செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கெத்தேசால் மலைக்கிராமத்தில் ஒரு முகாம்..!

கல்வி பற்றிய கட்டுரை - 1திருமதி எஸ்.மோகனா அவர்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இரண்டு  ஆண்டுகளுக்கு  மாநில துணைத் தலைவராக  'திருநெல்வேலியில் நடைபெற்ற மாநாட்டில்" தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறோம்.திருமதி எஸ்.மோகனா அவர்களது தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினால் 'கெத்தேசால்' என்னும் மலைப்பகுதியில் நடைபெற்ற மலைவாழ் மக்களுக்கு கல்வி சம்பந்தமான நடத்திய முகாம் நடத்தினார்கள்.  கெத்தேசால் கர்நாடக மலைப்பகுதியில் கடல்மட்டத்திலிருந்து 1224 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.  அந்த முகாமைப் பற்றிய கட்டுரையை அவர்களது முகநூலில் 19.5.2001 நாள் வெளியிட்டிருந்தார்கள்.

அந்தக் கட்டுரையை 'கல்வி பற்றிய கட்டுரை-1'  என்ற தலைப்பில் மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.  இந்த கட்டுரையை வெளியிட அனுமதி கொடுத்த திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம்
.


கெத்தேசால் மலைக்கிராமத்தில் ஒரு முகாம்..!

by Mohana Somasundram on Thursday, May 19, 2011 at 10:50pm
 வாசிப்பு முகாமில், பேரா. ராஜூவுடன் ஒரு குழு..கலந்துரையாடல்

 வாசிப்பு முகாமின் மதிய உணவருந்தும் நேரம்

கெத்தேசால் செல்லும் மலைப் பாதைவழியே


மலையிலிருந்து கீழ் நோக்கி

மே 16 ம் நாள் மாலை நிலா வலம்


முகாமின் முகப்பில்,ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்க பேனர், அருகில் புதுச்சேரி ஸ்ரீதர், மோகனா + சேலம் சோழகரிகாலன்.

    
வணக்கம் நண்பர்களே..! தமிழ் நாடு அறிவியல் இயக்கம் பல்வேறு தளங்களில், பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது. அதில் ஒன்று புத்தக வாசிப்பு இயக்கம். என்னடா இது.. புத்தகத்தை தனியாகத்தான் படிப்பார்கள்.. இதில் இயக்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்கிறீர்களா? ஆம் நண்பர்களே..! புத்தகம் சுமந்து கிராமத்தின் தெருக்களில் ஊர்வலமாய், மாட்டு வண்டியில், மிதிவண்டியில் என  வருவதை, அவற்றை தெருவின் மந்தைகளில் அனைவரும் இணைந்து கூட்டாக அமர்ந்து  படிப்பதை தமிழ் நாடு அறிவியல் இயக்கம், அறிவொளி காலத்திலிருந்து ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதிதான், கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கெத்தேசால் என்னுமிடத்தில் நடைபெற்ற உறைவிட புத்தக வாசிப்பு முகாம்

கெத்தேசால் உயரம் 1224 அடி. அட்ச ரேகை:.11.7;தீர்க்க ரேகை:077
.
கெத்தேசால் காட்டுப் பகுதி

  நீண்ட, அமைதியான, அடர்ந்த காடு 

கெத்தேசால் என்ற அழகான பசுமைசூழ் மலைக்கிராமம் ,இது  ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி.கடல் மட்டத்திலிருந்து1224 அடி உயரத்தில் இருக்கிறது. அடர்ந்த காடு. கெத்தேசால் சத்தியமங்கலத்திலிருந்து 27 கொண்டை ஊசி வளைவுகளைத்தாண்டி, 44 கி.மீ தொலைவில் உள்ளது.
 கெத்தேசால் கிராமத்துக்கு, கொள்ளேகால் செல்லும் சாலையிலிருந்து போகும் மண்பாதை. அரசு அம்மக்களுக்கு ஒரு தார் சாலை கூட போடவில்லை. அவர்கள் ஓட்டும் போடவில்லை
. 
இங்கு சோளகர்கள் என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர்.இங்குதான் சந்தன வீரப்பன் இந்த கிராம மக்கள்மீது கோபம் கொண்டு 7 பேரை வெட்டிப்போட்டானாம். அதன்பின்னர்தான் அரசு இந்தக் கிராம மக்களிடம், கருணை கொண்டு,கெத்தேசால் பள்ளி வளாகத்தின், 100 ஆண்டு ஓர் அத்தி மரம்  உண்டு உறைவிடப் பள்ளியைக் கட்டி,அங்கு வாழும் மக்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தந்து ஒரு நிரந்தர ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலத்தை அவர்கள் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தலாம், உழுது பயிரிடலாம். ஆனால் விற்பனை செய்ய உரிமை இல்லை. இதுதான் வனப்பகுதி செட்டில்மென்ட். 
      காட்டு விவசாயம். நீர் பாய்ச்சுவதில்லை.
  சோளகர் குடும்ப மளிகை கடைக்காரர், மங்கிலியுடன்.

சோளகர் வீடு

கெத்தேசால், உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி

விவ்சாயம் பார்த்து சோளகர் குடிசை

     கெத்தேசால் கிராமத்தில் 120 குடும்பங்கள் வாழ்கின்றன. எல்லோருக்கும் காட்டுப் பகுதி விவசாயம்தான் தொழில். அந்த ஊரில் 8 ம் வகுப்புவரைதான் படிப்பு. மேலே படிக்கவேண்டுமானால், 40 கி.மீ கீழே இறங்கி சத்தியமங்கலம்    போக வேண்டும். இந்த மக்கள் மழையை நம்பித்தான் விவசாயம் செய்கின்றனர்.இயற்கைவிவசாயம்தான்.

சோளகர் குடும்பத்தின் குளியலறை.. சேலை மறைப்புடன்.. குடத்துடன்.. 

நீங்கள் 10 பேர் சேர்ந்து போய்விட்டால், மக்கள் பயந்து போய் ஓடிவிடுகின்றனர். அவ்வளவு மிரண்டு போயிருக்கின்றனர்; பாதிக்கப்பட்டிருக்கின்றனர்  நமது பாதுகாப்பு காவல் துறையினரால்..! அவர்களின் காயத்தின் வலி இன்னும் குறையவில்லை. அம்மக்களின் மேல் பாய்ந்த பாலியல் ரணமும், அதன் தழும்பும் இன்னும் ஆறாத தடங்களாய் இருக்கின்றன. அச்சத்தின் விளிம்பிலேயே வாழ்கின்றனர். இளம்பெண்களை அலாக்காக தூக்கிப் போய்விடுவார்களாம். அதனால், எங்களைப் பார்த்தும் பயந்துபோய் கதவைத் சாத்தினர். இவர்களுக்கு பெரிய நோய் எதுவும் வந்ததும் கிடையாது; பெரிய மருத்துவ மனைக்குப் போய் மருத்துவம் பார்த்ததும் இல்லை. எல்லாமே இயற்கை வைத்தியம்தான்.பெரிதான ஆசைகள், கனவுகள், கற்பனைகள் இல்லை. ரொம்பவும் வெள்ளந்தியான மக்கள். 

கெத்தேசால் ஊரில், குடிநீருக்காக..சுனைநீர் எடுக்கச் செல்லும் தாழ்வான, ஒளி குன்றிய சுனை உள்ள இடத்திற்கு செல்லும் வழி 

அரசின் நீர்க்குழாய்கள் இல்லை. சுனைநீரும் லாரி கொண்டுவரும் நீரும்தான். அரசு வண்ணத்தொலைக் காட்ட்சி இருக்கிறது.

    தரையில் அமர்ந்து,கால் நீட்டி, விவாதம் 

விவாத இடைவேளையின்போது உரையாடல். பழனி சத்தீஸ்வரி, பேரா.மோகனா, பேரா. விஜய்குமார், பாறையின் மேல் உட்கார்ந்து இருக்கும் பழையவாசனைக்காரர், சென்னை சிலம்பரசன், தரையில் சேலம் வெங்கடேசன்(கடைசியில் இருப்பவர்)

 மரத்தடியில் புத்தக வாசிப்பும், விவாதமும்
 அவரவர் விருப்பம்போல் அமர்ந்து வாசித்து, விவாதம்

 பேரா. விஜயகுமார், பேரா. ராஜூ &தோழர் சுந்தர் 

இந்த கிராமத்தில்தான், பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கித்தான், 3 நாட்கள் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில புத்தக வாசிப்பு முகாம், ஈரோடு மாவட்டம் சார்பில் நடத்தப்பட்டது. ரொம்ப முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? இங்கு நீங்கள் அலைபேசி மூலம் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது நண்பரே..! அப்பாடா குடும்ப பந்த்தத்திளிருந்து இரண்டு நாள் விடுதலையா? .குழந்தைகளுக்கான புத்தகங்களான, முதல் ஆசிரியர், வாசித்தாலும் வாசித்தாலும் தீராத புத்தகம் (இயற்கையை நேசித்தல் தொடர்பாக..அறிதல் தாக்கமாக),எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கிட்டீங்க(ஷாஜகான்) 

எழுத்தாளாரும், நகைச்சுவை பேச்சாளரும், கவிஞருமான ஷாஜகான்
  
பள்ளிக் கூட தேர்தல், டோட்டோசாண்(ஜன்னலில் ஒரு சிறுமி), ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.. போன்ற புத்தகங்கள் கூட்டாக வாசிக்கப்பட்டு விவாதம் செய்யப்பட்டன. இதில் குழந்தைகளை நேசித்தல், அவர்களைப் புரிந்து கொள்ளுதல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல், குழந்தை மலர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுதல், அவர்களின் குறும்புகளை ரசித்தல், அதன் பின்னணியிலுள்ள அவர்களின் தேடல், அறிவு போனவற்றை தெரிந்து நடப்பதற்காக ஆசிரியர்களுக்கு உணர்த்த வேண்டிதான் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
     முகமது அலி வகுப்பு எடுக்க, பார்வையாளர்கள்

 பேரா. முருகேசன்,பார்வைத்திறன் இழந்தவர். 

பேரா.செல்வம், பார்வைத்திறன் இழந்தவர்

 சிறப்புரை;முகமது அலி.. வகுப்பறையில் பங்கேற்பாளர்கள்.


 மே 17, காலை 6.30 மணிக்கு, எங்களுக்கு வரடீ தயாரித்து கொடுத்த சமையல் கலைஞர், குப்புசாமி நடுவில்.. அவரின் இரு புறமும்,தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் முனைவர்.மணி(கோடு போட்ட பனியன்), இடது கோடி, பாரதி புத்தகாலய பொறுப்பாளர் நாகராஜ்..கையில் தேநீர் கோப்பையுடன்

 வாசிப்பு முகாமில்  74 மனித  நேயர்கள் பங்கேற்றனர். இந்த முகாமில் ஓர் அற்புதமான ஒரு முரண்தொடை இருந்தது.! என்ன தெரியுமா?  வாசிப்பு முகாமின் பங்கேற்பாளர்களில், 6 பேர் மாற்றுத்திறனாளிகள்  /பார்வைத் திறனற்றவர்கள்.பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள். அவர்களில் இருவர் கல்லூரிப் பேராசிரியர், ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியர்.மூவர் ஆசிரியர்கள், இவர்கள் அனைவரும் மாணவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்களில் ஒருவரான ஆத்தூர் அரசுக் கல்லூரிப் பேராசிரியர் முருகேசனைப் மாணவர்கள் பக்கம், பக்கமாய் பாராட்டி குவித்திருக்கின்றனர். அவர் பிறந்ததும் அவரைக் கொல்ல குடும்பத்தினர் திட்டமிட்டனராம். அவரது தந்தையும், தாயும் அந்த யோசனைக்கு ஒத்துக் கொள்ளாமல், அவரைக் காப்பாற்றி வளர்த்தனராம். அவரின் தாய், முருகேசனை அணுவளவும் பிரியமாட்டாராம். காரணம்  , கொஞ்சம் பிரிந்தாலும், குடும்பம் அவரைப் போட்டுத் தள்ள திட்டமிட்டு இருந்ததாம்.அவரது விளையாட்டுத்தோழர்கள் கல்லும், குச்சியும்தான். இவைகளுடன்தான் இவர் பேசுவாராம். 9 வயதில்தான் பள்ளி சென்றார் ஒரு பெரியவர் உதவியுடன். மற்ற ஆசிரியர்கள் செய்யாத அளவு மாணவர்களிடம், அறிவுபூர்வமாக  பல உதவிகள் செய்வாராம். முகேசனின் துணைவியும் பார்வை இழந்தவரே..! அவர்களின் பெண்மகவு.. அழகான கயல் விழியுடன் உருட்டி உருட்டி விழித்து பெற்றோரை தனது கொஞ்சு மொழியால் அன்பால் கட்டிப் போடுகிறது..! 
           எழுத்தாளர் ச. தமிழ்செல்வன்

  பேரா. விஜயகுமார், பேரா.ராஜு, பாரதி புத்தகாலய நாகராஜ், பேரா.மோகனா

 புதிய ஆசிரியன்

 எழுத்தாளர். கமலாலயன்

 அமர்ந்திருப்பது முகமதுஅ லி. பேசுவது முனவர்,பேரா. மணி

 முகாமுக்கு பாரதி புத்தகாலயம் நாகராஜ், எழுத்தாளர், பேச்சாளருமான கமலாயன்,ஷாஜகான் & ச. தமிழ் செல்வன்,இயற்கையியளாளர் முகமது அலி,கல்வியாளர்கள் பேரா. ராஜு, விஜயகுமார், தமிழ் நாடு அறிவியல் இயக்க செயலாளர் பேரா. மணி(ஒருங்கிணைப்பு) மற்றும் மோகனா கலந்துகொண்டனர்.

 
சந்தோஷக் களிப்பில் சூர்யா..! ஒருங்கிணைப்பாளர் மணியின் மகவு. இவர் குடும்பத்துடன் வந்திருந்தார். மூன்று நாள் வீட்டில் சாப்பாட்டுக் காசு மிச்சம்.
இதில் குழந்தைகள் 8 பேரும் இருந்தனர். குழந்தைகளுக்காக செய்யப்பட்ட அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா, போன்றவை அவர்களை களிப்பில் ஆழ்த்தின.காலை வானில் தெரிந்த செவ்வாய்,புதன், வியாழன், வெள்ளி கோள்களையும், மாலையில்  சனி கோளையும் பங்கேற்பாளர்களுக்கு காண்பித்தோம். அது மட்டுமல்ல..!

 
கெத்தேசாலின் விடிகாலை நேரம். அனைவரும் இருகண் நோக்கி மூலமும், தொலைநோக்கி மூலமும்,ட்தொடுவானின் அருகே பளிச் சென தெரியும், வெள்ளிக் கோளையும், கொஞ்சம் உயரே வெள்ளையாய் தெரியும் வியாழனையும், வெள்ளிக்கு கீழே தெரியும் புதனையும், வெள்ளி வியாழனுக்கு இடையே தெரிந்த செவ்வாயையும் பார்த்துப் பரவசித்தோம்.கிழக்கு வானில் தெரியும் வெள்ளி கோள் 

அது மின்னொளி அதிகம் இல்லாத கிராமமாகையால், நமது சூரிய குடும்பம் வசிக்கும்/இருக்கும் பால்வழி மண்டலத்தையும் பார்த்து மகிழ்ந்தோம். இது ஓர் அரிதான நிகழ்வே..!

தரையில் மேடு பள்ளமான இடத்திலேயே உணவு பரிமாறல்

இந்த பதிவை கணினியில் ஏற்ற, இந்த பதிவு மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் சொல்லும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி 


இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை - நிறை குறை - பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  எங்களை சீர்திருத்திக் கொள்ள உதவும்.  உங்களது பெயரை Followers  Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்கள்.

உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் அடுத்தடுத்து பதிவு போடும்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

மிக்க நன்றி.

47 கருத்துகள்:

 1. அருமையான பதிவு, படங்கள் நன்று, இந்த கிராமத்தை இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன், பகிர்வுக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 2. புத்தக வாசிப்பு இயக்கம் பற்றி பகிர்ந்ததற்கு நன்றி..
  முகாமுக்கே கூடி சென்றுவிட்டீர்கள்...

  பதிலளிநீக்கு
 3. விரிவான தகவல் பகிர்வுங்க. அருமையான படங்களுடன் தந்து இருப்பது, மேலும் மெருகூட்டுகிறது. Simply Superb!

  பதிலளிநீக்கு
 4. மிக அருமையான விஷயம் சத்தமில்லாமல் நடந்திருக்கிறது.... சந்தோஷமாக இருக்கிறது...

  நேரில் அங்கு வந்து கலந்துக்கொண்ட மாதிரி உணர்கிறேன் ஐயா...

  அருமையான படங்களுடன் கட்டுரை பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஐயா...

  பதிலளிநீக்கு
 5. அருமையான படங்களும் அறிமுகங்களும்.
  பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. இன்றைய தினம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைத்துள்ள நிலையில்
  இப்படிப்பட்ட பதிவு மிக அவசியம் ஐயா
  பதிவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. மிக அருமை ஐயா.. மோகனாம்மாவுக்கு வாழ்த்துக்கள்..:)

  பதிலளிநீக்கு
 8. படங்களும் பதிவும் அருமை ஐயா, நானும் அதில் இருந்தது போல் ஒரு உணர்வை எற்படுத்தி விட்டது படங்கள்

  பதிலளிநீக்கு
 9. வணகக்ம் ஐயா,
  நல்லதோர் பதிவு, ஊர்மணங் கமழும் வண்ணம் தொகுத்திருக்கிறீங்க.

  பதிலளிநீக்கு
 10. மிகவும் அருமை சார்.. நானே அங்கு இருந்து அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பது போல் இருந்தது படங்களும் கருத்துகளும்.. நல்ல முயற்சி மற்றும் பாராட்டுகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினருக்கு..

  பதிலளிநீக்கு
 11. அருமையான சமூக சேவை .இவர்களை நிட்சயம் பாராட்டவேண்டும் .
  மிகத் தெளிவான படங்களோடு எழுதிய ஆக்கம் அருமை ஐயா வாழ்த்துக்கள் .
  நன்றி பகிர்வுக்கு ...

  பதிலளிநீக்கு
 12. படங்களும் பதிவும் நாங்களும் அங்கியே இருப்பது
  போல உணற முடிந்த்து.

  பதிலளிநீக்கு
 13. இது போன்ற முகாம்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடிகிறது. குழந்தைகளை புரிந்து கொள்ளும் ஆசிரியர்கள்தான் இன்றைய தேவை. மிக அருமையான பதிவு. புகைப்படங்கள் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 14. கெத்தேசால் கிராமம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன், ஐயா.
  நல்ல படங்களுடன் அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 15. அருமை அனைத்தும் அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ரத்னவேல்ராஜன் அவர்களே..! எங்கள் தமிழ்நாடு இயக்கம் நடத்திய வாசிப்பு முகாமை.. எனது கட்டுரை மற்றும் படங்கள் மூலம் தங்களின் வலைப்பூ வழியாக மக்களுடன் பகிர்ந்தமைக்கு கோடானு கோடி நன்றிகள். அறிவியல் இயக்கம் இன்னும் ஏராளமான செயல்களை சமூக மாற்றத்திற்காகவும்,முன்னேற்றத்திற்காகவும் செய்கிறது அவற்றுள் சிலவற்றை மட்டும் நான் பதிவு செய்கிறேன். மிக்க நன்றி நண்பரே.. என்றும் அன்புடன், மோகனா, பழநி.

  பதிலளிநீக்கு
 17. அருமையான விடயம் ஐயா கிராமத்துப் படங்கள் சூப்பர்!

  பதிலளிநீக்கு
 18. படங்கள் மிக அருமை. குளிர்ச்சி தெரிகிறது. வாய்ப்புக் கிடைத்தால் போய் அம்மக்களுக்கு நம்மாலான ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 19. I am recollecting my early days from this post:since 1985 to 1995; I travelled whole India to remote places and outreached areas. even in Tamilnadu:kalrayan hills;servarayan hills-5500ft from sea level ; 3924ft palamalai from sea level;Arunooththumalai; etc. even I had dvd on it it was converted from video cassette..thank you for the best effort.

  பதிலளிநீக்கு
 20. அருமையான பதிவு அதிலும் படங்களை பார்க்கும்ப்போது நாங்களே அவ்விடத்தில் நிற்பதுபோல் உள்ளது.. ஆண்டை 2001 என்று போட்டிருக்கிறீர்களே.. தவறுதலாய்த்தானோ..??

  பதிலளிநீக்கு
 21. மலைவாழ் மக்களிடம் அறிவியல் படிப்பினை கொண்டு சேர்த்ததில் மிக்க மகிழ்ச்சி.இயற்கை எழில் கொஞ்சும் மலைக்கிராமத்தில் இயற்கை+அறிவியல் அறிவுசார் படிப்பு.... பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள் ஒருங்கிணைப்பு குழுவினர்க்கும், பகிர்ந்த உங்களுக்கும்....

  பதிலளிநீக்கு
 22. அருமையான பதிவு ஐயா.சிறப்பான தகவல்களை அழகாகத் தொகுத்து அளித்துள்ளீர்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 23. அது மின்னொளி அதிகம் இல்லாத கிராமமாகையால், நமது சூரிய குடும்பம் வசிக்கும்/இருக்கும் பால்வழி மண்டலத்தையும் பார்த்து மகிழ்ந்தோம். இது ஓர் அரிதான நிகழ்வே..!/


  உலகம் எங்கோ வளர்ந்தாலும் இப்படியும் இருக்கு ஒருபக்கம்..
  வேதனையாகவும் இருக்கிறது..
  நல்ல படங்களுடன் பதிவு நல்லாயிருக்குங்க...
  பகிர்வுக்கு அன்புடன் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 24. கிராமம் ஓர் அழகு..
  புல்வெளியில் சேர்ந்திருந்து அரட்டை அடிப்பதற்கும் புதிய மகிழ்வைத்தருவதும் கிராமம் போல எதுவும் வராது ..சில படங்கள் மனசை கொள்ளை கொண்டது..

  பதிலளிநீக்கு
 25. அன்புள்ள ஐயா,

  அருமையான படங்களுடன்... சிறப்பான விளக்கத்துடன்... எங்களுக்கு அளித்து நாங்களும் உங்களோடு பயனித்து மகிழ்ந்த அனுபவத்தை அள்ளி தந்து உள்ளீர்கள்...

  உங்களுக்கும் உங்களுக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி...

  மோகனா அம்மா அவர்களுக்கு என் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 26. படங்கள் அருமை.. கிராமத்திற்கு போய்ட்டு வந்த உணர்வு

  பதிலளிநீக்கு
 27. படங்களும் செய்தியும் மனதைக்கவர்ந்தது .பாராட்ட வேண்டிய பணி.

  பதிலளிநீக்கு
 28. மிக அருமை ஐயா.. மோகனாம்மாவுக்கு வாழ்த்துக்கள்..:)

  பதிலளிநீக்கு
 29. இந்த கிராமமும் இந்தியாவில்தான் இருக்கிறது. நமது சீர்திருத்தவாதிகள் இங்கு செல்லவேண்டும்.

  அருமையான, ஆனால் சோகத்தைக் கூட்டும் பதிவு. இவர்களின் நிலையைப் பார்க்கும்போது நான் வாழும் நிலை பற்றி ஒரு குற்ற உணர்வு தோன்றுகிறது. படங்கள் இயற்கையை நன்கு காட்டுகின்றன.

  பதிலளிநீக்கு
 30. கூகுள் பஸ்ஸில் பகிர்ந்துள்ளேன். கந்தசாமி அய்யா சொன்னது போலவே நானும் சமீப தெகாவுடன் கூடிய சுற்றுப்பயணத்தில் இந்த கிராமங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. பல மக்களுடன் பேசும் போது இன்னும் 50 ஆண்டுகள் ஆகலாம். இவர்கள் வளர்ச்சியடைய. வருகின்ற பணமெல்லாம் பலரின் பைக்கு போய் விடுகின்றது என்பதும் உண்மை. மக்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். புகைப்படங்கள் அற்புதம்.

  பதிலளிநீக்கு
 31. அய்யா,
  இந்த கட்டுரையை படிப்பவர்கள் ,அனைவரது மனதிலும் ,சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவது போல் அமைந்துள்ளது .மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 32. கெத்தசால் கிராமத்திற்கே நேரே சென்றது போன்ற எண்ணம் இந்த படங்களுடன் கூடிய விரிவான விளக்கத்தை படித்ததும் ஏற்பட்டது.படங்களின் கீழே தரபட்டிருக்கும் குறிப்புகள் அருமை.

  நான் மிகவும் இரசித்தது. //கெத்தேசால் கிராமத்துக்கு, கொள்ளேகால் செல்லும் சாலையிலிருந்து போகும் மண்பாதை. அரசு அம்மக்களுக்கு ஒரு தார் சாலை கூட போடவில்லை. அவர்கள் ஓட்டும் போடவில்லை//

  எனது பாராட்டுக்களும்,வாழ்த்துகளும் உங்களுக்கு,ம் திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 33. விரிவாக விளக்கமாகப் பல விடயங்களை இக்கட்டுரை மூலம் கண்டும் வாசித்தும் உணர்ந்தேன். பால்வழி மண்டலத்தைக் கண்டதாகக் குறிப்பிட்டிருக்கின்றீhகள். நல்ல விடயம் உங்கள் பகிர்வுக்கு வாழ்த்துகளும் நன்றியும் மனமுவந்து கூறுகின்றேன்.

  பதிலளிநீக்கு
 34. பகிர்வுக்கு நன்றி. சில புகைப்படங்கள் ஓப்பன் ஆகவில்லை. இம்மாதிரி நிகழ்வுகள் நடப்பதே பலருக்கும் தெரியாது. மீண்டும் நன்றி.

  பதிலளிநீக்கு
 35. அழகான படங்களை எடுக்கும் திறமையான புகைப்படக் கலைஞராகவும் மாறிவிட்டீர்கள். குளிர்மையான மண்ணின் வாசனை இன்னமும் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 36. அருமையான சேவை.

  அழகாக புகைப்படங்கள் மனதை கவர்கிறது.

  பதிலளிநீக்கு
 37. பகிர்வுக்கு மிக்க நன்றி. படங்கள் யாவும் அருமை.

  பதிலளிநீக்கு
 38. Great to know abt yr service to students. Superb narration & nice photos.

  A.Hari
  http://inspireminds.in/

  பதிலளிநீக்கு
 39. வணக்கம் ஐயா, என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (2/11/11 -புதன் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/ நன்றி.

  பதிலளிநீக்கு
 40. Migavum arumai....
  Padangalum seidhigalum manadhil oru pudhu uthvegathai koduthulladhu.........
  Nandri...

  பதிலளிநீக்கு