செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவண்ணாமலை அருகில் உள்ள தரகுமலை மாதா கோவில்
ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருவண்ணாமலை கோவில் இருக்கிறது. அதன் அருகில் (சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்) பெரிய மலை ஒன்று உயரமாக கம்பீரமாக இருக்கிறது. நீங்கள் மதுரையிலிருந்து வரும்போது கிருஷ்ணன்கோவில் தாண்டினால் ஒப்பிட்டு பார்க்க வசதியாக இருக்கும்.  திருவண்ணாமலை சிறிய மலையாகவும், இந்த மலை உயரமாகவும் இருக்கும். 

தரகுமலை மாதா கோவில் தோன்றிய வரலாறு:
1973 வருட வாக்கில் தரகுமலையில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையன்களுக்கு மலை உச்சியில் மாதா காட்சியளித்ததாக செய்தி பரவியது.  நாளேடுகளிலும், பார்வையாளர்கள் (கேரளாவிலிருந்து நிறைய) வருகையினாலும் இந்த ஸ்தலம் பிரபலமாக்கப்பட்டது.  
முதலில் ஏசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்ட சிலை மட்டும் ஒரு பீடத்தில் நிறுவப்பட்டது.  பாதைகள் கிடையாது.  அப்போது நான் உயர ஏறிச் சென்று பார்த்திருக்கிறேன். பிறகு மாதா சிலை நிறுவப்பட்டிருக்கலாம்.  மாதாவுக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்று சொன்னார்கள்.  மக்கள் திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை செல்வது வழக்கம். அங்கு முன்பு செல்வதற்கு சைக்கிளில் தான் செல்ல வேண்டும்.


நான் இந்த பதிவு எழுதுவதற்கு காரணம் - எனது இனிய நண்பர் கென்யா ராகவன் (மதுரைக்காரர் - எங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேல் தீராக் காதல் கொண்டவர் - ஸ்ரீ வில்லிபுத்தூரைப் பற்றி நிறைய கதைகள் எழுதியிருக்கிறார்.  பதிவுலகில் இருக்கிறார்.  முக நூலில் எனக்கு நண்பர் - நிறைய தடவைகள் என்னுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.  அவர் தம்பி இங்கு இருக்கிறார். ) எங்களது நரிப்பாறை பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தை பாருங்கள். நான் எழுதிய பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களில் என்னை மிகவும் நெகிழ வைத்த பின்னூட்டம் இது

அன்பு ரத்னவேல் அவர்களுக்கு,

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது... எத்தனை நாளாச்சு தாய் தகப்பனைப் பாத்து, மனைவி குழந்தைகளை பாத்துன்னு ஒரு ஏக்கம் வருமே அது மாதிரி இருந்தது. அந்த பெரியவர்களின் பெயர்கள் வினோதமாயும் அழகாயும் இருந்தது... மதுரைன்னு பேர் பரவலாக புழங்குவது போல, ஸ்ரீவில்லிபுத்தூர்னு ஒரு பேரோ அல்லது பிள்ளையார் என்ற பேரோ நான் கேள்விப்பட்டதே இல்லை... 

அந்த மேற்குத் தொடர்ச்சி மலை, ஆகாசத்துக்கே பாலூட்டுவது போன்ற அதன் திறந்த மாரும், அதன் கீழே தென்னைமரங்களும், திருநாமலையில் இருந்தாலும் தெளிவாய் தெரியும்... நரிப்பாறையின் தொன்மை போலவே அதில் இருக்கும் அந்த பழுத்த பெரியவரின் முகமும். ரொம்பவும் முன்னால் போயிருக்கிறேன்... நரிப்பாறைக்கு, ஆனால் நீங்கள் சொன்னது போல இத்தனை சிறுதெய்வங்களை பார்த்தது இல்லை... அல்லது ஞாபகம் இல்லை... தரகுமலை வேதக்கோயில் பற்றித் தெரியும் ஆனால் போக வாய்த்ததில்லை இது வரை... நீங்க போயிட்டு வாங்க! நாங்களும் போயிட்டு வர்றோம்... பதிவினூடே...

அன்புடன்
ராகவன்
1 ஆகஸ்ட், 2011 6:27 pm 


 http://koodalkoothan.blogspot.com/

 இந்த பதிவை திரு ராகவன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.  அவரது புகைப்படமும் கொடுத்திருக்கிறேன்.  அவரது தளத்திற்கான இணைப்பும் கொடுத்திருக்கிறேன். 
தளத்தின் பெயர் ராகவன்

நாங்கள் நரிப்பாறையிலிருந்து கிளம்பும் போதே கேமரா பேட்டரி முழுவதும் சக்தி இழந்து விட்டது.  அதற்குப் பிறகு எடுத்த படங்கள் எல்லாம் செல் போன் வழியே எடுத்த படங்கள் தான்.  அதனால் இந்த கோவிலுக்கான வலைத்தளத்திலிருந்தும் சில படங்களை எடுத்திருக்கிறோம். 
கோவிலின் வலைத்தள முகவரி.
www.tharagumalaishrine.comவரும் வழியில் சித்தர் பீடம் என்று ஒரு இடம் இருந்தது.  வெளியிலிருந்து புகைப்படம் எடுத்திருக்கிறோம்.  விபரங்கள் தெரியவில்லை.  பின்பு மாதாமலைக்கு வந்தோம். திருவண்ணாமலையிலிருந்து சித்தர்பீடம் வழியாக மாதாமலை முடிய அருமையான தார் சாலை போடப்பட்டிருக்கிறது.  இது தற்போது தான் போடப் பட்டிருக்கும்.  அந்த புகைப்படங்களை கீழே கொடுத்திருக்கிறோம். திருவிழா ஒன்று நடைபெற இருக்கிறது.  அந்த அழைப்பிதழை ஸ்கேன் செய்து இத்துடன் கொடுத்திருக்கிறோம்.  தமிழிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் அச்சடிக்கப் பட்டிருக்கிறது. 

போக்குவரத்து:
 
ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து சித்தர்பீடத்திற்கு திருவண்ணாமலை வழியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை மினிபஸ் இருக்கிறது.  அரசாங்க நகர் பேருந்தும் இருக்கிறது.  அது எத்தனை தடவை வருகிறது என்ற விபரம் தெரியவில்லை.  ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ஆட்டோ வசதி இருக்கிறது.  திருவண்ணாமலை அடிவாரத்திலும் ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கிறது.  எனவே போக்குவரத்துக்கு பிரச்னை இல்லை.

மலை நல்ல உயரம்.  எனவே வயதானவர்கள் உயரே செல்ல முயற்சி செய்து சிரமப்படாதீர்கள்.  ஒரு பெண்மணி இறங்க முடியாமல் வழியில் இருக்கும் படத்தை பாருங்கள்.

 
இங்கு கடைகள் எதுவும் இல்லை.  எனவே உங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், நொறுக்குத்தீனிகளை அங்கிருந்தே கொண்டு வந்து விடுவது நல்லது.  பாலிதீன் உபயோகிக்காதீர்கள்.

மலைக்கு உயரே செல்லும் வழி, இடையிலுள்ள சிறு சிறு ஆலயங்கள், உயரே உள்ள ஆலயங்கள், மலையிலிருந்து திருவண்ணாமலை காட்சி, நகர்ப்புற காட்சி அனைத்தையும் கீழே கொடுத்திருக்கிறோம்.

 


இந்த தொகுப்பில் எங்களது பேரன் தீபன் சக்ரவர்த்தியின் படங்களையும்  தொகுத்திருக்கிறோம். இந்த பதிவிற்காக புகைப்படங்கள் எடுத்த எனது தங்கை மகன்கள் - அருண் ஸ்ரீராம், அசோக் குமார் (இரட்டையர்கள்) - அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.

இந்த பதிவை கணினியில் ஏற்ற, இந்த பதிவு மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் சொல்லும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.எங்களது அணியினரை திறம்பட நடத்திச் சென்ற எனது மனைவி திருமதி உமாகாந்திக்கு மனப்பூர்வ வாழ்த்துக்களும் நன்றியும்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை - நிறை குறை - பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  எங்களை சீர்திருத்திக் கொள்ள உதவும்.  உங்களது பெயரை Followers  Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்கள்.

உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் அடுத்தடுத்து பதிவு போடும்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

மிக்க நன்றி.30 கருத்துகள்:

 1. நாங்கள் தளவாய்புரத்தில் இருந்த போது போய் வந்த ஸ்தலம்...
  மலரும் நினைவுகளுக்கு நன்றி அய்யா..

  பதிலளிநீக்கு
 2. எழில்கொஞ்சும் இடங்கள்.
  திருமலை அன்னை திருக்கோயிலின்
  வரலாறு இனிமை.

  பதிலளிநீக்கு
 3. அருமையான வரலாறு.படங்கள் வெகு நேர்த்தி.

  பதிலளிநீக்கு
 4. அருமையான படங்களுடன் அருமையான ஆன்மீக பதிவு

  பதிலளிநீக்கு
 5. தரகுமலை மாதா கோவிலுக்கு ஒரு முறை, என் தந்தையுடன் வந்துள்ளேன். இனிய நினைவுகளை மீட்டி தந்தற்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 6. மிகவும் அருமையான பகிர்வு ஐயா.
  பல இடங்களை நேரில் போய் பார்க்க சந்தர்பம் கிடைப்பதில்லை.இந்த மாதிரி அழகான படங்களுடன் பதிவுகளை பார்க்கும் போது அந்த இடங்களை நேரில் சென்று பார்த்த திருப்தி ஏற்படுகிறது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அருமையான பகிர்வு மிக்க நன்றி ஐயா....

  பதிலளிநீக்கு
 8. எழில்கொஞ்சும் இடங்கள்.
  வரலாறு இனிமை.

  பதிலளிநீக்கு
 9. அருமை அய்யா.... மிக அருமையாக படங்களுடன் சொல்லி இருக்கீர்கள். திருவண்ணாமலை வரும்போது கண்டிப்பாக போக வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. படங்களும், தலப்பகிர்வும் சிறப்பாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 11. அருமையான படங்கள் அரிய பதிவு
  நன்றி

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 12. தரகு மலை பற்றிய விபரங்களும் புகைப்படங்களும் அருமை!

  பதிலளிநீக்கு
 13. படங்களும் அதைத் தொகுத்துப் போட்டு உதவியவர்களை ஊக்குவித்துப் பாராட்டும் விதமும் உங்களில் ஒரு மரியாதையே மனதிற்குள் கொண்டு வருகிறது ஐயா.அந்த இரவின் படம் மிகவும் அழகு !

  பதிலளிநீக்கு
 14. ஐயா! பலமுறை அந்த வழியாக சென்றுள்ளேன் . மலை மீது ஏறிப்பார்க்க ஆசை. இப்போது வயதாகி விட்டது. முடியாது. உங்கள் பதிவின் மூலம் ஏறிப்பார்த்து விட்டேன் . முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஆடுமேய்க்கும்சிறுமி மாதாவைப் பார்த்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததும் அது பற்றி விவாதம் நடந்ததும் நினைவு தட்டுகிறது.வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 15. அன்பின் ரதனவேல் - ஒரு சிறந்த பயணம் சென்று வந்தது போல் இருக்கிறது. அருமையான படங்கள் - அருமையான் விளக்கங்கள் - சென்று பார்த்து மகிழ நினைப்பவர்களுக்கு நல்லதொரு கையேடு. விழா சிறப்புடன் நடை பெற நல்வாழ்த்துகள். இப்பதிவினிற்கு உதவிய அனைவருக்கும் ( துணைவி உட்பட ) நன்றி கூறிய நற்பண்பு பாராட்டத்தக்கது. நல்வாழ்த்துகள் ரத்னவேல் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 16. மிகவும் அருமையான பகிர்வு ஐயா. மலையில் ஏறி பார்த்தது போல் தத்ரூபம்.:)

  பதிலளிநீக்கு
 17. தரகுமலை பற்றி புதிதாக அறிய செய்தமைக்கு நன்றி அய்யா.....!

  பதிலளிநீக்கு
 18. நம்மூரிலேயே பயணித்து மகிழ ஆயிரம் இடங்கள் உள்ளன என்று இக்கட்டுரை நிரூபிக்கிறது. பகிர்வுக்கு நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 19. மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு ,
  வணக்கம் . தங்களது பதிவு மிகவும் நன்றாக உள்ளது .குறை ஒன்றும் சொல்வதிற்கில்லை .
  மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.நான் தங்களை ,கூடிய விரைவில் , நேரில் சந்திக்க முயற்சி
  செய்கிறேன் .என்னை ,தாங்கள் ,சித்தர் பீடத்திற்கு அழைத்து செல்ல இயலுமா? .தங்களது ப்ளாக் குறித்து , கருத்து சொல்ல எனக்கு தகுதி கிடையாது.தங்களது ஆசிர்வாதம் ,எனக்கு கிடைத்தால்
  போதும்.தங்களை போன்ற பெரியோர்கள் ,எனது ப்ளோகில் கருத்துரை வழங்குவது நான் செய்த புண்ணியம் .மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. திருவண்ணாமலை சிறிய மலையாகவும், இந்த மலை உயரமாகவும் இருக்கும். //

  அருமையாய் காட்சிப்படுத்திய பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. அருமையான பதிவுடன் கூடிய அழகான படங்களையா வாழ்த்துக்கள்..!!??

  காட்டான் குழ போட்டான்..

  பதிலளிநீக்கு
 22. ஒரு முறையாவது செல்லத்தூண்டும் அருமையான கோவில். மொபைல்ல எடுத்ததுன்னே சொல்லமுடியலை. அவ்ளோ அழகுப்படங்கள்..

  பதிலளிநீக்கு
 23. அன்பு ரத்னவேல் அவர்களுக்கு,

  அற்புதமான பதிவு... நான் ஸ்ரீவில்லியின் மீது வைத்திருக்கும் காதல் சும்மா ஒரு இளந்தாரியின் கண்னுக்குட்டி காதல் போல... அல்லது ஒரு இழந்த காதல் போல... ஸ்ரீவில்லி மேல நீங்க வச்சிருக்கிற காதல் சொல்லி மாளாது... எத்தனை துல்லியமான படங்கள்... ஆச்சரியம்... இத்தனை அழகா அந்த தரகுமலை மாதாக்கோவில் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது... அழகாய் தொகுத்து ஒரு புத்தகமாய் வெளியிட்டால் ரொம்பவும் உபயோகமாகவும், நெகிழ்வாகவும் இருக்கும்... எனக்கு சமர்பித்தது எனக்கு கிடைச்ச மிகப்பெரிய சம்மானம்...

  வேலை அதிகமா இருந்ததால... படிக்க முடியாம போச்சு... ரொம்பவும் அன்பும், நன்றிகளும்...

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 24. நல்ல பதிவு அசத்தீடிங்க.வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 25. அருமையான கட்டுரை படங்கள் ஐயா...

  பார்க்கும்போதே உடனே சென்று மலை ஏறி சென்றிட தோன்றுகிறது..

  படங்கள் எடுக்க உதவிய தீபன் சக்கிரவர்த்தி அருண் அஷோக் குமார் கட்டுரை பகிர்ந்த ஐயா எல்லோருக்குமே என் அன்பு நன்றிகள்...

  பதிலளிநீக்கு
 26. DEAR MA'am/ Sirs , CHRISTIAN's EPPADILAM HINDU's Ah matham mathalamnu plan panni alayurangal neengaluma avangalukku thunai poreengal rombavum manasukku kastama Irukku Mudinthal intha pathivai neekavum/
  Nandri.

  Anbudan ,
  Sriram

  பதிலளிநீக்கு