சனி, ஜூன் 18, 2011

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
(EMPLOYEES PROVIDENT FUND)
பிரச்னைகளும் தீர்வுகளும்.

பாகம்-2
  இது இன்னுமொரு பிரச்னையும் தீர்வும்.  
எங்களது தொழிற்சாலையில் வேலை பார்த்த பெண்மணி (இளம் விதவை) 29.5.98 ஆம் நாள் இறந்து விட்டார். (கணவன் இறந்த நாள் 16.7.95). இறக்கும்போது அந்த பெண்மணியின் வயது 27. அப்போது அந்த பெண்மணிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள் -
 ஆண் குழந்தை வயது 5           (பிறந்த தேதி: 2.6.93)
 பெண் குழந்தை வயது 3           (பிறந்த தேதி: 22.1.95)
.அந்த குழந்தைகளின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.  அப்பா அம்மா இல்லை.  குழந்தைகளின் வயது ஐந்து, மூன்று.  அப்பா வழியில் பிள்ளைகளை பார்த்துக் கொள்ள ஆட்களும் இல்லை, வசதி வாய்ப்பும் இல்லை.  இறந்த பெண்மணியின் தாயார் ( மகள் இறக்கும் போது தாயாரின் வயது ஐம்பத்தி இரண்டு) சிறிய பெட்டிக்கடை தான் வைத்திருக்கிறார்.  வேறு வசதி வாய்ப்பு கிடையாது.

நாங்கள் இறந்த பெண்மணியின் தாயாரை எங்களது அலுவலக நண்பர் மூலம் அணுகி பென்ஷன் பெறுவதற்கு இருக்கும் ஆவணங்கள் (documents) கொண்டு வரும்படி கேட்டோம்.  அவர்கள் மகளின் இறப்பு சான்றிதழ், இரண்டு குழந்தைகளுக்கு பாட்டியை கார்டியனாக நியமித்து தாலுகா அலுவலகத்திலிருந்து பெறப் பட்ட 'வாரிசு சான்றிதழ்' முதலியவைகளை கொடுத்தார்கள்.நாங்கள் கிளைம் படிவங்களை மதுரை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தோம்.
மதுரை அலுவலகத்திலிருந்து அனைத்து படிவங்களும் கீழ்கண்ட விபரங்கள் கேட்டு திரும்பி வந்து விட்டது.
  1. குழந்தைகளுக்கு கார்டியனாக பாட்டி இருப்பதற்கு 'நீதி மன்றத்திலிருந்து பெறப்பட்ட ஆணை'
  2. குழந்தைகளின் தகப்பனார் இறந்ததற்கான 'மரண சான்றிதழ்'
  3. குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ்
  4. இறந்த பெண்மணிக்கு அசல் மரண சான்றிதழ் (Original Death Certificate)

நாங்கள் குழந்தைகளின் பாட்டியை எங்களுக்கு தெரிந்த வக்கீல் ஒருவரை அணுகச்சொன்னோம்.  அவர் நீதிமன்றத்தை அணுகி எதிர்தரப்பினருக்கு (குழந்தைகளின் தகப்பனார் வழி உறவினர் தெரிந்த பெயருக்கு) நோட்டீஸ் அனுப்பினார்கள்.  அவர்கள் யாரும் வரவில்லை.  எனவே பாட்டியை கார்டியனாக நியமித்து சான்றிதழ் வழங்கி விட்டார்கள்.
குழந்தைகளின் பிறந்த சான்றிதழ் (குழந்தைகள் மதுரையில் பிறந்தன) அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வாங்கினோம்.  இந்த தாமதத்தில் குழந்தைகள் இரண்டும் பள்ளியில் சேர்ந்து விட்டன.  எனவே பள்ளியில் இரண்டு குழந்தைகளுக்கும் அவர்களது 'லெட்டர் பேடில்' சான்றிதழ் வாங்கினோம்.  கணவன் மனைவி இருவரது இறந்த நாட்களை 'மதுரை கார்ப்பரேஷனுக்கு' எழுதி அதற்கான கட்டணத்தை சேர்த்து அனுப்பினோம்.பாருங்கள் - நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். நேரில் போகாமல், மேற்கொண்டு எந்தசெலவும் இல்லாமல் தபாலில் வந்து விட்டது.  எங்களுக்கு பெரிய ஆச்சரியம்.எல்லோருக்கும் நன்றி.

பிறகு பாட்டியை - அவர் பெயருக்கும், குழந்தைகள் பெயருக்கும் (பாட்டி கார்டியனாக இருந்து) - இந்தியன் பேங்கில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்து பாஸ் புக் கொண்டு வரச்சொன்னோம்.

இவ்வளவும் முடிந்து 6.11.2002 தேதியன்று கிளைம் படிவங்களை அனுப்பி வைத்தோம்.19.2.2003 தேதியன்று பென்ஷன் 'இறந்த தேதியிலிருந்து' வழங்கப்பட்டது.இதற்கு எல்லோரது ஒத்துழைப்பும், பொறுமையும் முக்கியம். மற்ற அரசாங்க ஊழியர்களுக்கு பென்ஷன் அப்போதைக்கப்போது கிராக்கிப்படி போன்று உயர்த்தப்பட்டு கொடுக்கப்படுகிறது.ஆனால் வருங்கால வைப்புநிதி முதலில் என்ன வழங்கப்பட்டதோ (ஆரம்பத்தில் 338, இன்னும் அதே தொகை தான்) அதே தான் கடைசி வரை வழங்கப்படுகிறது.
இதற்கு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும், வருங்கால வைப்பு நிதி அதிகாரிகளும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டுகிறேன்.

இந்த பதிவை படித்து பார்த்து உங்களது கருத்துக்களை பின்னூட்டமாக எழுதுங்கள்.
இந்த பதிவை அழகுற அமைத்த, இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய திருமதி.ரமாமணி அவர்களுக்கு மனப்பூர்வ நன்றி
.

மிக்க நன்றி.

12 கருத்துகள்:

  1. மிக அழகாக வடிவகைப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள தகவல் சார். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. மிக அழகாக தொகுக்கப்பட்டுள்ளது. பென்ஷன் சம்பத்தப்பட்ட விவரங்கள் எவ்வளவு விரைவாக ஷண்டிங் செய்து எவ்வளவு பொறுப்பாக உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது!!!அதிசயம்தான். இதற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள தகவல் பகிர்வு அறியத்தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. எழுபது, எண்பதுகளிலெல்லாம் பிறந்த நாள் சான்றிதழ் குறித்தோ, கல்விக் கூடத்தில் தெரிவிக்கும் வயது பின்னாளில் எத்தகைய முக்கியத்துவம் குறியாதோ விழிப்புணர்வு அற்ற நிலை. என் இளவலுக்கும் எனக்குமே கல்விச் சான்றிதழ் படி வெறும் 6 மாதங்களே! இன்னமும் நம் மக்கள் முழுதாய் விழிப்புணர்வடையவில்லை என்பதே என் எண்ணம். இது போன்ற சட்டச்சிக்கலுக்குரிய சின்ன சின்ன விஷயங்களில் கவனிப்புடன் இருப்போமாயின் வருங்காலத்தில் நிம்மதியுடன் இருக்கலாம். தொடருங்கள் உங்கள் விழிப்புணர்வு பரப்புரையை!

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையான பதிவு அய்யா. இது மாதிரி விஷயங்களுக்காகவே ஒரு வலையை நீங்கள் தனியாக துவங்கி அதில் நிறைய பேரை எழுத வைக்கலாம். மிகவும் உதவியாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  7. மிக உபயோகமுள்ள பதிவு ஐயா.. நல்ல மனிதர்கள் நிறைந்து இருக்கிறார்கள் எங்கும்..:)

    பதிலளிநீக்கு
  8. மிக அருமை சார். இது எல்லாருக்கும் உபயோகமானது நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றீ..

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள ஐயா..
    வணக்கம். தவிர்க்கமுடியாத பணிகள். ஆகவே நான் வலைத்தளத்திற்கு வந்தே நாட்களாகிவிட்டன. இன்று மின்னஞ்சல் பார்த்தேன். உடன் எனது முகவரி எழுதிவிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    இந்தப் பதிவைப் படித்ததும் எனக்கு எனது சகோதரியின் நினைவு வந்துவிட்டது. என்னுடைய மூத்த சகோதரியின் கணவர் திடீரென்று இறந்துபோனார். நான்கு பிள்ளைகள். கிட்டத்தட்ட அவர்கள் போராடி நல்ல நிலைக்கு வருவதற்கு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தப் பதிவின் மூலம் உங்களின் பொறுப்பான சமூகப்பணியின் உணர்வை எண்ணிப் பெருமைப்படுகிறேன். கடவுள் எல்லோருக்கும் ஒரு வாழ்க்கையை அளித்திருக்கிறார். அதை யாரும் பறித்துவிடமுடியாது. பாட்டியின் வளர்ப்பில் அந்தக் குழந்தைகள் சாதிப்பார்கள். இந்த உலகை வெல்வார்கள். அப்போது உங்களைப் பற்றி பேசுவார்கள். உங்கள் செயல்கள் மதிக்கப்படும். போற்றப்படும். உங்களின் இந்த பணியை நான் தலைவணங்கி பாராட்டுகிறேன். இனி தொடர்ந்து வருவேன். இருப்பினும் எனது வலைத்தளத்தில் கருத்துரைக்கமுடியாமல் தொழில்நுட்பச் சிக்கல் இருப்பதாக பலர் எழுதினார்கள். என்னுடையதுதான் அப்படியென்று நினைத்தேன். பொதுவாக வலைத்தளத்தில் இந்தச் சிக்கல் இருப்பதாக அறிந்தேன். எனவே விரைவில் இது சரியாகிவிடும் என்றார்கள். காத்திருக்கிறேன். வாய்ப்பு அமையும்போது அடிக்கடி வருகிறேன். தற்போது இங்கேயும் எனது முகவரியைத் தருகிறேன். 31 பூக்குளம் புது நகர், கரந்தை, தஞ்சாவூர் / 613 002. நன்றி. அருமையான பொறுப்புணர்ச்சிமிக்க பதிவு இது.

    பதிலளிநீக்கு
  10. உஙள் வலைத்தளத்தைப் பார்த்து வியந்தேன். தமிழில் உள்ள எல்லா வலைப்பூவிற்கும் விஜயம் செய்கிறீர்கள். என் வலைப்பபூவிலும் கொஞ்சம் தேன் இருக்கும். வாருங்கள்: பாருங்கள்!
    http: kadugu-agasthian.blogspot.com

    பதிலளிநீக்கு