Yoga லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Yoga லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், நவம்பர் 03, 2011

அல்சீமியர் - ஒரு பார்வை


அல்சீமியர் டிசீஸ்:  Alzheimer's Disease: 

இது அல்சீமியர் என்னும் முதியோர்களுக்கு வரும் நோயைப் பற்றிய பதிவு.

திரு இராம சுப்ரமணியம் நாகேஸ்வரம் என்பவர் எனது முகநூல் நண்பர்.  அவர் அவரது முக நூல் பக்கத்தில் 22.10.2011 அன்று இந்த கட்டுரையை வெளியிட்டிருந்தார்.  அவரது அனுமதியுடன் இந்த கட்டுரையை இன்றைய பதிவாக வெளியிடுகிறேன்.  அவருக்கு எனது மனப்பூர்வ நன்றி.



இன்றைய நாகரீக உலகில் தீர்மானிக்கப்பட்ட பல் விதமான நோய்களுக்கு மருத்துவ ரீதியாக சிகிச்சைகளும்..மருந்துகளும் இருந்தாலும்...விடை தெரியாத சில சிக்கல்கள் நோய்களாக..மக்களை தொடர் கதையாக வாட்டுவதும்...மருத்துவ உலகிற்கு சவாலாக இருந்து வருவதையும்..நாம் காண்கிறோம். அத்தகைய பிரச்சினைகளில் ஒன்றான மூளையின் செயல்பாடுகள் சார்ந்த முக்கிய சிக்கலான...இந்த அல்சீமியர் என்ற நோயினைப்பற்றி சில சுருக்கமான குறிப்புகள்.! 

1. மூளை நரம்பு பகுதிகளில் மனிதர்களில் ஒரு சாராருக்கு ஏற்படும் மாற்றங்களாக மருத்துவ ரீதியாக கருதப்படும்..சுற்று சூழல் மாற்றங்களை புரிந்துகொள்ள முடியாத தன்மை..உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் குறித்து ஆய்வு செய்து..தனது ஆராய்ச்சி கட்டுரைகளை 1906ம் ஆண்டு வெளியிட்ட டாக்டர் அலோயிஸ் அல்சீமியர் ( Alois Alzheimer)...என்பவரின் நினைவாக..மருத்துவ உலகில்..இந்தப் பிரச்சினை "அல்சீமியர் நோய்"...என்று அழைக்கப் படுகிறது.!

2. மனித மூளையின் செயல்பாட்டினை பாதிக்கும் பல வகையான சிக்கல்களில்...இந்த அல்சீமியர் நோய்..பொதுவாக முதியோர்களை பாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும்.!

3. அம்னீஷியா...டிமென்ஷியா..பாரனாய்டு என்பது போன்ற..உளவியல் ரீதீயான பிரச்சினைகளில் ஒரு அங்கமாக...இந்த அல்சீமியர்...கருதப்படுகிறது.!

4. பொதுவாக..உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உயர் கொழுப்பு போன்ற‌
தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை தேவைப்படும்..பிரச்சினைகளால்...மனித உடலிலும்..வாழ்க்கை முறைகளிலும் ஏற்படும்.. இயல்பான மாற்றங்களின் காரணமாக பாதிக்கப் படுபவர்களே..பின்னாளில் அல்சீமியரின் தாக்கத்துக்கு ஆளாகிறார்கள் என்பது மருத்துவ உலகின் கருத்து.!

5. மேற்கூறப்பட்ட பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக  எடுத்துக் கொள்ளப்படும்
சிகிச்சை முறைகளும்( மருந்துகளும்)...இரு பாலருக்கும்..பொதுவாக..அல்சீமியர் தாக்கத்துக்கு ஆளாக வாய்ப்புகள் இருக்கும் நிலையில்...பெண்களுக்கு கூடுதலாக..மாதவிலக்கு சார்ந்த ஈஸ்ட்ரோஜன் மருந்துகளும்..காரணிகள். வயது முதிர்ந்தவர்களுக்கு..திடீரென ஏற்படும் சுற்று சூழல் மாறுபாடு மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள்..அல்சீமியர் தாக்கத்திற்கு முக்கிய‌
அம்சங்களாக மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.!

6. பொதுவாக மூளை..நியூரோனல் டிரான்ஸ்மிஷன்ஸ் ( Neuronal Transmission's) என்றழைக்கப்படும்...மூளை செல்களின் வேதித் தகவல் பரிமாற்றம் பாதிக்கப் பட்டு..ஏற்படும் இந்த அல்சீமியரின் பாதிப்பு...நாள் செல்லச் செல்ல...சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில்..அதிகரித்து...நியூரான்களின் அளவு குறைவதுடன்..அவை அழியத் தொடங்குகின்றன. அந்த சமயத்தில்..நியூரான்களின் தகவல் பரிமாற்ரத்திற்கு தேவைப்படும் முக்கிய கிரியா ஊக்கியான..அசிட்டைல்கோலின் என்ற வேதிப் பொருளின் அளவும்
குறைவாக இருப்பதை மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் நாம் அறியலாம்.!

7. வயோதிகத்தால் ஏற்படும் முதிர்ச்சி மட்டுமன்றி...தலைப் பகுதியில் விபத்துக்களின் மூலம் ஏற்படும் காயங்களால் உண்டாகும் நிரந்தரமான பிரச்சினைகளின் மூலமாகவும் இந்த அல்சீமியர் நோயின் தாக்கம் ஏற்படுகிறது. இதனால்..பதிக்கப் பட்டவர்கள்...உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ...சார்ந்து வாழும் நிலை தான்..இந்த அல்சீமியரின் பாதிப்புகளில் முக்கிய சிக்கலான பகுதியாக நாம் காண்கிறோம்.!

8. அல்சீமியரால் பாதிக்கப் பட்டவர்கள்...நோயின் வீரியத்தை..ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் ( Anti Oxidants)...கோலினைஸ்டீரேஸ் இன்ஹிபிட்டார்ஸ் ( Choliesterase Inhibitor's) என்றழைக்கப்படும்..காலன்டமைன்( galantaminine)..நியோஸ்டிக்மைன்( neostigmine)...மிமான்டைன் (memontine..N-methyl D-Asparate antogonist-NMDA)..இன்னபிற..மருந்துகளால்..கட்டுப்படுத்த முடியுமே தவிர...நிரந்தரமாக ( மற்ற கன்காமிடன்ட் டிசிசஸ் போன்றே) குணப்படுத்த இயலாது என்பது மருத்துவ உலகம் சார்ந்த தகவல்கள்.!

9. இது போன்ற...மருத்துவ ரீதியாக  ( அனைத்து விதமான பிரிவுகளிலும்) சிகிச்சைகளுக்கு பின்னரும்... தீர்வு காண இயலாத பிரச்சினைகளை...ஆல்டர்நேடிவ் தெரபி என்று அழைக்கப் படும்...யோகா..தியானம்..மற்றும் மிதமான உடற்பயிற்சிகள் மூலம்..மூளை செல்களான நியூரான்களுக்கு பலமளித்து அல்சீமியரின் தீவிரத்தை கட்டுப் படுத்தலாம் என மருத்துவ..உலகமும்..ஆராய்ச்சியாளர்களும்..நம்புகின்றனர்.!

இந்த பதிவை படித்து பார்த்து உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.  அதற்கான அவரது விளக்கங்களை அவரிடம் வாங்கி இந்த பதிவின் பின்னூட்டம் பகுதியில்  பதிலாகவும் உங்களுக்கு தனியாகவும் எழுதுகிறேன்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.