நிறைய வாகனங்கள் அற்புதமான வடிவமைப்பில் உள்ளன.
நல்ல உயர்ந்த மதில்கள் உள்ளன. சுற்றுப்பிரகாரம், சுற்றில் உள்ள பரிவார தெய்வங்கள் உள்ளன. கோவில் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
தற்போது உள்ள தேர் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. புதிய தேர் பணி துவங்குவதற்காக அறிவிப்பு கோவிலில் இருக்கிறது
அருமையான தெப்பம் வெளியில் இருக்கிறது. பக்கத்தில் பீடம் ஒன்று காணப்படுகிறது. கோவிலுக்கு வெளியில் 'அறிவியல் - ஆன்மீக பாடசாலை' ஒன்று இருக்கிறது.
இந்தக் கோவிலுக்கு அருகிலே பெருமாள் கோவில் ஒன்று இருக்கிறது .
ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கப் பெருமாளுக்கு தனி கோவில் இருக்கிறது. நாங்கள் இதுவரை இப்படி தனி சன்னதி பார்த்ததில்லை.
சிறிய கோவிலாக, பழமையானதாக, உள்ளே நந்தவனத்துடன், அருமையாக
பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தக்கோவிலிலும் சுவர் ஓவியங்கள்
அருமையாக இருக்கின்றன.
புகைப்படங்களை
தொகுத்தளித்திருக்கிறோம்.
புளியங்குடி எலுமிச்சம்பழ வியாபாரத்திற்கு புகழ் பெற்றது என்றார்கள் ( ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா போல) . நாங்கள் சென்ற நேரம் கொஞ்சம் முன்னாடியே சென்று விட்டோம். எலுமிச்சம்பழங்கள் வரவில்லை. ஒரு பேட்டை போல் இருக்கின்றது. கிட்டத்தட்ட நாற்பது கடைகள் இருக்கும். எண்ணிக்கைக்கு வியாபாரம் என்றார்கள். மற்ற ஊர்களில் எடை போட்டு வியாபாரம் - இங்கு எண்ணிக்கை வியாபாரம் என்றார்கள்.
ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலும், ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கப் பெருமாள் தனி சன்னதியும் எங்களை மறுபடியும் ஈர்க்கிறது. அடுத்து செல்லும்போது 'எலுமிச்சம்பழ வியாபாரம்' பற்றி படங்களுடன், வியாபாரிகளிடம் விபரம் கேட்டு தனி பதிவு எழுதுகிறேன்.
புளியங்குடியில் இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரத்தில் 'கற்பகாம்பாள் கோவில்' மலையில் அமைந்திருக்கிறது என்று சொன்னார்கள். எங்களுக்கு முன்பே தெரியாது. அடுத்து செல்லும்போது விபரங்கள் தொகுத்தளிக்கிறோம்.
இந்த பதிவுக்கு புகைப்படங்கள் எடுத்து உதவிய எனது மனைவி திருமதி உமாகாந்திக்கு நன்றி.
அடுத்து, எனக்கு பதிவை கணினியில் ஏற்ற, புகைப்படங்கள் எடுத்து கணினியில் ஏற்ற உதவி செய்த எனது பாசப்பிள்ளை ராஜவேல் வேலை கிடைத்து சென்னை சென்று விட்டான். அவனை மனசார வாழ்த்துங்கள்
எங்களது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய குடும்ப நண்பர் திருமதி ரமாமணி அவர்கள் தான் இந்த பதிவிற்கும் இனிமேல் நாங்கள் இடும் பதிவுகளுக்கும் எங்களுக்கு ஆலோசனைகளும் உதவிகளும்.
இந்த பதிவை படித்து நிறை குறை எழுதுங்கள். Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.
மிக்க நன்றி.
நல்ல பகிர்வு....
பதிலளிநீக்குஅற்புதம் ஏதோ சினிமா ஸ்டில்ஸ்
பதிலளிநீக்குபார்த்துபோல் அத்தனை கிளாரிடி
எத்தனை துள்ளியமாக படம்
நல்ல பதிவு சார்.... தங்கள் மகன் வேலையில் சிறப்பாக பணியாற்றி மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் ...
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு. கோவில் படங்கள், குறிப்பாக ஓவியங்கள் வெகு அழகு. மகன் ராஜவேல் சேர்ந்திருக்கும் வேலையில் சிறப்பாக மிளிர வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநல்ல பகிர்வு, நன்றி
பதிலளிநீக்குலக்ஷ்மி நரசிம்மருக்கு , சென்னை நங்க நல்லூரில் தனியாக இரண்டு கோவில்கள் உள்ளன.
சென்னை வந்தால் கண்டிப்பாகப் போய் பாருங்கள்
ஆன்மீகத்தை மட்டுமே எழுதுவீங்களா.??
பதிலளிநீக்குமனங்கவர்ந்த பதிவு
பதிலளிநீக்குவழக்கம்போல் படங்கள் மிக மிக அருமை
தங்கள் புதல்வர் பணி கிடைத்துச் செல்லும் செய்தி
மகிழ்வளிப்பதாக உள்ளது
எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும்
பதிவிற்கும் துணையாக இருக்கும் உங்கள்
துணைவியாருக்கு வாழ்த்துக்கள்
நெல்லை பதிவுலக சந்திப்பு குறித்து
தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யலாமே
ஆவலுடன் எதிர்பார்கிறோம்
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமையான படங்கள். நிறைவான பகிர்வு. பாராட்டுக்கள்.
படங்கள்தான் கவருது பதிவில் !
பதிலளிநீக்குபுகைப்படங்கள் எல்லாமே அழகு! நல்ல பகிர்வு!
பதிலளிநீக்குஉங்கள் மகன் அனைத்து வளங்களும் பெற்று சிறந்து விளங்க என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!
74 ம் ஆண்டு திருமணமாகி புக்ககமான புளியங்குடியில் காலடி வைத்த அன்று ஆசியும் அருளும் வழங்கிய இரண்டு கோவில்களைப் பற்றிய விவரங்களையும் இன்றுதான் முழுமையாக அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குதொடரட்டும் உங்கள் பணி
[பெருமாள் கோவில் தெருவில்தான் எங்கள் இல்லம்]
அடுத்து எலுமிச்சை பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சீரும் சிறப்பும் பெற வாழ்த்துகிறோம்
பதிலளிநீக்குஒரு சுற்றுலாத்தளம் போய்வந்த உணர்வு ஏற்பட்டது.வேலைகிடைத்துப்போன உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குஐயாவுக்கு! உங்கள் இடுகைகளுக்கு மகுடம் சூட்டுவது புகைப்படங்கள் அதனை தங்கள் துணைவுயார் பதிவிடுகிறார் எணும் போது பிமிப்பாக இருக்கிறது.அவருக்கு என்வாழ்த்துக்கள். தென்காசி செல்லும் பாதையில் இருக்கும் பூளியங்குடி தானே நீங்கள் குறிப்பிடுவது.---காஸ்யபன்
பதிலளிநீக்குநல்ல பதிவு
பதிலளிநீக்குராஜவேலுவிர்க்கு வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குகோயிலுக்கு சென்று தரிசனம் செய்ததுபோல் அற்புதம் ஐயா..:))
பதிலளிநீக்குரைட்டு, கோயிலுக்குப்போற செலவு மிச்சம்..
பதிலளிநீக்கு>>Your comment will be visible after approval.
பதிலளிநீக்குஇது எதுக்கு? அரசியல் பதிவு எழுதுபவர்களூம்,பெண் பதிவர்களூம் தான் கமெண்ட் மாடரேஷன் வைப்பாங்க.. ஆன்மீகப்பதிவர் நீங்களுமா? ஹா ஹா சாரி.. அது உங்க உரிமை.. சும்மா என் கருத்தை சொன்னேன்..
உங்கள் மகன் ராஜவேலுக்கு 'எங்கள்' வாழ்த்துகள்.புகைப் படங்கள் அழகு.
பதிலளிநீக்குமன நிறைவான செய்திகளும் படங்களும் நெகிழ்ந்தேன்
பதிலளிநீக்குபடங்களின் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குதிருமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபடங்கள், ஓவியங்கள் அழகு. மகன் ராஜவேல்க்கு வாழ்த்துக்கள்!
இன்றுதான் என் முதல் வருகை. பதிவு நன்றாக இருக்கிளது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குபடங்களும் பதிவும் அருமை.
பதிலளிநீக்குஇந்த புளியங்குடி எங்கே இருக்கு?
சின்னக்கோவில்கள் என்றாலும் அருமையாகப் பராமரித்து, சுத்தமா வச்சுருப்பதுதான் முக்கியம். அந்த வகையில் இது எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு.
மகனுக்கு எங்கள் இனிய வாழ்த்து(க்)கள். படங்களுக்கு உங்கள் தங்கமணிக்கு என் பாராட்டுகள்.
எனது முதல் வருகை அய்யா. அன்பின் வணக்கங்கள். சிறப்பான பதிவு. தல வரலாற்றையும் சுருக்கமாக குறிப்பிட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். நன்றி அய்யா. வருகிறேன்.
பதிலளிநீக்குமுதல் முதலாக உனகள் வலை தளம் வருகிறேன் உங்களை பற்றிய அறிமுகமே பூரிப்படைய வைக்கிறது ஐயா
பதிலளிநீக்குஅனைத்தும் செழுமையான படைப்புகள் வாழ்த்துக்கள்
புகைப்படங்கள் அருமை. நேரில் அந்த வண்ணப்படங்களைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. அந்த படங்களை எடுத்த உங்கள் துணைவியாருக்கு நன்றி உரித்தாகுக. தங்கள் செல்வன் இராசவேலுவுக்கு எனது வாழ்த்துக்களும் ஆசிகளும்.
பதிலளிநீக்குஉங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..:)
பதிலளிநீக்கு