திங்கள், செப்டம்பர் 19, 2011

மருத்துவமனை - வியாபாரமா? சேவையா?


மருத்துவக் கட்டுரைகள் - பாகம் 2

பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் - புற்று நோய் அனுபவங்களை எழுதுகிறார்.


பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் - வானியல் பற்றியும், பிளாஸ்டிக் பற்றியும் எழுதிய கட்டுரைகளை வெளியிட்டிருந்தோம். அவர்கள் 25.8.2010 இல் புற்று நோய்க்காக அறுவை சிகிச்சை செய்து அபாரமாக மீண்டு வந்திருக்கிறார். அதற்கு முன் மதுரை மருத்துவமனையில் ஏற்பட்ட அனுபவங்களையும், பின்பு கோவை மருத்துவமனைக்கு சென்றதையும், இடையில் ரேடியேசன் சிகிச்சைக்கு செல்லும்போது சிறுவர் சிறுமிகள் நோயினால் படும் அவஸ்தைகளையும் எழுதியிருக்கிறார். எனவே தொடர்ந்து படித்து விழிப்புணர்வு பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நாம் எவ்வளவோ, தைரியமாய், நன்றாக இருக்கிறோம் என்று தோணும்.சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவதிப் படும் மனிதர்கள்..! சாப்பிடக் கூட தோன்றாது. வேதனை நெஞ்சை நெருடும். நேற்று 25 பெண்கள் அந்த வார்டுக்கு,,அறுவை சிகிச்சை, வேதி சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, சிகிச்சை முடிந்து பரிசோதனைக்கு என்று..!வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, இது ஒன்றும் இல்லை என்ற அறியாமையால்,எதுவும் தெரியாததால்  நோய் முற்றிய பெண்கள் அதிகம்.ஆண்களும் புற்று நோய் சிகிச்சைக்கு வந்திருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில், பெண்களின் மார்பக புற்று நோய், 12 % அதிகரித்துள்ளதாம். 

குறிப்பாக நகர்ப்புற பெண்களுக்குத்தான் அதிகம் வருகிறதாம்..! இந்த  மையம் இன்னொரு சிறப்பு சேவையும் செய்கிறது. அதுதான்,புற்று நோயால் வேதனைப் பட்டு பிரச்சினைக்குல்லாகும் போது, அலைபேசியில் தொடர்பு கொண்டால், அவர்களின் வீட்டு வாசலுக்கே போய் முதலுதவி செய்து, அழைத்து வருகிறது . என் நண்பர் அருணந்தியை மூளைப் புற்று நோய் சிகிச்சைக்காக 1 1 /2 வருடம் மதுரை அப்போல்லோவில் வைத்து பார்த்தோம். கோவை ராமகிருஷ்ணாவில் எனக்கு சிகிச்சை பார்த்தோம்.  மற்ற இடங்களைவிட் இங்கு குறைவாகவே பணம் செலவாகிறது.    பணமே பிரதானமாய் மருத்துவ மனைகள் இருக்கும் காலத்திலும், மனித நேயம் பார்க்கும், உயிர் காக்கும் ஒரு மருத்துவ மனை..கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை..!

  
மார்பக புற்று கட்டியிலிருந்து திசு/திரவம் எடுத்தல்


       
இன்னொரு கதை சொல்கிறேன். ஜூலை மாதம் கட்டி இருப்பது தொடர்பாக பழனியில்  ஒரு மருத்துவரைப் பார்த்து ஸ்கேன் எடுக்கப்பட்டது. கட்டி இருந்தது தெரிந்ததும், புற்று நோய் மருத்துவரிடமே செல்லலாம் என மருத்துவ நண்பர்களைக் கேட்டதும் மதுரையில் ஒரு பிரபலமான சிறப்பு புற்று நோய் மருத்துவர் ஒருவரைச் சொன்னார்கள்.ஒரு வார காலம் முயற்சி செய்து அவரிடம்  சந்திப்ப்பு தேதியை வாங்கி பார்க்கச் சென்றோம். அவரது உதவியால் பெயரை பதிவு செய்தார்.அவர் அறையின் முன்னே ராணி, தினத்தந்தி, தினமலர்,தினமணி என அவரைப் பற்றி வந்த விஷயங்கள் ஏராளமாய் ஒட்டப்பட்டு இருந்தன. அது மருத்துவ மனையா என்பதில் ஐயம் கூட வந்தது.  மருத்துவர் என்னைப் பார்க்கவோ, பேசவோ இல்லை. என்னை  நேராக சோதனை அறையில் போய் படுக்கச் சொல்லி பணிப்பெண் மூலம் தகவல் வந்தது. போய் படுத்தவுடன், முகத்தை மூடினார்கள். கட்டியிலிருந்து திசு எடுக்கப்பட்டது. எனது முந்தைய சோதனை முடிவுகளை அவர் பார்க்கவே இல்லை. அவர் என்னுடன் வந்த, என் மகனின் நண்பனும், என் மகன் போன்றவனுமான கோகுலை கூப்பிட்டு அடுத்த வாரம் அறுவை சிகிச்சைக்கு வரச் சொன்னார். கோகுலுக்கு ஒரே அதிர்ச்சி. என்ன செய்வது என்று தெரியவில்லை.என்னிடமும் தகவலை சொல்லவில்லை. சோதனை முடிவு தெரியட்டும் பார்க்கலாம் என்றான். அந்த டாக்டர் என்னை கடைசி வரை பார்க்கவே இல்லை. மேலும் அந்த மருத்துவ மனை சுகாதாரமானதாக,காற்றோட்ட மானதாகவும் இல்லை. மருத்துவர் நடந்து கொண்ட விதமும் பிடிக்கவில்லை.

    

    மருத்துவரின் இரண்டாவது ஒப்புதலக்காக, வேறொரு மருத்துவ மனையை நினைத்துப் பார்த்த போது, ராமகிருஷ்ணா மருத்துவ மனையைப் பற்றி எண்ணினோம். ஆனால் கோவை நகர் தமிழ் நாட்டிலேயே அதிகமான வாழ்க்கை செலவு/தரம் உள்ள நகரம்.. சென்னையைவிடக் கூட..!நமக்கு கட்டுபடி ஆகுமா என்ற நினைப்பு..! எதற்கெடுத்தாலும் மதுரைக்கே ஓடிய பழக்கம் வேறு.! மனம் தத்தளித்தது. ! இருக்கட்டும், வெறும் சோதனைதானே பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கோவை வந்தேன். இதற்கிடையில் மதுரை மருத்துவரை எப்படி தவிர்ப்பது என்ற குழப்பம் வேறு..! அவரின் மாணவரும், மருத்துவருமான ஒருவரை அணுகி, என் மகன் அமெரிக்காவிலிருந்து வந்ததும் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என்று சொல்லவா என்றேன். உடனே அவர் தேள் கொட்டியது போல, ஐய்யய்யோ, அப்படி எல்லாம் சொல்லி விடாதீர்கள். ஒரே தீட்டாக தீட்டிவிடுவார் என்றார். அட.. மனிதா,, இப்படியா என நினைத்து, எப்படி சோதனை முடிவை  அவரிடமிருந்து வாங்க என்று யோசனை.! ஒரு வழியாக நேரில் போகாமலே வாங்கிவிட்டோம், இந்த நிலையில்தான், என் நண்பர் முனைவர் வெங்கடேஸ்வரனிடம் , எனக்குள்ள பிரச்சினையை சொல்ல, அவர்தான்,என்ன மோகனா, நம் நண்பரும், மருத்துவருமாகிய நளினி இருப்பது தெரியாதா? என்றார். அவரின் அலைபேசி என்னை வாங்கினேன். அதற்குள் என்னை நளினி அழைத்து, பழனியில் எடுத்த சோதனை முடிவைக் கேட்டு, உடனே கோவை புறப்பட்டு வாருங்கள், அமெரிக்க பயணத்தை உடனடியாக ரத்து செய்யுங்கள் என்றார்.சென்றேன்.அறுவை சிகிச்சை நடந்தது. நளினி அறுவை சிகிச்சையின் போது உடன் இருந்தார். கோகுல் அவனது  அனைத்து பணிகளையும் விட்டு விட்டு என்னுடன் 15 நாட்கள் இருந்தான். இப்படி நான் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்தது என்பது ஒரு விபத்துதான். ஆனால் மிக மிக நல்ல விபத்து.மதுரையில் நான் சிக்கி இருந்தால்/அல்லது வேறு  மருத்துவ மனைக்கு சென்றிருந்தாலும் இதைவிட பல மடங்கு பொருள் செலவு ஆகி இருக்கும். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்..!  நம்மை மொட்டையடிக்கும் மருத்துவ மனைகளுக்கு மத்தியில்,கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனை ,  ஒரு மனித உயிருக்கு சேவை செய்யும் ஆலயம்..!


Chennai:13-02-2011: The Cancer Survivours Day, celebrated at Sivagami Pethachi Auditorium, Alwarpet on Sunday. 100 survivors attend the function and light the lamp. Prominent citzens from Chennai participating in the function. Photo:R_Shivaji Rao


பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் 25-08-2011 இல் எழுதியிருக்கிறார். வண்க்கம் இனிய நட்புகளே.. நான் மீண்டும் இன்னொரு மோகனாவாக பரிணமித்து இன்றுடன் ஓர் ஆண்டாகிறது.இன்று எனது ஓராண்டு நினைவு நாள். சென்ற ஆண்டு ஆகஸ்ட் 25 ல் தான் அறுவை சிகிச்சை, பின் வேதி சிகிச்சை என 365 நாட்களில், ஏராளமான பரிணாம மாற்றங்கள். பாருங்களேன் இடையில் என்னென்ன மாற்ற்ங்கள்,. போன டிசம்பரில் நான் பிழைக்க மாட்டேன் என சிலர் நினைத்தனர். எனக்கு அப்படி ஓர் எண்ணம் வரவே இல்லை. சாதாரணமாக நான் பழையபடி வளைய வருவேன், என்ற எனது ஆழ்ந்த நம்பிக்கை. மூன்று நாட்களுக்கு முன் எனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், நீங்கள் அசாதாரண மனத்துணிவுடன், மூளையின் பலத்துடன் மீண்டு, எதுவும் இப்போது பிரச்சினை இல்லை என்று சந்தோஷமாய் சொல்கிறீர்கள். இது அரிதானது.பொதுவாக எல்லோரும் இது பற்றி ரொம்ப கவலைப் படுவார்கள். நீங்கள் எங்களுக்கு பதிலாக விழிப்புணர்வும் தருகிறீர்கள்.பழைய படி மிகவும் புத்துணர்வுடன் வந்திருக்கிறீர்கள்.மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் என்றார்.இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.  பின்னூட்டம் எழுதும்போது உங்கள் வலைத்தளமுகவரி அல்லது மின்னஞ்சல் முகவரியுடன் எழுதுங்கள். 

(Anonymous comments will not be published). 

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.  உங்கள் பெயரை Google Connect Widget இல் பதிந்து கொள்ளுங்கள்.  உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு இடும்போது உங்களது மின்னஞ்சல் பெட்டிக்கு வந்து விடும்.


மிக்க நன்றி.


47 கருத்துகள்:

 1. ஒரு நல்ல மருத்துவ மனை அறிமுகம்;ஒரு நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. நல்ல விழிப்புணர்வு பதிவு ஐயா, பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. . அந்த டாக்டர் என்னை கடைசி வரை பார்க்கவே இல்லை. மேலும் அந்த மருத்துவ மனை சுகாதாரமானதாக,காற்றோட்ட மானதாகவும் இல்லை. மருத்துவர் நடந்து கொண்ட விதமும் பிடிக்கவில்லை.//

  மருத்துவர்கள் சேவை மனப்பான்மையோடு பணயுரிய வேண்டும்!மருத்துவமனைகள் தேவையான வசதிகள் இல்லாமல் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.

  பதிலளிநீக்கு
 4. நம்மை மொட்டையடிக்கும் மருத்துவ மனைகளுக்கு மத்தியில்,கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனை , ஒரு மனித உயிருக்கு சேவை செய்யும் ஆலயம்..!
  //இப்படிப்பட்ட மருத்துவமனையை

  அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. நல்ல விழிப்புணர்வு பதிவு ... பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 6. மருத்துவம் இப்போது தானே விலைபோவதை பார்த்து
  மனம் புழுங்கத்தான் செய்கிறது
  அழகான உபயோகம் உள்ள பதிவு ஐயா

  பதிலளிநீக்கு
 7. எனக்கு சொந்த ஊரே ம்துரை தான்.! நானும் மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவன் என்பது மட்டுமன்றி..சுமார் 9 ஆண்டுகள்...துறை சார்ந்த பணிகளை மதுரையிலேயே தங்கி இருந்து மேற்கொண்டுள்ளேன். சிகிச்சைக்காக செல்லும் மக்களும், துறை சார்ந்த சங்கதிகள் தெரியாத பொதுமக்களும்.. புற்றுநோய் என்றால் என்ன என்பது பற்றி முதலில் நாம் தெரிந்து கொண்டு, பின்னர் சிறப்பு மருத்துவர்களைப் பற்றி விமர்சனம் செய்யலாம் என்பது முதல் கருத்து. இரண்டாவதாக..கடந்த 10 வருடங்களாக..புற்றுநோய் சம்பந்தமாக மக்களுக்கு சேவை செய்துவரும்..ஒரு மிகப்பெரிய மருத்துவக் குழுமத்தில் ( கடந்த 75 ஆண்டுகளாக, திருச்சியில்..டாக்டர் ஜி.விசுவநாதம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்.. சேவை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது..தகவல்கள் இணையத்தில் உள்ளன.!), அனைத்து விதமான அடிப்படை மற்றும் சிறப்பு தகுதிகளுடன் இணைந்து பணியாற்றி வருவது மட்டுமன்றி..நேரடியாக சிகிச்சைகளும் மக்களுக்கு அளித்து வருவதன் மூலம்..தினமும் பல்வேறு விதமான அனுபவங்கள் உண்டு.மருத்துவர்களும், மருத்துவம் சார்ந்த ஊழியர்களும் மனிதர்கள் தாம் என்ற போதும், உயிர் காக்கும் மருத்துவத் துறையில் பணியாற்றி வருவதால்..சில விதிவிலக்குகளை..நாம் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது..! பல்வேறு பணிகள் இருப்பதால்..நேரம் கிடைக்கும் போது என்னுடைய விரிவான பதிலுரையினை பதிவு செய்கிறேன்...இணைப்புக்கு கொடுத்தமைக்கு மகிழ்ச்சி, மதிப்பிற்குறிய நண்பரே..:-)

  பதிலளிநீக்கு
 8. Though I was in Coimbatore for more than 5 years, I never knew about Ramakrishna hospital (I just heard about it, not the good things about it). Thanks for sharing!

  பதிலளிநீக்கு
 9. நல்ல கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. ஒரு நல்ல மருத்துவ பதிவு பகிர்வுக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 11. GVN Institute of Endoscopy Laser & Keyhole Surgery

  30, Babu Road,
  Tiruchy - 620 008.
  Tamil Nadu, India.
  Phone : 0431 - 2705945, 2709250.
  Tel : 0431-3291014

  G.Viswanathan Speciality Hospital

  27, Babu Road,
  Tiruchy - 620 008.
  Tamil Nadu, India.
  GVN CANCER CURE CENTRE

  GVN CANCER PREVENTION CENTRE
  41, Kiledar Street,
  Tiruchy - 620 002.
  Tamil Nadu, India.
  Phone : 0431 - 2701153, 2708765

  GVN INSTITUTE OF ONCOLOGY

  25-B, II Cross Thillai Nagar,
  Tiruchy- 620 018.
  Tamil Nadu, India.
  Phone : 0431 - 2765455, 2765457

  GVN INSTITUTE OF MEDICAL SCIENCES
  Dr.G.SAKUNTHALA COLLEGE OF NURSING &
  KAMALAMVISWANTHAN COLLEGE OF PHYSIOTHERAPY

  61,Sanathi Street,
  T.V. Koil, Tiruchy - 620 005
  Tamil Nadu, India.
  Admn. Office : 46, Singarathope,
  Tiruchy - 620 008.
  Tamil Nadu, India.

  Fax : +91-431-2702798 E-mail : trygvn@gmail.com


  www.gvnhospital.com / www.endoscopy.in

  பதிலளிநீக்கு
 12. தேவையான நல்ல பதிவு!

  நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 13. மிகவும் சரியாக புரிதலுடன் ஒரு பகிர்வு...மிக்க மகிழ்ச்சி மதிப்பிற்குறிய நண்பரே..:-)

  பதிலளிநீக்கு
 14. விழிப்புணர்வுடன் பழைய படி மிகவும் புத்துணர்வுடன் வந்திருக்கிறீர்கள்.மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்

  பதிலளிநீக்கு
 15. இப்படி ஒரு மருத்துவரா :( முகம் கூட பார்க்காமல் பேஷண்ட் கிட்ட பேசாமல் ரிப்போர்ட்களை பார்க்காமல் மருத்தவமனையும் சுகாதாரமாக இல்லாமல் :( ஐயோ எத்தனை உயிர் ஊசலாடியதோ இங்கே போய்....

  மோகனா மேடம் நிஜமாவே அருமையான நட்பு வட்டம் நீங்க பெற்றிருப்பது.. உடன் உதவின அனைத்து நட்புகளுக்கும் நல்லமுறையில் இத்தனை பெரிய போராட்டத்தில் இருந்து மீண்டு புதுப்பொலிவுடன் எங்களுடன் உங்க கருத்தை பகிர்ந்தது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்....

  இனி யாருக்காவது இதுபோன்ற பிரச்சனை என்றால் உடனே நானும் சொல்வேன் கோவை ராமக்ருஷ்ணா மருத்துவமனை போங்கன்னு... நீங்க இந்த பகிர்வின் மூலமா ஒரு நல்ல சேவை செய்திருக்கீங்க மோகனா மேடம்.. உங்க உடல்நலனுக்காகவும் பூரண சௌக்கியத்திற்காகவும் என் மனம் நிறைந்த அன்பு பிரார்த்தனைகள்...

  ரத்னவேலு ஐயா உங்களின் இது போன்ற முயற்சியாலும் சேவையாலும் இதோ எங்களைப்போன்றோரும் அறிய முடிகிறது நல்லவிஷயங்களை தேடி களைத்து போக வாய்ப்பு தராமல் இதோ இந்தாருங்கள் என்பது போல பகிர்ந்திருக்கீங்க. அன்பு நன்றிகள் ஐயா உங்களுக்கு...

  பதிலளிநீக்கு
 16. அருமையான, மனத்தெம்பூட்டும் பதிவு.

  பதிலளிநீக்கு
 17. பேரா மோகனா அவர்கள் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தைச்சார்ந்தவர் என நினைக்கிறேன். பேரா அருணந்தி அவர்களுடன் சில அறிவியல் இயக்க கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன். விருதுநகர் மாவட்டத்தில் அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு FIREWALK நிகழ்வு நடந்தது அது அறிவொளியின் துவக்க காலம். நாகர் கோவில் பேராசிரியர் சொன்னார் 3 விநாடி நிமிடத்துக்கு 1300 டிகிரி வரை வெப்பம் தாங்கக்கூடியது நமது பாதமும் ரேகை உள்ள பகுதியான நமது கைகளும். மருத்துவ ரீதியாக உடல் நிலைக்கோளாறு அவர்களுக்கு ஏற்பட்டது, அதை வென்று ஒரு வருடம்கழித்து தாங்கள் பதிவை இட்டது என வரலாற்றின் பக்கங்களாகக்த்தான் நான் பார்க்கிறேன்
  நட்புடன்,
  திலிப் நாராயணன்.

  பதிலளிநீக்கு
 18. அருமையான அனுபவப்பதிவு
  அந்த டாக்டரோ கள டாக்டர் ஆக இருப்பார் போல
  நோயாளியையே பார்க்க மாட்டாராம்

  பதிலளிநீக்கு
 19. சகோதரி மோகனா அவர்களின் மனத்துணிவிற்கு பாராட்டுக்கள். பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 20. நல்ல பதிவுமோகனா சோமசுந்தரம் அவர்கள் நீண்ட நெடும்கலம் வாழ எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்.நல்ல விழிபோன்ர்வு பதிவு இந்த ராமகிருஷ்ண மருத்துவு மனை போல் சேவை மட்டுமே மனதில் கொண்டு சேவையாற்றும் மருத்துவ மனைகள் இருப்பது நமக்கு த்தான் தெரிவதில்லை நன்றி வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 21. விழிப்புணர்வு பதிவு.பல தகவல்களைத் தந்துள்ளீர்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 22. அய்யா அவர்களுக்கு ,

  தங்களின் பதிவு ,ஒரு நல்ல மருத்துவமனையை பற்றியும் ,நோயாளியை பார்க்காமலே ,நோயின் தன்மை அறியாமலே , குண படுத்த முயலும் மருத்தவரை பற்றி தெரிய படுத்தியமய்க்கும் பாராட்டுக்கள்.

  அன்புடன்
  தமிழ் விரும்பி

  பதிலளிநீக்கு
 23. தற்சமயம் நோயாளியின் தேவைக்கேற்ப மருத்துவரின் அணுகுமுறை இருப்பதில்லை. பொதுவாகவே 50 வருடங்களுக்கு மேல் சேவையில் இருக்கும் மருத்துவைகளை நம்பலாம் என்று தோன்றுகிறது. கோவை ராமகிருஷ்ணாவும், திருச்சி விசுவனாதம் மருத்துவமனையும் எனக்கு பல வருடங்கள் முன்பே பழக்கம். குறிப்பாக GVN, மருத்துவமனை மருத்துவ பரம்பரையை சேர்ந்ததாகும். சிறந்த சிகிச்சைக்கு நம்பகமான மருத்துவமனை. மற்றபடி இலவச சேவைகள் பற்றி விசரித்து தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், திரு நெல்வேலி கெட்வெல் மருத்துவமனையும் ஒரு முறை தரமான சிகிச்சை பெற்றிருக்கிறோம். இதுபோன்ற தகவல்களை தெரிவிப்பதற்கு மிக்க நன்றி. இதற்கு வித்திட்ட பேராசிரியர் மோகனா சோமசுந்தரத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. அட நீங்க வேற? பத்துவருடமாக பழகிய மருத்துவரே காசுக்காக மலம் திங்க தயாராக இருக்கும் போது யாருக்கு அறிவுரை சொல்வது. நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 25. ஒரு நல்ல மருத்துவ பதிவு பகிர்வுக்கு நன்றி ஐயா


  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 26. அருமையான பயனுள்ள பதிவைத் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 27. S Mohana to me
  show details 10:51 (5 hours ago)
  அன்புள்ள ரத்னவேல் அய்யாவுக்கு,
  வணக்கம். நான் தங்களிn வலைப்பூவிலுள்ள நான் எழுதியக் கட்டுரையின் தகவல்களைப் படித்தேன்.அது இவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. அதில் ஏராளமான பின்னூட்டங்களைப் பார்த்தேன். நான் உங்களுக்கு புற்று நோய் பற்றிய ஒரு கட்டுரை அனுப்பி உள்ளேன்.அது"புற்று நோய்..!.மார்பக புற்று நோய்!ஆண்களுக்கும் !"
  அது தொடர்பான நழுவு படக் காட்சிகளும் வைத்திருக்கிறேன்.
  நன்றி
  என்றும் அன்புடன்,
  மோகனா

  பதிலளிநீக்கு
 28. அருமையான பயனுள்ள இடுகை. சகோதரி மோகனாவின் மனத்துணிவிற்கும், மீண்டு வந்ததற்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 29. நல்ல விழிப்புணர்வு பதிவு பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. நல்ல மருத்துவ விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  நட்புடன்
  வி.நடராஜன்
  http://vienarcud.blogspot.com/

  பதிலளிநீக்கு
 31. சிறப்பான பகிர்வு அய்யா! தாமதமாக வருகிறேன்.கவனிக்காமல் விட்டுவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 32. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஓவ்வோர் விஷயம் கற்க வேண்டித்தான் இருக்கிறது.. சின்ன கட்டுரையில் எத்தனை தகவல்கள்? நிற்க இது மோகனா அவர்களுக்கு: தங்களுக்கு கோவையில் ஏதேனும் உதவி தேவைப் படும் பட்சத்தில் தயவு செய்து "ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்" அவர்களிடமிருந்து என் தொலைபேசி எண்ணைப் பெற்று தயங்காமல் அழையுங்கள்- காத்திருக்கிறேன்! அன்புடன் ரோமிங் ராமன்.

  பதிலளிநீக்கு
 33. அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய மருத்துவப்
  பகிர்வு .சிறப்பாக தந்துள்ளீர்கள் .மிக்க நன்றி ஐயா
  பகிர்வுக்கு ............

  பதிலளிநீக்கு
 34. மருத்துவ விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 35. அருமையான தகவல்கள். தெம்பூட்டும் பதிவு.

  பதிலளிநீக்கு
 36. நல்ல விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 37. நல்ல பயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 38. எனது அம்மா புற்றுநோயால் பாதிக்கபட்ட போது அறுவை சிகிச்சை செய்ய எது சிறந்து வைத்திய சாலை, யார் சிறந்த வைத்திய நிபுணர் என்று அலைந்து திரிந்தது என்னும் மனதை விட்டு அகலவில்லை. இன்னும் நல்ல வைத்தியரிடம் காட்டியிருந்தால் அம்மா உயிர் பிழத்திருப்பாவோ என்ற ஆதங்கம் இன்றும் எனக்கு உண்டு.
  இதுபோன்ற அனுபவ பதிவுகளால் நிச்சயமாக பிறர் பயனடைவர். தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 39. ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு