செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

குழந்தைபொம்மை கட்டமைப்பில் நச்சுப் பொருள்..?

அறிவியல் கட்டுரைகள் 
பாகம்- 1

திருமதி எஸ்.மோகனா அவர்களின் வானியல் கட்டுரைகள் இரண்டு வெளியிட்டோம்.  நாங்கள்  இது வரை எழுதிய பதிவுகளில் அவர்களது இரண்டாவது கட்டுரைக்கு தான் அதிக எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் வந்தன என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர்கள் வானியல் மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் நிறைய எழுதியிருக்கிறார்கள்.  குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பொம்மைகளில்  உள்ள ரசாயனப் பொருட்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்கள். அந்த கட்டுரையை 'அறிவியல் - 1' என்ற தலைப்பில் வெளியிடுகிறோம். இந்த கட்டுரை அவர்கள் முகநூலில் அவர்களது பக்கத்தில் 7.10.2010 அன்று வெளியிட்ட கட்டுரை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  இந்த கட்டுரையை வெளியிட அனுமதி கொடுத்த திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


குழந்தைபொம்மை கட்டமைப்பில் நச்சுப் பொருள்..?

நம் குழந்தைகளுக்கு நாம் சந்தோஷமாய் பொம்மைகளை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறோம். ஆனால் அதிலுள்ள வேதிப் பொருள்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்று நமக்குத் தெரிவதில்லை. நம் அரசும் அதனைப் பற்றி கவலையோ, அக்கறையோ கொள்வதில்லை.அதற்கான எந்த கொள்கை முடிவும் கிடையாது. அவரவர்  பெட்டி  நிரம்பினால் போதும் என்பதே அவர்களின் கொள்கை.மக்களின் உயிர் பற்றிய எண்ணம் என்பது கிஞ்சித்தும் கிடையாது. 


குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பொம்மைகள், நாம் பயன் படுத்தும் நெகிழிகளில்,அவை வளையும் படியும், கொஞ்சம் ஒளி ஊடுருவும்படியும் இருப்பதற்காக சில வேதிப் பொருள்கள் கலக்கப் படுகின்றன.

அவைகளில் முக்கியமானவை  தாலேட் (Pthalate) மற்றும் பிஸ்பினால் A ( BIsPhenol A). இவைகள் நம் உடலுக்கு முக்கியமாக பிஞ்சுகளின் பஞ்சு மேனிக்கு தீங்கு விளைவிப்பவை யாகும். நம் குட்டிகள் பல் முளைக்கும் பருவத்தில் அவைகள் கடிப்பதற்காக சில நெகிழி பொம்மைகளைநாம் அன்பை முக்கி,  வாங்கி கொடுக்கிறோம்.அவை நம்  ஆசை செல்வங்களுக்கு தரும் துன்பத்தை அறியாமலேயே. ! அதிலுள்ள வேதிப் பொருள்கள் குழந்தைகளின்  வளர்ச்சியைகுறைக்கின்றன: நரம்பு மண்டலத்தில் சில சரி செய்ய முடியாத பிரச்சனைகளை உருவாக்கு கின்றன; அத்துடன் சில புற்றுநோய் காரணிகளையும் தானமாகத் தருகின்றன என ஆராய்ச்சி தகவல்கள் சொல்வதாக,அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இப்படிப்பட்ட்ட வேதிப் பொருள்கள் உள்ள முக்கியமாக பிஸ்பினால் A உள்ள குழந்தை பொம்மைகளை முதலில் 2007 லேயே தடை செய்தது கனடா அரசுதான். பின் ஐரோப்பிய யூனியன்  , பிரான்சு, அமெரிக்க அரசுகள் தடை செய்துள்ளன. இதைப் பற்றி நம் இந்திய அரசு மூச்சு கூட விடவில்லை.

  நம் இந்திய அரசுக்கு இப்போதுதான் இது பற்றிய ஞானோதயம் பிறந்துள்ளது. நம் அரசு  2009  நவம்பரில் 11 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி உள்ளது. இக்குழு  இந்திய மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப் பட்டு இந்தியாவில்  பயன் படுத்தப் படும்,குழந்தை பொம்மைகளில் உள்ள  நச்சுப் பொருட்களை முக்கியமாக, கன உலோகங்களை ஆராய்வதற்கான சோதனைகளை செய்யும். இந்த சோதனைகள் இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 2 ,800௦௦ கம்பெனிகளின் பொம்மைகளில்  ,( சாதாரண சின்ன கடையில் இருந்து, பெரிய சூப்பர் மார்கெட்டில் உள்ளது வரையிலான பொம்மைகளை )சோதனை செய்யும்.   இந்த தகவலை, தேசிய உணவு நிறுவனத்தின் துணை இயக்குனரான B.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த சோதனை 2010௦,அக்டோபர் முதல் துவங்கப்படும். இக்குழுவில் அகமதாபாத்தின்,தேசிய தொழில் நிறுவனம், ஹைதராபாத்தின் தேசிய உணவு நிறுவனம் மற்றும் டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்ளனர்.

பொம்மைகளை சோதனை செய்யும் குழு எவ்வாறு உருவாக்கப் பட்டது தெரியுமா? குழந்தை பொம்மைகளில் உள்ள நஞ்சு மற்றும் கன உலோகங்கள் பற்றியும், அதன் பிரச்சினை மற்றும் சிக்கல் பற்றியும் சில தன்னார்வல இயக்கங்கள் அரசு மாற்றும் நீதி மன்றத்திடம் புகார் செய்தன. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சோதனை செய்தது. அதன் விளைவாக ஓர் உத்தரவை மைய அரசுக்கு போட்டது. அந்த உத்தரவின் படியே பொம்மைகளில் உள்ள கன உலோகங்களை ஆராய்ந்து  அதனை  கட்டுப் படுத்த வேண்டும். இல்லையெனில் இந்த நச்சுப் பொருற்கள், பிஞ்சுகளின் வாய் வழியே சென்று, உடலின் பல பகுதிகளுக்கும் சென்றுவிடும். குழந்தைகளுக்கு இரத்த சோகையை உண்டாக்கும்;வளர்ச்சி பாதிக்கப்படும். உடலுக்குள் உள்ள உறுப்புகளை, குறிப்பாக நரம்பு மண்டலத்தில் , சரி செய்ய முடியாத சிதைவுகளை உண்டாக்கும் என அறியப்பட்டுள்ளது. பொம்மை சோதனை செய்யும் கருவி ஜெர்மனியில் இருந்து வரவழைக்கப்  பட்டுள்ளது.இதன் விலை ஒரு கோடி ரூபாய் என திட்ட பொறுப்பாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்

குறிப்பு: இது ஏதோ குழந்தைகள் பொம்மைகளில் மட்டும்தான் இருக்கிறது என எண்ண வேண்டாம். ஒளி ஊடுருவும் அனைத்து வகை நெகிழிகளிலும்  உள்ளது. முக்கியமாக, மருத்துவ மனைகளில் பயன்படுத்தப் படும், ஊசி போடும் குழாய்கள், குளுகோஸ் மற்றும் இரத்த குழாய் சிரைகள் மூலம் மருந்துகள் செலுத்தப்படும் அனைத்துவகையான பைகளிலும் பிஸ்பினால் A மற்றும் தாலேட் உள்ளது. 


வேறு வழியே இல்லாமல்,நோயாளிகளின் உயிர் காக்கும் செயலுக்காகவும், இந்த ஒளி ஊடுருவும் தன்மைக்காகவும்  இதனை பயன்படுத்த வேண்டி உள்ளது. ஒரு முறை பயன் படுத்திய பின் இவற்றை தூர வீசி எறிய வேண்டியது அவசியமாகும். மேலும் கூடியவரை குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாட்டில் கண்ணாடியில் இருப்பது நலம். நான் பார்த்தவரை  ராமகிருஷ்ணா போன்ற மருத்துவ மனைகளில் குளுகோஸ் கண்ணாடி பாட்டில் களிலேயே கொடுக்கப் படுகிறது. நீங்களும்  கூட மினரல்  தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பத்திரப் படுத்தி பயன்படுத்த வேண்டாம். நெகிழி பொருள்களில் ௧-௪ என்ற என போட்ட பொருள்கள் கொஞ்சம் பாதுகாப்பானவை என தெரிகிறது. 


இந்த பதிவை கணினியில் ஏற்ற, இந்த பதிவு மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் சொல்லும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை - நிறை குறை - பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  எங்களை சீர்திருத்திக் கொள்ள உதவும்.  உங்களது பெயரை Followers  Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்கள்.

உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் அடுத்தடுத்து பதிவு போடும்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.

மிக்க நன்றி.

51 கருத்துகள்:

 1. நல்ல அறிவியல் விழிப்புணர்வு பதிவு...

  பதிலளிநீக்கு
 2. தேவையான விழிப்புணர்வுப் பதிவு.
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான விழிப்புணர்வு பதிவு.
  தொடருங்கள் .
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு , இது போன்ற விழிப்புணர்வு பதிவுகள், அதிகம் பேருக்கு சென்றடைய வேண்டும்,

  பதிலளிநீக்கு
 6. கேட்டவே பயமா இருக்கு, வன்மையாக இதை எதிர்க்கணும்

  பதிலளிநீக்கு
 7. விழிப்புணர்வு ஊட்டும் தரமான பதிவு
  கட்டுரையைப் படைத்த திருமதி மோகனா அவர்களுக்கும்
  எங்களுக்கு பதிவிட்டுக் கொடுத்த தங்களுக்கும்
  மனமார்ந்த நன்றி
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 8. ஒவ்வொருவரும் கட்டாயமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று. பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 9. கண்டிப்பாக பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு. இது பற்றிய விழிப்புணர்வை வட இந்தியாவில் மருத்துவர்களே செய்கிறார்கள். மும்பையில் எங்கள் குட்டிம்மாவை தடுப்பூசி போட மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, துணியால் செய்த பொம்மைகளை குழந்தைக்கு விளையாட தரலாம் - சென்ற விசயத்திற்கு தொடர்பில்லாத கூடுதல் தகவல்- என்றார்கள். இது போல் இங்கேயும் (கிராமத்தில் கூட) மருத்துவர்கள் தாமாகவே விழிப்புண்ரவை ஏற்படுத்தலாம். பகிர்விற்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 10. தேவையானதோர் விழிப்புணர்வு இடுகை.. பகிர்ந்த உங்களுக்கு பாராட்டுகள்..

  எங்கும் ப்ளாஸ்டிக், எதிலும் ப்ளாஸ்டிக்கால் வந்த வினைதான் இது :-(

  பதிலளிநீக்கு
 11. Guess we should go back to Marapachi Bommai and Panai Mattai Vandi !!

  பதிலளிநீக்கு
 12. நன்றி ஜி , சமூக விழிப்புணர்வுடைய பயனுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 13. அருமையான பதிவு!

  வந்து கருத்துரை வழங்கினீர் நன்றி!

  பதிலளிநீக்கு
 14. அறிவியல் பூர்வமான விழிப்புணர்வு பதிவிற்கு பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 15. அருமையான விழிப்புணர்வு தரும் கட்டுரை ஐயா....

  கண்டிப்பாக எல்லா தாய்மார்களும் கவனிக்க வேண்டிய நல்ல விஷயம் இது....

  பதித்த மோகனா மேடம் அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் என் அன்பு நன்றிகள் ஐயா...

  பதிலளிநீக்கு
 16. நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு... குழந்தைகளுக்கு கண்ணாடி போத்தலில் பால் கொடுப்பதாய் இருந்தால் கவனமாய் இருத்தல் அவசியம் அத்துடன் பிளாஸ்டிக் போத்தல்களை குப்பையில் எறியாது மறு சுழற்சிக்கு பயன் படுத்துவதே சிறந்தது...

  காட்டான் குழ போட்டான்..

  பதிலளிநீக்கு
 17. விழிப்புணர்வளிக்கும் பதிவு
  தொடர்க.

  பதிலளிநீக்கு
 18. நெகிழிகளில்

  நல்ல கலைச் சொல்லாக்கத்தைப் பயன்படுத்தியமைக்கு முதலில் என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 19. குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கிக்கொடுக்கும் பொழுது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.பிளஸ்டிக்கினால் ஆன பொருட்களை தவிர்த்து, லேசான மரங்களில் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

  நல்ல விழிப்புணர்வு பதிவு ஐயா,பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. நல்ல விஷயம். அருமையான பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
 21. பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு.பகிர்வுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 22. மதிப்பிற்குரிய அய்யா ,
  தங்களின் பதிவு ,ஒரு நல்ல படிப்பினையை கற்று தருவது போல் உள்ளது .மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 23. அவசியம் படிக்கவேண்டிய பயனுள்ள பதிவு.

  பதிலளிநீக்கு
 24. மருத்துவ உபயோக பொருட்களிலும் இந்த நச்சுப்பொருள்கள் இருப்பதை தவிர்க்கவே முடியாதா?

  பதிலளிநீக்கு
 25. நல்ல தரமான விளையாட்டு பொருட்களை எவ்வாறு இனங்காணுவது?

  பதிலளிநீக்கு
 26. இது மிகவும் அவசியமான பதிவு...
  படிக்கும்போதே பொம்மைகளை வாயால் கடித்து விளையாடிப் பார்த்தப் பல குழந்தைகளின் முகங்கள் நினைவில் தோன்றி மறைந்தது.... இதைப் போன்ற விஷயங்களை விட்டுவிட்டு சினிமாவில் சிகரெட் பிடிக்கும் நாயகர்களைத் திருத்தத் துடித்தது நமது ஹெல்த் மினிஸ்ட்ரி.... வேதனையா இருக்கு.. :-(

  பதிலளிநீக்கு
 27. பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.....

  பதிலளிநீக்கு
 28. தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ,பகிர்வுக்கு நன்றி .

  பிஞ்சுகளின் கைகளில் நஞ்சு என்றே சொல்லலாம் போலுள்ளது .

  விழிப்புணர்வு கட்டுரை

  பதிலளிநீக்கு
 29. முக்கியமான விழிப்புணர்வு பதிவு.தொடருங்கள்.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. உங்கள் பயணம் தொடர்ந்து நடக்கட்டும். நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 31. எங்கும் ப்ளாஸ்டிக், எதிலும் ப்ளாஸ்டிக் என்று வந்த
  தினால் இப்படி பிஞ்சுகளுக்கும் பிரச்சினைகள்.பெரிய
  வங்கதான் கவனமுடன் இருக்கணும். நல்லவிழிப்
  புணர்வு பதிவு.

  பதிலளிநீக்கு
 32. மிக அவசியமான, விழிப்புணர்வு ஊட்டக்கூடிய பதிவு. பார்வைக்கு கொணர்ந்தமைக்கு நன்றிகள் பல.

  ஒரே ஒரு நெருடல்.
  /நெகிழி பொருள்களில் ௧-௪ என்ற என போட்ட பொருள்கள் கொஞ்சம் பாதுகாப்பானவை என தெரிகிறது. / இவ்விடத்தில் ஆங்கிலத்தில் இருந்த எழுத்துக்களை தமிழ் படுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளதாய் கருதுகிறேன். தங்களது தமிழார்வத்தை மெச்சுகிறேன். அதே வேளையில் இது போன்ற பகுதிகளை ஆங்கிலத்திலேயே தருவதே வாசிப்பவருக்கு முழு பயன் அளிக்கும் விதத்தில் அமையும் என்பது என் தாழ்மையான கருத்து.

  வாழ்த்துக்கள் தோழரே !

  பதிலளிநீக்கு
 33. ஆபத்தான உலகில் எவ்வளவு அலட்சியமாய் நடமாடுகிறோம்

  பதிலளிநீக்கு
 34. மிகவும் பயனுள்ள கட்டுரையைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 35. விழிப்புணர்வு மிக்க ஒரு அவசிய பகிர்வு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 36. வருகைக்கும் வாழ்த்துக்கும்
  நன்றி!
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 37. விழிப்புணர்வு ஊட்டும் தரமான பதிவு
  கட்டுரையைப் படைத்த திருமதி மோகனா அவர்களுக்கும்
  எங்களுக்கு பதிவிட்டுக் கொடுத்த தங்களுக்கும்
  மனமார்ந்த நன்றி
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 38. பழைய காலத்து சாயம் பூசாத மரப்பாச்சி பொம்மைகள்தான் சிறந்தவை போல் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 39. ஆம், கண்ணாடி, சாயம் பூசாத மரப் பொம்மைகள் - மீண்டும் :-)

  பதிலளிநீக்கு
 40. மிக மிக பயனுள்ள பதிவு.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு