புதன், மார்ச் 02, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம்

    
           ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கு பாத்தியப்பட்ட 'திருமுக்குளம்' என அழைக்கப்படும் ஒரு குளம் ஸ்ரீவில்லிபுத்தூரின் மேற்குப்பக்கத்தில் இருக்கிறது. த்ற்போது (நவம்பர்,2010 - ஜனவரி, 2011) வரலாறு காணாத அளவு நிறைந்திருக்கிறது. அதற்காக 22.1.11 எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொகுத்தளித்திருக்கிறேன்.


                     திருமுக்குளம் பெயர்க்காரணம்:
      திருமுக்குளத்தின் உள்ளே 'ஒன்றுக்குள் ஒன்றாகமூன்று குளங்கள் உள்ளனநீர் முழுதுவதும் வற்றினால் பார்க்க முடியும்கங்கையமுனைசரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் இருப்பதாக மக்களிடையே நம்பிக்கை.




           இது நான்கு பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய குளம். கீழ்பக்கக்கரையில் 'தீர்த்தவாரி மண்டபம்' அமைந்துள்ளது.


           அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட 'இரட்டை வினாயகர் கோவில்' இருக்கிறது.


            கிழக்கு கரையில் தென் கிழக்கு மூலையில் பத்ரி மஹால் என்ற கல்யாண மண்டபம் இருக்கிறது. இது ஆண்டாள் கோவிலுக்கு பாத்தியப்பட்டதா அல்லது தனியார் மண்டபமா என தெரியவில்லை.


             கீழ்கரையில் மக்கள் குளிப்பதற்கு 8(எட்டு) படித்துறைகள் இருக்கின்றன.
இந்தக்குளம் எல்லாத் தரப்பு மக்களும் குளிப்பதற்கும் அனைவரும் நீச்சல் பழகுவதற்கும் உபயோககரமாகயிருக்கிறது.


            இங்கு நீர் நிரம்பினால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும்பான்மையான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இந்தக்குளத்தை நன்கு பராமரித்தால் தகுந்த பாதுகாப்புகளுடன் 'படகு சவாரி'  செய்தால், குளத்தை பராமரிக்க வருமானம் ஈட்டலாம். இதை ஆண்டாள் கோவில் நிர்வாகமும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியும், சுற்றுலாத்துறையும், அரசாங்கமும் கவனிக்கலாம். குளத்தைச்சுற்றி வேலி போட்டு, 24 மணி நேரமும் காவலர்கள் பராமரிக்க வேண்டும். ஏ.கே.சி.கொண்டல்வண்ணன் போன்ற நல்ல உள்ளங்கள் இங்கு இருக்கிறார்கள்.குள்த்தின் தெற்கு கரை 9(ஒன்பது) படித்துறைகள் கொண்டது. சிறுவர்களின் ஆனந்த குளியல், கும்மாளம், நீச்சல், டைவிங் பாருங்கள்.




            குளத்தின் நடுவில் மண்டபம் இருக்கிறது. தெற்கு கரையிலிருந்து நடு மண்டபத்திற்கு தூரம் குறைச்சல் - சிறுவர்கள் ந்டு மண்டபத்தின்
உச்சியில் இருப்பதை படத்தில் பாருங்கள்



            குளத்தின் மேற்கு கரையில் குளிப்பதற்கு 1 படித்துறை தான் இருக்கிறது. ஆண்டாள் நீராட்டு மண்டபம் சிறப்பாக அமைந்திருக்கிறது.




            இதில் ஆண்டாள் நீராட்டு உற்சவம் மார்கழி மாதம் நடைபெறும். தை மாதப்பிறப்பன்று திருவிழா நிறைவு பெறும். மண்டபத்தின் படங்களையும், ஸ்ரீ ஆண்டாள் திருவிழா காட்சிகளையும் காணுங்கள்.



            மேற்குக்கரையில் முன்பு 'அரசாங்க சுற்றுலா மாளிகை' இருந்த்து; தற்போது ஒரு தனியார் நர்ஸிங் கல்லூரி நடைபெறுகிறது.


                                          ஸ்ரீவில்லிபுத்தூரின் மிகச்சிறப்பான அம்சம்:

              படத்திலிருக்கும் 'கூட்டுறவு பால் பண்ணை' மிகுந்த காலத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பெருமையான 'பால்கோவா' உற்பத்தி இங்கு தான் முதலில் துவங்கியது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா பெருமை இவர்களுக்கு தான் சேரும். தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பால்கோவா உற்பத்தியாளர்களில் 75% இங்கிருந்து தொழில் கற்றவர்களாகத்தான் இருக்கும்.


            வடக்கு கரையில் 3(மூன்று) படித்துறைகள் இருக்கின்றன். ஒரு ஆஞ்சனேயர் கோவில் இருக்கிறது. அந்த்க்கோவிலில் இரண்டு ஆஞ்சனேயர் சன்னதிகள் இருக்கின்றன.


            வட கரையின் ஒரு பக்கத்தில் 'இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ' தட்சிணாமூர்த்தி கோவில் ஒன்று உள்ளது. இந்த்க்
கோவில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிற்து. இதன் சிறப்பம்சம் -' இந்தக்கோவிலிருந்து பார்த்தால் மடவார்வளாகம் சிவன் கோவில்
கோபுரத்தின் பார்வையில்' அமைந்திருக்கிற்து.



           திருமுக்குளத்த்ற்கு மேற்கு, பால் பண்ணைக்கு பின் புறம், எங்கள் ஊரின் மற்றொரு சிறப்பம்சான 'சி.எம்.எஸ் மேல் நிலைப்பள்ளி'
அமைந்திருக்கிற்து. இந்தப்பள்ளி 1856 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.



            இந்த்ப்பள்ளியில் படித்தவர்கள் மிக உன்னத நிலையில் இருக்கிறார்கள் (முழு விபரம் தெரியவில்லை - 1962ல் எனக்கு இந்தப்பள்ளியில் 9ம் வகுப்பு
சேர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. ஜாதி மதம் வேறுபாடு பார்க்காமல் அனைத்து தரப்பினரையும் சேர்த்து ஆதரவு கொடுத்த அருமையான கிறிஸ்தவ பள்ளி - (அல்ல ஆலயம்). எனக்கு இந்த பள்ளியின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இன்றும் இருக்கிறது.

            படத்தில் இருக்கும் பழைய கட்டிடம் முன்பு 'தமிழ் நாடு மின்சார வாரியத்தின் தளவாடங்கள் இருப்பு வைக்கும் கிட்டங்கி'யாக உபயோகப்பட்டது. சர்ச் மாதிரி அமைப்பில் இருக்கிற்து. முழு விபரம் தெரியவில்லை.


            இந்த குளத்தை சுற்றி 'வாக்கிங்' செல்வதற்கு சிறந்த இடம். வாக்கிங் சென்ற மாதிரியும் இருக்கும், ஆண்டாள் தெப்பத்தை சுற்றிய புண்ணியமும் கிடைக்கும். இங்கு 'தெப்பத்திருவிழா' மூன்று நாட்கள் நடைபெறும். மிகச்சிறப்பாக இருக்கும். அப்போது இது பற்றிய பதிவு
படங்களுடன் எழுதுகிறேன்.

                                                .இது தமிழில் முதல் பதிவு.
      இதற்கு எனக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர்களுக்கு எனது நன்றி.குமுதத்தில் தான் பதிவு பற்றிய செய்தியும், 'முதல் பத்து பதிவர்கள்' என்ற கட்டுரையும் படித்தேன்அதனால் பதிவு பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளிலும் வந்தால் சிறப்பாக இருக்கும்நான் அதிஷா பதிவுகளை படித்து அவருடன் தொடர்பு கொண்டேன்.அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டதுதமிழில் கணினியில் தட்டச்சு செய்வது பற்றியும் அவரிடம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்; கற்றுக் கொண்டேன்மிக்க நன்றி இனிய நண்பர் அதிஷாவிற்கு.

      அடுத்து, முகமறியா எனது இனிய நண்பர் திரு ரோமிங் ராமன் அவர்களுக்கு, ஒரு பதிவிற்கான மறுமொழியில் திரு. சுஜாதாவின் 'இரத்தம் ஒரே நிறம்' புத்தகம் எனக்கு தேவை எனவும், அது பற்றிய விபரம் தெரிந்தவர்கள் எனக்கு பதிப்பகம், விலை முதலிய விபரங்கள் தெரிவிக்கும்படியும் என்னைப் பற்றிய விபரங்கள் கொடுத்திருந்தேன்அவர் என்னை போனில் தொடர்பு கொண்டு புத்தகத்தை வாங்கி அனுப்பினார்பணம் அனுப்புவதற்கு அவரது முகவரி மறுபடியும் மறுபடியும் கேட்டும் தரவில்லைஎங்களது தொலைபேசி நட்பு தொடர்கிறதுதமிழில் கணினியில் தட்டச்சு பழகுவதற்கு அவரும் எனக்கு நிறைய உதவி செய்தார்நன்றி இனிய நண்பர் திரு ரோமிங் ராமன் அவர்களே.

      அடுத்து 'துளசி தளம்' பதிவை தொடர்பாக படித்து வருகிறேன்.  அவர்களது பதிவை படிக்கும் போது நாமும் அவர்களோடு சேர்ந்து பயணம் செய்வது போல் இருக்கிறது.  தேவைப்பட்ட இடங்களில் புகைப்படங்கள் சேர்த்து, நல்ல செய்திகளை தொகுத்து, ஏற்படும் இடையூறுளையும் தொகுத்து (the practical difficulties & how to solve them), அருமையாக அளித்து வருகிறார்கள்.  எனக்கு பதிவு எழுதுவதற்கு அவர்களது பதிவு தான் ஆதர்ஷம் (idol).  உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

     அடுத்து எனது குடும்பத்தினருக்கு, எனது மனைவி திருமதி. உமா காந்திக்கு, எனது முதிய வயதிலும் இந்த பதிவு எழுதுவதற்கு என்னுடனே கூட வந்து விபரங்கள் சேகரிப்பதிலும், புகைப்படங்கள் எடுப்பதிலும் உதவி செய்ததிற்கு, உமாவுக்கு வார்த்தைகள் காணாது நன்றி சொல்ல.

     எனது தம்பி மகன் இராஜவேலுக்கு, திருமுக்குளத்தை சுற்றி புகைப்படங்கள் எடுப்பதிலும். இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவி செய்ததற்கும், மிக்க நன்றி இராஜவேல்.

     இந்த பதிவை தாங்கள் நேரமிருக்கும் போது படித்து நிறை, குறை தெரிவியுங்கள்.  


                                      நன்றி.