சனி, ஏப்ரல் 23, 2011

ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகதோப்பு     ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமுக்குளம் பதிவிற்கு பின்பு   'செண்பக தோப்பு'  பற்றி பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தோம். எனது இனிய நண்பர் வருங்கால வைப்பு நிதி ஆய்வாளர் திரு தனபால் அவர்கள் அவரது ஆணையாளரின் மகளும் அவரது கல்லூரி தோழியும் 'மலை வாழ் மக்களது வாழ்க்கை முறை'  பற்றி அவர்களது ஆய்வுக்காகவும் அவர்களை நேர்காணல் செய்ய வேண்டும் எனவும் அதற்கான உதவிகள் செய்ய முடியுமா என கேட்டார்கள். எங்களது இனிய நட்பு கடந்த முப்பது வருடங்களுக்கு மேற்பட்டது. எனவே ஏற்பாடுகள் செய்ய  ஆரம்பித்தோம்.

சாம்பல் நிற அணில்
முன் ஏற்பாடுகள்
     பொதுவாக காட்டுப்பகுதிகளுக்குள் செல்வதற்கு முன் வன இலாகாவில் அனுமதி பெற வேண்டும். செண்பக தோப்பு சாம்பல் நிற அணில்கள்  சரணாலயம்' . எனவே முதலில் 'The Warden, Srivilliputtur Grizzled Squirrel Sanctuary, Madurai Road, Opposite Co-operative Mill Buss top, Srivilliputtur. 626 125இவர்களுக்கும் மனுவின் நகல் 'The Range Officer, Wild Life Sanctuary, Near CMS School Play Ground, Shenbagathoppu Road, Srivilliputtur. 626 125அனுப்ப வேண்டும். இவர்களை அணுகி அனுமதி பெற்றுக் கொண்டு செல்ல  வேண்டும்.


செண்பகதோப்பு செல்வதற்கு முன்
      இது சரியான  வனப்பகுதி. எனவே ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்தே  'உணவு ,   தண்ணீர், நொறுக்குத்தீனிகள்என தேவையானவைகள்  அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டும். பேருந்து வசதி காலை ஆறு மணிக்கு ஒரு தடவையும் மாலை ஆறு மணிக்கு ஒரு தடவையும் தான் இருக்கிறது. எனவே இங்கிருந்தே ஆட்டோ அல்லது  டாக்சி ஏற்பாடு செய்து கொள்ளலாம். ஆட்டோ சென்று திரும்புவதற்கு  200-250 கேட்பார்கள். கூடுதல் நேரம் எடுத்தால் செலவு கூடும். நான் சிபாரிசு  செய்யும் எனது ஆட்டோ நண்பர்கள்: திரு முனியராஜ் (ஆறுமுகனார் ஆட்டோ) 99769 05415 & 98942 0028 திரு முருகன் (கலியனாண்டி ஆட்டோ) 98421 26886 - இருவர்களும் சகோதரர்கள் - இவரது இன்னொரு சகோதரர் டாக்சி வைத்திருக்கிறார்: திரு சங்கர்:  98943 16119). எனவே வருபவர்கள் முன்பாகவே இவர்களிடம் தொடர்பு கொண்டு வந்தால் எளிதாக இருக்கும்.எனவே அந்த மாணவிகள் இருவரும் மதுரையிலிருந்து காலை  9.00  மணிக்கு வந்தார்கள். நாங்கள் ஆட்டோவில்(20.3.2011) கிளம்பி சென்றோம். இங்கிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இயற்கை சூழ் மலை அடிவாரம். செண்பக தோப்பு வரை அருமையான சாலை வசதி இருக்கிறது.

செண்பக தோப்பில் மலை வாழ்மக்கள்(பளியர்கள்) குடியிருப்பு உள்ளது. அவர்களது குடியிருப்பில் நல்ல சாலை வசதியிருக்கிறது. கிட்டத்தட்ட  24 வீடுகள் இருக்கின்றன. தெரு விளக்கு சூரிய ஒளி (solar panelமூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.வீடுகளுக்கு மின்சார இணைப்பு  கொடுக்கப்பட்டிருக்கிறது. நியாயவிலைக்கடை (RationShop) ஒன்று 

அமைந்திருக்கிறது. நீர் மேல் நிலை தொட்டி ஒன்று அமைந்திருக்கிறது .  பாலர் பள்ளி ஒன்று (மாத குழந்தையிலிருந்து வயது குழந்தைகள் முடிய) அமைந்திருக்கிறது. ஒரு கல்யாண மண்டபம் (Community Hallஒன்று அமைந்திருக்கிறது. 

மலை வாழ் மக்களின் குழந்தைகளின் படிப்பு
     இவர்களது குழந்தைகள் இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள 'வள்ளலார் இல்லம்' என்ற தொண்டு நிறுவனத்தில் உள்ள பள்ளிக்கு நடந்து செல்கிறார்கள். அங்கு ஐந்து முடிய படிக்க வசதியிருக்கிறது. ஐந்துக்கு மேல் படிப்பதற்கு மம்சாபுரம் செல்கிறார்கள். அங்கிருந்து பள்ளி வேன் வருகிறது. சில குழந்தைகள் பேருந்தில் சென்று ஸ்ரீவி குரு ஞான சம்பந்தர் மேல் நிலைப்பள்ளிக்கு செல்கிறார்கள் (நான் அங்கு தான் படித்தேன்). மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 15-20 இருக்கும். கூடுதல் படிப்பு எட்டு முடிய இருக்கும். 
நிறைய குழந்தைகளுக்கு ராஜபாளையம் ராம்கோ குரூப் (Madras Cements) நிறைய உதவி செய்வதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட  120  பேர்களுக்கு  படிப்பு,  வேலை வாய்ப்பு ஏற்பாடு போன்றவை ராஜபாளையத்தில் செய்திருப்பதாக சொல்கிறார்கள். வீடுகள் கட்டுவதற்கும் அவர்களது முயற்சியும்உதவியும் அதிகம் என்கிறார்கள். மலைவாழ் மக்கள் ராம்கோ குரூப்பை பற்றி மிக உயர்வாக சொல்கிறார்கள்.
மதுரை அண்ணா நகரில் அமைந்துள்ள சோகோஸ் ட்ரஸ்ட் (Socos Trust)  நன்கு உதவுவதாக சொல்கிறார்கள்.
நமது மாநில காவல் துறை உயரதிகாரி திருமதி. லத்திகா சரண் அவர்களது வருகையையும் அவர்கள் எல்லோரிடமும் எளிமையாக பழகும் முறையையும் உதவிய முறையையும் (immediate arrangement for ration cards - normally it will take 2-3 months or more) வெகுவாக சொல்கிறார்கள். வாழ்க திருமதி லத்திகா சரண். இவர்களுக்கு மருத்துவ வசதி என்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் அல்லது மம்சாபுரம் தான் செல்ல வேண்டும். 

மலை வாழ் மக்களை (பளியர்) பற்றி
     அவர்களது குடியிருப்புமின்சார வினியோகம்சாலை வசதிவாழ்க்கை  தரம் நன்றாக இருக்கின்றன. அவர்கள் நகருக்கு சென்று வருவதற்கு பேருந்து வசதிகள் போதுமானதாக இல்லை. மினி பஸ் வசதிகள்  ஏற்படுத்தலாம்.நல்ல உள்ளம் படைத்த 'தொண்டு நிறுவனங்கள்' அவர்களுடன் பேசி வாரம் ஒரு முறை 'நடமாடும் மருத்துவ குழு'  மூலம் மருத்துவ வசதி செய்து கொடுக்கலாம். இது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

 அவர்கள் முன்னேறுவதற்கு சிறு தொழில் வளர்ச்சிகள் ஏற்படுத்தி கொடுத்து தொண்டு நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து செய்யலாம். ஆர்வமுள்ள இளைஞர்கள் குழுக்களாக இணைந்து அவர்களுடன் பேசி அவர்களது குழந்தைகளுக்கு  கணினிகணிதம்ஆங்கிலம் கற்றுக் கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தலாம். அவர்களை நன்கு மதித்து பழகுங்கள்.
பேச்சியம்மன் கோவில்
     முன்பு தெரியும் வளைவு 'பேச்சியம்மன் கோவிலுக்கு' செல்லும் பாதை. முன்புறம் அழகிய வினாயகர் கோவில் ஒன்று உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பேச்சியம்மன் கோவில் இருக்கிறது.
 மக்கள் வேன் களிலும் இரு சக்கர வாகனங்களிலும் பயணம் செய்கிறார்கள். காலையில் பரிவாரமாக சென்று மதியம் சமைத்து சாப்பிட்டு விட்டு மாலை திருபுகிறார்கள்.

பேச்சியம்மன் கோவில் பக்கத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. சமைப்பதற்கும் குளிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். நல்ல சோலை போன்ற இடமாக இருக்கிறது. குழந்தைகள் விளையாட, மற்றவர்கள் நல்ல பொழுது போக்க (in a relaxed mood) நல்ல இடமாக இருக்கிறது.பேச்சியம்மன் கோவில் பக்கத்திலுள்ள ஆற்றங்கரையிலிருந்து எடுத்த புகைப்படங்கள். ஒரு சிறுமி ஆனந்தமாக நீந்தும் காட்சி. 
அங்கிருந்து மலையின் கம்பீர தோற்றம். மரங்களின் பச்சைப் பசேர் என கண்ணை கவரும் தோற்றம்.
பூக்களின் கண்ணைக்கவரும் தோற்றம்.. கோவிலின் அழகு தோற்றத்தை பாருங்கள். அதிலுள்ள கல்வெட்டு.திரும்பி வரும் வழ்யிலுள்ள பாலம். ஒரு பசு மாடு எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கதிரும்பி போஸ் கொடுக்கிறது.


செண்பகதோப்பிலிருந்து வரும் வழியில்
     திரும்பி வரும் வழியில் சாலை வசதி நன்றாக இருக்கிறது. தனியாரது மினரல் வாட்டர் பிளான்ட் ஒன்று அமைந்திருக்கிறது. ஒரு பாழடைந்த மண்டபம் ஒன்று இருக்கிறது. வேலி போட்டு பாதுகாத்து வைத்திருக்கிருக்கிறார்கள். கருப்பசாமி கோவில் ஒன்று இருக்கிறது.
 எங்கள் ஊரின் மற்ற சிறப்பான 'வள்ளலார் இல்லம்' அமைந்திருக்கிறது. அதைப் பற்றி தனி பதிவு போடுகிறேன்.
 ஆட்டுப் பண்ணை ஒன்று அமைந்திருக்கிறது. அது ஒரு சிறப்பம்சம். வள்ளலார் இல்லம் பதிவுடன் சேர்த்து விபரங்கள் கொடுக்கிறேன். மொட்டைப்பத்தான் கண்மாய் அமைந்திருக்கிறது. எங்கள் ஊர் நீர் நிலை அமைந்திருக்கிறது. கோட்டைக்காளியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. கான்வென்ட் மடம் அமைந்திருக்கிறது. எங்கள் ஊர் இரு பள்ளிகளின் விளையாட்டு மைதானங்கள் அமைந்திருக்கின்றன. வனச்சரக அலுவலகம் அமைந்திருக்கிறது.
அங்கு செல்பவர்களுக்கு முக்கிய வேண்டுகோள்
     பாலிதீன் பொருட்கள் கொண்டு செல்லாதீர்கள். மது அருந்துதல் போன்ற செயலை அங்கு போய் செய்யாதீர்கள். அங்குள்ள மரங்களை, காய் கனிகளை பூக்களை பறிக்காதீர்கள். இரைச்சல் போடாதீர்கள். நீங்கள் கண்காணிக்கப் படுவீர்கள். வனக்காவலர்களின் கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாவீர்கள். அங்குள்ள சட்டத்திற்கு மதிப்பு கொடுங்கள்.
வனத்தில் செல்ல அனுமதி அளித்த வன இலாகாவினருக்கும், எங்களுடன் ஆய்விற்கு வந்த மாணவிகள் செல்வி.சுஸ்மா ஷர்மா, செல்வி.சவேரா மாகி அவர்களுக்கும், மலைவாழ் மக்கள் குடியிருப்பில் விபரங்கள் தந்து எங்களை நன்கு உபசரித்த திரு கோபால் அவர்களுக்கும், அங்குள்ள பாலர் பள்ளியின் ஆசிரியையும் திரு முத்தையாவின் மனைவியும் ஆகிய திருமதி சின்னத்தாய் அவர்களுக்கும், எங்களுக்கு ஆட்டோ செலுத்தி வந்த எங்களது குடும்ப நண்பர் திரு முருகனுக்கும், அவர் எங்களுடன் வந்து புகைப்படம் எடுக்க உதவியாக இருந்ததற்கும் மிக்க நன்றி. வழக்கம் போல் இவ்வளவுக்கும் உறு துணையாக இருந்த எனது மனைவி திருமதி உமா காந்திக்கும், எனது தம்பி மகன் எனது பாசப்பிள்ளை ராஜவேலுக்கும் எனது
மனப்பூர்வ நன்றி.


                               நன்றி.50 கருத்துகள்:

 1. நல்ல பகிர்வு. வனத்தினுள் உள்ள சரணாலயத்தினைப் பற்றிய விவரங்கள் நன்றாக இருந்தது. விவரங்களுடன் கொடுப்பதால் அதை சேமித்து வைத்துக்கொண்டேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. மிக விவரமாக கையேடு போல் அமைந்த் அருமையான பதிவிற்குப் பாராட்டுக்கள் ஐயா! படங்கள் பேசும் படங்களாக தத்ரூபமாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 3. விரைவில் வெளியீடு:

  தலைப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் வாங்க!!
  ஆசிரியர்: ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன் (ஊர் பேர் கண்டிப்பாக போடவேண்டும்-ஆசிரியருக்கு அப்போதுதான் பிடிக்கும்)

  மதிப்புரை:இந்த நூலாசிரியர் தனது வலைப்பூவில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பலருக்கும் தெரியாத ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறப்பான இடங்கள் குறித்த மிகச்சிறந்த கட்டுரைகள்.கூடவே மிகச்சிறந்த புகைப்படங்கள்.பெரும்பாலும் மக்கள் சுற்றுலா செல்ல வெறும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களைத் தேர்ந்தெடுப்பது பழக்கம்.உபயோகமான மற்றும் அறிவுக்கு விருந்தாகும் இடங்களுக்கு செல்ல விழைவோருக்கு மிகச்சிறந்த தகவல்கள் அடங்கிய புத்தகம். போடும் பிரதிகளெல்லாம் விரைவிலேயே விற்று விடுவதால் முன் பதிவு அவசியம் என்று ஒரு வார்த்தை பதிப்பகத்தார் சேர்க்க வேண்டியது அவசியம்.

  ஆசிரியர் பற்றிய கூடுதல் குறிப்பு:இவர் மளிகை சாமான் லிஸ்ட் எழுதினால் கூட அதில் ஒரு பத்து பேருக்கு நேர்மையாக சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தருபவர்.உதவி செய்வதே நோக்கம் என்று வாழ்பவர்.

  -நாளை நடப்பதை இன்றே கூறும் ரோமிங் ராமன்.

  பதிலளிநீக்கு
 4. செண்பகத்தோப்புக்கே சென்று வந்தது போல் உணர வைத்த பதிவு.எளிய,குழப்பமில்லாத,சுவாரஸ்யமான எழுத்து நடை!நன்று!

  பதிலளிநீக்கு
 5. அருமையான படங்களுடன், நீங்கள் தந்துள்ள விவரங்களுக்கு அழகு சேர்க்கின்றன. பகிர்வுக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 6. மிக அருமையான ஆரோக்கியமான கட்டுரை!

  பதிலளிநீக்கு
 7. ////எனது படிப்பு SSLC. திரு காமராஜர் காலத்தில் இலவச கல்வித் திட்டம் வந்ததால் இந்த அளவு படிக்க முடிந்தது. இன்றேல் எட்டாவது வகுப்புடன் எனது படிப்பு முடிந்திருக்கும்////

  உங்கள் கணினி மற்றும் இணையத்தமிழ் ஆர்வம் வாழ்க! வளர்க!

  பதிலளிநீக்கு
 8. ரொமிங்க் ராமன் அவர்களே! ரத்தின்வேல் அவர்களின் உதவியுடன் நாகபுரியில் ஒரு ஏழை மராட்டியபெண்குழந்தை படிக்கிறாள் என்பது நானறிந்தது. அவருக்கு மற்றவருக்கு உதவி செய்வது என்பதுமுச்சு விடுவது பொல. அவருக்கு என்வாழ்த்துக்கள்---காஸ்யபன்

  பதிலளிநீக்கு
 9. பதிவு மிகவும் நன்றாக உள்ளதுஇன்னமும் அழகர்மலை பற்றியும் எழுதுங்கள் அங்குவரும் நுபுர கங்கா தீர்த்தம் வருடம் முழுவதும் தண்ணீர் வருது பற்றியும் எழுதுங்கள் நன்றி வாழ்க வளமுடன் மென் மேலும் எழுத்துலகில் பிரகாசிக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. அழகிய புகைப்படங்களுடன் சிறப்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 11. புத்தகங்கள் செய்ய வேண்டிய வேலையை தாங்கள் செய்துள்ளீர்கள் நன்றி

  பதிலளிநீக்கு
 12. அருமையா இருக்கு பகிர்வுக்கு நன்றி. எழுத்துக்களோடு சேர்ந்து வந்த உணர்வு அங்கே.

  பதிலளிநீக்கு
 13. நேர்ந்த வலைபதிவு தொழில் நுட்பவியலார் போல கலக்க ஆரம்பித்து விட்டீங்க. படங்கள் அற்புதம். நிச்சயம் செல்லவேண்டும். செல்வோம்.

  பதிலளிநீக்கு
 14. தகவல்களை மிகவும் எளிய நடையில் இதயபூர்வமாக எழுதியிருந்த விதம் ரசிக்க வைத்தது. அணில் சரணாலயம் செல்லும் முன் நிச்சயம் உங்களை தொடர்பு கொள்வோம்,ஐயா...

  பதிலளிநீக்கு
 15. செண்பகத்தோப்புக்கே சென்று வந்த அனுபவம் கிடைத்தது.படங்களும் விளக்கங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 16. அட்டகாசமான வர்ணனை நேரில் பார்ப்பது போல் இருந்தது. படங்களும் அருமை அருமை.....ஊர் வந்தால் கண்டிப்பா வருவேன் அங்கே.....

  பதிலளிநீக்கு
 17. அருமையான விளக்கமும் ,அற்புதமான படங்களும் ,கோவில்கள் இயற்கை வளம் மேல் கொண்ட உங்கள் ஆர்வத்தை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றன

  பதிலளிநீக்கு
 18. எனது சொந்த ஊர் ராஜபாளையம்தான் ஐயா. ஊருக்கு வருகையில் செண்பகத்தோப்பிற்கு செல்ல முயல்கிறேன். ஆட்டோ ஓட்டுனர்கள் விவரம் தந்ததற்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 19. முதல் முறையாக உங்கள் பதிவு படித்தேன்.. என்ன ஒரு சுவாரசியம்.. அருமை. மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 20. தெளிவான,விவரங்கள் கொண்ட,அழகிய படங்களோடு கூடிய சிறப்பான பதிவு அய்யா. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. படங்களும் பதிவும் அருமை
  அனைத்தையும் நேரடியாகப் பார்ப்பதைபோன்றே
  அனுபவித்துப் படிக்க முடிந்தது
  நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 22. அழகிய புகைப்படங்களுடன்
  அருமையான பதிவு அய்யா.

  பதிலளிநீக்கு
 23. அன்பு ரத்னவேல் அய்யா அவர்களுக்கு,

  அற்புதமான எழுத்தும் பதிவும்... சென்பகத்தோப்பு நான் பார்த்து இருபது வருஷம் இருக்கும்... நிறைய இடங்கள் மாறிவிட்டது... ரோடு கூட இப்படி இல்லை, வெறும் மண் ரோடு மாத்திரமே.

  போகிற வழியில்... நாயக்கர் ரோஜாத்தோட்டம் பம்ப் செட்டும், ஏரோப்ளான் கிணறும், மொட்டபத்தான் கிணறும் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு... அது எல்லாம் இப்ப இல்லைன்னு சொன்னாங்க! ஏதோ பால்பண்ணையும் இருந்ததாக ஞாபகம்.

  ஆனால் உங்களின் இந்த விபரங்கள் எனக்கு புதிதே... என்னுடைய நினைவுகளை கிளறுகிறது இந்தப் பதிவு...

  அன்புடன்
  ராகவன்

  பதிலளிநீக்கு
 24. மிக விவரமாக கையேடு போல் அமைந்த் அருமையான பதிவிற்குப் பாராட்டுக்கள் ஐயா! படங்கள் பேசும் படங்களாக தத்ரூபமாக இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 25. நேரில் சென்று பார்த்த உணர்வுகளை ஏற்படுத்தியது பதிவின் எழுத்து நடை மற்றும் புகைப்படங்கள் அனைத்தும்

  பதிலளிநீக்கு
 26. ஊரைப் பற்றி உபயோகமான தகவல்கள் தந்தமைக்கு நன்றி ரத்னவேல் சார். என் அம்மாவின் பதிவிலும் தங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன். அவர்களுக்கும் ஊக்கம் கொடுப்பதற்கு நன்றிகள்..:))

  பதிலளிநீக்கு
 27. எத்தனை இயல்பான எழுத்து.வாசிக்க ஆர்வம் மேலிடுகிறது இன்னும்.நன்றி ஐயா !

  பதிலளிநீக்கு
 28. பார்ப்பதற்கு அருமையான இடங்கள். புதிய அறிமுகமும் கூட.

  பதிலளிநீக்கு
 29. அன்பின் அய்யா
  வணக்கம். மிக பயனுள்ளப் பதிவு. படமெடுப்பது, தகுந்த இடங்களில் அவற்றை இணைப்பது இவை எல்லாம் எவ்வளவு சிரமமான காரியங்கள். அவற்றை எவ்வளவு நேர்த்தியாக செய்கிறீர்கள்.

  அதைவிட முக்கியம் காஸ்யபன் தோழர் உங்களைக் குறித்து பதிந்திருக்கும் செய்தி. பெருமையா இருக்கு அய்யா.

  பதிலளிநீக்கு
 30. அன்பின் அய்யா
  வணக்கம்.
  படங்களை எடுப்பது அவற்றை தேவையான இடங்களில் இணைப்பது என்பதெல்லாம் எத்தனை சிரமமான காரியங்கள். மிக நேர்த்தியாக செய்திருக்கிறீர்கள். அதை விடவும் முக்கியம் தோழர் காஸ்யபன் சொன்னது. பெருமையா இருக்குங்க அய்யா.

  பதிலளிநீக்கு
 31. சென்பகத்தோப்பிற்கு மீண்டும் சென்று வந்த உணர்வு.
  பல புதிய தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.புகைப்படங்களும் அருமையாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 32. பதிவு எழுத உங்களிடம் பயிற்சி எடுக்கணும் போல இருக்கு, அத்தனை அருமையாக இருந்தது, தொடர்கிறேன் உங்களை

  பதிலளிநீக்கு
 33. அழகு...அழகு...உங்கள் பதிவு அம்புட்டு அழகு.

  பதிலளிநீக்கு
 34. எழுத்தும் படங்களும் வெகு அருமை... கரையெல்லாம் சென்பகப்பூ எழுதியவரின் தீவிர ரசிகரின் சென்பகத்தோட்டத்தில் நறுமணம் கமழ்கிறது....

  வாத்தியாரின் இரத்தம் ஒரே நிறம் கதைக்கு மூல நூல் அளித்தது மகிழ்வான செய்தி....

  பதிலளிநீக்கு
 35. செண்பகத் தோப்பும் ஸ்ரீ வில்லுப்புத்தொரும் சுற்றிப்பார்க்கும் ஆசையை தூண்டிவிட்டது தங்கள் பதிவு. நன்றி அய்யா .

  பதிலளிநீக்கு
 36. பூக்களின் கண்ணைக்கவரும் தோற்றம்.. கோவிலின் அழகு தோற்றத்தை பாருங்கள். அதிலுள்ள கல்வெட்டு.திரும்பி வரும் வழ்யிலுள்ள பாலம். ஒரு பசு மாடு எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கதிரும்பி போஸ் கொடுக்கிறது///
  அருமை! அழகு!!

  பதிலளிநீக்கு
 37. சென்பகத்தோப்பிற்கு மீண்டும் சென்று வந்த உணர்வு.
  பல புதிய தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.புகைப்படங்களும் அருமையாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 38. அருமையான இடங்கள்.பதிவும் அழகு

  பதிலளிநீக்கு
 39. அன்புள்ள ஐயா,

  மிகவும் அருமையான தகவல்கள், புகைப்படங்கள், கருத்துகள் என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அழகான பதிவை வடித்துள்ளீர்கள்...

  மிக்க மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 40. உங்கள் ஆர்வம் ஆச்சரியமூட்டுகிறது.நிறைய எழுதுங்கள் சார்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் வேறு பெருமாள் கோவில் வேறு என கேள்விப்பட்டேன்.விவரமாக எழுதுங்கள்.வடபெருங்கோயிலுடையான்,பகவதி விண்ணகரம்,பஞ்சகருடசேவை என ஒவ்வொன்றையும் பற்றி எழுதுங்கள்.இவை எல்லாவற்றியும்விட உங்களின் வாழ்வனுபவங்களை எழுதுங்கள்.எங்களுக்கு உதவும்.

  பதிலளிநீக்கு
 41. செண்பகத்தோப்புக்கே சென்று வந்த அனுபவம் கிடைத்தது.படங்களும் விளக்கங்களும் அருமை!....இதுவரை நான் காணாத ஊரைக் கண்டு
  வந்த மகிழ்வு எனக்குக் கிட்டியது. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா......
  வாழ்த்த வயதில்லை இருந்தும் வாழ்த்துகிறேன் தொடரட்டும் தங்கள்
  பணி......

  பதிலளிநீக்கு
 42. செண்பகத்தோப்பு பற்றிய அருமையான பதிவு... சிறு வயதில் அதிகமாக பள்ளிச்சுற்றுலாக்கள் சென்ற இடங்கள் செண்பகத்தோப்பும்,அய்யனார் அருவியும் தான்...

  நான் வளர்ந்த இடத்தில் இருந்து நீங்கள் பதிவிடுகிறீர்கள் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது

  பதிலளிநீக்கு
 43. அருமையான பதிவு. எங்களை எல்லாம் செண்பகத்தோப்பிற்கே அழைத்து சென்றதுபோல உள்ளது உங்கள் பதிவு. எளிய நடையில் சொல்லி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 44. தங்கள் முயற்சிக்கு நன்றி ஐயா !மிகவும் அருமையான பதிவு படங்களுடன்! சிறு வயதில் காலாண்டு விடுமுறை, அரையாண்டு விடுமுறை என்று ஊரில் இருந்து வரும் அத்தை பிள்ளைகளுடன் காலை ஐந்து மணி பேருந்தில் சென்று மாலை ஐந்து மணி பேருந்தில் திரும்புவோம். மீன்வெட்டி பாறை வரை நடந்து சென்று அங்குள்ள அருவியில் குளித்து கொண்டு சென்று கட்டுசாதம் சாப்பிட்டு நீருக்குள்ளேயே கிடப்போம். இப்போது பதின்மூன்று இடங்கள் ஆகின்றன அங்கு சென்று. மீண்டும் அங்கே சென்று செண்பக தோப்பில் இருந்து விட்டு வந்த உணர்வைக் கொடுத்தது தங்கள் பதிவு.

  பதிலளிநீக்கு
 45. அருமையான ஒரு பதிவு தந்தையே ..உடனேயே அங்கே வர வேண்டும் என்ற உணர்வை அழகிய எழுத்தாற்றலால்
  ஏற்படுத்தி விட்டீர்கள் . தொடருங்கள் உங்கள் பெரும் பணியை ...வாழ்த்துக்கள் ...//

  பதிலளிநீக்கு