சனி, பிப்ரவரி 04, 2012

நாய்கள் ஜாக்கிரதை – வெறி நாயாக இருக்கலாம்


நாய்க்கடி பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் செய்திகள் காணப்படுகின்றன.  மிகவும் மன வேதனைப் பட வைக்கின்றன.  பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்களின் அருமையான கட்டுரையை எனது பதிவாக அவர்களது அனுமதியுடன் வெளியிடுகிறேன். அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.  இந்த பதிவை படித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.  மிக்க நன்றி.

வெறிநோய் சிகிச்சையும்.. தடுப்பு நடவடிக்கையும்..! உலக நல நிறுவனத்தின் (WHO ) வின் அறிவுரைகள்

 

 பொதுவாக நாய் கடித்த உடனேயே சிகிச்சையைத் தொடங்கிவிட்டாலும், ஒரு சில நாட்களில் சிகிச்சையளித்தாலும் கூட வெறிநோயின் அறிகுறிகளிலிருந்தும், அது தொடர்பான சாவிலிருந்தும்  தப்பிக்க  வாய்ப்பு உண்டு. மேலும் நாய் கடித்த உடனேயே, அந்த காயத்தைக் கழுவி, நன்கு அதற்கும் சிகிச்சை அளித்து, வெறிநோய்க்கான இம்முயூனோகுளோபினையும் உடலுக்குள் செலுத்த வேண்டும். அத்துடன், உடனடியாக தடுப்பூசியும் போடவேண்டும் . சில சமயம், கடிபட்ட இடத்தை இயற்பியல்/வேதியல் முறைகளால் கழுவுவதன் மூலம் அரிதாக

 வெறி நோய் வைரஸை நீக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. எனவேதான், கடிபட்ட இடத்தில் உடனடியாக அதாவது 15 நிமிடத்திற்குள் முக்கியமாக சிகிச்சை செய்ய அளிக்க வேண்டும். முதலில் காயம் பட்ட/ கடிபட்ட இடத்தை சுமார் 15 நிமிட நேரம் தொடர்ந்து சோப்புத் தண்ணீர்/சோப்புத்தூள்/ டிங்க்சர் அயொடின் (povidone iodine)/வெறிநோய் வைரஸைக் கொல்லும் பொருட்களால் அந்த இடத்தை தொடர்ந்து கழுவி, வெறிநோய் வைரஸைக் கொல்ல வேண்டும். நிறைய தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும்.  நாய்க்கடிக்குப் பின், அது எந்த இடத்தில் கடித்தது என்பதைப் பொறுத்தும், எவ்வளவு ஆழமாகக் கடித்துள்ளது என்பதைப் பொறுத்தும் தான் 3 வகையான மருந்துகள் தரப்படுகின்றன.உலக நல நிறுவனம்.. (WHO) வெறிநாய்க்கடிக்காக தந்துள்ள அட்டவணை


வெறிநோய் உள்ளது என சந்தேகப் படும்  நாய்க்கடிக்காக தரப்படும் சிகிச்சை:
 1.      வெறிநோய் இருந்திருக்குமோ என சந்தேகப் படும் நாய் நக்கினால்/உணவு தரும்போது அந்த நாய் நம் உடலை தொட்டால், காயம் இன்றி இருந்தால், எந்த மருந்தும் தரவேண்டியதில்லை.
 2.      கடித்த நாய் வெறி நோயுள்ளதோ என சந்தேகித்து, அதன் கடி லேசான பிறாண்டலுடன் இருந்தால்,  நம் உடலின் மேல் தோல் மட்டும் சுரண்டப் பட்டிருந்தால்,  இரத்தம் வரவில்லை என்றால், நீங்கள் கவலைப் படவேண்டாம். அதற்கு உடனடியாக தடுப்பூசியும், காயத்தைச் சுத்தம் செய்து, அதற்கான சிகிச்சையும் உடனடியாக செய்ய வேண்டும்.
 3.    நாய்க்கடியினால் அதன் ஒற்றைப் பல்/ பல பற்களின் பதிவு உடலில் உண்டானால், தோலுக்குக் கீழே காயம் இருந்தால், உடனடியாக தடுப்பூசியும் போட வேண்டும். பின்னர் வெறிநோயின் இம்முயூனோகுளோபுலினும் போடவேண்டும்; காயத்தை நன்கு துடைத்துவிட்டு அதற்கான சிகிச்சையும் தரவேண்டும்.
 • §  கட்டாயமாய் வளர்முக நாடுகளில், கடித்த நாய்க்கு, தடுப்பூசி போடப்பட்டதா இல்லையா என்ற சந்தேகம் வந்தாலும், வராவிட்டாலும், கட்டாயமாய் சிகிச்சையைத் துவங்க வேண்டும்.

 •     நிச்சயமாய் வெறிநோய் தடுக்கக் கூடிய நோய்தான்.

 • §  இந்த நோய்க்காக பல இடங்களில்(multi-site intradermal regimen) ஊசி போடுவதும் உண்டு.  இந்த வகையான  மருந்து விலை குறைவானது.
உலக நல நிறுவனத்தின் கூற்றின்படி, வெறிநோய் வந்துவிட்டால் எப்படி 100% இறப்பு என்பது எப்படி நிச்சமோ அதே போல, வெறிநாய்க் கடித்தபின் சரியான சிகிச்சையினைத் தந்தால் 100% தடுப்பு நடவடிக்கையும், உயிர் காப்பாற்றப் படுதலும் நிச்சயம். 

 

WHO promotes wider access to appropriate post-exposure treatment using modern tissue culture or avian embryo-derived rabies vaccines through:
 • use of the multi-site intradermal regimen to reduce the cost of post-exposure treatments;
 • increased production of safe and efficacious rabies biologicals, which are in critical short supply globally, particularly rabies immunoglobulin;
 • continuing education of health and veterinary professionals in rabies prevention and control; and
 • immunization of 70% of the dog population to stop circulation of the virus at source.
Intramuscular schedules
One dose of the vaccine should be administered on days 0, 3, 7, 14 and 30. All intramuscular injections must be given into the deltoid region or, in small children, into the anterolateral area of the thigh muscle. Vaccine should never be administered in the gluteal region.
Abbreviated multisite schedule
In the abbreviated multisite schedule, the 2-1-1 regimen, one dose is given in the right arm and one dose in the left arm at day 0, and one dose applied in the deltoid muscle on days 7 and 21. The 2-1-1 schedule induces an early antibody response and may be particularly effective when post-exposure treatment does not include administration of rabies immunoglobulin.
Symptoms of furious rabies:
 • progressive anxiety and agitation.
 • stiff neck
 • seizures
 • overproduction of tears and saliva (end stage)
 • convulsions
 • dilated pupils
 • photophobia - abnormal sensitivity to light
 • thermophobia - abnormal sensitivity to temperatures
 • hydrophobia - drinking water becomes increasingly difficult. When the patient tries to drink the throat muscles and the diaphragm go into a spasm. Eventually it becomes so bad that just the sound or sight of water can bring on spasms.
 • insomnia
 • partial paralysis
 • delusions
 • hallucinations
 • alternating periods of mental clarity with severe anxiety, followed by confusion, delusions and hallucinations.
Virtually all patients die within two to ten days after the first symptoms appear. The extremely few who are known to have survived have had severe brain damage.


வெறிநோய் தடுப்பு சங்கம்

 இந்தியாவில் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்காக ஒரு சங்கம்
இருக்கிறது. அதன் பெயர், வெறிநோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம்.(Association for the Prevention and Control of Rabies in India (APCRI) .இது 1998 ல் ,17 மருத்துவர்களைக் கொண்டு உருவானது. அவர்கள் அனைவரும் வெறிநோய் தடுப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மிகவும் பொறுப்புடன் கவனித்து வருகின்றனர். 


நீங்கள் செய்யவேண்டியவை..:
§   நீங்களோ/குழந்தைகளோ இறந்த விலங்குகளை கையால் எடுக்காதீர்கள்.அதன் மூலமும் வெறிநோய் வரலாம். 
§  வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து விலங்குகளுக்கும் வெறிநோய்த் தடுப்பூசி கட்டாயமாய் போடவேண்டும். 
§  விலங்குகளால்  ஏற்படும் எந்த காயத்தையும் உடனடியாகத் துடைத்து, அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும்.
§  நாம் எந்த விலங்குகளுடனும் தொட்டு விளையாடி  பழகக் கூடாது.
§  குழந்தைகளிடம் விலங்குகளைத் தொடக்கூடாது என்று சொல்லித் தரவேண்டும்.
§  நாய்களிடம் மிக ஜாக்கிரதையாகவே பழகுங்கள்.

லகம் முழுவதுமே. வெறிநோய்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பு போதுமானதாக இல்லை எனப்து வருத்தத்திற்குரிய செய்தியாகும். 

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 


உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மிக்க நன்றி.

புதன், பிப்ரவரி 01, 2012

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)


பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் ஹீமோபீலியா (Hemophilia)  பற்றி முகநூலில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
  அந்த கட்டுரையை அவரது அனுமதியின் பேரில் எனது பதிவாக வெளியிடுகிறேன்.  தாங்கள் படித்துப் பார்த்து தங்களது கருத்தை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

ஏப்ரல் 17 ,உலக ஹீமோபிலியா தினம்:
ஹீமோபிலியா (Hemophilia ) என்பது இரத்தம் தொடர்பான ஒரு
பரம்பரை நோய்.  இது ஆண்களிடமிருந்து ஆண்களுக்கு மட்டுமே வரும்.
இதில் பெண்கள் ஹீமோபிலியா  நோயின் சுமப்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள்.  இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஏதாவது ஒரு காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறத் தொடங்கினால்,  இரத்தம் நிற்காது;  இரத்தம் உறையாது.  தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பொதுவாக நம் உடலில் ஒரு வெட்டும்  காயம் பட்டு இரத்தம் வெளிப்பட்டால்,  இரத்தம் வெளிக் காற்றைச் சந்தித்த நொடியிலேயே, அதனுடன் தொடர்பு கொண்டு, இரத்தம் உறைந்துவிடும்.  இதுதான் இயல்பு. அப்படி இன்றி தொடர்ந்து இரத்தம் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டே இருந்தால்,  இரத்த இழப்பு ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும். இரத்தம் உறையாமை நோய்க்கான வேதிப்பொருள். Factor viii இரத்தம் உறைதலின் காரணிகள்

பொதுவாக இரத்தம் உறைவதற்காக,  மரபணுவில் உள்ள ஒரு காரணி (clotting factor VIII ) இரத்தத்தில் இருக்கும். இது இரத்தம், இரத்தக் குழாய்க்குள் இருக்கும் போது செயல்படாது ; இரத்தம் குழாயை விட்டு வெளியேறினால் தான் இரத்தம் உறையும். உயிர் காப்பதற்கான இயற்கையின் ஓர் ஏற்பாடு இது. சிலரது உடலில் இந்த காரணி ஏதோ ஒரு காரணத்தினால் இல்லாமல் இருக்கலாம்/குறைபாடு இருக்கலாம். .அவர்களுக்கு இரத்தம் உறையாது. மேலும் இரத்தம் உறைவதற்கான காரணி"X" குரோமோசோமில்தான் உள்ளது .நம் உடலில் ஆண் பெண் பாலினத்தை நிர்ணயிக்கஆண் உடலில் "XY" குரோமோசோமும்பெண்ணிடம் "XX" குரோமோசோமும்,   உள்ளன.
நமது உடல் செல்லும், உட்கருவும், அதற்குள் உள்ள குரோமோசோமும்
   உள்ளன.


நமது உடல் செல்லும், உட்கருவும், அதற்குள் உள்ள குரோமோசோமும்ஆண், பெண்ணுக்கான குரோமோசோம்கள். பெண்:XX,ஆண் XY குரோமோசோம். ஆணின் குரோமோசோம்தான் எல்லா குரோமோசோம்களிலும் சிறியது. இது , காலப்போக்கில் அளவில் சிறியதாகி விட்டது.

 
ஆணின் :XY குரோமோசோம். பெண்ணின்XX குரோமோசோம்


பாலினம் உருவாதல். இதனை நிர்ணயம் செய்வது ஆணின் விந்தணுவில் உள்ள X மற்றும் Y சுமந்து வரும் தனித்தனி விந்தணுக்களே..!


மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும்,  23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இதில் 22 ஜோடி குரோமோசோம்கள்,  உடல் நிலைக்கும் ஒரே ஒரு ஜோடி குரோமோசோம் மட்டும் பாலினத்தை நிர்ணயிக்கிறது .உடலின் ஒவ்வொரு செல்லிலும், இந்த பாலின குரோமோசோம்கள் உள்ளன. கரு உருவாகும்போது, பாலினம் நிர்ணயிக்கப் படுவது, ஆணின் விந்து சுமந்து  வரும் X மற்றும் Y உள்ள விந்தணுக்களால்தான்.! X  குரோமோசோம்    இரு பாலினத்திலும் உண்டு.  இதில் X  குரோமோசோமில்தான் இரத்தம் உறையும் காரணி உள்ளது. இதில் ஏதாவது குறைபாடு இருந்தால், இரத்தம் உறையாது.  ஆனால். ஆணுக்கு ஒரே ஒரு X  குரோமோசோம் உள்ளதால், அதில் உள்ள குறைபாடு படக்கென வெளிப்படும்.  பெண்ணுக்கு இரண்டு X  குரோமோசோம்கள்  உள்ளதால்ஏதாவது ஒரு குரோமோசோமில் குறைபாடு இருந்தாலும் , மற்றது சமாளித்துக் கொள்ளும்பிரச்சினை வெளியில் தெரியாது.  ஆண்களின் X குரோமோசோமில் குறைபாடு/பாதிப்பு இருந்தால் அது உடனே வெளியில் தெரியும். அதனால்தான் வியாதி வருகிறது. அப்படி ஒரு நோய் தான் ஹீமோபிலியா என்னும்  இரத்தம் உறையாமை நோய். இது பரம்பரை பரம்பரையாக ஆண்களிடம் மட்டுமே வரும். பெண்கள் இந்த நோய்க்கான காரணியைச் சுமந்து,  தன் குழந்தைகளிடம் இறக்கி விடுவார்கள். 


இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணி 


விக்டோரியா மகாராணியின் சந்ததிகளில்.. இரத்தம் உறையாமை பாதிப்பு உள்ளவர்கள் வட்டப் புள்ளியில் குறியிடப்பட்டவர்கள். இரத்தம் உறையாமை நோய் இங்கிலாந்தில் உள்ள அரச பரம்பரையில் காணப்பட்டது. இந்த நோயின் மரபணு விக்டோரியா மகாராணியிடம் இருந்தது. அவர்தான் தாராளமாக தன் இளவரசர்களுக்கெல்லாம்     தந்தார். அவர்களுக்கு இரத்தம் உறையாமை நோய் வந்து கஷ்டப்பட்டார்கள். இறந்தும் போனார்கள்.  . இது அரச பரம்பரையில் வந்ததால் இதனை பெருமையுடன் அரச வியாதி (Royal Disease) என அழைத்தனர். முதன் முதலில் இதனைப் பற்றிய பதிவு இரண்டாம் நூற்றாண்டில் பாபிலோனியாவில் உள்ளது. அவர்கள் குழந்தைகளுக்கு சுன்னத் செய்யும் போது, தொடர்ந்து குழந்தைகளின் இறப்பு நேரிட்டதால் இந்த நோயைப் பற்றிக்  கண்டுபிடித்தனர்.  இன்று உலகில் இந்த வியாதியுடன் இருந்தாலும் சிலருக்கு அதன் தன்மை தெரியாது. வியாதி பற்றியும் தெரியாது. (எங்கள் பழனியில் கூட ஒரு பையன் இந்த நோயுடன் உள்ளான். அவனது பெற்றோருக்கு இந்த நோயின் தன்மை, தீவிரம் தெரியாது. ஒரு மருத்துவர் தான் இதனை அறிந்து தக்க தருணத்தில் ஆலோசனை தந்துள்ளார்). இரத்த உறவில் திருமணம் செய்வதால்தான், இந்த பரம்பரை நோய் அதிகரிக்கிறது. இது பரம்பரை நோய், மரபணு மூலம் வரும் என்பதால்இந்த நோய்க்கு மருந்தே கிடையாது. ஆனால், கவனத்துடன் இருந்தால், இதனைக் கட்டுப் படுத்தலாம். முக்கியமாக இரத்த உறவுக்குள் திருமணம் நடக்காமல் இருந்தால், இப்படிப் பட்ட இறப்பு நிகழும் நோய்களை தவிர்க்கலாம். இதன் முக்கிய காரணம் மரபணுவில் உள்ள சிக்கல்தான். இது இரத்த உறவு திருமணம் மூலம் அதிகரிக்கிறது.


இரத்தம் உறையாமை நோயை 2 வயதுக்கு முன்னே கண்டறிதல் 


பாதிப்பு ஏற்படும் இடங்கள்

உலகில் 75 % இரத்தம் உறையாமை நோய் உள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை கிடையாது. இவர்களைப் பற்றிய சரியான கணக்கெடுப்பும் கிடையாது.  இரத்தம் உறையாமை நோயில் மூன்று வகை உண்டு. உலக ஹீமோபிலியா  அமைப்பு, 1963 ல், கனடாவிலுள்ள மாண்ட்ரியலில் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக நல நிறுவனத்தால் அங்கீகரிப்பட்ட அமைப்பாகும். இதில் 113 நாடுகள் உறுப்பினராக உள்ளன.இரத்தம் உறையாத நோயாளிகளுக்கு விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக 1998 லிருந்து, ஏப்ரல் 17 ம் நாள் உலக இரத்தம் உறையாமை தினம், கடைப் பிடிப்பது என தீர்மானிக்கப் பட்டு, அது நடைமுறையிலும் இருந்து வருகிறது.  இரத்தம் உறையாமை அமைப்பின் நிறுவனரான பிரான்க் ச்சானபெல் ( Frank Schnabel)  லின் பிறந்த நாளான ஏப்ரல் 17 ம் நாளையே,  அந்த நோயுற்ற மக்களுக்காக கடைப்பிடிக்கின்றனர்.  
 
இரத்தம் உறையாமை நோயினால், பாதிப்பு ஏற்படும் பகுதிகள் 


இரத்தம் உறையாமை நோயின் சிகிச்சை


இரத்தம் உறையாமை நோய்க்கு மரபணு சிகிச்சை இரத்தம் உறையாமை நோய் வந்தவர்களின் வாழ்நாள் குறைவு.அதிகமாக, 11 வயது வரை தான் இருப்பார்கள். வியாதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், கொஞ்ச காலம் வாழலாம்.  2006 ம் ஆண்டு கணக்குப்படி, அமெரிக்காவில் 13 ,500௦௦ பேர் இரத்தம் உறையாமை நோயால் அவதிப்படுகின்றனர். இங்கிலாந்தில் 50,௦௦௦ 000,000பேர் இந்த நோயுடன் உள்ளனர்.  உலகில் பொதுவாக,5 ,௦௦௦000 ௦௦௦ ஆண்களுக்கு ஒருவர்  வீதம் இந்நோய் பாதிப்பு வருகிறது. இந்தியாவில் 1,000௦௦௦ ஆண் குழந்தை பிறப்புக்கு, 32 குழந்தைகளுக்கு இரத்தம் உறையாமை நோய் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1,300 புது இரத்தம் உறையாமை நோய் உண்டாகிறது. பெங்களூரில் 51 .31 லட்சம் மக்கள் தொகையில், இதுவரை 400௦௦ குடும்பங்களில் மட்டுமே இரத்தம் உறையாமை நோய் உள்ளதாக தெரியவருகிறது. இந்நோய் எத்தனை பேருக்கு உள்ளது என்ற சரியான கணக்கெடுப்பு இல்லை.தமிழ் நாட்டிலும் எத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற தகவல் இல்லை. 

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். 

Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 

உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும். 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். 

மிக்க நன்றி.