வியாழன், அக்டோபர் 20, 2011

பார்வையற்றோருக்கான வெள்ளைக்குச்சி பற்றிய பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்களின் கட்டுரை

                                                                          
இந்த கட்டுரை பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்களால்
அக்டோபர் 15’ ‘உலக வெள்ளைக்குச்சி (பாதுகாப்பு) தினம் ‘World White Cane (Safety) Day & Lions World Sight Day” – இந்த நாளை நினைவு கூறும் வகையாக எழுதப்பட்ட, பார்வையற்றோர் உபயோகிக்கும் வெள்ளைக்குச்சியைப் (White Cane) பற்றிய விபரங்கள் அடங்கிய அற்புதமான கட்டுரை.  இதை நாங்கள் வெளியிட அனுமதி கொடுத்த பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.


 அக்டோபர்..15 ,உலக வெள்ளைக் குச்சி (பாதுகாப்பு) தினம்..!  world white cane (safety) day/ lions world sight day
Increasing Awareness of the "Symbol of Independence" 
வெள்ளைக் குச்சி..!


  அக்டோபர் 15 , உலக வெள்ளைக் குச்சி தினம், 1964 லிருந்து ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறதுநம்மில் நிறைய பேருக்கு வெள்ளை குச்சி என்றாலே புரியாது, இதில் வெள்ளை குச்சி தினம் என்றால்... தலையும் புரியாது, வாலும் புரியாது .  என்னப்பா உளறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்போம். . நாம் அத்துணை மேதாவிகள்.! நண்பா, பார்வைத்திறன அற்றவர்கள், தாங்கள் நடந்தது செல்வதற்குப் பயன்படுத்தும் வெள்ளைக் குச்சியைத்தான் அதன் முக்கியத்தைக் குறிப்பிடுவதற்கான , தினம் இதுவாம். நான் கூட நிறைய தடவை இதன் பயன் பற்றி முழுதும் அறியாமல் மனதுக்குள் நினைத்திருக்கிறேன்; வியந்திருக்கிறேன். எப்படி, இந்த பார்வைத் திறன் அற்ற சகோதரர்கள், இவ்வளவு துணிச்சலாய், மக்கள் நெருக்கம் மிகுந்த வீதியி்ல் பேருந்து செல்லும்  தடத்தில்  தைரியமாய்  நடந்தது செல்கிறார்கள்.. ஏதாவது.. ஏற்பட்டால் என்ன செய்வது, என பைத்தியக்கரத்தனமாய் வியந்திருக்கிறேன்,அந்த  குச்சியின் மகிமை  அறியாமல்..!.இப்போதுதான் அந்த வெள்ளைக் குச்சியின் முழு பயனையும் அறிந்து கொள்கிறேன்பார்வைத்திறன் அற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைக் குச்சி அவர்களை ஒரு சுதந்திர மனிதராய் உலவ உதவுகிறது என்பதை இந்த நிமிடத்தில் தான் உணருகிறேன். . 
தனி மனிதராய்.. இயங்க.. வெள்ளைக் குச்சி..! 

  பார்வை திறனற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளைக்குச்சி முதல் உலகப் போரிலிருந்து பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.இந்த தினம் பார்வை திறனற்றவர்கள் பயன்படுத்தும் நீண்ட குச்சியின் முக்கியத்துக்காகவும், அது எப்படி அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உண்டாக்கி தருகிறது என்பதையும் பார்வைஉள்ள மனிதர்களுக்கு உணர்த்தும் நாள்.அது மட்டுமல்லவெள்ளைக் குச்சி பார்வைதிறனற்றவர்களை அவர்கள் யாரையும் சார்ந்திராமல், சுதந்திர மனிதராய் மாற்றிய ஒரு பெருமை மிக்க சாதனம்.
வெள்ளைக் குச்சி என்றால் என்ன?


வெள்ளைக் குச்சி என்பது, பார்வைத் திறன் அற்ற மனிதர்களால் பயன்படுத்தப் படுவதாகும். அந்த குச்சியானது, அவர்கள் யாருடைய துணையுமின்றி நடந்து, எளிதாய் இயங்கவும், மற்றவர்களை இவர்களை யார் என்று கருத்துரைத்துக் காட்டவும் பயன்படும் அற்புத சாதனம். இப்போது நவீனப் படுத்தப்பட்டுள்ள அனைத்து வெள்ளைக் குச்சிகளும் அனைத்து முக்கியாமான/அடிப்படைப் பண்புகளை பூர்த்தி செயவதாக இல்லை. ஆனால் முக்கியமாக இந்த சாதனத்தில் குறைந்த பட்சம் 5  வகைக் குச்சிகள் உண்டு. ஒன்றுக்கும் அடுத்ததிற்கும் மெலிதான வேறுபாடு உண்டு .இவை செயலாற்றும் விதத்தில். ஒவ்வொன்றும் அந்த தேவைகளை ஆற்றும்படி உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பார்வைத் திறன் அற்றோர் பயன்படுத்தும்  குச்சி அடிப்பகுதியில் சிவப்பு பட்டையுடன்உருவாக்கப் பட்டுள்ளது.   


ஆயுதத்திறன்   ..ஒரு சிறு வெள்ளைக் குச்சியில்..!
 ஒரு பார்வைத்திறன் அற்றவரை அழைத்து நீங்கள்,அவரிடம் அவரின் கையில் வெள்ளைக் குச்சியைக் கொடுத்து நடக்கச் செய்து, அந்த கருவி கையில் இருந்தபோது,ம் இல்லாதபோதும்,உள்ள வித்தியாசத்தை சொல்லச் சொன்னால், அவர்கள் அதன் அத்தியாவசியத்தேவையை நன்கு உணர்த்து பேசுவார்கள். அது அவர்களுக்கு மிக மிகத் தேவையுள்ள மிகவும் மதிப்பு பெற்ற அற்புதமான உலகை அவர்களுக்கு மட்டும்,காட்டுகிறது.  தங்களின் பாதுகாப்பை, உத்திரவாதம் செய்யும் ஓர் மந்திரக்கோல் என்றும் கூட கூறுவார்கள். அப்படி அருமையாய் உருவாக்கப் பட்டிருக்கும் ஒரு சாதனம். அது.  இந்த வெள்ளைக் குச்சியானது, அவர்களுக்கு கட்டாயத் தேவையானது. அவர்களை யாருடைய உதவியும் இன்றி தானாக இயங்கச் செய்யும் சிறந்த ஆயுதம். சுதந்திர மனிதனாய்க் காட்டும் அற்புத சாதனம்.  
எந்த பொருள்.. வெள்ளாக் குச்சியாய்..!
வெள்ளைக் குச்சி கண்ணாடி இழைகளால்/கார்பன் இழை/உலோகத்தால் உருவாக்கப் பட்டது. இந்த குச்சியை ஒரு கரத்தால் கையாள முடியும். இந்த குச்சியை பார்வைத்  திரனர்றவள் கையை வீசி ஆட்டி நடக்கும்போது அந்த வெள்ளைக் குச்சியானது தனி ஊசல் போல் இருபக்கமும் அலைபாயும். இதன் மூலம், அந்த சகோதர்கள், சாலையில் எளிதாக யாருடைய உதவியும் இன்றி நடக்க முடிகிறது. அவர்களின் தடத்தை அறிய, , அதில் உள்ள பொருள்களை அறிய, மேடு பள்ளம் கண்டறிய, மாடிப் படிகள் மற்றும் கதவுகளையெல்லாம் அந்த குச்சி அவர்களின் ஆருயிர் நண்பனாய்  அவர்களுக்கு வழி காட்டுகிறது. இந்த வெள்ளைக் குச்சி பார்வைத்திறன் அற்ற ஒருவரின் கரத்தில் அஷ்டாவதானியாக செயல்படும். உதாரணமாக, அந்தக் குச்சி,  ஒருவருக்கு திறமையை அளிக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வும், ஆளுமைத்தன்மையையும் உருவாக்கித் தருகிறது. வெள்ளைக்குச்சி  பார்வையற்றவர்களின்    சுதந்திரம் மற்றும் பெருமை/பெருமிதம் அதுவே.   அதே சமயத்தில் வெள்ளைக்குச்சியை ஒருவர் கையில் வைத்திருந்தால் அவர் பார்வைத் திறன் அற்றவர் என்று நாம் எளிதாக அடையாளம் காண முடியும்.
குச்சியின் பிறப்பு..!
  இதனைக் உருவாக்கியவர் ரிச்சர்டு ஹோவர் (Dr Richard Hoover) என்பவர்தான். இதனால் பாரம்பரியமாக இது ஹோவரின்  குச்சி என்றே அழைக்கப் படுகிறது. ஆனால் இது பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது.
  ஜேம்ஸ் பிக்ஸ் என்ற நிழற்படக்காரர் 1921 ல் , ஒரு விபத்துக்குப் பின் பார்வை இழந்துவிட்டார். அதன் பின் அவர்க்கு கூட்டத்தில்  நடப்பதும்விட்டைச் சுற்றி வருவதும் மிகுந்த சிரமமாகிறது.அதனால் அவர் பயன்படுத்திய நடை குச்சிக்கு வண்ணம் தீட்டி வைத்திருந்தார் எளிதில் அடையாளம் கொள்ளும்ப்படியில் ..!
உலகம் முழுவதும்..வெள்ளைக் குச்சி..!
 பிரான்சில், 1932 ல் குல்லி ஹேர்பேமொன்ட் ( France, Guilly d'Herbemont )தேசிய வெள்ளைக் குச்சி இயக்கம் என்ற ஒன்றினைத் துவங்கிபார்வைத் திறனற்ற மக்களுக்கெல்லாம் வெள்ளைக் குச்சி அளித்தார். . பின்னர் 1931 , பிப்ரவரி 7 ல், இவரே, பிரான்சு அரசின் அமைச்சர்கள் முன்னிலையில்  அடையாளமாக, இரண்டு வெள்ளைக் குச்சிகளை பார்வைத் திறனற்ற மனிதர்களுக்குக் கொடுத்தார். அதன் பின், முதல் உலகப் போரில் பார்வையைப் பறிகொடுத்தவர்களுக்கும், பார்வை திறனற்ற  குடிமக்களுக்கும் என 5 000, வெள்ளைக் குச்சிகள வழங்கினார். பிறகு அமெரிக்கர்களும் அரிமா சங்கத்தின் மூலம் இதனை ஒரு இயக்கமாகச் செய்தனர்.அதற்குப் பின்தான் 1964 ல் இதனை உலக வெள்ளைக் குச்சி தினம் அக்டோபர் 15 ம் நாள் கொண்டாட முடிவு செய்யப் பட்டது.இந்த குச்சியே ஐரோப்பாவில் அடியில் இரண்டு சிவப்பு பட்டை இருந்தால் அது கேட்கும் திறனற்ற வர்களையும்  இணைத்துக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது.
பார்வைத்திறனற்றோர்.. வாக்களிக்க.. வாக்குச்சீட்டு..
இப்போது2008  லிருந்து மோனிக் டெ வில்ட் ( Monique de Wilt,) உருவாக்கிய  GPS உள்ள global navigation satellite system   உள்ள வெள்ளைக் குச்சிகள்..பார்வைத்திறனற்றவர்களுக்கு பயன்படுத்தப் படுகிறது..இந்தியாவில் பார்வைத்திறனற்றோர்களை மதித்து முதன் முறையாக அவர்களுக்கும் வாக்களிக்க வசதி செய்யப் பட்டுள்ளது. எப்படி என்கிறீர்க்ளா? வருகின்ற  2011, அக்டோபர் 18ம் நாள்,   கோவாவில் இடைத் தேர்தல், நடைபெற உள்ளது. இதில்  பார்வைத் திறனற்றவர்களுக்கு பிரைலி வாக்குசீட்டுகள், வாக்களிக்கும் இடத்தில் வழங்கப்படஉள்ளன எனப்து பெருமையும், மகிழ்வையும், நெகிழ்வையும்  அளிக்கும் செய்தியாகும்..!. இந்த முறையினை மற்ற மாநிலங்களும் பின்பற்றினால்.. நமக்கெல்லாம் சந்தோஷம் தானே..!


BPA observes White Cane Safety Day



இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.

தமிழ் மணத்தில் ஓட்டு செய்யுங்கள்.

இந்த பதிவை கணினியில் ஏற்ற எனக்கு உதவி செய்த எனது தங்கை மகன் திரு அருண் ஸ்ரீ ராமுக்கு எனது மனப்பூர்வ நன்றியும் வாழ்த்துக்களும்.
மிக்க நன்றி.








36 கருத்துகள்:

  1. ஐயா இவ்வளவு காலமும் எதோ ஒரு குச்சி கண்பார்வை அற்றவர்களுக்கு உதவி செய்கிறது என்று நினய்த்து இருந்தேன் . இன்று உங்களால் வெள்ளைக்குச்சி பற்றி முழுவதுமாக அறிந்து கொண்டேன். நீங்கள் மீண்டும் மீண்டும் அருமையான தகவல்களை எங்களுக்கு அறிய தாருங்கள் . உங்களின் அருமையான பகிர்விற்கு என் சிரம் தாழ்த்திய வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
  2. வெள்ளை குச்சியின் வரலாறு இவ்வளவு இருக்கா ஆச்சிரியம்தான் :-)

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள அய்யா அவர்களுக்கு ,
    தங்களின் பதிவு அருமையான செய்தியை பகிர்ந்துள்ளது. படிக்க படிக்க ,மனதிற்கு மிக நெகிழ்ச்சியாக
    உள்ளது .தற்சமயம் ,பார்வையற்றோர் ,சாலையை கடக்கும் பொழுது ,அவர்களுக்கு உதவி புரியும்
    மனப்பான்மை குறைந்து கொண்டு வருகிறது .இது மிகவும் வருந்ததக்கது .தங்களின் பதிவு ,மனிதர்கள் மனதில் ஒரு மனிதாபிமானத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.
    அன்புடன்
    தமிழ் விரும்பி

    பதிலளிநீக்கு
  4. அனைவரும் அறிய வேண்டிய அருமையான கட்டுரை

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ரத்னவேல் - ந்ல்லதொரு இடுகை - வெள்ளைக் குச்சியினைப் பற்றி நான் படிக்கும் முதல் இடுகை. பார்வைத் திறன் அற்றவ்ர்களால் பயன் படுத்தப் படும் குச்சி என்ற அளவில் அறிவேன். அவ்வளவுதான். தகவல் பகிர்வினிற்கு நன்றி. அருண் ஸ்ரீ ராமுக்கும் நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  6. இது நான் அறிந்திராத தகவல், பகிர்வுக்கு நன்றி அய்யா....!!!!

    பதிலளிநீக்கு
  7. ...அடியில் இரண்டு சிவப்பு பட்டை இருந்தால் அது கேட்கும் திறனற்ற வர்களையும் இணைத்துக் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது....''
    பல விளக்கங்கள், பல தகவல்கள் மிக்க நன்றி. சம்பந்தப் பட்ட அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  8. வெள்ளைக்குச்சியில் இத்தனை விஷயங்களா?? உண்மையிலேயே ஆச்சர்யப்பட வைத்தது. மிகச்சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. திருமதி.சந்திரா இரவீந்திரன்வெள்ளி, அக்டோபர் 21, 2011

    பார்வையற்றவர்களை என் நடைவழிப்பாதையில் கண்டு மனமுருகியிருக்கிறேன். அவர்களின் கையில் அப்படியொரு குச்சி இருப்பதையும் கண்டிருக்கிறேன். ஆனால் அது இத்தனை நுட்பமாக அவர்களுக்கு உதவுகிறது என்ற விடயம் இப்போ இந்தக் கட்டுரை வாயிலாகத் தான் அறிகிறேன். நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு ஐயா வெள்ளைக்குச்சி பற்றிய தகவல்கள் அறிந்துகொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  11. மிக அருமையான பகிர்வு சார். மோஹனாம்மா மிகுந்த சிரத்தையோடு ஒவ்வொரு கட்டுரையும் எழுதுகிறார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. நல்லா உத்து உத்து பாக்கனும் தம்பி இப்படி ஒரு குச்சி # உனக்கு மட்டும் பாக்கத்தெரிஃஞ்சா போதுமா பாரு நல்லா பாரு /// ரைட்டுங்ன்னா

    பதிலளிநீக்கு
  13. நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  14. அருமையான இடுகை அய்யா. எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு. நிறைய விசயங்களை அறிந்துகொண்டேன். நன்றி இனிய பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  15. இந்த பதிவு எழுதிய மோகனாம்மாவுக்கு உங்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. பார்வையற்றோருக்கு உதவும் கரமாக இருக்கும், வொயிட் கேன் பற்றிய பதிவு மிக நன்று.

    பதிலளிநீக்கு
  17. வெள்ளைக்குச்சி பற்றி இது வரை தெரியாத தகவல்களைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  18. அருமையான பகிர்விற்க்கு நன்றி ஐயா

    அறிந்திராத பல தகவல்கள் அறிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  19. Shanmuganathan Swaminathan இந்த கட்டுரையை படித்த போது மேற்கத்திய நாடுகளில் பார்வையற்றோருக்கு கண்களாய் விளங்கும் 'guide dogs ' என அழைக்க படும் நாய்களை பற்றியும் பகிரலாமே என தோன்றியது. புத்திசாலி மற்றும் கீழ் படிய கூடிய தன்மை கொண்ட லேபரடார் மற்றும் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்களிளிருந்தே பெரும்பாலும் 'guide dogs ' களுக்காக குட்டிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அக்குட்டிகள் அன்பு , பொறுமை மற்றும் சமூக அக்கறை கொண்ட குழந்தைகளிடம் ஒப்படைக்க படுகின்றன. ஸ்பெஷல் வகுப்புகளில் பார்வையற்றோருக்கு வழி காட்டல் முக்கிய பாடமாக நாய்களுக்கு கற்று தர படுகிறது. ரோடு சிக்னல்களை கவனித்து பின் பற்றுவதிலிருந்து, பார்வையற்றவர்களை மெல்ல படிகளில் அழைத்து செல்வது வரை இவற்றிற்கு தெரியும். இது போக டெலிபோனை எடுப்பது, கதவை திறப்பது, காலிங் பெல்லை அழுத்துவது , பொருளை கையில் எடுத்து கொடுப்பது போன்றவற்றிலும் அற்புதமாக பயிற்சி அளிக்க படுகிறது . நாய்களுக்கு இந்த பயிற்சியை வீட்டில் தொடர்வதுடன், அவற்றை பாசத்துடன் கவனித்து கொள்ளும் குழந்தைகளுக்கு மாதம் மாதம் சன்மானமும் வழங்க படுகிறது. இதெல்லாம் சுமார் ஒன்னரை வருடங்கள் மட்டுமே. பயிற்சி முடிந்த நாய்கள் தங்கள் இனிய நண்பர்களை பிரிந்து, பார்வையற்ற புதிய எஜமானர்களுக்கு தங்கள் சேவையை தொடங்க ஒரு குறிப்பிட்ட நாள் நிர்ணயிக்க படுகிறது. அது அந்த குழந்தைகளுக்கு ஒரு சோகமான நாள் மட்டுமல்ல, ஒரு பெருமைக்குரிய நாளும் கூட. பார்வையற்ற புதிய எஜமானர்களிடம் தான் வளர்த்த நாயின் பெருமையை கூறி கை குலுக்கி விடை பெறும் போது, அந்த குட்டி சிறுவர்கள் அவர்களது மன கண்களில் விஸ்வ ரூபமாய் தெரிவார்கள.

    பதிலளிநீக்கு
  20. @Rathnavel Sir,

    அருமையான பதிவு... மனதோடு ஒட்டிய விஷயங்களும்... விவரங்களும்...

    மோகனா மேடமுக்கும் இந்த கட்டுரைக்காக நன்றி...

    பதிலளிநீக்கு
  21. வெள்ளைக்குச்சி பற்றிய வரிவான விளக்கம்1
    நன்றி ஐயா!

    த ம ஒ 8

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  22. அருமையான பதிவு. வெள்ளை குச்சி கண் பார்வையற்றவர்களுக்கு எப்படி பயன்படுகிறது என்பதை அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
    உலகில் இன்னும் கூட இவர்களை போன்ற இறைவன் குழந்தைகளுக்கு முழுமையான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்பதே எனது ஆதங்கம்.

    பதிலளிநீக்கு
  23. குறித்த கட்டுரை வெள்ளைக் குச்சியைப் பற்றி சில நல்ல பயனுள்ள விபரங்களைத் தந்தாலும் இதன் மிகப் பெரும் பகுதி வாசகனுடன் உரையாடும் வகையிலான எழுத்தோட்டத்தில் விரயமாகின்றது.

    //ஜேம்ஸ் பிக்ஸ் என்ற நிழற்படக்காரர் 1921 ல் , ஒரு விபத்துக்குப் பின் பார்வை இழந்துவிட்டார். அதன் பின் அவர்க்கு கூட்டத்தில் நடப்பதும், விட்டைச் சுற்றி வருவதும் மிகுந்த சிரமமாகிறது.அதனால் அவர் பயன்படுத்திய நடை குச்சிக்கு வண்ணம் தீட்டி வைத்திருந்தார் எளிதில் அடையாளம் கொள்ளும்ப்படியில் ..!//

    இந்தப்பகுதியை எடுத்துக் கொண்டால், குறித்த நபருக்கு பார்வை போய் விட்டது என்றும் அதனால் தன் சூழலில் நடமாடுவதற்காக நடை குச்சிக்கு வண்ணம் தீட்டினார் என்றும் கூறப்படுகின்றது. வண்ணம் தீட்டியமைக்கு காரணம் எளிதில் அடையாளம் காண்பதற்காக எனவும் கூறபட்டு உள்ளது.

    யார் அடையாளம் காண்பதற்காக?
    1) குறித்த நபர் பார்வை அற்றவர் என்பதால் வண்ணம் அவருக்கு பயன்படாது.
    2)பிறர் என்றால் அந்த வண்ணம் எவ்வாறு பயன் பட்டது என்பதற்கான விளக்கம் அந்த வசனத்தில் இல்லை.

    இது போன்ற குறைகள் இக்கட்டுரையில் இருந்தாலும் நல்ல விழிப்புணர்வை தருவதாக இருப்பதால், இது பாராட்டுக்கு உரியது.

    பதிலளிநீக்கு
  24. வெள்ளை குச்சி என்றால் என்னவென்றே தெரியாத மேதாவியாகவே நானும் இருந்தேன், உங்கள் பதிவு வாசிக்கும் வரை. மிக்க நெகிழ்வுடன் என் நன்றியை உரிதாக்குகிறேன். இந்த அறிவை எங்களால் இயன்ற அளவில் செயலாக்குகிறோம்.பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வெள்ளைக் குச்சியைப்பற்றி தெரியாத என்னைப் போன்றோருக்கு விரிவாக விளக்கிய பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்களுக்கும், இந்த பதிவை நாங்கள் படிக்க உதவிய திரு அருண் ஸ்ரீராமுக்கும், தங்களுக்கும் எனது நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  26. அருமையான பகிர்வு ஐயா, நன்றிகள். நம் சகமனிதர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு பொருளைப் பற்றிய தகவலை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் கோடி.

    பதிலளிநீக்கு
  27. பார்வையற்றவர்களுக்கு கைகொடுக்கும் வெள்ளைக் குச்சி பற்றி தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. யாரும் இது வரை அறிந்திராத ஒரு செய்தி... நல்ல ஒரு தகவல்... இது போல் மேலும் பல நல்ல தகவல்கள் இருந்தால் நிச்சயம் பகிர்வு செய்யவும் அணைவரும் பல நல்ல தகவல்கள் அறிய மிகவும் உதவும்...



    நித்யா

    பதிலளிநீக்கு
  29. நல்லதொரு செய்தி..இதுவரை இதைப்பற்றி யோசித்தது கூட கிடையாது.நன்றி

    பதிலளிநீக்கு
  30. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  31. பகிர்ந்துள்ளேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  32. சொல்கேளான் ஏ.வி.கிரி
    தேவையற்ற தகவல்களையும் செய்திகளையும் உணர்வுகளையும் பதிவு செய்யும் முகநூல் நண்பர்களுக்கு இடையில் மக்களுக்குத் தேவையான உடல் நலம் சார்ந்த மருத்துவ அறிவியல் செய்திகளை வெளியிடும் தங்கள் பணி பாராட்டத்தக்கது. தொடரட்டும் உங்களின் நற்பணி.
    வெள்ளைக் குச்சி பற்றிய உங்களின் கட்டுரை படித்து மனம் நெகிழ்ந்தேன். நம்மில் பலருக்கு பார்வையின் அருமை தெரியாது. ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு இந்த உலகைப் பார்த்தால்தான் அதன் அருமை தெரியும். தங்களின் கட்டுரையின் இறுதியில் கண் தானத்தை பற்றி விளக்கி வலியுறுத்தி வேண்டுகோள் வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  33. மதிப்புமிகு அய்யா,வணக்கம் .பார்வை இழந்த மக்கள் பயன்படுத்தும் ,குச்சி பற்றி ,பதிவு மிக மிக அருமை .;சமுதாய சிந்தனை ;பேராசிரியர்.அம்மா.அவாகளுக்கு,நன்றி .மாறுபட்ட பதிப்பு .நன்றி ,வணக்கம் அய்யா.
    அன்புடன் கருப்பசாமி.

    பதிலளிநீக்கு