வெள்ளி, அக்டோபர் 21, 2011

எட்டயபுரத்தில் உமறுப்புலவர் மணிமண்டபமும்


திருச்செந்தூர் அருகே அற்புத அந்தோணியார் கெபியும் (அடைக்கலாபுரம்)
திருச்செந்தூர் செல்வதற்காக தூத்துக்குடி வழியாக சென்றோம்.  எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபமும், பாரதியார் பிறந்த வீட்டையும் பார்த்தோம்.  அதை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

எட்டயபுரத்தில் ‘உமறுப்புலவர் மணிமண்டபம் அருமையாக அரசினரால் கட்டப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது.  பாரதியார் வீடு இருக்கும் தெருவின் அருகில் அமைந்திருக்கிறது.  வழி காட்டும் பலகை சாலையில் இருக்கிறது.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொகுத்திருக்கிறேன்.
உமறுப்புலவரைப் பற்றி

(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து):
உமறுப் புலவர் (17ம் நூற்றாண்டு) முகம்மது நபி அவர்களின் வரலாற்றை அடியொற்றித் தமிழ் இலக்கிய மரபிற்கேற்பச் சீறாப் புராணம் என்ற காப்பியத்தைப் பாடியவர்.


வாழ்க்கைக் குறிப்பு

உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகைமுத்துப் புலவரிடம் உமறு தமிழ் பயின்று புலமை பெற்றார். தம் ஆசானுக்குப் பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார்அந்தோணியார் புனித அற்புத கெபி (அடைக்கலாபுரம்)

திருச்செந்தூருக்கு சற்று முன்பு வீரபாண்டியன்பட்டினத்திற்கு அருகே அடைக்கலாபுரம் என்ற ஊரில் சாலையில் ‘மிகவும் அற்புதமான புனித அந்தோணியார் அற்புத கெபி அமைந்துள்ளது. 


அமைப்பு பிரமாதமாக, கண்ணைக்கவரும் விதத்தில் இருக்கிறது.  கடந்த வருடம் கட்டப்பட்ட தேவாலயம்.  அதைப் பற்றிய விபரங்கள் தெரியவில்லை.  செய்திகள் சேகரிக்க அங்கு ஒருவருமில்லை.  அதன் புகைப்படங்களை கொடுத்திருக்கிறோம்.
சாத்தூர் உடுப்பி உணவகம்

அன்று (12.10.2011) காலை உணவு சாத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ள ‘உடுப்பி உணவகத்தில் சாப்பிட்டோம்.  காலை உணவு நன்றாக இருந்தது.  சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.  பரிமாறும் பாங்கும் நன்றாக இருந்தது.  அங்குள்ள கழிப்பறை நன்றாக பராமரிக்கப்படுகிறது.  (பொதுவாக உணவகங்களில் இருக்காது; இருந்தால் அதற்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்).  சாப்பிட்டு விட்டு வரும்போது பரிமாறும் ஊழியரிடமும், அங்கு இருந்த நிர்வாகியுடமும் பாராட்டும் நன்றியும் சொல்லி விட்டு வந்தோம்.
 இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய, எங்களது பதிவு சீர்திருத்தங்களுக்கு ஆலோசனைகளும், சரியான விமர்சனங்களும் கூறும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.

தமிழ் மணத்தில் ஓட்டு செய்யுங்கள்.

மிக்க நன்றி.33 கருத்துகள்:

 1. நல்ல பகிர்வு... உமறுப்புலவர் மணிமாளிகை நன்கு பராமரிக்கப்படுகிறது குறித்து மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 2. கடிகைமுத்துப் புலவரிடம் உமறு தமிழ் பயின்று புலமை பெற்றார். தம் ஆசானுக்குப் பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார்

  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. நான் சென்று பார்த்து பார்த்து ரசித்திருக்கிறேன் ஐயா..
  அருமையாக செய்வித்திருக்கிறார்கள்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. மிக நல்ல பயண பதிவு. அப்படியே நாங்களும் இடங்களை பார்த்தது போன்ற எண்ணங்கள் உண்டானது. மிகவும் நன்றி

  பதிலளிநீக்கு
 5. தூத்துக்குடி போகும் போகும் போது வழியில் எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபமும், பாரதியார் பிறந்த வீட்டையும் பார்த்தோம்.

  உமறுப்புலவர் மணிமாளிகைப் பார்க்க நேரம் இல்லை என்று பார்க்கவில்லை. மறுமுறை போகும் போது பார்க்கலாம் என்று வந்து விட்டோம்.

  உங்கள் பதிவின் மூலம் நன்றாக பார்த்து விட்டேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அழகிய படங்களுடன் பதிவு மிக அருமையாக இருக்கிறது புதிய தகவல்களை அறியமுடிந்தது.

  பதிலளிநீக்கு
 7. உமறுப்புலவர் பற்றிய தகவல்கள் அருமை.அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு ஐயா. நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 8. வித்தியாசமான, யாரும் சொல்லாத தகவல்களை அடக்கிய ஒரு பதிவு. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. உமறுப்புலவர் பற்றி சிறுவயதில் பாடத்தில் படித்திருந்தோம். இன்று மீண்டும் கண்டுகொண்டோம்.

  பதிலளிநீக்கு
 10. உமறு புலவர் பற்றிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி படங்கள் நன்று

  பதிலளிநீக்கு
 11. தாங்கள் அளித்துள்ள தகவலும், படங்களும் மிக அருமை.. ஐயா...

  பதிலளிநீக்கு
 12. நல்ல விவரங்களும் படங்களும் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 13. அருமையான பகிர்வு ஐயா.... நன்றி

  நட்புடன்,
  http://tamilvaasi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 14. அய்யா அவர்களுக்கு ,
  தங்களின் பதிவு மிகவும் நேர்த்தியாக இருந்தது.தென் தமிழகத்தின் பக்கம் உள்ள ,அரிய செய்திகளை திரட்டி பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி
  அன்புடன்
  தமிழ் விரும்பி

  பதிலளிநீக்கு
 15. போகணும்ன்னு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கும் இடங்கள்ல ஒண்ணு..

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. பகிர்வு மிக அருமை.. ஊர் சார்ந்த பிரபலங்களை சிறப்பிப்பதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. கட்டுரை நன்றாக உள்ளது. புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததா?

  பதிலளிநீக்கு
 18. படங்களும், அனுபவப் பகிர்வும் சிறப்பாக இருந்தது.

  பாரதியைப் பற்றிய அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 19. புதிய தகவல் தெரிய தந்தமைக்கு நன்றி அய்யா...!!!!

  பதிலளிநீக்கு
 20. படங்களும் செய்தியும் நன்றாக உள்ளன. நன்றி

  பதிலளிநீக்கு
 21. நல்ல தகவல் உள்ள பதிவு.. சாத்தூர் உடுப்பி ஹோட்டலில் எல்லாமே நல்லா இருக்கும் சார்.. அங்கு எப்பவும் போய் தைரியமாக சாப்பிடலாம். நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை :-)

  பதிலளிநீக்கு
 22. தாங்கள் அளித்துள்ள தகவலும், படங்களும் மிக நன்று ஐயா. பயனுடைத்து . வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 23. சீறாப்புராணம் பள்ளியில் படித்தது. மறுபடியும் நினைவிற்கு வந்துவிட்டது. எட்டயபுரத்தில் பாரதியை மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது. இன்னும் கூடுதல் விவரங்கள் மகிழ்ச்சியை தருகின்றன. பகிர்விற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 24. நல்லதோர் பயணப் பதிவு... புகைப் படங்களுடன்...

  பதிலளிநீக்கு
 25. சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்தியது உங்கள் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 26. வாய்ப்பு கிடைத்தால் இந்தப் பயணம் செல்லவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது, உங்கள் பதிவைப் படித்ததும்.

  பதிலளிநீக்கு
 27. உமறு புலவரின் புகைப்படம் கிடைத்தால் நல்லது

  பதிலளிநீக்கு