அருமைப்பையன் திரு ராம்குமார்
http://www.facebook.com/profile.php?id=1147750586&sk=info
அவரது வலைத்தளத்தின் பெயர் சிவகாசிக்காரன்
http://www.sivakaasikaaran.blogspot.com/
அடுத்து வலைப்பதிவு தந்த அருமை மகள் திருமதி ஜோசபின்
http://www.facebook.com/babajosephine?sk=info
அவரது வலைத்தளத்தின் பெயர் : ஜோசபின் கதைக்கிறேன்.
அவரது வலைத்தள முகவரிhttp://josephinetalks.blogspot.com/
அடுத்து மதுரை திருமதி சாகம்பரி கல்லூரி பேராசிரியர்
அவரது வலைத்தளத்தின் பெயர் : மகிழம்பூச்சரம்
அவரது வலைத்தளத்தின் முகவரி
http://mahizhampoosaram.blogspot.com
இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவும், மற்றும் எங்களது பதிவு மேம்பாட்டிற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியும், வணக்கமும்.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள். தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். உங்கள் பெயரை Google Connect Widget இல் பதிந்து கொள்ளுங்கள். உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு இடும்போது உங்களது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து விடும்.
மிக்க நன்றி.
வித்தியாசமான மூன்று தொடர் பதிவு... இதுவரை படித்ததிலேயே மிகவும் நல்ல விஷயங்கள் கொண்டது....
பதிலளிநீக்கு“கனவுக்கு செயல் கொடுப்போம்” நல்லதோர் பெயர்.. இயக்கமும்...
உங்களது இனிய பகிர்வுக்கு மிக்க நன்றி.
மிக நெடிய பதிவு .
பதிலளிநீக்குமுத்துமுத்தாய் மூன்று விஷயங்கள்
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு ஐயா
//பிடித்த மூன்று உணவு வகைகள்:
பதிலளிநீக்குஎனது மனைவி தயாரிக்கும் அருமையான எளிமையான சப்பாத்தி
எனது அம்மா வைத்த கடலைப் பருப்புக்குழம்பு
எனது அப்பா தயிர் சேர்த்து பிசைந்து கொடுத்த பழைய சோறு//
ஆஹா..மூன்று உறவுகளின் கையால் மூன்று வகை உணவுகள்..அருமை ஐயா.
முத்தான மூன்றும் அருமை என்று பாராட்டி
பதிலளிநீக்குதமிழ்மணம் 4 போட்டாச்சு .வாழ்த்துக்கள் ஐயா .....
அருமை...
பதிலளிநீக்குவிரும்பி எழுதிய மூன்றுகள். நன்றாக உள்ளன. பாராட்டுகள் ஐயா!
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
நீங்க பிரபல பதிவர் ஆயிட்டீங்க போல... யாரோ மைனஸ் ஓட்டு போட்டிருக்காங்க...
பதிலளிநீக்குபிடித்த மூன்று உணவு வகைகள்:
பதிலளிநீக்கு* எனது மனைவி தயாரிக்கும் அருமையான எளிமையான சப்பாத்தி
* எனது அம்மா வைத்த கடலைப் பருப்புக்குழம்பு
* எனது அப்பா தயிர் சேர்த்து பிசைந்து கொடுத்த பழைய சோறு
....loving and touching!!!!
//அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்:
பதிலளிநீக்குஇல்லை.//
ஆச்சர்யமா இருக்கு நீங்க பாட்டே கேக்கமாடிங்களா ?
தொடர் பதிவிற்கு அழைத்தவர்களை அறிமுகப்படுத்திய விதமும் நீங்கள் அழைத்துள்ள விதமும் அருமை.யாரோ தவறுதலாக தமிழ்மணத்தில் மைனஸை கிளிக்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஉங்கள நீங்களே ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க!
பதிலளிநீக்குரொம்ப ரசனையானபகிர்வு.நாட்டின் மேல உங்களுக்கு உள்ள அக்கறையும்,மக்களுக்கு சுயஒழுக்கம் வரவேண்டுமென்ற ஆதங்கமும் தெரிகிறது.
பகிர்வுக்கு மிக்க நன்றி!
அப்பா உங்கள் அன்புக்கு நான் அடிமை. என் வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ட போது இன்ப அதிற்ச்சியாக இருந்தது. நன்றி நன்றி மகிழ்ச்சிகள்!
பதிலளிநீக்குமுத்தான பதிவு ஐயா.தங்களின் அனுபவம் வாய்ந்த பதில்கள் அருமை.
பதிலளிநீக்கு“கனவுக்கு செயல் கொடுப்போம்”, இந்த இயக்கத்திர்க்கும் அதை சேர்ந்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.
வித்தியாசமான மூன்று .. :)
பதிலளிநீக்குபயனுள்ள விசயங்களோடு..
கனவுகளை செயலாக்குபவர்களுக்கு வாழ்த்துக்கள்.
முத்தான மூன்றை விட முடிவில் கூறிய முத்தான விஷயங்கள் வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குமுத்தான தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா!
என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தமைக்கும் நன்றி
அருமையான பகிர்வு. தங்களைப் பற்றி முழுமையாக அறிய உதவியது. நன்றி.
பதிலளிநீக்குமுத்தான மூன்று என்பது
பதிலளிநீக்குநிச்சயம் உங்கள் பதிவுக்குத்தான் பொருந்தும்
மனம் திறந்து மிகச் சிறப்பாக
பதில் கொடுத்துள்ளீர்கள்
தங்கள் பதிவைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 12
முத்தான மூன்றும் அருமையான முத்துக்கள் ,பகிர்வுக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குமனம் ரசிக்கவைத்த விஷயங்கள் ஐயா நீங்கள் எங்களுடன் பகிர்ந்தது.....
பதிலளிநீக்குஅன்பு வாழ்த்துகள் ஐயா.....
இனிய ரச்னையான பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.
பதிலளிநீக்குதித்திக்கும் தீந் தமிழில் முத்தான மூன்று விடயங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு ஐயா.
அனைத்து பதில்களுமே அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குஇந்த முத்துச்சரத்தில் அழகான முத்துக்கள். தங்களின் பொது நல நோக்கு பதிவில் தெரிகிறது. என்னை தொடருக்கு அழைத்தமைக்கு நன்றி சார். விரைவில் தொடர்கிறேன்.
பதிலளிநீக்குமுடியும் வரை மற்றவர்களுக்கு உதவியாக இருத்தல்..நாட்டின் மேல உங்களுக்கு உள்ள அக்கறையும்,மக்களுக்கு சுயஒழுக்கம் வரவேண்டுமென்ற ஆதங்கமும் தெரிகிறது.தங்கள் பதிவைத் தொடர்வதில்
பதிலளிநீக்குபெருமிதம் கொள்கிறேன்.மிக்க நன்றி ஐயா.
MADURAISUKI
மூன்று மூன்று முத்துக்களால் கோர்த்தெடுத்த மாலை அதி அற்புதம். தங்களை பற்றி தெரிந்துக் கொள்ளவும் நல்லதொரு வாய்ப்பு. பகிர்வுக்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குஅருமை. உங்கள் வலைப்பூவிற்கு என் முதல் வருகை. மகிழ்வோடு உணர்கிறேன். அன்புடன் சூர்யா.
பதிலளிநீக்குஅடுத்த பதிவைக் காணக் காத்திருக்கின்றேன் .தொடருங்கள் ஐயா ......
பதிலளிநீக்கு//நடிகர் மணிவண்ணனின் தரமான நகைச்சுவை நடிப்பு
பதிலளிநீக்குஅரசியல்வாதிகளின் பேச்சு (அவர்களது ஒரு வார பேச்சுக்களை தொடர்ந்து படித்தால் அவர்கள் தடம்புரள்வது நல்ல நகைச்சுவை)//
தங்களின் தளத்திற்கு இன்றுதான் வருகின்றேன்
மீண்டும் மீண்டும் வரத் தூண்டிவிட்டிட்டீர்கள்
பாசத்துடன்
சம்பத்குமார்
முத்தான மூன்றில் தங்களைப் பற்றிய விபரங்கள் மனதுக்கு நெருக்கமாகவும், நெகிழ்வாகவும்... இறுதியில் சபரிசங்கர், குமார் பற்றிய தகவல்கள் அவரவருக்குள்ளிருக்கும் நல்ல தன்மையை மிகுவிக்கும் படியான ஊக்க மருந்து போல். வாழ்த்தி மகிழ்கிறேன் ஐயா!
பதிலளிநீக்குபுதியவைகளை கற்றுக்கொள்வதற்கு வயது குறுக்கே வராது என்பதற்கு ‘கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்’ என்பதற்கான நீங்கள் தந்த பதிலே சான்று.
பதிலளிநீக்குநல்ல விரிவான பதிவு!
வாழ்த்துக்கள்!
அருமையான மூன்று பதில்கள்
பதிலளிநீக்குசிந்திக்க வைத்தன
வலைப் பதிவு சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குமாறுபட்ட கோணத்தில் முத்தான மூன்று நல்ல தொடக்கம் உளம் கனிந்த பாராட்டுகள் தொடர்க.
பதிலளிநீக்குநல்ல தொடர்..
பதிலளிநீக்குதொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html
நன்றி.
எல்லாமே அருமை,,முத்துக்கள்
பதிலளிநீக்குவிரும்பாத மூன்று விஷயங்களுக்கும் சபாஷ். அருமையான கருத்து.
பதிலளிநீக்குபயப்படும், புரியாத மூன்று எல்லாமே கவர்கிறது.
கல்விக்கு செயல் கொடுப்போம்...... பாராட்டுகள்.
மிக அருமை ஐயா.. நல்ல எண்ணங்கள்., உதவிகள் அனைவரையும் சென்று அடையட்டும்.:)
பதிலளிநீக்குஎதார்த்தமான மூன்று விஷயங்கள். நன்றி
பதிலளிநீக்குஎல்லாமே அருமை.
பதிலளிநீக்குபுதிதாய் அறிமுகப்படுத்திய பதிவர்களும் எனக்குப் புதியவர்கள். அதிலும் ஆனந்தம்.
கல்விக்கு கை கொடுக்கும் தங்கள் மனசு எனக்கு மிகவும் பிடித்தது.
முத்தான மூன்று அருமை.எழுதி இருக்கும் விதம் இனிமை.பதிவில் கணட விருப்பங்கள் எல்லாம் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமையான முன்று முன்று முத்துக்கள் சிற்ப்பாக எழுதி இருக்கீங்க
பதிலளிநீக்கு//எனது அப்பா தயிர் சேர்த்து பிசைந்து கொடுத்த பழைய சோறு //
இதை படித்தததும் சமீபத்தில் மறைந்து போன என் அப்பா ஞாபகம் வந்து விட்டது?/
எல்லாமே அருமை!....சிந்திக்க வைத்தன.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://www. kovaikkavi.wordpress.com
மிக யதார்தமான,ஸ்வாரஸ்யமான தேர்வுகளை பதிலாக்கியுள்ளீர்கள்.. நன்று
பதிலளிநீக்குமிகவும் அருமையாக ரசித்து சொல்லி இருக்கீங்க ஐயா. படிக்கவே சுவாரசியமாக இருந்தது.
பதிலளிநீக்குமுத்தான மூன்று மூன்று தகவல்கள் அருமை.... நன்றி ஐயா பகிர்வுக்கு ...
பதிலளிநீக்குஉயரிய பதிவு.சிறந்த சிந்தனை கொண்ட உங்களின் வலைத்தளம் தொடர்வதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமுத்துமுத்தாய் மூன்று விஷயங்கள்
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு ஐயா தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உங்களைப் பற்றிய உங்கள் அறிமுகம் உங்களுடன் நான் நெடுநாள் பழகிய உணர்வைத் தந்தது. உங்களைப் பார்த்து நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்..
பதிலளிநீக்குமுத்தான மூன்று. short and sweet. அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்காகக் காத்திருக்கின்றதையா
பதிலளிநீக்குஎன் தளம் முடிந்தால் வாருங்கள் ..........
வந்தேன் மறுபடியும் முத்தான மூன்று கண்டேன். திரும்ப வாசிப்பதும் அருமை தான்
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
உங்களை பற்றி மேலும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு"கனவுக்கு செயல் கொடுப்போம்" பற்றி எழுதியதற்கு நன்றிகள்.
உங்கள் பதிவைப் பார்த்து வியந்தேன். தமிழில் உள்ள அத்தனை வலைப்பூவிலும் உலாவும் வண்டு நீங்கள். சற்று என் வலைப்பூவிற்கும் வாருங்கள். தேன் கிடக்கக்கூடும். -கடுகு
பதிலளிநீக்குஉங்கள் முத்தான மூன்று பதிவுகள் உங்கள் மனதினைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. பிறருக்கு உதவவேண்டும் என்னும் உங்கள் பண்பினைஆழமாகக் காட்டுகின்றது. நீங்கள் விரும்பும் மூன்று விடயங்களில் எதிர்காலத்துடன் இணைந்தே வாழத்துடிக்கும் பண்பு தெளிவுபடுகின்றது. விரும்பாத விடயங்களில் மற்றவர்களை நினைத்து அவர்களை கடினப்படுத்தக் கூடாது என்ற பாங்கினைக் காண்கின்றேன். மொத்தத்தில் இப்பதிவு உங்களை நல்ல மனிதனாகக் காட்டுகின்றது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குhttp://illamai.blogspot.com
உங்கள் நல்ல எண்ணமும் செயல்பாடும் எழுத்தில் கண்டு மிக்க மகிழ்ச்சி.நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஅருமை பாராட்டுக்கள்
பதிலளிநீக்குமதிப்பிற்குரிய ரத்தினவேல் ஐயா, என் வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டம் இட்டதற்கு நன்றி. அதன் மூலம் உங்கள் வலைப்பூவைப் படிக்கும் அறிமுகம் தந்ததற்கும் நன்றி. உங்களின் உலக அறிவும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற முயற்சியும் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல முன்னுதாரணம். உதவும் எண்ணங்கள் நிறைந்த அந்த மதுரைக்காரர்கள் குமார் & சபரீஷ் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமதிப்பிற்குரிய ஐயா ரத்தினவேல் அவர்களுக்கு, நான் படித்ததில் மிகவும் பயனுள்ள, பிடித்த வலைப்பூ உங்களுடையது , இனிமேல் எனக்கு ஸ்ரீ வில்லிபுத்தூர் என்றவுடன் பால்கோவா வைவிட உங்கள் நினைவே வரும். புதுவை வரும் எண்ணம் இருந்தால் நேரில் சந்திக்க விரும்புகிறேன் , புதுவை க்கு உங்களை வருக வருக என அழைத்து மழிவிக்க ஆவலாக உள்ளேன்
பதிலளிநீக்குஉங்கள் மகன்களின் ஆசிரியரான எனக்கு என்னுடைய பள்ளியின் பழைய மாணவர் நீ்ங்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குலெ.சங்கரநாராயணன்
pspl.sankar@gmail.com
உங்கள் மகன்களின் ஆசிரியரான எனக்கு என்னுடைய பள்ளியின் பழைய மாணவர் நீ்ங்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குலெ.சங்கரநாராயணன்
pspl.sankar@gmail.com