எனது முகநூல் நண்பர் Ramkumar G Krish அவர்கள் “யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்!!!” என்று ஒரு பதிவு
எழுதியிருக்கிறார். நண்பர் இருப்பது ஆப்பிரிக்காவில். அவரது அனுமதியின் பேரில் இந்த பதிவை எனது
பதிவில் வெளியிடுகிறேன்.
அதற்கு முன் எனது சில வார்த்தைகள்:
எனக்கு தமிழ் தட்டச்சு
கற்றுக் கொடுத்தது இலங்கை முகநூல் நண்பர் திரு Kannan Sandralingam,
அவர்
திரு Dr Mutthiah Kathiravetpillai Muruganandan, கொழும்பு
அவர்களது நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை
திருமதி Kalaimahel Hidaya Risvi அவர்களும் எனது முகநூல் நண்பர்.
. இலங்கை திரு Peer Mohamed Puniameen அவர்களும் எனது
முகநூல் நண்பர்.
இந்த மூவரும்
இலங்கையின் சிறந்த எழுத்தாளர்கள். இவர்களது
கட்டுரைகளை அவர்களது அனுமதியின் பேரில் வெளியிட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன்
குறிப்பிடுகிறேன்.
இன்னுமொரு முகநூல் நண்பர்
Malini Shravan அற்புதமான திறமை படைத்தவர், இலங்கைத் தமிழை அற்புதமாக கையாள்கிறார். இவரது பதிவுகளும் எனது பதிவில் வெளியிட்டிருக்கிறேன்.
எனவே இலங்கைத் தமிழ் பற்றிய
நமது தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் எழுதிய பதிவை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.
இலங்கை உலகிலுள்ள மிக பழமை வாய்ந்த நிலப்பகுதிகளில்
ஒன்றாகும். இந்திய பாறைத்தட்டின் (Indian
tectonic plate ) மத்தியில் அமைந்துள்ளதால் எரிமலை,
நிலநடுக்கம் போன்றவை
இலங்கையை அனேகமாக பாதிப்பதில்லை. இதன் 90%
ஆன நிலப்பரப்பு 2 பில்லியன் காலத்துக்கு
முந்தைய பாறைதொடர்களில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாறைத் தொடர்களின் நடத்திய
ஆராச்சிகளின் விளைவாக இந்தியத் துணைக்கண்டம் முன்பு குமரிக்கண்டமெனும் (லெமுரியா)
பெரியதோர் தென்நிலக் கண்டத்தின் பாகமாகவிருந்தது அறியப்படுகிறது. ஆனால் சுமார் 200 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பு உலகின், பூமியின் உள்ளே ஏற்பட்ட
அழுத்தங்கள் காரணமாக இந்த பெரிய கண்டம் பிளவு படத தொடங்கியது. பின்னர் 45 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்ட இந்திய கண்டம் ஆசிய கண்டத்துடன் (Eurasian
plate ) மோதி இமயமலைச்சாரல் எற்பட்டது. இது இன்னமும் தொடர்ந்து நடந்து
கொண்டுள்ளது. இதையெல்லாம் ஜியாலஜி சம்பந்தப்பட்ட புத்தகம் படித்தால் புரிந்துகொள்ள
முடியும்.
இலங்கை, இந்து மகா சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு
அழகிய தீவாகும், இது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து
மன்னார் வளைகுடாவினால் (Gulf of Mannar) துண்டிக்கப்பட்டுள்ள போதும், இதன் அமைவு இந்திய
பாறைத்தட்டிலேயே உள்ளது. இராமர் அணை (Adam's
bridge) எனப்படும் நிலத்துண்டம், இலங்கையை
இந்தியத் தலை நிலத்துடன் மத்தியகாலம் வரை இணைத்திருந்தது. இது 1480 ஆம் ஆண்டளவில்
ஏற்பட்ட சூறாவளியில் ஊடறுக்கப்பட்டு, தற்போது இடையிடையே
சுண்ணாம்புக் கற்பாறை தீவுத்தொடர்களைக் கொண்டவோர் மிகவும் ஆழம் குன்றிய
நீர்ப்பரப்பாகவே காணப்படுகிறது.
இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாக காணும் காட்டுப் பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளோடு (Western Ghats) நெருங்கிய
தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன. இப்படியெல்லாம்
படித்த, கேட்டு வந்த இலங்கை பற்றி, மேலும் பள்ளி வயதில், பொன்னியின்
செல்வன் படிக்கும்போது, வந்தியத் தேவன், பூங்குழலி, அருண் மொழி வரும்போதெல்லாம் அமரர் கல்கி அவர்கள், தன் எழுத்தோட்டம் வாயிலாக, இலங்கையை வர்ணிப்பார், கண் முன்னே நிறுத்துவார். கல்லூரி
நாட்களில் உடன் படித்த இலங்கைத் தமிழ் நண்பர்களான மதி அமுதன், தயாளன்,
வைகுண்ட நாதன், முரளி மற்றும் இலங்கைத் தமிழ் நண்பர்களோடு பேசும் போது, அவர்கள்
பேசும் தமிழ் என்னை ஈர்த்ததுண்டு. கவனித்துப்
பார்ப்பேன், நாம் தொலைத்து விட்ட தமிழ் வார்த்தைகள் (கதைத்தல் போன்ற) அவர்கள் உரையில்
காணலாம். கேட்டாலே எரிச்சல் மூட்டும் மெட்ராஸ் பாஷை கலக்காத அழகுத் தமிழ், இலங்கைத் தமிழ் என்றும் நான் பலமுறை நினத்ததுண்டு.
இந்த ஆவலை பூர்த்தி செய்யும் வண்ணமாக இலங்கை தமிழை எழுத
முயற்சிக்கிறேன் விக்கிபீடியா
உதவியோடு. சற்றே உள் நுழைவோம்,
பாரதி அப்போதே பாடிவைத்தார், அது மிகவும் உண்மையே...
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்............
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்."
உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,
மற்றும் சமஸ்கிருதம். இந்த
ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை. இன்றளவிலும் உலகளவில் பேசப்படும் இலக்கிய,
வரலாற்று வளம் மிக்க மொழி தமிழ் மொழி என்பதில் வியப்பில்லை.
தமிழ், வேறு பல மொழிகளைப் போல பேச்சுத் தமிழ், எழுத்துத்
தமிழ் என இரு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத்
தமிழ், உலகில் தமிழ்
வாழும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள்
அதிகம் இன்றி உள்ளது. ஆனால், பேச்சுத் தமிழ், இடத்திற்கு ஏற்றார் போல, குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் பழகுவதை கவனித்து இருக்கலாம். இத்தகைய
மொழியினை, வட்டார மொழி வழக்குகள் என்பர். இலங்கையின் வட பகுதியில் பெரும்பான்மையாகத்
தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் என
அழைக்கப்படுகின்றன.
தமிழை அதிகளவில் பேசும் மக்கள் தொகை கொண்ட தமிழகம் சில
மைல்கள் தொலைவிலேயே அமைந்திருந்த போதும், யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாண தமிழர்கள்
பேசும் தமிழ், குறிப்பிடத்தக்க, தனித்துவம் கொண்ட பேச்சுத் தமிழாக உருவானதற்கு, அரசியல் மற்றும் வரலாற்று அம்சங்களே
காரணமாகும்.
தமிழ் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள்
இன்னதுதான் என வரையறுக்கப்பட்டு இருந்தாலும், பேச்சுத் தமிழில் அவற்றின் உச்சரிப்புகள் பல வேறுபாடுகளை
அடைவதை கவனிக்கலாம். யாழ்ப்பாணத்துத் தமிழில்
இந்த உச்சரிப்புகள் எந்த அளவுக்கு சரியான விதிகளுக்கு அமைய உள்ளன என்பதைக்
கருதும்போது கவனத்துக்கு வரும் அம்சங்கள் சில பின்வருமாறு.
§
யாழ்ப்பாணத்தவர் ழ கரத்தைச் சரியாக உச்சரிப்பதில்லை. இங்கே ழ கரமும், ளகரமும்
ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகின்றன. வாழை க்கும், வாளை க்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் உச்சரிப்பு வேறுபாடு கிடையாது.
(தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இதே
உச்சரிப்புத்தான் உச்சரிக்கப்படுகிறது).
§
யாழ்ப்பாணத்தவர் பேசும்போது ர கர - ற கர, ல கர - ள கர, மற்றும் ன கர - ணகர வேறுபாடுகள் மிகவும் தெளிவாக இருக்கும்.
§
ற கர மெய் இரட்டித்து
வரும்போது யாழ்ப்பாணத்து உச்சரிப்பு வடதமிழ்நாட்டு உச்சரிப்புடன் ஒத்து
அமைவதில்லை. வடதமிழகத்தில் ற்ற, ற்றி .... என்பன t-ra, t-ri என உச்சரிக்கப்படும்போது, தென்தமிழகத்தில் குறிப்பாக
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைப் போல
யாழ்ப்பாணத்தில் t-ta, t-ti என
உச்சரிக்கப்படுவதாய் சொல்லப் படுகிறது.
சொற்கள்
பொதுவாக, எல்லா நாட்டு மக்களின் பேச்சு மொழி, எழுத்து
மொழிக்கு சற்றே வித்தியாசப்படும். அது போலவே, பேச்சுத்
தமிழில் சொற்களும் பல விதமான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. சில சொற்களைக் குறுக்கி ஒலிப்பதும், சிலவற்றை நீட்டி ஒலிப்பதும், சிலவற்றின் ஒலிகளை
மாற்றி ஒலிப்பதும் சாதாரணமாகக் காணக்கூடியதே. யாழ்ப்பாணத் தமிழும் இதற்கு
விதிவிலக்கல்ல. எனினும் சொற்களை
உச்சரிப்பதில் யாழ்ப்பாணத் தமிழில் ஒப்பீட்டு ரீதியில் குறைவான திரிபுகளே
இருப்பதாகக் கூறலாம். தமிழ்நாட்டுப்
பேச்சுத் தமிழுடன் ஒப்பிட்டு நோக்குவது இதனைப்புரிந்து கொள்ள உதவும்.
எடுத்துக்காட்டாக:
§
ன், ம் போன்ற மெய்யெழுத்துக்களில் முடியும் பல சொற்களை உச்சரிக்கும்போது, இந்த எழுத்துக்களை முழுமையாக உச்சரிக்காமல், ஒரு
மூக்கொலியுடன் நிறுத்துவது தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றது. நான் என்பதை நா. என்றும், மரம் என்பதை மர. என்றும் உச்சரிப்பதைக் காணலாம். நான் என்பதைச் சில சமயங்களில் நானு என்று நீட்டி உச்சரிக்கும் வழக்கமும் உண்டு. யாழ்ப்பாணத்தில் இச் சொற்களை நான், மரம் என்று முழுமையாக உச்சரிப்பார்கள்.
§
இகர, உகரங்கள் தனியாகவோ, உயிர்மெய்யாகவோ சொல் முதலில் வருகின்றபோது, தமிழ்
நாட்டில் பல இடங்களில், அவற்றை முறையே எகர, ஒகரங்களாக
உச்சரிப்பார்கள். எடுத்துக்காட்டாக, இடம், எடம் எனவும், குடம், கொடம் எனவும்
ஆவதைப் பார்க்கலாம். இந்த உச்சரிப்புத்
திரிபும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இல்லை.
எனினும் ஒலிகள் திரிபு
அடைவது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இல்லாதது அல்ல. இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. பல சொற்களில் ற கரம், ட கரமாகத் திரிபு அடைவதுண்டு.
ஒன்று என்பது ஒண்டு என்றும், வென்று என்பது வெண்டு என்றும் திரியும். இது போலவே கன்று, பன்றி, தின்று என்பவை
முறையே கண்டு, பண்டி, திண்டு என வழங்குவதை உற்று நோக்கலாம்.
வினைசொற்கள்
கையாளும் விதம்
யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நான்கு வகையான பேச்சு வகைகள்
உள்ளன. அவற்றை மரியாதை மிகு பேச்சு வகை, இடைநிலை பேச்சு வகை, சாதாரண
பேச்சு வகை, மரியாதை அற்ற பேச்சு வகை என
வகைபடுதுகின்றனர் மொழி வல்லுனர்கள்.
இதில் மரியாதை மிகு வகை என்பது "வாருங்கள் அல்லது வாங்கோ", "சொல்லுங்கள் அல்லது சொல்லுங்கோ"
என்று பன்மையாக பேசப்படும் வகையாகும். இடைநிலை
பேச்சு வகை என்பது "வாரும்", "சொல்லும்"
என பேசப்படும் வகையாகும். சாதாரண பேச்சு
வகை "வா", "போ", "இரு"
போன்று பேசப்படும் வகையாகும்.
மரியாதை அற்ற பேச்சு வகை "வாடா", "சொல்லடா" என மரியாதையற்ற
பயன்பாடாகும். இந்த மரியாதை அற்ற சொற்கள்
நண்பர்களிடையேயோ, இளைய சகோதரர்களிடம் பெரியவர்களாலோ, குழந்தைகளிடம் பெற்றோராலோ, சிறியவர்களிடம் பெரியவர்களாலோ
பயன்படுத்தப்படும். சிறியவர்களாக
இருந்தாலும் பெரியவர்கள் அவர்களிடம், "வாங்கோ, சொல்லுங்கோ" போன்ற
மரியாதையான சொற்களைப் பயன்படுத்தும் முறையும் உள்ளது. அதேவேளை கோபத்தில்
பேசும்போதும் பேசப்படுவதுண்டு.
இவற்றில் "இடை நிலை பேச்சு வகை" யாழ்ப்பாணத் தமிழரிடம்
மட்டுமே காணப்படும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த இடைநிலை பேச்சு வகை, தமிழ்நாட்டு பழைய சரித்திர திரைப்படங்களில் காணப்பட்டாலும் தற்போது பெரும்பாலும் மறைந்து விட்ட நிலை
என்றே உருவாகியுள்ளது. இந்த இடைநிலை பேச்சு வகை
நண்பர்களிடையேயும், சமவயதினரிடையேயுமே அதிக வழக்கில்
உள்ளது. சில சமயங்களில் வயதில் பெரியவர்கள் வயது
குறைந்தவர்களையும், தொழில் நிலைகளில் உயர்நிலையில்
இருப்போர் மக்களையும் பேசும் இடங்கள் உள்ளன. சிலநேரங்களில் இருவருக்கு இடையில் ஏற்படும்
கருத்து முரண்பாட்டின் போது கோபத்தின் வெளிப்பாடாக மரியாதையை குறைத்து;
"நீர்", "உமது",
"உமக்கு" எனச் சுட்டுப்பெயர்கள் வடிவிலும், "இரும்", "வாரும்",
"சொல்லும்", "கேளும்",
"கதையும்", "என்ன சொன்னீர்?"
என வினைச் சொற்கள்
வடிவிலும் பேச்சு வெளிப்படும் இடங்களும் உள்ளன.
உறவுமுறை
யாழ்ப்பாணத்து பேச்சுத்தமிழ் வளம்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் புழங்கும் சொற்கள் பல
தமிழகத்துச் சொற் பயன்பாடுகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. பல அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களும் இவற்றுள்
அடக்கம். ஒரு சமுதாயத்தின்
வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகக்
கூறப்படும் உறவுமுறைச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் எப்படி அமைகின்றன
என்பதைப் பார்க்கலாம். எழுத்துத் தமிழில்
கணவன், மனைவி என்ற சொற்களுக்கு ஈடாக, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் புருசன், பெண்சாதி என்ற சொற்கள் பயன்படுகின்றன. 1707 ஆம் ஆண்டில்
தொகுக்கப்பட்ட தேச வழமைச் சட்டத்திலும் இச்சொற்களே கையாளப்பட்டுள்ளன.
பெற்றோரையும் பிள்ளைகளையும் கொண்ட தனிக் குடும்பம் ஒன்றில்
உள்ள உறவுகள், தாய், தந்தை, ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்பவர்களாகும். இவர்களை
அழைக்கப் பயன்படும் விளிச் சொற்களும், அவர்கள் பற்றிப் பிறருடன் பேசும்போது பயன்படுத்தும் குறிப்புச் சொற்களும் ஒரு பேச்சு மொழியின்
அடிப்படையான சொற்களாகும். தற்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் தந்தையை அப்பா என்றும், தாயை அம்மா என்றும் அழைக்கிறார்கள். இன்று
வாழும் மூத்த தலைமுறையினரில் பலர், இவர்களை முறையே, அப்பு, ஆச்சி என அழைத்தனர். இடைக் காலத்தில்
தந்தையை ஐயா என்று
அழைக்கும் வழக்கமும் இருந்தது. அக்காலத்தில், பெற்றோரின்
பெற்றோரை, பெத்தப்பு, பெத்தாச்சி,
அம்மாச்சி, அப்பாச்சி, ஆச்சி என்றார்கள். இன்று அவர்கள்
அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா, (சில
வீடுகளில் தாத்தா, பாட்டி எனவும்) என
அழைக்கப்படுகிறார்கள். இதுபோலவே
பெற்றோரின் உடன் பிறந்த ஒத்தபாலாரும், சில பத்தாண்டுகளுக்கு
முன்வரை, பெரியப்பு, சின்னப்பு, பெரியாச்சி, சின்னாச்சி, குஞ்சையா, குஞ்சம்மா என்றும் பின்னர் பெரியையா, சின்னையா
என்றும் அழைக்கப்பட்டு, இன்று, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா அல்லது சித்தி என்ற
உறவுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்கள்.
பால் வேறுபாடின்றிப் பிள்ளைகளைக் குறிக்கும்போது, பிள்ளை என்ற சொல்லே பயன்படுகின்றது. ஆண் பிள்ளையை ஆம்பிளைப் பிள்ளை என்றும், பெண் பிள்ளையைப் பொம்பிளைப் பிள்ளை என்றும் குறிப்பிடுவது அங்குள்ள பேச்சுத்தமிழ் வழக்கு. ஆம்பிளை என்பது ஆண்பிள்ளை என்பதன் திரிபு. அதுபோலவேபொம்பிளை என்பது பெண் பிள்ளை என்பதன் திரிபு. எனினும் தற்காலத்தில்ஆம்பிளை என்பதும், பொம்பிளை என்பதும், ஆண், பெண்
என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருவதால், பிள்ளைகளைக்
குறிக்கும் போது, இன்னொரு பிள்ளைஎன்ற சொல்லையும் சேர்க்கவேண்டி ஏற்பட்டது.
உறவுச் சொற்களாக வழங்கும்போது, ஆண்பிள்ளையை மகன் என்றும், பெண் பிள்ளையை மகள் என்றுமே வழங்குவர். யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில், இச்சொற்களை விளிச்சொற்களாகவும் பயன்படுத்தி வந்தாலும், பல குடும்பங்களில், ஆண்பிள்ளையைத் தம்பி என்றும், பெண்பிள்ளையை தங்கச்சி, அல்லது பிள்ளை என்றும் அழைப்பது வழக்கம்.
பிள்ளைகள் தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் உறவு முறைச்
சொற்கள்அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி என்பனவாகும். மேற்சொன்ன உறவுகள் ஒன்றுக்கு மேற்பட
இருக்கும்போது, பெரிய, சின்ன, இளைய, ஆசை, சீனி போன்றவற்றில் பொருத்தமான ஒரு அடைமொழியைச் சேர்த்து, பெரியண்ணன், ஆசைத்தம்பி, சின்னக்கா என்றோ, அவர்களுடைய பெயரைச் சேர்த்து, சிவா அண்ணா, வாணியக்கா என்றோ வேறுபடுத்தி அழைப்பது வழக்கம்.
தந்தையின் உடன் பிறந்தாளை, அத்தை என்று அழைக்கும்
வழக்கம் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவு. தந்தையோடு
பிறந்த பெண்களையும், தாயோடு பிறந்த ஆண்களின்
மனைவியரையும், மாமி என்றே
அழைப்பது இவ்வூர் வழக்கம். எனினும், பழைய தலைமுறையினர், தாயோடு பிறந்த ஆணை அம்மான் என்றும், தந்தையுடன் பிறந்த பெண்ணின் கணவரை மாமா என்றும் குறிப்பிட்டனர். இன்று அம்மான் என்ற சொல் கைவிடப்பட்டு, மாமா என்பதே இரு உறவுக்கும் பயன்படுகின்றது.
மனைவி கணவனை 'இஞ்சாருங்கோ', அல்லது 'இஞ்சாருங்கோப்பா' என்றும், கணவன் மனைவியை பெயரைச் சொல்லியோ அல்லது 'இஞ்சாருமப்பா' என்றுமோ அழைத்து வந்தனர். தற்போது வாழும் மூத்த தலைமுறையினர் தற்போதும்
இப்படி ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. இளம் வயதினரில்கூட, மனைவி
கணவனை 'அப்பா'
என்று அழைப்பது தற்போதும்
வழக்கத்தில் உள்ளது. அனேகமாக குழந்தை
பிறந்த பின்னர், குழந்தைக்கு 'அப்பா'
என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டு வருவதனால் இம்முறை
தோன்றியிருக்கலாம். தற்போது அனேகமாக கணவன்
மனைவியை பெயரிட்டு அழைப்பதே வழக்கத்தில் உள்ளது. மனைவியும் கணவனை பெயரிட்டு அழைப்பதும் தற்போது
நடைமுறைக்கு வந்துள்ளது. திருமணமான புதிதில் மனைவி கணவனை அத்தான் என்று அழைக்கும்
வழக்கமும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால்
இவ்வழக்கம் தமிழகத்துப் பழைய திரைப்படங்களில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். அக்காவின் கணவரை அத்தான்
அல்லது மைத்துனர் என்றும், தங்கையின் கணவரை மச்சான் என்றும், அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை மச்சாள் என்றும் அழைத்தனர். அண்ணி என்ற சொல் மிக அரிதாகவே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் மாமா, மாமியின்
மகனை மச்சான் என்றும், அவர்களின் மகளை மச்சாள் என்றும்
அழைக்கும் வழக்கமும் இருந்து வந்தது.
யாழ்ப்பாணத்துக்குச் சிறப்பான சொற்கள்
யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் பயன்படுகின்ற சொற்கள் பல
அப்பகுதிக்கேயுரிய சிறப்பான பயன்பாடுகளாக அமைகின்றன. இவ்வாறான சொற்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.
பேச்சுத் தமிழ் (பொருள்)
ஆம்பிளை (ஆண்)
இளந்தாரி (இளைஞன்)
ஒழுங்கை (ஒடுங்கிய தெரு)
கதிரை (நாற்காலி)
கமம் (விவசாயம்/வயல்)
கமக்காரன் (விவசாயி)
காசு (பணம்)
காணி (நிலம்)
கொடி (பட்டம்)
சடங்கு (விவாகம்)
திகதி (தேதி)
பலசரக்கு (மளிகை)
பெட்டை (சிறுமி)
பெடியன் (சிறுவன்)
பேந்து/பிறகு (பின்பு)
பொம்பிளை (பெண்)
முடக்கு (பாதைத் திருப்பம்)
வளவு (வீட்டு நிலம்)
வெள்ளாமை (வேளாண்மை)
-
கதை (பேசு)
பறை (பேசு)
பாவி (பயன்படுத்து)
பேசு (ஏசு)
விளங்கு (புரிந்துகொள்)
வெளிக்கிடு (புறப்படு/உடை அணிந்து தயாராகு)
ஆறுதலா (மெதுவாக)
கெதியா (விரைவாக)
பிறமொழிச் செல்வாக்கு
யாழ்ப்பாணம், 1591 ஆம் ஆண்டிலிருந்து, 1620 வரை போர்த்துக்கீசியரின் செல்வாக்கின் கீழும், 1620 தொடக்கம் 1658 வரை அவர்களின் நேரடி ஆட்சியிலும்
இருந்தது. யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொண்ட
முதல் மேல் நாட்டவர் இவர்களே ஆனதால், பல மேல் நாட்டுப்
பொருட்களும், கருத்துருக்களும் யாழ்ப்பாணத்தில்
அறிமுகமானது இவர்கள் மூலமேயாகும். இவற்றுடன்
போர்த்துக்கீசிய மொழிச் சொற்கள் சிலவும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் கலந்துள்ளன.
உதாரணமாக, அலமாரி, அன்னாசி, பீங்கான், கடுதாசி, கோப்பை முதலான வார்த்தைகள். தமிழ் நாட்டில் போர்த்துக்கீசியர்
செல்வாக்கு மிகவும் குறைவாகவே இருந்தனால், யாழ்ப்பாணத்தைப்போல், தமிழ் நாட்டுப் பேச்சுத் தமிழில் போத்துக்கீசிய மொழிச் சொற்கள் அதிகம்
ஊடுருவவில்லை.
நெதர்லாந்து நாட்டு மக்களே, 138 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக ஆண்டபோதிலும், போர்த்துக்கீசியச் சொற்களைப் போல், டச்சு
மொழிச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழில் அதிகம் இடம் பெறவில்லை. எனினும், சில டச்சுச்
சொற்கள் இன்னும் இங்கே புழக்கத்தில் இருந்துதான் வருகின்றன. கக்கூசு (கழிப்பறை),
கந்தோர் (அலுவலகம்), காமரா அல்லது காம்பறா (அறை), தேத்தண்ணி (தேநீர்) போன்ற சொற்கள் டச்சு மொழியிலிருந்து வந்தவையாகும்.
இது போன்றே, ஆங்கிலேயர் காலத்தில் வந்த பேச்சுத்தமிழ் இன்றும் தொடர்கிறது.
உதாரணமா, பஸ்,
டயர், இன்னும் பிற.
நம் இலங்கை வாழ் நண்பர்கள் இக்கட்டுரையில் குறை
இருப்பின் மன்னிக்கவும். மேலும், விடுபட்ட உங்கள் புழக்கத்தில் இருக்கும்
தமிழ் வார்த்தைகளை மற்றவர்களோடு பகிருங்கள்.
"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் "...
(Thanks: Wikipedia)
இனிய நண்பர்களே,
இது சற்று பெரிய பதிவு. படித்து உங்கள் பின்னூட்டங்களையும் பதியும்படி கேட்டுக் கொள்கிறேன். திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பதிவை பகிர அனுமதித்த Ramkumar G Krish அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி.
நன்றி நண்பர்களே.
i
i
i
நல்ல பயனுள்ள கட்டுரை
பதிலளிநீக்கு-அதியன் சௌமியா
பயனுள்ள அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய
பதிலளிநீக்குதகவலக்ள் அடங்கிய அருமையான பதிவு
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
அன்புள்ள ஐயா...
பதிலளிநீக்குதொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக இறுக்கமான அலுவலகப் பணிகள். தேர்வுத்தாள் மதிப்பீட்டுப்பணி...பாடங்கள் எழுதுதல்..என இன்னும் இறுக்கமாகவே. எனவே இக்கட்டுரை உண்மையிலேயே பயனுள்ள கட்டுரை. மொழிகுறித்த இதனை ஆற அமரப் படிக்கவேண்டும். எனவே விரைவில் எனது அலுவல்களை முடித்துவிட்டு விரைவில் வந்து படிப்பேன். நன்றிகள். உங்களின் மின்னஞ்சலைத் தாமதமாகப் பார்க்க நேர்ந்தமைக்கும் இதுவே காரணம். மன்னிக்கவும். தங்கள் அன்பிற்கு நன்றிகள்.
அன்புள்ள ஐயா...
பதிலளிநீக்குதங்களின் தகவலுக்கு நன்றிகள். இறுக்கமாக பணிச்சூழல். விரைவில் வந்து உங்களின் பதிவுகளைப் படிப்பேன். இக்கட்டுரை மொழிகுறித்தது நிதானமாகப் படிக்கவேண்டிய அவசியமான பதிவு. விரைவில் வருகிறேன். நன்றிகள்.
என்னைப் பற்றியும் கூறியதற்கு நன்றி
பதிலளிநீக்குவழமைபோல நல்ல பதிவைப் பகிர்ந்திருக்கிறீர்கள்
அன்பின் ரத்னவேல் - பல தகவல்கள் அடங்கிய பதிவு - பயன் படும் பதிவு - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குArumaiyaana pathivu. Kaiyadakka tholai pesi oodaaga (via mobile) karuththiduvathaal thamizhil karuththida mudiyavillai.
பதிலளிநீக்குIntha kadduraiyil sonna ragara, tagara uchcharippu yaazhppaanaththil pizhai enra karuththudan udanpada mudiyavillai..
மிக்க மகிழ்ச்சி அருமையான பதிவு....யாழ்ப்பாணத்திலிருந்து நன்றிகள்
பதிலளிநீக்குஇலங்கைத்தமிழையும் நமது நாட்டின் தமிழையும் அழகாக ஒப்பிட்டும், இலங்கையில் பேசும் தமிழ் உச்சரிப்பையும் அழகான கட்டுரையாக எழுதியுள்ளமைக்கு Ramkumar G Krish அவர்களுக்கு வாழ்த்துக்கள். அதனை வெளியிட்ட தங்களுக்கும் வாழ்த்துக்கள். வாசித்து முடிக்கத்தான் கொஞ்சம் நேரமானது.
பதிலளிநீக்கும்ம்... அருமையான பதிவு....திரும்பவும் எங்கள் மண்ணில் கால் பதித்த உணர்வை இது தந்தது என்றால்
பதிலளிநீக்குமிகையாகாது . அனைவருக்கும் நன்றி
GOOD ARTICLE...SENTHAMIL THEEVUKKOR PAALAM AMAIPPOM IS CORRECT!
பதிலளிநீக்குBARATHY MADE A MISTAKE!
வாசிக்கும் போது கண்கள் கலங்குகின்றது மிக அருமையான முயற்சி,நல்ல ஒரு உணர்வு ஏற்படுகிறது, நன்றி
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள தகவல்
பதிலளிநீக்குபல தகவல்கள் அடங்கிய பதிவு. தங்களுக்கும், கட்டுரையாசிரியருக்கும் நல்வாழ்த்து.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
பயனுள்ள அருமையானப் பதிவு
பதிலளிநீக்குபதிவாக்கித் தந்தமைக்குமனமார்ந்த நன்றி
மிகவும் அருமை சகோ தொடருங்கள்
பதிலளிநீக்குஅருமையான பதிவு ஐயா , நான் செய்த சிறு உதவியையும் மறக்காமல் குறிப்பிட்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்
பதிலளிநீக்கு"சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
பதிலளிநீக்குசேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் "...
அருமையான பதிவு ஐயா..பாராட்டுக்கள்..
எனக்கும் கொஞ்சம் இலங்கை தமிழ் நண்பர்கள் இருக்காங்க. அவங்க கூட பேசும் போது சில வார்த்தைகள் புரியாது என்னன்னு கேட்டு தெரிஞ்சுப்பேன்.உங்க பகிர்வு நல்லா இருக்கு
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் ஐயா..
பதிலளிநீக்குஇலங்கை தமிழைப்பற்றிய இந்தப் பதிவு படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. டொக்டர் திரு முருகானந்தம் ஐயா அவர்களின் வலைபதிவுகளை தொடர்ந்து படித்து, அவரது இலங்கைத் தமிழ் ரசிக்கவும் செய்கிறேன்.
பதிலளிநீக்குஇன்றைய வலைசரத்தில் உங்களின் அறிமுகம் மூலம் உங்கள் வலைத் தளத்திற்கு வந்தேன். பாராட்டுக்கள்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அய்யா
பதிலளிநீக்குஇலங்கைத்தமிழ் பற்றி பலதகவல்கள். மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
நிறைய சங்கதிகளை தெரிந்து கொண்டேன். நன்றி....
பதிலளிநீக்குநிறைய விஷயங்கள் தெரிந்துக்கொண்டோம்.. நன்றி
பதிலளிநீக்குஎப்போதுமே நல்ல தூய தமிழில் பேசும் நம்மவர்களை எனக்கும் பிடிக்கும்
பதிலளிநீக்குநன்று நன்று!!!! பணி தொடர வாழ்துக்கள்!!!
பதிலளிநீக்குஎனது மின் அஞ்சல் முகவரிக்கு உங்கள் அலைபேசி எண் மற்றும் உங்கள் முகவரியை அனுப்பி வைக்க வேண்டுகின்றேன். தாமதத்திற்கு மன்னிப்பை கோருகின்றேன்.
பதிலளிநீக்குஅழகான கட்டுரை நண்பா...
பதிலளிநீக்குவாழ்த்துகள்... தொடர்ந்து எழுதுங்கள்...
வணக்கம்...
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_15.html) சென்று பார்க்கவும்... நன்றி ஐயா...
மிக அருமையான பதிவு. யாழ்ப்பாணத் தமிழ் எனப்படும் வட இலங்கைத் தமிழுக்கும் தென்கேரள மலையாள மற்றும் குமரி மாவட்ட வழக்குக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. உட்காருங்கள் என்பதை இருங்கள் என யாழில் வழங்குவார்கள், மலையாளத்தில் இரிக்கு, மட்டக்களப்பில் இரிக்கு அப்படியே உள்ளது. வாந்தி என்பதை யாழில் சத்தி என்பர், மலையாளத்தில் சப்தி என்பர். வள்ளம் என்ற சொல் யாழ், மலையாளம் இரண்டிலும் உண்டு. சித்தியை சிறிய தாய், சிறியம்மா என்பதும் யாழில் உண்டு, மலையாளத்தில் சிற்றம்மை. மாலை, சாயந்திரம் என்பதை பின் நேரம் என யாழில் கூறுவர், மலையாளத்தில் வைகு நேரம். விளி சொற்களில் முன்னர் மோனே, மோளே என்பது யாழ்பாணத்திலும், மலையாளத்திலும் இருந்தது.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
எங்களின் தாயக தமிழ் இலங்கைத்தமிழ் அவதாவது பேச்சுத்தமிழில் நாங்கள் சொல்வோம் கதைப்போம் என்று அதைப்பற்றிய பதிவு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா......
குறைகள் ஒன்றும்மில்லை உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள்
அழைப்பு...
நேரம் இருப்பின் என்னுடைய வலைப்பூ பக்கமும் அன்புடன் வாருங்கள்.வாருங்கள் ஐயா....
https://2008rupan.wordpress.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புள்ள
பதிலளிநீக்குஜெயக்குமார் பக்கத்தில் உங்கள் கருத்துரையைப் படித்தேன். 55 வயது முக்கியமில்லை. உங்களின் ஆர்வமே முக்கியம். இந்த வயதில் உங்களின் வலைப்பக்க முயற்சி எல்லோரையும் துர்ண்டும் உந்து சக்தி.
சிறப்பான ஒரு ஆய்வுக் கட்டுரையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா! யாழ்ப்பாணத் தமிழில் இவ்வளவு உள்ளதா?. ஆச்சர்யப் படவைக்கிறது.எழுதுவதை விட சிறப்பான படைப்புகளை தேடி அனைருக்கும் பயன்பட எடுத்துப் பகிர்வது பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குஅருமையான உபயோகமான பதிவு.
பதிலளிநீக்குஇலங்கை தமிழில் எத்தனை சொற்கள்....? பிரமிப்பையே கூட்டியது பதிவு!
வாழ்த்துகள்!
மனித நேயம் சார்ந்த மொழி பற்றுள்ள சிறப்பான கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவரலாற்றுத் தகவலுடன் கட்டுரை அருமையாக வெளிவந்திருக்கிறது.
பதிலளிநீக்குசில தகவல்களை சேமிக்கவும் செய்தேன்.
கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி சார்!.
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்- தங்களின் விவரங்களைப் படித்து அறிந்தேன். மெய்சிலிர்த்துப் போனேன்.
எனக்கு பிடித்த தலைவர்கள்; காமராஜர், ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, அப்துல் கலாம். எனது கொள்கை - முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவது, நல்ல கொள்கையுடன் உழைத்துக் கொண்டிருக்கின்ற தங்களை நினைக்கின்ற பொழுது பெருமையாக உள்ளது.
‘இதோ உங்கள் குமரன் கதைக்கிறான்’என்று ஒரு பதிவு என்னிடம் பயின்ற இலங்கை மாணவனுக்காக இட்டிருக்கிறேன்.
அதைப் பார்த்து கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
முகநூல் நண்பர்களை அறிமுகப்படுத்தியதும் அருமை.
தங்களின் பெருமை என்றும் பேசப்பட வேண்டும்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
இலங்கைத் தமிழ் கேட்க கேட்க திகட்டாதது. மிகவும் சுவையான பதிவு, பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குசிறந்த மொழி ஆய்வுப் பகிர்வு
பதிலளிநீக்குடச்சு மொழி என்ன
பிறமொழிச் சொல்கள் யாவும்
தமிழில் இருந்து நீக்க வேண்டுமே!
மிக அருமையான பயனுள்ள மொழி ஆய்வு! பகிர்ந்தமைக்கு மிக்க் நன்றி! இந்த வழக்குச் சொற்களில் பல நம் தமிழகத்திலும் வட்டார வழக்குச் சொற்களாகவும், சில சொற்கள் கேரளத்தில் உபயோகப்படுத்தப்படுபவையாகவும் உள்ளன. மட்டுமல்ல கேரளத்து உணவு, உடை இலங்கையின் உணவு உடை யை சிறிது ஒத்திருப்பது போல் உள்ளது. இல்லையா ஐயா?!
பதிலளிநீக்குகனவில் வந்த காந்தி
பதிலளிநீக்குமிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்கம்
திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து
புதுவைவேலு/யாதவன் நம்பி
http://www.kuzhalinnisai.blogspot.fr
("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)
ஹலோ! நண்பரே !
பதிலளிநீக்குஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு
வணக்கம் அய்யா நல்ல விரிவான பதிவு யாழ்ப்பானத்தமிழை அறிந்து கொள்ள உதவியது நன்றி அய்யா
பதிலளிநீக்குநீங்கள் ஏன் இப்பொழுதெல்லாம் எழுதுவதில்லை ?
பதிலளிநீக்குசரியான கேள்வி. முகநூலில் எழுதியதும் post செய்ய முடிகிறது. பதிவில் ஏற்றுவது, படங்கள் ஏற்றுவது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது. எனக்கு computer knowledge மிகவும் குறைச்சல். ஒரு பதிவு படங்களுடன் ஏற்றி வைத்திருக்கிறேன். align செய்வது சிரமமாக இருக்கிறது.
நீக்குபதிவில் எழுதுவது தான் சரியான செயல். எழுதுகிறேன். வாரம் ஒரு பதிவாவது எழுதுகிறேன். எழுத நிறைய இருக்கின்றன.
நன்றி. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
அருமையான பதிவு சார். என்னுடைய வலைப்பூவுக்கு வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி.தொடர்ந்து வந்து கருத்துக்களை சொல்லுங்கள்.
பதிலளிநீக்குவலைப்பதிவில் பதியப்படும் பதிவுகளே காலத்திற்கும் நிலைத்து நிற்கும். எனவே தொடருங்கள்...
பதிலளிநீக்குhttps://www.scientificjudgment.com/