பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்களால் உலக சர்க்கரை நோய் தினம் என்று ஒரு கட்டுரை அவர்களது முக நூல் பக்கத்தில் வெளியிடப் பட்டது. அவர்களது அனுமதியின் பேரில் எங்களது பதிவில் வெளியிடுகிறோம். தாங்கள் படித்து பார்த்து தங்களது கருத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
நண்பர்களே,
இன்று 14 .11 .11 ,உலக சர்க்கரை நோய் தினம். உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு உண்டுபண்ணுவதற்காக சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 14 ல் குழந்தைகள் தினத்தில் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரவலாக உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது .இப்படி ஒரு கருத்தை விதைத்தவர்கள் சர்வதேச சர்க்கரை நோய் அமைப்பும்(International Diabetes Federation) & உலக நல நிறுவனமும்(World Health Organisation) தான். இந்த தினம் 1991 லிருந்து உலக மக்களிடையே, அவர்களின் பழக்க வழக்கங்கள் மூலம் நாம் பயப்படக் கூடிய அளவில் உயர்ந்து கொண்டிருக்கும் சர்க்கரை நோய் விகிதத்தை கட்டுப் படுத்தவே அனுசரிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும், இதற்காக ஒரு புது கருத்து உள்ளே நுழைத்து, உலக சர்க்கரை நோயாளிகளிடம் ஓர் அறைகூவல் விடுக்கின்றன; கொண்டாடுகின்றன. அப்படி ஒரு விழிப்புணர்வு கருத்துக்கள் மக்களிடையே, ஆண்டு முழுவதும் விதைக்கப் பட்டாலும், நவம்பர் 14 ம் நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏன் தெரியுமா.?.அன்றுதான், சர்க்கரையைக் கட்டுபடுத்தும் ஹார்மோனாகிய இன்சுலினைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஒருவர் பிறந்தார்.
ஆனால் இன்சுலினை பிரடெரிக் பாண்டிங்(Frederick Banting) மற்றும் சார்லஸ்பெஸ்ட்(Charles Best) என்ற இரு விஞ்ஞானிகளும் 1922 ல் கண்டுபிடித்தனர்.
இவர்களுள் பிரடெரிக் பாண்டிங் கின் பிறந்த தினம் தான் நவம்பர் 14 . ஆனால் நோபல் பரிசு பெற்றவர்களில் மிகக் குறைந்த வயதில் 32 வயதில் நோபல் பரிசு என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.அதனால் நவம்பர் 14 உலக சர்க்கரை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இது நிகழ்த்தப்பட்டாலும், இதன் தலைப்புக்கள் சர்க்கரை நோயும்& மனித உரிமையும், சர்க்கரை நோயும் & வாழ்நிலையும், சர்க்கரை நோயும் & பருமனும் என்று எந்தெந்த விஷயங்கள் மனிதனின் சர்க்கரை நோய்க்கு பாதகம்/குந்தகம் விளைவிக்குமோ அவற்றை எடுத்து கையாளுகின்றனர். முக்கிய குழந்தைகளுக்கும், பருவ வயதினருக்கும் ஏற்படும் சர்க்கரை நோய் என்பது வேதனையானது. இதனைக் கட்டுப் படுத்த வேண்டும். 2009 -2013 என 5 ஆண்டுகள் முழுமைக்கும் சர்க்கரை நோய்க்கான கல்வி & தடுப்பு நடவடிக்கை என்ற தலைப்பில் விழிப்புணர்வு தர திட்டம்.27 ம் ஆண்டு தகவல் படி, சர்க்கரை நோய் அதிகம் உள்ள உலகின் முதல் 5 நாடுகள். இந்தியா: 4 .09 கோடி, சீனா: 3 .69 கோடி, அமெரிக்கா: 1 .92 கோடி ரஷ்யா::௦.0.96 கோடி, ஜெர்மனி:0.74 கோடி. இதில் முன்னிலையில் நிற்பது நாம தாங்க..!
சர்க்கரை நோய் பற்றி சில தகவல்கள்:
- இது பரவலாக அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது.
- உலக நல நிறுவன கணிப்புப்படி, வளரும் நாடுகள்தான், 21 ம் நூற்றாண்டின் இந்த நோய்க்கான சுமையைத் தாங்கப் போகிறது
- .
- குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 70% பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட உள்ளனர் 21 ம் நூற்றாண்டில்.
- 2010 ம் ஆண்டு கணக்குப்படி, உலக மக்களில், 6 .4 % பேர் சர்க்கரை நோயுடன் (2 .85 கோடிப் பேர் ) சர்க்கரை நோயுடனே வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது.
- ஆனால் இன்னும் 20 ஆண்டுகளில், அதாவது 2030 ல், இந்த எண்ணிக்கை 4 .38 கோடி என இரட்டிப்பாகப் போகிறது.
- உலகில் இன்று அதிகமான சர்க்கரை நோயாளிகள் வாழும் நாடாக இந்தியா உள்ளது.
- 40 -59 வயதில் உள்ளவர்களைத்தான் சர்க்கரை நோய் படை எடுக்கிறது.
- இந்த எண்ணிக்கை 2030 ல், 60 -79 வயதுக்கு ஓடி விடுகிறது. அவர்களில் 1 .98 கோடிப் பேர் பாதிப்புக்கு உள்ளாகி விடுவார்கள்.
- உலகம் முழுவதுக்கும், சீக்கிரம் நோய்வாய்ப்பட்டு, விரைவில் உயிரிழப்பு ஏற்படும் ஒரு வியாதிகளில் ஒன்றாக சர்க்கரை நோய் இருக்கப்போகிறது.
2010 ன் உலக சர்க்கரை நோய் தின கோரிக்கை என்பது, "இப்போதே, சர்க்கரை நோயை கட்டுபடுத்துவோம்."
உலக சர்க்கரை நோய் தின குறியீடு/அடையாளம்/முத்திரை என்பது "நீல வட்டமே." இந்த
குறியீடு 2007 ல் சர்வ தேச உலக சர்க்கரை நோய் தின உறுதி மொழியுடன் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீல வட்டம், நாகரிகம் கடந்த வாழ்க்கை மற்றும் உடல்நலத்தைக் குறிக்கிறது. நீல வண்ணம் வானைப் பிரதிபலிக்கிறது. அனைத்து நாடுகளுக்கும் வானமே எல்லை. நீல வட்டமும், உலக சர்க்கரை நோயாளிகள் சமூகத்தை ஒரு வட்டத்துக்குள் இணைக்கிறது.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.
இந்த நாள் சர்க்கரை நோயை வைத்து வியாபாரமாக்கும் மருந்து நிறுவனங்களின் விளம்பர உக்தி தவிர வேறு ஒன்றும் இல்லை... ஆரம்பித்திலேயே சர்க்கரை நோயை கட்டுப் படுத்தி விட முடியும்... ஆரம்ப நிலையில் கண்டு பிடிக்கப் பட்டால்... அனால் இதற்க்கு எந்த மருத்துவரும் முன்முயற்சி எடுப்பதில்லை.. மாறாக உலக சர்க்கரை நோய் தினம் என்றால் முதல் வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள்... முரண்
பதிலளிநீக்குவிஷயங்கள் அறிந்து கொண்டேன் நன்றிங்க!
பதிலளிநீக்குசர்க்கரை நோய் இங்கு நீரிழிவு என அழைக்கப்படுகிறது. உலக நீரிழிவு தினத்தன்று அது பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரையை பகிர்ந்ததற்கு நன்றி. http://hainalama.wordpress.com/2011/11/14
பதிலளிநீக்குநான் ஒரு பதிவு இட்டிருக்கிறேன்.
நல்ல பகிர்வு. கவனிக்க வேண்டிய விசயம்தான். தேவையான உடற்பயிற்சியும் பதட்டம் இல்லாத வாழ்க்கையும் பாதிப்பிற்கு உள்ளாவதை குறைக்கிறது.
பதிலளிநீக்குசர்க்கரை நோய் பற்றிய தகவல்கள் அனைத்தும்
பதிலளிநீக்குமிக உபயோகமானவை ஐயா..
பதிவுக்கு நன்றிகள் பல.
பயனுள்ள பதிவு .பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குத.ம.4
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி ஐயா.
நல்ல விழிப்புணர்வு பதிவு. சர்க்கரை நோய்ப் பற்றி.
பதிலளிநீக்குநன்றி.
அரிய த்கவல்களுடன் கூடிய அற்புதப் பதிவு
பதிலளிநீக்குபதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
பதிலளிநீக்குசர்க்கரை நோய் பற்றிய தகவல்கள் உபயோகமானவை ஐயா...
பதிலளிநீக்குஐயா தங்கள் பதிவு என் போன்ற வர்களுக்கு
பதிலளிநீக்குமிகவும் பயன தரும்
நன்றி!
த ம ஓ 8
புலவர் சா இராமாநுசம்
உபயோகமான தகவல்கள். நன்றி.
பதிலளிநீக்குநல்ல உபயோகமான பதிவு சார்..
பதிலளிநீக்குகவனிக்க வேண்டிய நல்ல பகிர்வு. பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குuseful sir
பதிலளிநீக்குநல்லதோர் விழிபுனர்வு பதிவு .பாரட்டுக்கள் தங்கள் பணிமென் மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குNalla thagaval Aiya .
பதிலளிநீக்குநல்ல தகவல்கள் சரியான முறையில் கொடுக்கப் பட்டு இருக்கின்றன. மிகவும் நன்றி.
பதிலளிநீக்குNalla thagavalkal.
பதிலளிநீக்குTM 11.
பதிலளிநீக்குசர்க்கரை நோய்ப் பற்றி பகிர்வு நன்றி
பதிலளிநீக்குசர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது / சர்க்கரை நோய் வராமல் முன்கூட்டியே தடுக்க இயலுமா??/ இது போன்ற தகவல்கள் ஏதும் இல்லையே!!
பதிலளிநீக்குசிறப்பான பயனுள்ள தகவலை வழங்கியமைக்கு மிக்க நன்றி ஐயா.....
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி.கட்டுப்பாட்டில்வைக்கணுமுன்னா தினமும் 40நிமிசம் நடக்கலாம்.
பதிலளிநீக்குமிகவும் அவசியமான பதிவு சார்..
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா அவர்களுக்கு,
பதிலளிநீக்குதங்களின் சர்க்கரை நோய் பற்றிய பகிர்வு பயனுள்ள ஒன்று .இந்தியாவில் ௫௭ மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருப்பதாக புள்ளி விவரம் சொல்லுகிறது .
அன்புடன்
தமிழ் விரும்பி