புதன், ஏப்ரல் 13, 2011

தமிழில் பட்டாசு பற்றிய முதல் புத்தகம்

பட்டாசின் வேதியியலும் செய்முறை தத்துவங்களும்பட்டாசு பற்றியும், பட்டாசு தயாரிப்பில் உபயோகிக்கப்படும் மருந்துப் (வேதிப்) பொருட்கள் (மூலப் பொருட்கள்) பற்றியும், பட்டாசு தயாரிப்பில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் பற்றியும் தமிழில் எழுதப்பட்ட முதல் புத்தகம்.


இந்த புத்தகத்தை திரு. P.தனசேகரன். M.Sc., முன்னாள் வேதியில் துணைப் பேராசிரியர் (அய்ய நாடர் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி, - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர்) எழுதியிருக்கிறார். இவர் கல்லூரியிலிருந்து வியாபாரத்திற்கு 1976 ஆம் வருடம் வந்தார். பின்பு பேரியம் நைட்ரேட் (Barium Nitrate) தயாரிப்பிலும் பட்டாசிற்கான மூலப்பொருட்கள் பற்றிய ஆலோசனை கூறுவதிலும் அதற்கான 'பரிசோதனைக்கூடம்' (Laboratory) ஏற்படுத்தி நல்ல பணியில் ஈடுபட்டார். இதனால் இவருக்கு பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் எல்லா தரப்பு மக்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. எனவே தனது முப்பத்தைந்து வருட அனுபவங்களை, பட்டாசு தயாரிப்பில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக, அதில் ஈடுபடும் தொழிலாளர்களும் படிக்கும் படியாக எளிய அழகு தமிழில் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதியிருக்கிறார். இந்த புத்தகம் எல்லா கல்லூரிகளிலும், எல்லா பள்ளிகளிலும், எல்லா தொழிற்சாலைகளிலும், எல்லா பட்டாசு வியாபாரிகளிடமும், எல்லா பட்டாசு உபயோகிப்பாளர்களிடமும் (நாம் தான் - நமது குழந்தைகள் தான்) இருக்க வேண்டும். இந்த புத்தகத்தை எல்லோரும் படித்து பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறேன். பக்கங்கள் 144. விலை ரூ.200/-- எனவே ரூ 200 மணி ஆர்டர் அல்லது ஸ்ரீவில்லிபுத்தூர் அல்லது ராஜபாளையத்தில் மாற்றத் தக்க செக் அல்லது டிராப்டு கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:
Smt N.R.Uma Gandhi,
7-A, Koonangulam Devangar North Street,
SRIVILLIPUTTUR. 626 125 (Virudhunagar Dt).
Ph 04563 262 380 // 94434 27128
Email id: rathnavel_n@yahoo.co.in

rathnavel.natarajan@gmail.com

தங்களது பணம் கிடைத்த மூன்று நாட்களுக்குள் புத்தகம் கூரியரிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் மூலமாகவோ அனுப்பப் படும். எங்களது முதல் நல்ல முயற்சிக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி. வணக்கம்.


19 கருத்துகள்:

 1. நல்ல பகிர்வு. நன்றி. நிறைய பேருக்கு இந்த புத்தகம் உதவும் என்பதி ஐய்யமில்லை.

  பதிலளிநீக்கு
 2. பகிர்வுக்கு நன்றிங்க... நல்ல தகவலும் கூட.

  பதிலளிநீக்கு
 3. தேர்தல் ரிசல்டுக்கு பிறகு அமோக வியாபாரம் நடக்கும்.

  பதிலளிநீக்கு
 4. சிவகாசி ராஜபாளையம் போன்ற ஊர்களில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

  பதிலளிநீக்கு
 5. மிக குறுகிய காலத்திற்குள் பரவலான கவனிப்பு பெற்று இருக்கீங்க. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. நல்ல தகவல் சொல்லி இருக்கீங்க ஐயா. நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் பயன்படும்படியான அருமையான புத்தகத்தைப் பற்றி சொல்லி இருக்கீங்க.நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லாசனி, ஏப்ரல் 16, 2011

  நல்ல பகிர்வு..வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. I need this book. will send you the mailing address and cheque by april end. Not only your first attempt but all attempts will sure bring great success to you becoz of your ATTITUTE!! with regards,
  Roaming Raman (not from chennai now!)

  பதிலளிநீக்கு
 10. நல்ல தகவலும் நல்ல பகிர்வும்.

  வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 11. Thank you Sir for sharing information like this.I am sure this will be interesting to read and share with others..

  பதிலளிநீக்கு
 12. cracker usage in any form is harm to human ;other lifes and Earth.pl.avoid or boycot the crackers.

  பதிலளிநீக்கு
 13. நல்லதொரு பகிர்வு! புத்தகம் அதிக அளவில் விற்பனையாக வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 14. நல்ல பதிவு!!!

  பதிலளிநீக்கு
 15. நல்ல பகிர்வு. நன்றி. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு