திங்கள், ஜனவரி 16, 2012

சர்க்கரை – சர்க்கரை – சர்க்கரை நோய்


பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் சர்க்கரை நோய் & உணவு முறைகள், மருத்துவம் பற்றி : சர்க்கரை – சர்க்கரை – சர்க்கரை நோய் : என்று ஒரு அருமையான கட்டுரை அவர்களது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்கள்.  அவர்களது அனுமதியிடன் எங்களது பதிவாக வெளியிடுகிறோம்.  படித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  ஏதாவது விளக்கம் வேண்டும் என்றால் அவர்களுக்கு அனுப்பி பதில் வாங்கி பதிவு செய்கிறேன்.
 சர்க்கரை...சர்க்கரை...சர்க்கரை நோய்...
-பேரா.சோ.மோகனாவாப்பா பாலா,  கையிலே என்ன பொட்டலம்?

அட .எல்லாம் ஒனக்கு பிடிச்ச அயிட்டம் தான்பா.

அட போப்பா, டாக்டர் என்ன சர்க்கரை பக்கமே போகக் கூடாதூன்னுட்டார்.

சரி சரி.  கவலைப்படாத. சக்கரையை ஒம்பக்கம் அனுப்பிடலாம்,  நீ போக வேண்டாம்.
இங்க பாரு நானே நொந்து நூலாயிருக்கேன். நீ வேற நக்கல் பண்றியே.. சரிப்பா...சரிப்பா.. இனிப்புன்னு எப்படி வளைச்சு மண்டுவே. இப்ப அதெல்லாம் போச்சா.  சரி. அண்ணனுக்கு ஒரு டீ வாங்கிடு வா தங்கம்.  சர்க்கரை இல்லாம. நமக்கெல்லாம் 4 டீ வாங்கிடு...


அண்ணே... இங்க தம் டீ தாண்ணே!  சர்க்கரை போடாம கெடக்காது.

சரி பாலா... இன்னிக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க...தம் டீ சாப்பிடு.. சரிப்பா...


 

இப்படிப்பட்ட உரையாடல்களை எல்லாம் நாம் அனைவரும் சமீபகாலமாக அடிக்கடி கேட்க நேரிடுகிறது. இதன் காரணம்..? சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இப்போது வெகுவேகமாக... விலைவாசியைப் போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. எதிர்காலத்தில், கி.பி.. 2030 களில் சர்க்கரை நோயாளிகளின் உலகத் தலைநகர் இந்தியாவாகத்தான் இருக்கப்போகிறது என அறிஞர்கள் கணிக்கின்றனர் நண்பா...! சந்தேகமே வேண்டாம்.எதில் முன்னேறுகிறோமோ இலலையோ, சர்க்கரை நோயாளிகளை உற்பத்தி செய்வதில் பயங்கரமாக முன்னேறி உயரத்தில் நிற்கிறோம். உலக நல நிறுவனம் (World Health Organisation)தான் இப்படி ஒரு உண்மையைப் பேசி, நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது...!


சர்க்கரையின்... நிலை....! 

  
 கி.பி. 2000க்குள் உலக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 17.8 கோடி; மக்கள் தொகையில் 2.8%.2003ல்-18.9 கோடி; இது கி.பி.2030ல் இருமடங்காகி 35 கோடியைத் தாண்டும் என்ற தகவல் நம்மை ஏகமாய் மிரட்டுகிறது . அது போகட்டும்.. இந்தியாவின் நிலைமை என்ன தெரியுமா?
 •  1995ல்..1.9கோடி; 
 • 2005ல்-3.5கோடி;
 •  2007ல்..4கோடி;
 •  2008 ஜுன் 8ம் நாளின்படி... 4.1கோடி(உலகஅளவில் 24.0கோடி).
 • கி.பி.2025ல், வெற்றிகரமாக 7கோடியை எட்டும் 
என உலக நல நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அப்போது உலகில் இந்தியா, சீனா, அமெரிக்கா மூன்று நாடுகளுமே சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் முன்னணியில் இருக்குமாம்...!

ஏன்...சர்க்கரை நோய்...! 
அதெல்லாம் சரி..! சர்க்கரை நோய் என்றால்..என்னப்பா.. என்கிறீர்களா? நாம் உட்கொள்ளும் அனைத்து உணவும்,  உணவு மண்டலத்தில் செரிமானம் ஆகிறது. உட்கிரகித்தல் மூலம் இரத்தத்தில் சர்க்கரையாக கலக்கிறது. ஆமப்பா; நீங்கள் இட்லி சாப்பிட்டாலும் சரி, நெய் உருண்டை தின்றாலும் சரி, அல்வா முழுங்கினாலும் சரி...மட்டன், மீன்.. என எது போட்டு தாக்கினாலும் சரி, அது இறுதியில் சர்க்கரையாக மாற்றப்பட்டே,  இரத்தத்தில் கலக்கிறது. இரத்தம் மூலம்தான் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் வேண்டிய சக்தி அளிக்கப்படுகிறது.  இந்த சுழற்சியில், இரத்ததில் உடலுக்குத் தேவையானது போக அதிகப்படியான சர்க்கரை இருந்தால் என்ன ஆகும் தெரியுமா?  நம் வயிற்றுப் பகுதியில் வயிற்றுக்குக் கீழே கணையம் என்ற சுரப்பி உள்ளது.இந்த சுரப்பியில் ’இன்சுலின்’ என்ற ஹார்மோன் சுரக்கிறது.   இது இரத்தததில் காணப்படும் அதிகமான சர்க்கரையை, கிளைகோஜனாக மாற்றி, எதிர்கால சேமிப்பு களனாக வைத்துவிடுகிறது. இந்த இன்சுலின் போதாவிட்டாலோ, சரிவர வேலை செய்யாவிட்டாலோ..நமக்கு தாங்கமுடியாத ரோதனைதாம்பா! அதன்பெயர்தான் ...சர்க்கரை வியாதி..! என்ன அருமையான பேருப்பா.இது. . நாம சர்க்கரை சாப்பிட முடியாத நிலைமைக்கு இப்படி ஒரு பெயராம். ..!

சர்க்கரையின்...காரணி..! சர்க்கரை நோய். நமது வாழ்க்கை முறை தொடர்பான வியாதியாகிவிட்டது இப்போது? பொதுவாக சர்க்கரை நோய் பரம்பரை நோய் என்று கூறப்பட்டாலும், பரம்பரையாக வரும் என்றாலும் இன்று அதையெல்லாம் தாண்டி
 •  குண்டாக இருப்பவர்களுக்கும்
 •  நவீன உணவு & துரித உணவு உட்கொள்பவர்களுக்கும்
 •  மற்றும் வாழ்க்கை முறையும்தான் முக்கிய காரணிகள
என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். நாம முன்னெல்லாம், எல்லா இடத்துக்கும் நடந்தே போவோம். இப்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. இன்றைக்கு மக்களிடம் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் வந்துவிட்டன. பொதுவாக இன்றைக்கு யாரும் நடப்பதே இல்லை. வாகனங்கள் நம் நடையை குறைத்துவிட்டன. நாம் நடக்க சோம்பேறிகளாகிவிட்டோம். அதுவும் கூட சர்க்கரைநோய்க்கான காரணிகளில் ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமில்லேப்பா.. இன்றைய வாழ்க்கைச் சூழல், அனைவருக்கும் எல்லா சூழலிலும் பல்வேறு வகையான மனவழுத்தங்கள், மன இறுக்கங்கள் உள்ளன. அதுவும் கூட சர்க்கரை நோய் வருவதற்கான காரணமாம்பா..! அதுமட்டுமல்ல.. நகர்மயமாதல், தொழில் மயமாதல், சமுக, பொருளாதார வளர்ச்சி மற்றும் மாற்றங்களினால் வாழ்வியல்...அவசர கதியால் செயல்படுவதால்...என ஏராளமான உணவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால்உருவான நோய்களில் முக்கியமானது சர்ககரை நோயப்பா..!

உணவும்..சர்க்கரைநோயும்...!  

  

சர்க்கரை நோய் பணக்காரருக்கு மட்டுமல்ல...பாட்டாளிகளுக்கும் கூட வருகிறது. உணவு முறையும்.. மனவழுத்தமும் தான்..இதற்கு முக்கிய காரணம் நமது பாரம்பரிய உணவுபழக்கங்கள் மாறியதும், மக்கள் துரித உணவுகளை நாடுதலும், நவீனத்துக்கு தாவிவிட்டலும் கூட இதன் காரணங்கள்தான், .இப்படிப்பட்ட சர்க்கரை நோய் நம்மைவந்து கவ்விக்கொள்கிறது என மருத்துவர்கள் கணிக்கின்றனர். அதிகமாக குளிர்பானங்களை அருந்துபவர்களுக்கும் இந்நோய் வருகிறதாம் நகர்ப்புறங்களில் வாழ்பவர்களில், 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் 11% மக்களுக்கு சர்க்கரைநோய் உள்ளதாம். சென்னை வாழ் மக்களில் 50% பேருக்கும்,கிராமபுறங்களில் வாழ்பவர்களிடம் 30% பேருக்கும் சர்க்கரை வியாதியுள்ளது.

மருத்துவர்களின்...கணிப்பு...!
நம்மை வாட்டி, வதைத்து, சித்திரவதைப் ப்டுத்தி மிரட்டும் சர்க்கரை நோய் மூன்று வகைப்பட்டது 
 • சிலருக்கு பிறவியிலேயே,  இன்சுலின் சுரக்காமல் இருப்பதும் உண்டு.  இவர்கட்கு குழந்தையிலிருந்தே சர்க்கரை நோய் பாதிக்கிறது. சிலருக்கு அவர்கள் உடம்பில் சுரக்கும் இன்சுலின் அளவு போதாது. இவர்களிடம் 40 வயதுக்குள் சர்க்கரைநோய் சரணடையும். இது முதல்வகைச் சர்க்கரை நோய்.
 •  உடல்பருமன், பரம்பரை, உடல்செயல்பாடு குறைதல், நகர்மயமாதலும், உணவுப்பழக்கமும், மன அழுத்தம், போன்றவற்றால் பலர்க்கு நடுத்தர வயதைக் கடந்தும், சர்க்கரைநோய் குஷியுடன் உடலில் தங்கி ஓய்வெடுக்கிறது. இது இரண்டாம் வகையாகும்.
 • உலகிலுள்ள சர்க்கரை நோயாளிகளில் 90% பேர் இந்த வகையினரே! முன்றாவது வகை கருவுற்றிருக்கும் பெண்களிடம் மட்டும் தாய்மை பேறு காலத்தில் எட்டிப்பார்த்துவிட்டு, பிறகு ஓடியே போய்விடும். இவர்களுக்கு முதுமையிலும், இவர்களின் குழந்தைகளுக்கும் பிற்க்காலத்தில் சர்க்கரை வியாதி வரும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

உண்மை...அறியாத...மக்கள்..!    நம் இந்திய நாட்டில், குடிமக்களில் சுமார் 50% பேருக்கு எவ்வித மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுவது இல்லை...நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கும் கூட, 25% பேருக்கு சர்க்கரைநோய் பற்றிய விழிப்புணர்வே இல்லை.ஆனால் இப்போது வாழும் மக்களில் அவர்கள் நினைத்தால் 40% பேருக்கு, சர்க்கரை நோய் வராமல் தடுக்கமுடியும், அவர்க்ளும் கூட கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது இப்போது அறியப்படுகிறது. சர்க்கரை வியாதி பற்றிய விழிப்புணர்வு,முன்பைவிட அதிகரித்திருந்தாலும், பட்டமேற்படிப்பு படித்தவர்கள், தொழில் முனைவோர், மருத்துவர் உட்பட, 42.6% பேருக்கு மட்டுமே இந்நோய் தடுக்கக்கூடியதே என்ற சரியான கணிப்பு உள்ளது. இதனால் ஏற்படும் அபாயகர விளைவுகள் பற்றிய உண்மைத் தகவல்கள் குறைவாகவே அறியப்பட்டுள்ளது. 1.9% பேரின், உடல்பருமன், மற்றும் உடல் செயல்பாடு குறைவால், சர்க்கரைநோய் வருகிறது எனத் தெரிந்து வைத்துள்ளனர். சர்க்கரை நோய் வந்துள்ளவர்களில் கூட 40% பேருக்கு மட்டுமே, சர்க்கரை நோய், உடலின் மற்ற உடல் பாகங்களுக்கும், . வேறு பிரச்னைகள் சர்க்கரைவியாதி மூலம் வரும் என்றே தெரிந்து வைத்துள்ளனர்.

உறுப்புகளை...சிதைக்கும்...சர்க்கரை நோய்...! சர்க்கரை நோய் என்பது, அனைத்து நோய்களின் தாயகம்.. நோய்களின் உற்பத்திக்கூடம் என்றே துணிவுடன் அழைக்கலாம்.
 • இதயம்,
 •  இரத்தக்குழாய் நோய்கள் ,
 • மாரடைப்பு,
 •  சிறுநீரக செயலிழப்பு,
 •  நரம்பு பாதிப்பு, 
 • கண்பார்வை பதிப்பு, 
 • ஆண்மை இன்மை ஏற்படுகிறது. 
 • விரல்கள், பாதங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
 •  விரல்களிலுள்ள நரம்புகள்

சிதைந்துபோய், கான்கிரீன் ஏற்ப்பட்டு விரல்களை, கால்களை எடுத்து விடும் நிலை ஏற்படுகிறது.

சர்க்கரையும்...பரம்பரையும்...!


  

  

சர்க்கரை நோய்க்கான சிகிச்சை என்பது வாழ்நாளுடன் தொடர்புடையது. ஒருவருக்கு ஒருமுறை சர்க்கரை நோய் வந்துவிட்டால்.. அவ்வளவுதான்..! நமது மூச்சு உள்ளவரை... நிழல்போல் தொடரும்.

 • சுறுசுறுப்பான உடல் செயல்பாடு,
 •  உடற்பயிற்சி, 
 • மற்றும் 7% எடையைக் குறைத்தல் மூலம், 

58% சர்க்கரைவியாதி நம்மை அண்டாமல் தடுக்கமுடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பெற்றோருக்கு சர்க்கரை நோயிருந்தால், அவர்களின் குழந்தைகளில், மகளுக்கு, 20-25 வயதுக்குப் பின்னரும், மகனுக்கு 25 வயதிலும் சர்க்கரைநோய் வர வாய்ப்பு உண்டு என அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்களுக்கு உடல்பருமன் இல்லை எனில், 40 வயது வரை சர்க்கரை நோய் வருவதை தள்ளிப்போடலாம்.

சர்க்கரைநோயின்...வகைகள்...! 

கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பவர்களுக்கும்,  துரித உணவகங்களை நாடுவோரையும்,  சர்க்கரைநோய் எளிதில் நாடுகிறது. 
 •  இந்தியர்களுக்கு 40-45 வயதிலும், 
 • அமெரிக்கர்களுக்கு 60 வயதிற்கு மேலும் சர்க்கரை வியாதி வருகிறது.
 வளர்ந்த, வளர்ந்துவரும் நாடுகளில் கூட, 15 வயதிற்குட்பட்ட, சுமார் 70,000 குழந்தைகளிடம் முதல்வகை சர்க்கரைவியாதி காணப்படுகிறது.
5% இந்தியர்கள் உடல்பருமன், நகர்மயமாக்கல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு அதனால் சர்க்கரை வியாதி உருவாகியுள்ளது. ,
50% பேர்கள் மிக மோசமாக சர்க்கரைவியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு நாளில், இருமுறைக்கு மேல் குளிர்பானம் அருந்துபவர்களுக்கும்

இரண்டாம் வகை சர்க்கரைநோய் என்பது 20-30% உருவாகிறது
. மக்களில் நிறையபேருக்கு. இரண்டாம் வகை சர்க்கரைநோய் வந்துவிட்டால்

, எந்த அறிகுறியும் வெளியில் தெரியாது
. அது மௌன சாமியாராகவே வேடம் போட்டு உலவி வரும்.

நோய்...உருவாக்கும்...உடல்எடை...! 
உடல் எடை அதிகம் உள்ளவர்களில் 42% பேருக்கு சர்க்கரைநோய்... எளிதில் வந்து தஞ்சமடைகிறது. இவர்களில் 32% பேரின் இறப்புக்கு சர்க்கரைவியாதியே முக்கிய காரணியாக உள்ளது. ஏனெனில் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு, மாரடைப்பு ஏற்பட்டால்,அவர்களால் வலியை உணரமுடியாது. எனவே வலி உணராமலேயே, விரைவில் இறப்பைத் தழுவுகின்றனர். ஏனெனில் வலி.. என்ற சமய சஞ்சீவியை, நரம்பு சிதைவு மூலம், சர்க்கரை நோய் நசுக்கிவிடுவதுதான். வலி தெரியாவிடில்..எப்படி ஒருவரைக் காப்பாற்ற முடியும்; வலி இல்லாததால் அவரை மருத்துவரிடமும் கொண்டுசெல்ல முடியாது..! 
அதிக கொழுப்பு பொருள்கள் உண்பதும், மனஅழுத்தமும், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையை கடந்த 20 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாம்.

தென்னிந்தியாவை...ஆட்டுவிக்கும்...சர்க்கரை...தென்னிந்திய மற்றும் பெங்களூரில் நடந்த சர்க்கரைநோய் பற்றிய ஆய்வுகள், நம் நெஞ்சைக் கலங்க வைக்கும் உண்மைகளை வெளிக் கொண்டுவந்துள்ளன.. சர்க்கரை நோயாளிகளில் 70% ஏதோ ஒரு சிகிச்சைக்காக, பொதுமருத்துவரிடம் சென்றபோது.தான் அப்போதுதான் அவர்களிடம் உள்ள சர்க்கரைநோய் உள்ள விஷயத்தையே இவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். இவர்களில் 12 மணிநேர பட்டினி மற்றும் உணவுக்குப்பின்னும் மட்டுமே, சர்க்கரை நோய்க்கான இதர பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.. இவர்களுக்கு சர்க்கரை நோய்க்காக சிறப்பாகச் செய்யப்படும் 'Hb A1c' என்ற சோதனை, கொழுப்பு பற்றிய சோதனை, சிறுநீரக செயல்பாடு சோதனைகள் செய்யப்படுவது 6% மட்டுமே! இவர்களில் பெரும்பாலோர்க்கு, இரத்த அழுத்தம், எடை, கால் சோதனை கூட செய்யப்படுவதில்லை என்பது ரொம்பவும் வேதனையான விஷயம்தான். சோதனைக்கு பின்னும் கூட, இவர்களிடம் சர்க்கரைநோய் பற்றிய கண்காணிப்பு எனபது குறைவாகவே உள்ளது.

 இந்தியாவில்.. சர்க்கரை நோயாளிகள்..!


இந்தியாவில் உள்ள,
 •  உடல்நலத்திற்கான உள்கட்டமைப்பு போதாமை, 
 • அறியாமை,
 •  சரியான வழிகாட்டுதல் இன்மை போன்றவையும், 
அதன் மேலாண்மையை கண்காணிப்பது என்பது சர்க்கரை நோயாளிகளிடமும், பொது மருத்துவர்களிடமும் உள்ள கவனக் குறைவே இதன் முதன்மைக் காரணி.  நம்மிடையே இதற்கான சிறப்பு செவிலியர் இல்லை;  சர்க்கரை நோய் மற்றும் பாதத்திற்கான ஆலோசகர் இல்லை. அத்துடன் சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு போதுமான ஆதரவும் இல்லை. நோயாளிகளின் திறமையின்மை,  விருப்பமின்மை,  பணமின்மை..அது தொடர்பான விழிப்புணர்வின்மை யாவையுமே சிகிச்சையை தடைசெய்கின்றன.


விழிப்புணர்வற்ற... பாதை...

  

மருத்துவ சோதனைக்கு பின்னும் கூட,  சர்க்கரை நோயாளிகளிடம் ஏராளமான கவனக்குறைவு உள்ளது. பெரும்பாலான நோயாளிகள் மருத்துவர்களிடம் சென்றாலும்,  நோய்க்கான அறிகுறி குறைந்து, நோய் கட்டுப்பட்டு ஒரு நிலைக்கு வந்ததும், மருத்துவர்களிடம் செல்வதை நோயாளிகள் நிறுத்தி விடுகின்றனர்.  பெரும்பாலான நோயாளிகள்,  இந்திய, பாரம்பரிய, சித்த வைத்திய முறைகளை எடுக்கிறேன் என, அலோபதி மருந்தினை அம்போ என கைவிடுகின்றனர். சர்க்கரை நோய் அதிகரித்தவர்களில் நிறைய நோயாளிகள்,  இன்சுலின் போட பயந்து, அல்லது இதுவே பழக்கமாகிவிடும் எனப் பயந்து,  இதனைத் தவிர்க்கின்றனர். இதனால் இவர்கள் தொடர்ந்து, மருத்துவரை மாற்றிக்கொண்டும் இருக்கின்றனர். இதனால் சர்க்கரைநோய் முற்றுகிறது. சீக்கிரமே...அவர்களின் வாழ் நாளும் முடிந்துவிடுகின்றது, மேலும் வளமின்மை, மருத்துவ மீட்பு வசதியின்மை, மாநில அரசின் நிதிப்பற்றாக்குறை போன்றவையும் கூட சர்க்கரை நோய்க்கான அரசின் தரமான சிகிச்சைக்கான தடையாக உள்ளது.கவனம்...கவனம்...கவனம்...! 

மிகக் கவனமாக இருந்தால், சர்க்கரைநோய் வராமல் தடுக்கலாம். கவனமாக இருந்தால், சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.
 • என்ன செய்யவேண்டும், 
 • என்ன செய்யக்கூடாது 
என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்வது,
 உயிர் வாழ்வதற்கு உதவி செய்யும்.


 

   செய்ய வேண்டியது:


 • தினசரி 30 நிமிட நடை
 • 20 நிமிட உடற் பயிற்சி § 
 • குறைவாக, காபி, டீ பயன் படுத்துதல்
 • உடல் பருமனை கட்டுப்படுத்தல்.
 • குறைவான மாவுப் பொருள் புரதம் உட்கொள்ளுதல்
 • அதிக நார்ச்சத்துள்ள பொருட்களை உண்ணுதல்.
Assorted healthy food.
 • எராளமான முழுத் தானியங்களை உட்கொள்ளுதல்
 • கால் விரல், பாதங்களை சுத்தமாக வைத்திருத்தல். 
 • வைட்டமின் உட்கொள்ளல்


   தவிர்க்க வேண்டியவை:     • ஒரே இடத்தில்,  அமர்ந்து பணி செய்வதை.
 • மாவுப்பொருள், கொழுப்பு, எண்ணயில் பொறித்தவை, சிப்ஸ்,  கேக்,  ஐஸ் கிரீம், பிஸ்கட்,  சாக்லேட்,  கொட்டை போன்றவை.
 • முட்டையின் மஞ்சள்கரு,  ஆடு,  மாடு முதலியவை தவிர்த்தல்.
 • அதிக உணவை தவிர்த்தல்
 • ஒரு நாளைக்கு 4 ஸ்பூன் எண்ணெய்க்கு 8 டம்ளர் நீர் அருந்தவேண்டும்.
 • பட்டினி கிடக்க வேண்டாம்.
 • அதிக உப்பு,  கருவாடு,  ஊறுகாய் தவிர்க்கும்.
நம்புவதும்...நடப்பதும்...


சர்க்கரை நோயுள்ளவர்களிடம் ஒரு தவறான கருத்து உள்ளது. எண்ணெயில் பொறித்த பொருட்கள்,  கொழுப்பு உண்ணலாம் என நினைக்கின்றனர். இது இரத்தத்தின் கொழுப்பை அதிகரித்து மோசமான பின் விளைவையும்,. மிகை இரத்த அழுத்தத்தையும் உண்டு பண்ணும். இரத்தத்தில் அதிகமாக வைட்டமின் 'c' இருந்தால்தான் , இது 62% சர்க்கரை நோய் வருவதை தடைசெய்கிறது. ஏனெனில் வைட்டமின் சி என்பது தற்காப்புத்திறனை அதிகரிக்கும் முக்கிய காரணி. நீங்கள் உணவருந்த உட்கார்ந்ததும், தட்டை 4 பகுதிகளாக கற்பனைக் கோடு வரைந்து கொள்ளுங்கள். 
 • 1/4 பங்கு தானியம்/உணவு, 
 •  1/4 பங்கு புறம்,
 •  1/2 பங்கு காய்கறிகள் உணவும். சாலட், கீரை, தக்காளி, மற்றும் கொழுப்பற்ற 1 டம்ளர் மோர் அருந்தவும். 
 • இவையெல்லாம், உங்களின் சர்க்கரை நோயைக் குறைக்கும்..!


உயிர்காக்க...செய்யுங்கள்... 


      

சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தும் பொருட்கள், சர்க்கரையைவிட மிக மோசமான விளைவைத் தரும் செயற்கை இனிப்புகளையும் பயன்படுத்துவது தவறு.  அதை உண்பதால்,  நம் உடல் சீனிக்காக ஏங்கி தவம் கிடக்கிறது.  தினமும் இரவு படுக்கப் போகும் முன்,  கால் மற்றும் பாதத்தை சூடான உப்பு நீரில் கழுவ வேண்டும்.  கண்களை ஒவ்வொரு ஆண்டும் சோதனை செய்ய வேண்டும்.  மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். நவம்பர்-14 உலக சர்க்கரை தினம் கடைபிடிக்கபடுகிறது.

 இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள். மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்
மிக்க நன்றி.
83 கருத்துகள்:

 1. மிக அருமையான, பயனுள்ள கட்டுரை.
  விளக்கங்களும் , படங்களும் மிக அருமை.
  பகிர்க்கு நன்றி ஐயா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 2. நல்ல ஒரு அருமையான கட்டுரை ஐயா. விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரை. இந்த நோயினை முற்றிலும் தவிர்க்கலாம் தவறான உணவுப் பழக்கங்களையும் வாழ்க்கை முறைகளையும் மாற்றிடும்பொழுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 3. பொங்கலை அளவா சாப்பிடுங்க...

  இல்லையின்னா சர்க்கரை அளவு கூடிடும்...

  பயனுள்ள பகிர்வு.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 4. அருமையான கட்டுரை. மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 6. அனைவருக்கும் தேவையான, அரிய தகவல்கள். தற்போதைய, அவசர உலகில், சிறப்பு மருத்துவர்களுக்கும், ஒவ்வொருவருக்கும் எடுத்துச் சொல்ல நேரம் இருப்பதில்லை. ! பொதுமக்களுக்கும், பல விழிப்புணர்வு தகவல்களை பல்வேறு வகையில் அச்சிட்டு கொடுத்தாலும், படித்துப் பார்ப்பதற்கு அல்லது படித்து விட்டு, சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்திக் கொள்ள விருப்பம் இருப்பதில்லை. மாறாக...எப்படியாவது, இந்தப் பிரச்சினையை முற்றிலுமாக சரி செய்து விடவேண்டும் என்பதற்காக, ஏதாவது ஒரு தேவையற்ற குறுக்கு வழியினை பின்பற்றி ( அது பற்றியும் நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள் மேடம்)பிரச்சினை அதிகமாகி, பின்னர், மீண்டும் சுவற்றில் அடித்த பந்து போல திரும்பி வருவதை பார்ப்பது வாடிக்கை ஆகி விட்டது.! குறிப்பாக, அவர்களாகவே ரத்தப் பரிசோதனை செய்து கொண்டு, சில அரைவேக்காடுகளின் ஆலோசனைப்படி டோசேஜ் டைட்ரேஷன் செய்து கொள்வது, மிகவும் ஆபத்தானது என்பதை தொடர்ந்து வலியுறித்தி வருவது வழக்கம்.! மேலும், சர்க்கரை நோய் பற்றிய பல விழிப்புணர்வு கட்டுரைகளை பேஸ்புக்கில் தொடர்ந்து பகிர்வு செய்து வருகிறேன் டாக்டர். சர்க்கரை நோய் கட்டுப்பாடு பற்றிய பல புதிய ஆராய்ச்சித் தகவல்கள்...உள்ளன. பண்டிகை காலங்கள் முடிந்த பிறகு, நிதானமாக பகிர்வு செய்யலாம் என்பது எண்ணம். கட்டுரை, படங்களுடன் சிறப்பாக உள்ளது. இதனை வாசிப்பவர்கள், சேமித்து வைத்துக் கொள்வது மட்டுமன்றி...மதிப்பிற்குறிய நண்பர் திரு ரத்தினவேல் அவர்கள் செய்யும் மகத்தான பணி போல பகிர்வு செய்யவும். அனைவருக்கும் இனிய பொங்கல், காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 10. இந்த சர்க்கரை நோய் நான் ஆச்சரியப்படும் அளவுக்கு பெரும்பாலன மக்களுக்கு இளையர்களுக்கு வயது பேதம் இல்லாமல் வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு காய்ச்சலுக்கு மருத்துவரிடம் சென்ற போது உங்கள் வயதின் காரணமாக கோவித்துக் கொள்ளாமல் சர்க்கரை இருக்கிறதா என்று பார்த்து விடலாமா? என்றார். காரணம் தேவையில்லாமல் டெஸ்ட் என்ற பெயரில் என்னை வைத்து கும்மி தட்ட முடியாது என்பதை தெரிந்த மருத்துவர் என்பதால் பக்குவமாக சொன்னதால் பயந்து கொண்டே சம்மதம் தெரிவித்தேன். ஆனால் சர்க்கரை இல்லை. காரணம் பத்தாண்டுகளாக கடைபிடிக்கும் பழக்க வழக்கங்கள்.

  மரபு சார்ந்த இந்த நோய் என்பது 25 சதவிகிதம் என்றால் மீதி 75 சதவிகிதம் நம் பழக்கவழக்கங்கள் முக்கிய காரணியாக இருக்கிறது.

  ஆனால் நமக்கு ஆசை அதிகம் தானே.
  அதனால் தான் இந்த அவஸ்த்தைகளை சுமந்து தானே ஆக வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 11. சர்க்கரை நோயைக் குறித்து பொது மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை. இதை அடிக்கடி அனைவரும் படிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 13. .எதில் முன்னேறுகிறோமோ இலலையோ, சர்க்கரை நோயாளிகளை உற்பத்தி செய்வதில் பயங்கரமாக முன்னேறி உயரத்தில் நிற்கிறோம். உலக நல நிறுவனம் (World Health Organisation)தான் இப்படி ஒரு உண்மையைப் பேசி, நம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது...!


  பயனுள்ள பகிர்வு..நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 14. விரிவான பயனுள்ள பதிவு பகிர்வுக்கு ரொம்ப நன்றி
  இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை தொடர்ந்து கொடுங்கள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 15. வணக்கம் ரத்தினவேல் சார். மிக்க நன்றி. இப்படி பலருக்கும் பயன்படும் பதிவாக மாற்றியதற்கு. அனைவரின் பதிவையும் படித்தேன்.அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் பகிர்வுக்கும், பாராட்டுக்கும் நன்றி. நன்றி. எனது வலைப்பூ பக்கத்தையும் பாருங்கள். arunanb.blogspot.com
  வாழ்த்துக்கள் சார்.
  என்றும் அன்புடன்,
  மோகனா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 16. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 17. நல்ல விழிப்புணர்வு கட்டுரை.

  பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் சர்க்கரை நோய் & உணவு முறைகள், மருத்துவம் பற்றி கூறியதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 18. தஙகளைப் போன்ற சமூகத்தின்பால் அக்கறையுள்ளோர் மட்டுமே இதுபோன்ற பதிவுகளைப் பதிவிடமுடியும். இக்கட்டுரை எளிமையாக செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறது. பயனுள்ள கட்டுரை. அவரவர் புரிந்துகொள்ளும் தளத்தில் உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 19. பொங்கல் சமயத்தில் பதிய வேண்டிய மனதில் பதிய வேண்டிய ஆரோக்கிய பதிவு.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 20. நல்ல பயனுள்ள அருமையான பதிவு ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 21. கசப்பான இந்த நோய் பற்றி முற்றிலுமான தகவல்கள்.நம்மில் 60 சதம் பேருக்குப் பயன் தரும். நீங்கள் இக்கட்டுரையை எடுத்துக் கையாண்டிருப்பது பலரும் விழிப்புணர்வு கொள்ள உதவும். தொகுப்பாளருக்கு எனது பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 22. மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 23. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 24. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 25. வலைப்பூவில் படிப்பது கடினம். புத்தகமாக்கித்தான் படித்திட இயலும். ஆண்டாள் நம்பிக்கை இல்லாதவர்களும் அந்தப்பக்கம் வரும்பொழுது கோவிலுக்குள் செல்வது வழக்கம். அதுபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ரத்தினவேல் நடராஜன் எழுதியுள்ளதை முழுமையாக நமிபிப் புத்தகமாக்கலாம். படிக்கலாம். படித்துப் பயன்பெறலாம். அவரே செலவை வாங்கிக் கொண்டு புத்தகமாக எங்களுக்கு வழங்கலாம். ஆருத்ரா தரிசனம் முடிந்த நாளில் நடராஜர் படம் வலைப் பதிவில் போட்டேன். பலருக்கும் பயன்தரும் செயலொன்ன்றச் செய்யும் வாய்ப்பு நடராஜனுக்கு வந்து சேர்ந்தது. நன்றி. வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 26. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 27. மிகவும் பயனுள்ள கட்டுரை. தெளிவாக, விளக்கமாக, அருமையாக எழுதி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 28. அருமையான கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.

  எனக்கும் இந்த ரெண்டாம் வகை வந்துருக்குன்னு சில மாதங்களுக்கு முன்னால் செய்த ரத்தப்பரிசோதனையில் தெரிய வந்தது

  ( எல்லாம் உக்காந்து மாய்ஞ்சு மாய்ஞ்சு பதிவு எழுதுவதால் வந்திருக்கும்:-))))))))))))

  இங்கே நம் பதிவுலகில் ஒருஎளிய இயற்கை மருத்துவ முறை வந்ததே. இந்த இயற்கை மருந்தைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால் ஜஸ்ட் பார்டரில் நிற்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 29. நல்ல பயனுள்ள பதிவு. எல்லா விவரங்களும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 30. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 31. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 32. நல்ல பயனுள்ள கட்டுரை.

  பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 33. என்னால் நேற்று,தங்கள் தளத்தில் கமெண்ட் போட முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
   மனப்பூர்வ வாழ்த்துகள்.

   நீக்கு
 34. மிகவும் பயனுள்ள செய்தி .மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
   மனப்பூர்வ வாழ்த்துகள்.

   நீக்கு
 35. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 36. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
  மனப்பூர்வ வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 37. இப்ப உலகத்தில் இருக்கும் பெரிய பெரிய நோய் களில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இந்த சர்க்கரை நோய் தான் அதிகம் , மிக அருமையான் அனைவருக்கும் உபயோகபப்டும் பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
   வாழ்த்துகள்.

   நீக்கு
 38. இப்போது ஒருபத்தகம் ' Alan Shanley - his book “what one earth Can I eat”. ' படித்த்தேன். நோயை எவ்வாறு, கட்டு டுத்தலாம் என்று விளக்கி உள்ளார். லோ கார்போ உணவின் மூலம் சாத்தியம் என்கிரார்.

  என் பதிவிலும் அதைப்பற்றி எழுதி உள்ளேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
   மனப்பூர்வ வாழ்த்துகள்.

   நீக்கு
 39. அன்பின் ரத்னவேல் - சர்க்கரை நோயினைப் பற்றிய பதிவு அருமை - எவ்வளவு தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
   மனப்பூர்வ வாழ்த்துகள்.

   நீக்கு
 40. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
   மனப்பூர்வ வாழ்த்துகள்.

   நீக்கு
 41. உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
  http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
  இப்படிக்கு
  ஜலீலாகமால்

  பதிலளிநீக்கு
 42. Superb article explaining Diabetics. Thanks for the research and sharing

  பதிலளிநீக்கு
 43. good thorough report about Diabetis. today only I am able to read it. sorry for the delay sharing. Though I aware about this matter already, the full report you have given. thanks and vanakkam to share and post this matter.

  பதிலளிநீக்கு
 44. மருத்துவரை நேரில் கண்டு விளக்கம் பெற்றதைப் போன்று ஒரு திருப்தி...அருமை.மிகப் பயனுள்ள கட்டுரை..

  பதிலளிநீக்கு

 45. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

  பதிலளிநீக்கு