வெள்ளி, ஜூலை 15, 2011

வானியல் கட்டுரைகள்
பாகம்-1




திருமதி எஸ்.மோகனா  அவர்கள் face book இல், மற்றும் புதிய தலைமுறை பத்திரிக்கையில் வானியல் கட்டுரைகள் மிக அருமையாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.  face book இல் உள்ள கட்டுரைகளை எனது பக்கங்களில் நிறைய பகிர்ந்திருக்கிறேன்.  அவர்களை  நீங்கள் பதிவு எழுதலாம், நிறைய பேர் படிப்பார்கள் என்று தொலைபேசியில் சொன்னேன்.  அவர்கள் எனக்கு நேரமில்லை என்றார்கள்.  நான் தங்களது கட்டுரைகளை எனது பதிவில் போட்டுக் கொள்ள அனுமதி கேட்டேன்.  அவர்கள் மனப்பூர்வமாக அனுமதி கொடுத்து விட்டார்கள்.  எனவே அவர்களது கட்டுரைகளை பாகம் பாகமாக வெளியிடுகிறேன்.  face book இல் இருந்து எடுத்ததா? எந்த பத்திரிகையில் எடுத்தது என்ற தகவலையும் குறிப்பிட்டு விடுகிறேன்.

இந்த கட்டுரை 'புதிய தலைமுறை' 16.6.2011 இதழில் பக்கம் 56-58 பகுதிகளில் வெளியாகி இருக்கிறது. திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கும் 'புதிய தலைமுறை' பத்திரிக்கைக்கும் எங்களது மனப்பூர்வ நன்றி.

வியாழன் வந்திருக்காக, வெள்ளி வந்திருக்காக, மற்றுமுள்ள சுற்றத்தார்  எல்லாம் வந்திருக்காக.

கண்ணால் பார்க்கக் கூடிய அளவிற்கு சில கோள்கள் காலை வானில் தென்படுகின்றன.  இவற்றை நாம் வெறும் கண்ணால் ஜூன் 25 வரை பார்க்கலாம். இப்போது விட்டால் இவற்றை மீண்டும் 2040 இல் தான் பார்க்க முடியும்.

நீல வானின் அழகை ரசிப்பதென்றால் நமக்கெல்லாம் கொள்ளைப் பிரியம் தான்.  அதுவும், நொடியில் தன வண்ணத்தை மாற்றி மாற்றி அழகைக் கூட்டி நம்மைக் கிறங்கடிக்கும் விடிகாலை வானம் என்றால் கேட்கவே வேண்டாம்.  அந்தப் புலரும் காலைப் பொழுதில் இப்போது நமக்கு வேறொரு விருந்தும் நடந்து கொண்டிருக்கிறது.  நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள், வழக்கத்திற்கு மாறாக ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, வண்ணக் கோளங்களின் ஊடே நடனமாடுகின்றனர். அவர்கள் யார் தெரியுமா? செவ்வாய், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக் கோள்கள் தான்.  இவற்றை நாம் எந்தக் கருவியும் இன்றி வெறும் கண்ணால் இன்னும் 15 நாட்களுக்கு பார்க்கலாம்.

எங்க குடும்பம்  ரொம்பப் பெரிசு
 
சூரியக் குடும்பத்தின் நாயகன் பகலவன் தான்.  அதன் குடும்ப உறுப்பினர்கள் அதனை சுற்றித் தான் வருகிறார்கள்.  அதனை முதல் அடுக்கில் சுற்றி வரும் 8 கோள்கள், அவற்றின் துணைக் கோள்கள், அவற்றுக்கு அருகில் உள்ள குள்ளக்கோள்கள் (Dwarf planets), செவ்வாய், வியாழனுக்கு இடையே உள்ள astroid வளையத்தின் விண்கற்கள், கோள்களுக்கு அப்பால் உள்ள குயூபர் வளையம் (Quipper belt), அதனைத் தாண்டி உள்ள ஊர் மேகம் (Oort cloud), அதிலிருந்து புறப்பட்டு அவ்வப்போது வந்து சூரியனை தரிசித்து விட்டுச் செல்லும் வால் மீன்கள் (comets) எல்லாமாய் சேர்ந்தது தான் சூரியக் குடும்பம்.
 
சுற்றும் சூரியன்

அது சரி... எப்படி இந்தக் கோள்கள் காலை வானில் ஒரே நேரத்தில் ஊர்வலம் வருகின்றன?
ஒரு காலத்தில் சூரியன் தான், கடவுள் படைத்த பூமியை மையமாக வைத்து சுற்றுகிறது என நம்பிக் கொண்டிருந்தனர்.  ஆனால், நடக்கும் கதையே வேறு.  சூரியன் தான் தன் ஈர்ப்பு விசையால், தனது கோள்களையும் அனைத்து சூரியக் குடும்பப் பொருள்களையும் தன்னைச் சுற்றி வரச் செய்கிறது.  அனைத்தும் நீள் வட்டத்தில் சுற்றுகின்றன.  இதன் காரணம்,
சூரியக் குடும்பத்தின் 99.85% நிறையை சூரியன் தன்னகத்தே கொண்டுள்ளது தான்.  ஆனால், சூரியக் குடும்பக் கோள்களின் சுற்றுப் பாதையான நீள் வட்டம் ஒரே மாதிரி இல்லை.  ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு சாய் கோணத்தில் சுற்றுகின்றன.  அது மட்டுமா...நாம், பூமி தான் சூரியனை சுற்றுகிறது என அறிவோம்.  ஆனால் சூரியன், தன் குடும்ப உறுப்பினர்களை இழுத்துக் கொண்டு, தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை சுற்றி வளம் வருகிறது. எவ்வளவு காலத்தில் தெரியுமா?  ஒரு முறை சுற்றி முடிக்க சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகின்றன.  இதனை நாம் ஒரு பிரபஞ்ச ஆண்டு (cosmic year) என்கிறோம்.  ஆனால், சூரியனின் சுற்று வேகம் நொடிக்கு சுமார் 220-250 கி.மீ.

பிரபஞ்சமே சாய்வாக
 
இந்தப் பிரபஞ்சம், பால்வழி மண்டலம், சூரியக் குடும்பம் இவற்றில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் ஒன்று கூட நேராக இல்லை.  அனைத்தும் கொஞ்சம் சாய்ந்தே காணப்படுகின்றன.  பூமி 23.5 பாகை (டிகிரி) தன் அச்சில் சாய்ந்துள்ளது.  சந்திரன் தன் அச்சில் சாய்ந்துள்ளது.  சந்திரன் தன் அச்சில் 6.5 பாகை சாய்ந்துள்ளது.  சூரியன் 7 பாகை சாய்ந்துள்ளது.  புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய எல்லாக் கோள்களும் சாய்ந்தே உள்ளன.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது

'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்று ஒரு பழமொழி உண்டு.  இதன் பொருள், புதன் கிழமை என்பது அல்ல.  புதன் கோளை எளிதில் பார்க்க முடியாது என்பதே.  இது சூரியனுக்கு முதல் அடுக்கில், மிக அருகில் உள்ளதால், சூரியனை 88 நாட்களுக்குள் சுற்றி முடித்து விடுகிறது.  மேலும் இது விடிகாலை வேளையிலும், அந்தி சாய்ந்த நேரத்திலும் தான் தொடுவானின் மேல் அதிகபட்ச 28 பாகை உயரத்தில் தெரியும்.  சூரிய உதயம் / மறைவுக்கு முன்னரோ / பின்னரோ ஒன்றரை மணி நேர அவகாசம் தான் இவரது வருகை.  காலையில் எட்டு வாரங்களும், மாலையில் எட்டு வாரங்களும் தான் தெரியும்.  இந்தச் சுழற்சி, வருடத்தில் மூன்று முறை ஏற்படும்.  இடையில் சில நாட்கள் வானுக்கு வராமல் காணாமல் போய்விடும்.  அதனாலேயே தான், 'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்ற பழமொழி வந்தது.  ஐரோப்பிய வானவியலாளர் கோபர்நிகஸ், என்ன முயன்றும் அவரின் வாழ்நாளில் புதன் தரிசனம் அவருக்கு கிட்டவே இல்லையாம்.

வெள்ளி முளைத்தது

நம் பூமிக்கு முதல் அடுக்கில் உள்ள வெள்ளிக் கோ
ள் தான் நிலவுக்கு அடுத்து இரவு வானில் பிரகாசமாய் வலம் வரும் வான் பொருள்.  இதன் ஒளி சிரியஸ் விண்மீனை விட பிரகாசமானது.  இதுவும் கூட, மாலை வானத்தையும், விடிகாலை வானத்தையும் தன் ஒளியால் மிளிரச் செய்யும்.  சூரியனுக்கு மிக அருகில் வரும்போது, அதன் ஒளியால் எட்டு நாட்கள் நமக்கு தலையைக் காட்டாமல் ஓடி விடும்.  பின் 263 நாட்கள் மாலை வெள்ளியாகவும், பிறகு 263 தினங்கள் விடிவெள்ளியாகவும் காட்சி தரும்.  வெள்ளி அதிகபட்சமாய் 40 பாகை உயரத்தில் காணப்படும்.  இது சூரிய உதத்திற்கு மூன்று மணி நேரம் முன்னும், மறைவுக்குப் பின் மூன்று மணி நேரமும் வானில் இருக்கும்.  1610 இல் கலிலியோவுக்கு முதலில் தொலைநோக்கியில் முகம் காண்பித்த கோள் வெள்ளி தான்.

பெரிய அண்ணாச்சி 

கோள்களின் பெரிய அண்ணாச்சி வியாழன் தான்.  இது பூமியை விட பதினோரு மடங்கும், சனியை விட 20% அளவிற்கும் பெரியது.  வியாழனுக்குள் 1,330 பூமிப் பந்துகளை எண்ணிக் கொண்டே போட முடியும்.  இது சூரியனிலிருந்து பெரும் ஆற்றலைப் போல் இரண்டரை மடங்கு ஆற்றலை, தானே உண்டு பண்ணுகிறது.  அதிகமான துணைக்கோள்கள் உள்ள கோள் இது மட்டுமே.  69 துணைக் கோள்கள்.  ஏராளமான குட்டி துணைக் கோள்கள்.  மற்ற எல்லா கோள்களையும் விட, இது அதிவேகமாய் சுற்றும்.  கலிலியோ இதனையும் தன் தொலைநோக்கியால் கி.பி.1610 இல் பார்த்துப் பதிவு செய்தார்.

காலை வானில் கோள்கள் ஊர்வலம்

சூரியக் குடும்பத்தின் நான்கு கோள்கள் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் இந்த ஆண்டு (2011) மே மாதக் காலை வேளையில் கிழக்கு வானில் வரிசையாகத் தெரிந்தன.  இவற்றை நாம் எந்தக் கருவியும் இன்றிப் பார்த்து ரசிக்கலாம்.  இன்னும் 15 நாட்களுக்கு அவற்றை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம்.

கோள்களை அடையாளம் காண

மேகம் கவியாத வானமாக இருந்தால் நன்கு கோள்களை காண முடியும்.  காலையில் எழு
ந்திருப்பவராக இருந்தால், காலை ஐந்து மணிக்கு கிழக்கு வானைப் பாருங்கள்.  அங்கே, பளிச்சென ஒரு வெள்ளைப்புள்ளி, விண்மீன் போல ஆனால், மினுக்காமல் தெரிந்தால் அது தான் வியாழன்.  இவர் நான்கு மணிக்கே வந்து விடுவார்.  வானில் மிகவும் கூர்ந்து கவனித்தால் அதன் அருகே ஒரு முற்றுப்புள்ளி போல ஒரு புள்ளி தெரிந்தால், அது அதனுடைய துணைக்கோள்.  ஐந்து மணிக்கு மேலே, அடி வானைப் பாருங்கள்.  அங்கே, மிகவும் பிரகாசமாய் மஞ்சள் வண்ணத்தில் ஒரு விண்மீன் போல ஒன்று தெரியும்.  அதுவே வெள்ளிக் கோள்.  விடிவெள்ளி எனப்படுவதும் இது தான்.  நீங்கள் மின்னொளி இல்லாத இடத்தில் இருந்தால் இதன் அருகே, சிவப்பாக ஒரு புள்ளி தெரியும்.  அதுவே செவ்வாய்.  வெள்ளிக்கு கீழே தெரியும் சிறிதான வெள்ளை விண்மீன் போன்ற கோள் தான் புதன்.

காலையில் எழுந்திருக்க சோம்பல்பட்டுக் கொண்டு இந்த அரிய காட்சியைப் பார்க்காமல் விட்டு விடாதீர்கள்.  இப்படியான கோள்களின் சந்திப்பு இனி 2040 இல் தான் நிகழுமாம்.  இதற்கு முன் கி.பி.968 இல் தான் இது போல ஒன்றாக காலை வானை இவை வலம் வந்தனவாம்!
 




இந்த அருமையான கட்டுரையை வெளியிட அனுமதி கொடுத்த 
திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கு மனப்பூர்வ நன்றி.  
புதிய தலைமுறை பத்திரிக்கையினருக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.
 
 
 
இந்த பதிவினை படித்து உங்கள் வாழ்த்துக்களை திருமதி மோகனா அவர்களுக்கு தெரிவியுங்கள்.  குறை எதுவும் இருப்பின் எங்களுக்கு சொல்லுங்கள்.

இந்த பதிவினை கணினியில் ஏற்ற உதவிய திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.


மிக்க நன்றி.

 

35 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான தகவல்கள், சார்.. பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவினை பதிவிட்டிருக்கிறீர்கள்
    படங்களுடன் மிகத் தெளிவாக விளக்கியுள்ள
    திருமதி மோஹனா அவர்களுக்கு நன்றி
    பயனுள்ள பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. படங்களுடன் எளிமையான சுவாரஸ்யமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல நல்ல தெரியாத தகவல்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. கட்டுரை எளிமையாக இருக்கிறது சப்ஜெக்ட் கொஞ்சம் கடினமானது என்றாலும். பத்திகளின் தலைப்புகள் சூப்பர்:-)

    படங்கள் வெகு அருமை. தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  6. ரத்ன வேல் அவர்களே! பழனி கல்லுரியில் பணாற்றிய மொகனா ,பேராசிரியர் அருள் நந்தியை இறுதிக்காலத்தில் பாதுகாத்த மோகனாதான் இவரா?அவருக்கு என் வாழ்த்துக்கள்---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள சார், பதிவு அருமையாக இருந்தது , உங்கள் தொடரை முழுமையாக தொடர போகிறேன், பிளாக் பற்றிய சந்தேகங்களுக்கு உங்கள் மொபைல் நம்பரில் உங்களை அணுகலாமா

    பதிலளிநீக்கு
  8. ரத்ன வேல் அய்யா..மிக அருமையான பதிவினை பதிவிட்டிருக்கிறீர்கள்...திருமதி எஸ்.மோகனா அவர்களுக்கும் எங்கள் நன்றி...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் ஐயா, தமிழில் வானியல் தொடர்பான இலகு நடை விளக்கங்களுடன் கூடிய கட்டுரைப் பகிர்வுகள் அரிது. அதிலும் எளிமையான விளக்கப் பகிர்வுகளுடன் கூடிய காத்திரமான கட்டுரைகள் குறைவு. அந்தக் குறைகளைத் திருமதி எஸ்.மோகனா அவர்களின் கட்டுரைகள் நிவர்த்தி செய்யும் என்பதற்குச் சான்றாதாரமாக அவரது ஒரு இக் கட்டுரையே சாட்சியம் சொல்கின்றது.

    கட்டுரைப் பகிர்விற்கும், திருமதி எஸ்.மேனகாவின் படைப்புக்களை வலைப் பதிவு வாயிலாக அவரைப் பற்றி அறிந்திராத எம் போன்றோருக்காக அறிமுகப்படுத்தியதற்காகவும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு அறிமுகம்.
    புரியும்படியாக அதே நேரம் கலகலப்பான நடையில் தந்திருப்பது படிக்க இனிமையாக இருந்தது.
    மனப்பூர்வமான வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. வானியியல் குறித்து எளிய நடையில் சுவராசியமான தலைப்பின் வாயிலாக அசத்தலான தகவல்கள் அமைந்துள்ளது. அடுத்த தொடருக்காக பலர் ஆவலாக இருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  12. வானியல் கோள்கள் பற்றி சுவாரஸ்யமான பதிவு.ஆர்வமாயும் இருக்கு வானத்தை எட்டிப் பார்க்க.
    நன்றி மேனகா அவர்களுக்கும் உங்களுக்கும் !

    பதிலளிநீக்கு
  13. அருமையான தகவல்கள் .. மோகனா அவர்களுக்கும் அதை தேர்வு செய்து பதிவிட்ட உங்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  14. aahaa.. ஆர்ஹா அருமை உங்க பணி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. மிக நல்ல பணி...ஐலக் எனது பதிவுகளை அந்திமாலை புளொ ஸ்பொட்.கொம் செய்வது போல. இருவருக்கும் வாழ்த்துகள் ஐயா! தொடருவோம். இறை ஆசி கிட்டட்டும்.
    Vetha.Elangathilakam.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  16. அன்புடன் வணக்கம் ஐயா,

    இவ்வளவு அருமையான வலைப்பக்கத்தை தாங்கள்
    வைத்திருப்பதை இத்தனை நாள் காணாதொழிநதமைக்காக முதற்கண் மன்னிக்கவும்,

    இறையருளால் இனி வருகிறோம்..

    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    பதிலளிநீக்கு
  17. ஐயா காட்டானுக்கும் புரியக்கூடிய மாதிரி விளக்கியதற்கு...

    பதிலளிநீக்கு
  18. நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  19. மிக்க அருமையான பகிர்வு. தங்களுக்கும் திர்மதி மோகனா அவர்களுக்கும் என் நன்றிகள் .
    வானவியலில் ஆர்வம் கொண்ட என் மகனுக்கு அறிமுகப்படுத்தி படிக்க சொல்லிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. வானியல் பற்றய அறிவிற்கு நல்ல கட்டுரை. சகோதரி மேனகாவிற்கும் வாழ்த்துகள்
    Vetha. Elangathilakam.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  21. வெள்ளி மட்டும் தான் கண்டுபிடிக்க தெரியும். அதுவும் அரைகுறையா.... வானத்துல கோள்களை கண்டுபிடித்து படம் மூலம் விளக்கியது அருமை. படம் ஆச்சரியத்தில் வியக்க வைத்துவிட்டது!!!

    பதிலளிநீக்கு
  22. தெளிவான படங்களும் எளிமையான விளக்கங்களும் அட்டகாசமான தலைப்புகளும் கொண்ட அருமையான பதிவு இது!!

    பதிலளிநீக்கு
  23. சூரியக்குடும்பம் பற்றி அழகுத்தமிழில்
    எளிய நடையில் அருமையான கட்டுரை.
    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  24. பெறுமதியான பதிவைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  25. அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. மிக அருமையான பகிர்வு ஐயா.. வாழ்த்துக்கள்.

    சமுதாய நண்பனில் வந்த கவிதைகளை முகப்புத்தகத்திலும் ப்லாகிலும் போட்டு இருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் சமுதாய நண்பன் பற்றி எழுதுகிறேன் ஐயா..:)

    பதிலளிநீக்கு
  27. வானிலை பற்றிய தகவல்கள் அடங்கிய அருமையான பதிவு ! பகிர்ந்தமைக்கு நன்றிகள் !!

    பதிலளிநீக்கு
  28. வானவியல் பற்றி நிறைய விஷயங்கள் இந்தக் கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன் ஐயா.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. உங்களை இந்த தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் இருக்கும்போது தொடருங்கள்.

    http://vaarthaichithirangal.blogspot.com/2011/07/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  30. வான்வெளி குடும்பத்தை பற்றி இவ்வளவு விரிவாக, விளக்கமாக தமிழில் எழுதிய திருமதி எஸ்.மோகனா அவர்கட்கும், இதை வெளியிட்ட தங்களுக்கும் நல் வாழ்த்துக்கள்.அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  31. அழகிய படங்களுடன் பயனுள்ள ஒரு பகிர்வு
    மிக்க நன்றி ஐயா ......வாழ்த்துக்கள்.இன்று
    என் தளத்தில் ஒரு சோகப் பாடல் வரிகள்
    படைத்துள்ளேன் தவறாமல் அதற்கு உங்கள்
    கருத்தினைக் கொடுங்கள் மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு