புதன், ஜூன் 13, 2012

நடைப்பயிற்சி பற்றி டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களின் பதிவு


நடைப்பயிற்சி பற்றி எனது மதிப்பிற்குரிய நண்பர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் கட்டுரையை அவரது அனுமதியுடன் எனது பதிவில் வெளியிடுகிறேன்.  
Profile Picture
கவிஞர் திரு வதிரி சி ரவீந்திரனின் கவிதைத் தொகுப்பில் இருந்த நடைப்பயிற்சி பற்றிய ஒரு கவிதையை மேற்கோள் காட்டி இந்த கட்டுரையை எழுதியிருக்கிறார்.  இந்த கட்டுரையை வெளியிட அனுமதித்த டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களுக்கு எங்கள் இதயங்கனிந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.
  நட்புக்கு எல்லையில்லை.
நடைப் பயிற்சி என்பது சாதாரணமான அனைவரும் செய்யக் கூடிய பிரச்சனைகள் அற்ற  ஒரு உடற் பயிற்சியாகும். ஆனால் அதே நேரம் உடலுக்கு உச்ச நிலையில் நன்மைகளை அளிக்கக் கூடியது.

எந்த வயதினரும், எத்தகைய உடல் நிலையினரும் எந்த நேரத்திலும் செய்யக் கூடிய ஒரு இலகுவான பயிற்சி.  தெருக்களில், மைதானங்களில், கடற்கரையில், கோயில் வீதிகளில் என எங்குமே செய்யக் கூடியது.  இவை எதும் கிட்டாவிட்டால் வீட்டினுள் கூட சமாளித்துச் செய்யலாம்.  தொடர் மாடிவீடுகளின் மொட்டை மாடிகள் காற்றோட்டம் கொண்ட மற்றொரு வசதியான இடமாகும்.
அதற்குப் பயிற்சி பெற வேண்டியதில்லை, ஆசிரியர்கள் வழிகாட்டிகள் எதுவுமே வேண்டியதில்லை.  நீங்களாகவே செய்யக் கூடியது.
அத்தோடு எந்த ஆபத்தும் அற்ற பயிற்சி எனவும் சொல்லலாம்.
இதனால் உடல் நலத்திற்கு பல நன்மைகள் கிட்டுகின்றன.

·         குருதியில் உள்ள கெட்ட கொலஸ்டரோல் ஆன Lower low-density lipoprotein (LDL) னைக் குறைக்க உதவுகிறது.

·         குருதியில் உள்ள நல்ல கொலஸ்டரோல் ஆன Raise high-density lipoprotein (HDL) லை அதிகரிக்க உதவுகிறது.

·         பிரஷர் எனப்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க இது அவசியம்


·         நீரிழிவு வராமல் தடுப்பதற்கும், ஏற்கனவே நீரிழிவு இருந்தால் அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் நிறையவே பங்களிக்கிறது.

·         அதிகரித்த எடையைக் குறைக்கவும், எடை அதிகரிக்காமல் தடுக்கவும் நடைப் பயிற்சி மிகவும் நல்லது.

·         மனதில் அமைதியையும் சாந்தத்தையும் கொண்டு வரவும் உதவும்.

·         உடல் உறுதியாகவும் நலமாகவும் இருக்க இதைவிட சுலபமான பயிற்சி எதுவும் கிடையாது.

அண்மையில் வதிரி சி. ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்‘ கவிதைத் தொகுதியைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது.  இதில் ஒரு கவிதை நடத்தல் பற்றியதாகும்

தொடர்ந்து எப்படி நடப்பர் என்பதை இனிதே சொல்கிறார்.
வேறென்ன செய்வர்..தொடர்ந்து சொல்கிறார்

 கவிதை இவ்வாறு நிறைவுறுகிறது.

“..முதிர்ச்சி என்பது மனதினில் தெரியும். நடையினில் இல்லை.” என்கிறார்.
பல நல்ல கவிதைகளை இலகுவான தமிழில் வாசகனிடம் கொண்டு செல்லும் நல்ல கவிதைத் தொகுப்பாகும்.
அருமையான கவிதை.
இருந்த போதும் அக் கவிதையின் இறுதி வரியுடன் கருத்து ரீதியாக எனக்கு உடன்பாடு  இல்லை.
“நடத்தல் என்பது பயணத்தின் இறுதிப்படியே” என்கிறார்.
அல்ல.  அது நலமான உறுதியான மகிழ்ச்சியான வாழ்வுக்கான முதற்படி என்பேன்.
அதனால் தான் இப்பொழுது நடப்பவர்களில் பலர் முதியவர்கள் அல்ல. பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதினரும் இளைஞர்களும் கூட.
ஆம்.  நடைப் பயிற்சி அனைவருக்குமானது.  நலமான உடலைக் கொடுக்கும்.

இனிமையான கவிதையையும்,  இதைப் போன்ற பல கவிதைகளையும் கொடுத்த நண்பர் வதிரி சி. ரவீந்திரன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.


28 கருத்துகள்:

 1. Super!!!! useful and informative post. Thank you for sharing.

  பதிலளிநீக்கு
 2. நடத்தல் பற்றிய நல்ல நடையுடன்கூடிய கட்டுரை. ஐயாவுக்கும், டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. எனது பதிவை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. உடற்பயிற்சியில் நடைப்பயிற்சியே உன்னதம்!

  பதிலளிநீக்கு
 5. மிகவும் பயனுள்ள பதிவு.

  ந்டைப்பயிற்சி என்றதும் அதுபற்றி நான் எழுதிய ஓர் சிறுகதை தான் என் நினைவுக்கு வந்தது.

  தலைப்பு:

  “எங்கெங்கும்...
  எப்போதும்...
  என்னோடு...”

  இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/05/1-of-3.html
  http://gopu1949.blogspot.in/2011/05/2-of-3.html
  http://gopu1949.blogspot.in/2011/05/3-of-3.html

  vgk

  பதிலளிநீக்கு
 6. நடைப்பயிற்சி பற்றி டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களின்பயன் தரும் பதிவு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. மிக தேவையான பகிர்வு. உடல்நலம் கெட்ட பின் நடப்பதை விட முன்பே நடப்பது மேல் ! பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் பயன்படும் அருமையானபதிவு
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 9. மிகவும் பயனுள்ள பதிவு.... நானெல்லாம் இப்பவே (வயது 25) ஆரம்பிச்சுட்டேன் :)

  பதிலளிநீக்கு
 10. மிகவும் பயனுள்ள பகிர்வுக்கு
  நன்றிகள் பல ஐயா..

  பதிலளிநீக்கு
 11. அன்பின் ரத்னவேல் - நடைப்பயிற்சி பற்றிய சிறு கட்டுரை - ஒரு கவிதையையும் அறிமுகப் படுத்தி இருக்கிறது. உரையும் கவிதையும் நன்று. பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 12. நடைப் பயிற்சியை நல்ல நடையோடு எழுதியுள்ளீர்கள் அய்யா..
  படித்ததும் ஆர்வம் தூண்டும் செய்தி திரட்டு..
  காலையில் நடத்தல் உடலுக்கும் மனத்திற்கும் நலம் என்பதை நயத்தோடு எழுதியுள்ளீர்கள்...
  நன்றி

  பதிலளிநீக்கு
 13. மதிப்பிற்குரிய அய்யா,
  நடைப் பயிற்சி குறித்த கட்டுரையின் நடை அருமை.
  உடலுக்கும் மனதிற்கும் நலம் என்பதை உணர்த்தும் வகையில் பயனுள்ள செய்திகள்
  நன்றி அய்யா...

  பதிலளிநீக்கு
 14. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 15. 25 ஆண்டுகளாக தினமும் செய்துவருகிரேன். சோர்வு என்பதே இல்லை. என்னைப்போல் பல நண்பர்கள் அணைத்து வயதினரும் உடன் உள்ளனர்.ஓடும தண்ணியிலே பாசி இல்லையே!

  பதிலளிநீக்கு
 16. நல்ல பல செய்திகளைக் கட்டுரைகளாக தந்துவரும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  முனைவர் துரை.மணிகண்டன்
  919486265886

  பதிலளிநீக்கு
 17. Thanks for your comments sir. I will follow you.
  Balaraman.R
  (orbekv.blogspot.in)

  பதிலளிநீக்கு
 18. உங்கள் தளத்திற்கு என் முதல் வருகை...உங்கள் கட்டுரை பயனுள்ளதாக உள்ளது......

  என் தளத்திற்கும் வாங்க,உறுபினராகுங்கள்....உங்கள் கருத்தை மறக்காமல் சொல்லுங்கள்.....

  புதிய வரவு:7 வயதில் முஸ்லிம் தீவிரவாதியான சிறுவன்-(photo gallery)

  பதிலளிநீக்கு
 19. நல்ல பிரயோஜனமான பதிவு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. பெயரில்லாசனி, ஆகஸ்ட் 04, 2012

  அருமையான பதிவு. தங்களுக்கும், வைத்தியர் ஐயாவிற்கும் நல்வாழ்த்து.
  வாழ்க!.ஆரோக்கியம் வளர்க!
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 21. மிகவும் பயனுள்ள‌ பதிவு! அன்பார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 22. அன்புடையீர்,
  வணக்கம்.

  பதிவு மிகவும் அருமையாக பயனுள்ளதாக உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஓர் விருது காத்துள்ளது. தயவுசெய்து வருகைதந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

  http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 23. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களிடம் விருது பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 24. பயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. இது என்னுடைய முதல் வருகை.
  என்னுடைய தளத்தில்
  ஏணிப்படி

  தன்னம்பிக்கை

  நம்பிக்கை

  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 25. பயனுள்ள பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

  என்னுடைய தளத்தில்
  ஏணிப்படி

  தன்னம்பிக்கை

  நம்பிக்கை

  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 26. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் ஐயா..

  பதிலளிநீக்கு