திங்கள், செப்டம்பர் 12, 2011

மருத்துவமனை - வியாபாரமா? சேவையா?

மருத்துவக் கட்டுரைகள் - பாகம் 1

பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் - புற்று நோய் அனுபவங்களை எழுதுகிறார்.

பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் - வானியல் பற்றியும், பிளாஸ்டிக் பற்றியும் எழுதிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தோம். அவர்கள் 25.8.2010 இல் புற்று நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து அபாரமாக மீண்டு வந்திருக்கிறார். அதற்கு முன் மதுரை மருத்துவமனையில் ஏற்பட்ட அனுபவங்களையும், பின்பு கோவை மருத்துவமனைக்கு சென்றதையும், இடையில் ரேடியேசன் சிகிச்சைக்கு செல்லும்போது சிறுவர் சிறுமிகள் நோயினால் படும் அவஸ்தைகளையும் எழுதியிருக்கிறார். இது கொஞ்சம் பெரிய கட்டுரை. எனவே 2 பகுதிகளாக வெளியிடுகிறோம். எனவே தொடர்ந்து படித்து விழிப்புணர்வு பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.


 

மார்ச்..8 & 9ம் நாளின்..அனுபவ பகிர்வு..!

by Mohana Somasundram on Thursday, March 10, 2011 at 6:23pm




 வணக்கம். நேசமிகு நெஞ்சங்களுடன், நேற்றைய (2011,மார்ச்,9) அனுபவத்தின் நினைவுகள், உணர்வுகள், வேதனைகள், வியப்புகள் என  சில பகிர்வுகளை தர எண்ணுகிறேன். . பணமே குறிக்கோளாய் இயங்கிக் கொண்டிருக்கும்  இந்த உலகில் சில மனித நேய செயல்களும் நடப்பதுண்டு. உயிர்காக்கும் மருத்துவ மனையானாலும் கூட, பணம் இல்லை என்றால், ஒரு நாய் கூட நம்மை மதிக்காது; எந்த உயிரும் காக்கப்பட மாட்டாது. இது எல்லோருக்கும் தெரிந்த நிதர்சனம். நேற்று கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனையில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தில் நான் மயக்கம் போடாத குறைதான். மார்ச் 4ம் நாள், மருத்துவ பரிசோதனைக்காக , கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனை சென்றேன்.சோதனை முடிந்தது. எனது பல் வேதிசிகிச்சையால் மிகவும் பாதிக்கப்பட்டு, ஒரு வாரமாக  பல்வலி. பழனி பல் மருத்துவர்கள், புற்று நோய் நிபுணரின் ஒப்புதலின்றி, எதுவும் செய்ய முடியாது என்றனர். 


நிபுணர் பல் எடுக்க/வேர்க்கால் சிகிச்சை செய்ய ஓகே சொல்லிவிட்டார்..  எதற்கு பிரச்சினை என்று, ராமகிருஷ்ணா  மருத்துவ மனையிலேயே பல்லையும் ஒரு கை பார்த்து விடலாம் என எண்ணினேன்.பல் மருத்துவரைக் காண ரூ.150  ௦கட்டி, பல் மருத்துவரிடம் சென்றால், அவரும் சரி என்றார். வேறு சோதனைகள் முடிந்தால் தான், இதனை செய்ய முடியும், பாதி சோதனைகள்தான் முடிந்தன. முடிய ரொம்ப நேரம் ஆகி விட்டது. இரண்டு நாள் சென்று வரலாம் என்று திரும்பி விட்டோம். மீண்டும் மார்ச் 8ம் நாள், சோதனை எடுக்கப்பட்டது. அன்றும் பல்லைக் காண்பிக்க வெளி நோயாளி சீட்டு ரூ.150 க்கு வாங்கினேன். பார்க்கவில்லை, காரணம் சோதனை முடியவே நேரமாகிவிட்டது. மீண்டும் நேற்று கோவை படையெடுப்பு. பல் மருத்துவரிடம் போய், கோகுலின் சீரிய ஆலோசனையுடன், எடுத்தேவிடலாம் என முடிவாய் போனால், அவர் சொன்னதில் நான் மூர்ச்சையாகி, கீழே  விழாமல் இருந்தது ஆச்சரியமே..! அப்படி என்ன என்கிறீர்களா?

இந்த மருத்துவ மனையில், ஒரு முறை வெளி நோயாளி சீட்டுக்காக ரூ 150 கட்டிவிட்டால், அடுத்த 15    நாட்களுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் அந்த மருத்துவரை நீங்கள் பார்க்கலாமாம். என்ன நம்பும்படியாகவா இருக்கிறது.? ஆனால் உண்மை நண்பா..! அது மட்டுமல்ல, அவர் சொன்னதில், அதிர்ச்சியில் இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது.! என்ன தெரியுமா? "பல்லைப் பிடுங்க ரூ.200/- வாங்குவோம். நீங்கள் ஏற்கனவே அதிகமாய் ரூ 150 கட்டிவிட்டதால், அதனை கழித்துக் கொள்கிறோம். பாக்கி 50 மட்டும், பல்லை எடுத்துவிட்டு போய் பணம் கட்டுங்கள்" என்றார். எப்படி இருக்கும்? என்னடா உலகம் இது ? உண்மைதானா..!   நம்பவே முடியவில்லை. மரத்துப் போவதற்கான ஊசி போட்டார். 2 நொடிக்குள் மரத்துப் போய்விட்டது. உடனேயே பல்லையும் பிடுங்கிவிட்டார்,  வலியும் தெரியவில்லை. அனைத்தும் அதிக பட்சம் 5நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டது. எவ்வளவு அவசரம், ஆபத்தான நிலைமை என்றால் கூட, கையிலே காசு, வாயிலே தோசை என்னும் மருத்துவ மனைகள் மத்தியில்,மக்களுக்காக, மனித நேயத்துடன் பணிபுரியும் .. இப்படி ஒரு மருத்துவ மையம்..! அதுவும், நேற்று  அதிகம் கட்டிவிட்டீர்கள், இன்று குறைத்து கட்டுங்கள் என்று..!

  

இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட இரட்டை பெண்குழந்தைகள். ரிது, ரிஷிகாவின் இரண்டாவது பிறந்த நாள், மருத்துவ மனையில்..



      கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனை இன்னொரு உயிர் காக்கும்
சேவையையும் சத்தமின்றி செய்கிறது. பூவுலகின் பூத்த சில பிஞ்சுகளின் இரத்த புற்று நோய்க்காக இலவச மருத்துவம் செய்கிறது. ஆமாங்க..! இரத்த புற்று நோய் வந்த மலர்களின் பெற்றோர்கள்/உடனிருப்போருக்கும் சேர்த்து உணவு, உறைவிடம், பாலகர்களுக்கான  அனைத்து மருந்துகளையும், பணமின்றி கொடுக்கிறது இந்த மருத்துவ மனை நிறுவனம்.! இப்போது 9 குழந்தைகள் உள்ளன.

உலக புற்று நோய் தினத்தன்று, ஓவியம் தீட்டப்படும், பாதிப்புள்ள பிஞ்சு

அவர்களுக்கு பொழுபோக்கு பொருள்களும் உண்டு. அவர்கள் மிகவும் அன்புடனும், ஆதரவுடனும், கவனிப்புடனும் பார்த்துக் கொள்ளப் படுகிறார்கள். இதைப் பற்றிய தகவளும்  இந்த வார விகடனில் வந்துள்ளது. நேற்று 2 வயது பெண் குழந்தை ஒன்றை x கதிர் அறையில் பார்த்தோம். வாய்,மூக்கில் குழாய்கள்..! அருகிலிருந்த தந்தையிடம்,,என்ன சார் விஷயம் என்றால், அவர் கண்களில் நீர் ததும்ப, ஒரு வருடமாய் இரத்தப் புற்று என்கிறார் . நம் கண்ணிலும் நீர் திரண்டது.


பாவம் அந்த ஏதும் அறியாத குழந்தை..!நான் வேதிசிகிச்சைக்காக அங்கு தங்கியுள்ள சமயங்களில் அந்த குழந்தைப் பார்த்து படம் எடுக்க நினைப்பேன். பக்கத்தில் பெற்றோர்கள்..! எப்படி எடுக்க? மூன்று வயது சிறுவன், வேதிசிகிச்சை நடைபாதையில் ஓடியாடி விளையாடித் திரிகிறான்.




தலையில் முடி கொட்டி இருக்கிறது. இரத்தப் புற்று நோய்தான்..! புற்று நோய் சிகிச்சை மையம்/அந்த வார்டுக்குப் போனாலே, மனம் கனத்துப் போய்விடுகிறது.
 தொடரும்.....

இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவும், மற்றும் எங்களது பதிவு மேம்பாட்டிற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றியும், வணக்கமும்.
 
 இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள். தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள். உங்கள் பெயரை Google Connect Widget இல் பதிந்து கொள்ளுங்கள். உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு இடும்போது உங்களது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து விடும்.
 
மிக்க நன்றி.
 

62 கருத்துகள்:

  1. ஒரு நல்ல மருத்துவ மனை பற்றிய அறிமுகத்துக்குப் பின் மனம் கனக்கச் செய்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  2. மருத்துவமனையின் சேவையை நினைத்து பெருமிதமாக உள்ளது.சென்னையிலும் அடையாரில் வாலண்டரி ஹெல்த் ஆர்கனைஷேஷன்(VHS) என்ற மருத்துவமனையில் இம்மாதிரி சேவை நடக்கின்றது.அங்கும் 150 ரூபாய் கட்டினால் பதினைந்து நாட்கள் பார்த்துக் கொள்ளலாம்.
    வருமானம் குறைவாக உள்ளவர்கள் அதற்கு தகுந்த ஆதாரங்கள் காண்பித்து குறைந்த கட்டணத்திலோ அல்லது இலவசமாகவோ வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம்.இங்கும் புற்று நோயால பாதிக்கப் பட்ட மற்றும் தலசமியா என்ற வியாதியால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு வசதிகள் உண்டு.மேலே குறிப்பிட்டுள்ள குழந்தைகளுக்காக நான் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.பகிர்விற்கு நன்றி.அவசியமான விழிப்புணர்வு பதிவு

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு...வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  4. தொடருங்கள் ...தொடர்கிறேன் ... வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  5. மருத்துவத்துக்காக ஏங்கும் மக்களுக்கு இதுபோன்ற அனுபவப் பகிர்வு நிச்சயம் பயனளிக்கும் பதிவிட்டமைக்கு நன்றி!

    சில படங்கள் தெரியவில்லை.

    மருத்துவத்தின் மற்றொரு பக்கத்தை விளக்கும் ஒரு பதிவு இதோ.
    மனித உயிர் உலோகத்தைவிட மலிவானதா?
    http://hooraan.blogspot.com/2011/04/blog-post_27.html

    பதிலளிநீக்கு
  6. கண்களில் நீர்!!!பாவம்...குழந்தைகள்தான் என்ன பாவம் செய்தன?? எல்லோரும் விரைவில் குணம் பெற ஆசீர்வதியப்பா ஆண்டவா!!

    பதிலளிநீக்கு
  7. இது போன்ற சேவை மனம் மிக்க மருத்துவமனைகள் இருப்பது மகிழ்வை தருகிறது. வியாபாரியின் கையில் சிக்காத மருத்துவமனையில் இது போன்ற அதிசயங்கள் நடைபெறுகின்றன. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு ஐயா
    அறிய வைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நல்ல பயனுள்ள அனுபவ பகிர்வு! உங்கள் சேவை மனதிற்க்கு வணக்கங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. மனதில் இனம் புரியாத உணர்வு.

    பதிலளிநீக்கு
  11. புற்று நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளை நினைக்க மனம் கனக்கிறது.
    விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்போம்

    பதிலளிநீக்கு
  12. பகிர்வுக்கு நன்றி... நிறைய பேரை சென்றடைய வேண்டிய இடுகை...

    பதிலளிநீக்கு
  13. அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பற்றிய எனது பழைய பதிவு நேரம் கிடைக்கும்போது படிக்கவும்...

    http://philosophyprabhakaran.blogspot.com/2010/07/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  14. எழுதுகின்ற சம்பவங்களை எப்படி பத்தி பிரித்து எழுதுகின்றோமோ அதே போலத்தான் இந்த படங்களும் படிப்பவர்களுக்கு ஒரு தாக்கத்தை உருவாக்க வேண்டும். எல்லா படங்களும் பெரிதாகவே இருக்க வேண்டும் என்ற அவஸ்யம் இல்லை. இடது வலது என்று பொருத்தமான இடங்களில் வருவதைத்தான் லே அவுட் என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  15. உங்களின் பதிவுகள் அத்துனையும் அருமை. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  16. மிக நல்ல பதிவு..

    உண்மைதான்..

    மருத்துவத்தை சேவையாக செய்பவர்களும் உண்டு..

    என்ன இவ்வகையினரைக் காண்பது அரிது.

    மருத்துவத்தை வியாபராமாக செய்பவர்களே அதிகம்!!!

    என்ன செய்வது அவர்கள் கட்டிய பணத்தை வேறு எப்படி எடுப்பார்கள்..

    கல்வி, மருத்துவம் இரண்டும்தான் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கவேண்டியது..

    ஆனால் இந்த அரசு ஏதேதோ இலவசமாகக் கொடுக்கிறது..!!!!!!!!!?????????

    பதிலளிநீக்கு
  17. அருமையான அவசிய பகிர்வுக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  18. Many reputed hospitals and doctors do not charge if u comeback
    with in 15 days..but many don't do also...
    nice to hear bout Ramakrishna hospitals does ethical service..thnx for sharing

    பதிலளிநீக்கு
  19. பயனுள்ள இந்தப் பகிர்வு சிறப்பாத் தொடர்ந்து சென்று
    மக்களைச் சேர்வதற்கு வாழ்த்துக்கள் ஐயா ..............
    மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    பதிலளிநீக்கு
  20. நல்ல கட்டுரை. நல்ல மருத்துவர்கள்.

    பதிலளிநீக்கு
  21. // இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில் சில மனித நேய செயல்களும் நடப்பதுண்டு. உயிர்காக்கும் மருத்துவ மனையானாலும் கூட, பணம் இல்லை என்றால், ஒரு நாய் கூட நம்மை மதிக்காது; எந்த உயிரும் காக்கப்பட மாட்டாது. இது எல்லோருக்கும் தெரிந்த நிதர்சனம்.//
    ஆம் உண்மை. இப்படிபட்ட உலகில் ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சேவை போற்றதக்கது.
    நன்றி ஐயா பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ஐயா,
    நல்லதோர் பதிவு, இறுதிப் பந்திகளில் மனதை இளகச் செய்திருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  23. இந்த மருத்துவமனையின் செயலும், அதை வெளிச்சம் போட்டுக் காட்டிய உங்கள் பதிவும் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
  24. மருத்துவமனையின் சேவையை நினைத்து பெருமிதமாக உள்ளது.நல்ல பயனுள்ள அனுபவ பகிர்வு

    பதிலளிநீக்கு
  25. வியாபார நோக்கத்துடன் செயல்படும் சில மருத்துவமனைகளால் பல நல்ல மருத்துவமனைகளுக்கும் கெட்ட பெயர் உண்டாகிறது.

    பதிலளிநீக்கு
  26. சில மருத்துவமனைகளை பார்க்கும் போது சந்தோஷமாகவும் சிலவை வெறுப்பையும் ஏற்படுத்துகிறது

    பதிலளிநீக்கு
  27. நல்ல பதிவு ஐயா

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  28. ஐயா இந்தபயனுள்ள பதிவு பலரையும் சென்று அடையனும் ஐயா.

    பதிலளிநீக்கு
  29. நல்ல விழிப்புணர்வு கொண்ட பதிவு. மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களுக்கு....

    பதிலளிநீக்கு
  30. பலருக்கும் பயன்படுகிற நல்ல பதிவிது. அருமையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  31. உண்மையில் மிகச்சிறந்த அனுபவப் பகிர்வு. இது போன்ற மருத்துவமனைகளைப் பார்த்தாவது பணம்பிடுங்கி மருத்துவமனையாளர்கள் திருந்துவார்களா?

    பதிலளிநீக்கு
  32. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  33. மிக நல்ல தகவல்

    ராமகிருஷ்ணா மருத்துவமனை உண்மையில் பாராட்டுக்குரியது.

    அங்குள்ள அனைவரும் பூரண குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்

    தகவலை பதிவேற்றம் செய்த தங்களுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  34. பொதுவாக வளைகுடா நாடுகளில் ஒருவாரத்திற்க்கு இலவசமாக மருத்துவர் ஆலோசனைப் பெறலாம். 15 நாட்கள் என கோவை இராமகிருஷ்ணா மருத்துவமனையும், அடையாறு வால்யண்ட்ரி ஹெல்த் ஆர்கனைசேஷனும் உள்ளது என அறியும் போது மகிழ்ச்சியளிக்கின்றது. இன்சூரன்ஸ்க்கு மட்டுமே வரும் மருத்துவ செலவிற்க்கு குறிப்பிட்ட தொகை/ சதவீதத்திற்க்கு மேல் நாம் பணம் செலுத்த தேவையில்லை என்பதோடின்றி ஆலோசனைத் தொகையினையும் கருத்திற்கொள்வர். பிரபலமான சகல வசதிகள் கொண்ட இராமகிருஷ்ணா மருத்துவமனையின் சேவையினை பாராட்டியே ஆக வேண்டும்!

    பதிலளிநீக்கு
  35. எல்லோரும் அறியவேண்டிய பதிவு

    புற்று நோயால் இப்ப போனமாதம் நோன்பில் என் சொந்தங்கள் இருவர் மரணம்

    அந்த கொடுமையான நோய் வந்தவர்களை நேரில் பார்த்தவள் நான்.

    இந்த் பிஞ்சு குழந்தைக்ளுமா என்று நினைக்கும் போது ரொம்ப மனம் கணத்தே போகுது

    பதிலளிநீக்கு
  36. சில இடங்க்ளில் சேவையும், சில இடங்களில் விபாரமும்

    பதிலளிநீக்கு
  37. nandru .

    salem la kooda recenta irnathu pona en relative ku 3 housr treatment koduhanga... ( exactly like ramana movie)...

    பதிலளிநீக்கு
  38. மருத்துவ சேவைகள் கண்டிப்பா பாராட்ட வேண்டிய ஒன்று!!!!!!

    பதிலளிநீக்கு
  39. பயனுள்ள பகிர்வு

    தொடரட்டும். வாழ்த்துக்கள்

    நட்புடன்
    சம்பத்குமார்

    பதிலளிநீக்கு
  40. அய்யா ,
    தங்களின் பதிவு நெஞ்சை உருக்கி விட்டது.தங்களின் இத்தகைய பகிர்வு ,ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக
    வியாபாரம் போல் நடக்கும் மற்ற மருத்துவமனைகளுக்கு, திருந்திகொள்ளவும் ,மனிதாபிமான அணுகுமுறையும் ,போற்றி பின்பற்றத்தக்கது .மிக்க நன்றி
    அன்புடன்
    தமிழ் விரும்பி

    பதிலளிநீக்கு
  41. அருமையான பதிவு உங்களை சந்திக்க வேண்டுமே ஜி .

    பதிலளிநீக்கு
  42. அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு. நன்றி!

    பதிலளிநீக்கு
  43. இப்படிபட்ட மருத்துவரும்,மருத்துவமனையும் இருப்பதை பலரும் அறிந்துகொள்ள உதவியதற்கு நன்றி.சில மருத்துவமனைகளில் நடக்கும் பண வேட்டைகள் அனுபவித்தவருக்கு மட்டுமே தெரியும்.

    பதிலளிநீக்கு
  44. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  45. One friend member made anonymous comments. I request him to send me his mail id & his phone number, I will contact him at his free time.
    Thank You, Mr Suresh.
    N.Rathnavel,.

    பதிலளிநீக்கு
  46. இந்தக் காலத்திலும் இத்தனை உயர்ந்த உள்ளம் கொண்ட
    சேவையை மட்டுமே நோக்கமாகக் கொண்ட
    மருத்துவமனை இருப்பது ஆச்சரியம்
    அந்த மருத்துவமனை சம்பத்தப் பட்ட அனைவருக்கும்
    இதனைப் பதிவாக்கித் தந்த தங்களுக்கும் என்
    மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
    த.ம 20

    பதிலளிநீக்கு
  47. நல்ல தகவல்கள். இந்தக் காலத்தில் சேவை உள்ளத்தோடு இருக்கும் மருத்துவமனைகள் அபூர்வம்.

    பதிலளிநீக்கு
  48. மனம் கணக்கும் செய்தி. மருத்துவமனையின் சேவை பாராடிற்குரியது. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  49. ஐயா எப்படி உள்ளீர்கள் ?...எங்கே உங்கள் அடுத்த பகிர்வு ?....

    பதிலளிநீக்கு
  50. சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவ மனை பற்றி அருமையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  51. நல்வ தகவல்கள் . மனம் கனத்துவிட்டது. பலருக்கு உதவியாக இருக்கும் மிக்க நன்றி இந்த அனுபவப் பகிர்விற்கு.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  52. மிக நல்ல பயனுள்ள பதிவு. பலருக்கு உதவக் கூடும். அனுபவப் பகிர்விற்கு நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  53. வியப்பூட்டிய பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  54. sagampari to me
    show details 15 Sep (4 days ago)
    மதிப்பிற்குரிய ஐயா,

    தாங்கள் பதிவிட்டுள்ள மருத்துவமனை மற்றும் புற்று நோய் குறித்த பதிவினை முதலிலேயே படித்துவிட்டேன், இரண்டாவது பகுதியின் பின் விரிவாக கருத்துரையிடலாம் என்று என்னுடைய கருத்துரையினை எளிதாக பதிவிட்டேன். பதிவு முக்கியமான விசயங்களை சொல்கிறது. நான் பொறியியல் படித்தது கோவையில்தான் என்பதாலும் , இரத்ததான முகாமில் கல்லூரியின் மூலம் கலந்து கொண்டதாலும் ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சேவைகள் 1983லேயே எனக்கு பழக்கப்பட்டனவே. ஒவ்வொரு ஊரிலும் இது போன்ற சேவை மனம் மிக்க மருத்துவமனைகள் வெளியில் அடையாளம் காட்டப்படாமல் உள்ளன. தங்களுடைய நண்பர்களின் தொடர்புகளின் மூலம் இவற்றை அடையாளப்படுத்தி ஒரு பதிவு வெளியிட்டால் நல்லது என்று கருதுகிறேன்.

    இந்த பதிவின் மூலம் ரத்தபுற்று நோய்க்கான இலவச மருத்துவம் பற்றி தெரிந்து கொண்டேன். இந்த நோயை குணப்படுத்த ஸ்டெம் செல் சிகிச்சை முறை உதவுகிறது என்று மும்பையில் உள்ள ஒரு மருத்துவர் கூறினார். ஆனால் அதற்கான ஆராய்ச்சிக்கு அரசு அனுமதி தரமறுக்கிறது என்றும் குறிப்பிட்டார். இது எனக்குத் தெரிந்த ஒரு செய்தி. இதை தவிர்த்து இந்த நோய்க்கு சரியான மருத்துவம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இதை பதிவில் தெளிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.


    அடுத்த பதிவினை தொடர்ந்து சொல்கிறேன்
    நன்றி
    அன்புடன்
    சாகம்பரி.

    பதிலளிநீக்கு
  55. சேவை மனப்பான்மையுடன் மருத்துவமனை இருப்பது அறிய மிகவும் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  56. மிகவும் பயனுள்ள அனுபவப்பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.தொடருங்கள்!வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  57. தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  58. தற்போதைய காலகட்டத்தில் அனைத்தும் வியாபாரம் ஆகிவிட்டது. வருத்ததிற்குரிய செய்தி என்னவெனில் தற்போது மருத்துவமும் ஆங்காங்கே வியாபாரமாக தன கருதபடுகிறது.

    பதிலளிநீக்கு