வெள்ளி, ஜனவரி 20, 2012

திரு சி.ஜெயபாரதன் – ஒரு அணு விஞ்ஞானி – ஒரு அறிமுகம்

திரு சி.ஜெயபாரதன் ஒரு அணு விஞ்ஞானி.  நமது மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர்.  எனது முகநூல் நண்பர்.  அவரைப் பற்றிய அவரே எழுதிய ஒரு அறிமுகம்.  அவர் எல்லா துறைகளிலும் நல்ல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.  அவரது கட்டுரைகளை எனது பதிவில் வெளியிட அனுமதி கொடுத்திருக்கிறார்.  இனி மேல் அவரது கட்டுரைகளை தொடராக வெளியிடுகிறேன்



நெஞ்சின் கதிரலைகள் நின்றுவிட்டால் என்வாழ்வில்
துஞ்சிடும் ஆத்மீகத் தொண்டு !







ஆணும் பெண்ணும் ஒன்றல்ல !
ஏசுவும், புத்தரும் இரண்டல்ல !
இந்து, இசுலாம், கிறித்துவம் மூன்றல்ல !



சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. [Nuclear] Canada
(பிறப்பு :  பிப்ரவரி 21, 1934)

அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
தொண்டன் பணிந்து துதிக்கிறேன் – விண்டுபோய்
இற்றுவிழும் மாந்தர் இணைந்து பணிபுரிய
வற்றாத் திறன் ஊட்ட வா.
++++++++
போர் வாளை எல்லாம் நெளித்து
ஏர் முனை ஆக்கு !
+++++++
சிலைகள் சுமப்ப  தில்லை
கோபுரத்தை !
வலைகள் பிடிப்ப தில்லை
முத்துச் சிப்பியை !
கலைகள் நிரப்பு வதில்லை
பசி வயிற்றை !
அலைகள் அசைப்ப தில்லை
ஆழ்கடலை !
++++++++
தோல்விகள் தோள்வரை
ஏறினும் வெற்றி
கால் பாதம் வரை
வராதா ?
மேல் சென்று சிகரம் தொட
மூச்சு வாங்கும் !
நாள் செல்லும் வெற்றியின்
நறுமணம் நுகர !
++++++++++
அணுவினைப் பிளந்த நான்
அன்பையும் பிளந்து
நுணுகி நுணுகி
நோக்கினேன் ! அங்கும்
அன்னை சக்தி
என்னை மயக்கி
முறுவல் செய்தாள் !
சிறுவன்
பணிந்தேன் அதன் திருப்
பாதங்களில் !
சி. ஜெயபாரதன்
+++++++++++
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன்.  பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக் கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன.  எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.  இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி.  இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன : விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.


எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர்.  ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே.  “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கிங்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
டிசம்பர் 17, 2011  (புதுப்பிக்கப் பட்டது)


இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.






Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.



உங்களது Email id ஐ அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.


தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.









35 கருத்துகள்:

  1. அணுவினைப் பிளந்த நான்
    அன்பையும் பிளந்து
    நுணுகி நுணுகி
    நோக்கினேன் ! அங்கும்
    அன்னை சக்தி
    என்னை மயக்கி
    முறுவல் செய்தாள் !
    சிறுவன்
    பணிந்தேன் அதன் திருப்
    பாதங்களில் !
    சி. ஜெயபாரதன்//

    திரு. சி. ஜெயபரதன் அவர்கள் கவிதை அருமையாக இருக்கிறது.
    சுதந்திர போரட்ட வீரரின் மகன். நாட்டு பற்று உடையவர், பெரிய அணு விஞ்ஞானி இவரை எங்களுக்கு அறிமுக படுத்தி வைத்த உங்களுக்கு நன்றி ஐயா>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  2. நல்ல பகிர்வு அந்த விஞ்ஞானியின் கட்டுரைகளை வாசிக்க ஆர்வமாக உள்ளோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  3. அணுசக்தி விஞ்ஞானி,திரு. ஜெயபரதன் அவர்களைப்பற்றி தெரிந்து கொண்டேன்.நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  4. அன்பின் ரத்னவேல் - தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  6. அணுசக்தி விஞ்ஞானி,திரு. ஜெயபரதன் அவர்களைப்பற்றி இதுவரை அறிந்ததில்லை. இன்று அறிந்துக் கொண்டேன். அறிய வைத்ததுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  8. நல்ல அறிமுகம். தகுதி வாய்ந்த நபர்களை வெளிச்சம் போட்டு காட்டுவதும் ஒரு சேவைதான். வாழ்த்துக்கள்.

    இவருடைய பதிவுகளையும் படித்திருக்கிறேன். அணுசக்தி துறை குறித்து ஆழமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
  9. ரசித்தேன். பேக்ரவுண்ட் கலரை மாற்ற வழி இருக்கிறதா என்று முயற்சிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு
    2. இரு தொழில்நுட்ப புரட்சியாளர்கள்

      http://siragu.com/?p=988

      சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப உலகம் தனது இரண்டு மேதைகளை இழந்துள்ளது. இருவருமே தத்தமது துறைகளில் வல்லுனர்களாக விளங்கியவர்கள். இருவருமே வலிமையான படைப்புகளையும், ஆக்கங்களையும் உலகுக்கு அளித்தவர்கள், இருவருக்கும் அவர்களது துறையில் மட்டற்ற மரியாதையும், சிறப்பும் இருந்தது , ஒரே ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால் ஒருவர் உலகப் புகழ் பெற்றவர், ஊடகங்களினால் கொண்டாடப்பட்டவர், மற்றவர் தமது துறையில் மட்டுமே அறியப்பட்டவர். இந்தப் பதிவு கணக்கற்ற பங்களிப்புகளை உலகுக்கு தந்த இவர்களின் நினைவை போற்றும் வகையில் எழுதப்படுகிறது.

      நீக்கு
  10. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. நல்லப் பதிவு... நல்ல அறிமுகம் ஐயா... நன்றிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      வாழ்த்துகள்.

      நீக்கு
  13. சிறப்பான பதிவு.பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      வாழ்த்துகள்.

      நீக்கு
  14. நல்ல பகிர்வு.சி.ஜெயபாரதன் எழுதிய கவிதை அருமை.பகிர்வுக்கு நன்றி ரத்னவேல்சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      வாழ்த்துகள்.

      நீக்கு
  15. இவரது கட்டுரைகள் கவிதைகள் நான் நிறையவே வாசித்திருக்கிறேன்.நன்றி அவரைப் பற்றிய அறிமுகத்திற்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      வாழ்த்துகள்.

      நீக்கு
  16. பிரபலங்களின் கூடுதல் திற‌மைகளை பலருக்கும் அறிமுகப்படுத்தும்தங்கள் பணி சிறக்கட்டும்!

    மதுரை மாவட்டத்திற்குதான் எத்தனை பெருமைகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      வாழ்த்துகள்.

      நீக்கு
  17. அருமையான அறிமுகக் கவிதை. எனது அவரது தொடர்பையிட்டு முகநூலில் எமுதினேன். இடுகைக்கு மிக்க நன்றி. இருவருக்கும் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      வாழ்த்துகள்.

      நீக்கு
  18. அய்யா ,
    தங்களின் கட்டுரை நன்றாக உளது.தாங்கள் ,அவரது நூல்களை பற்றிய விவரங்களை அளித்தால் ,வாங்கி படிக்க எதுவாக இருக்கும்.மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
      மனப்பூர்வ வாழ்த்துகள்.

      நீக்கு