செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

ஓம் - திரு ரவி நாக் அவர்களின் கட்டுரை

என் இனிய நண்பர்களே,

நீண்ட நாட்கள் கழித்து வருகிறேன்.  இடை வெளிக்கு மன்னிக்க வேண்டுகிறேன். திரு பழனி கந்தசாமி அவர்கள் ஒரு நாள் தொலைபேசியில் கூப்பிட்டு நீண்ட நாட்களாக நீங்கள் பதிவுகள் எழுதுவதில்லை, எப்போதும் முகநூலில் இருக்கிறீர்கள், குறைத்துக் கொள்ளுங்கள் என்று உரிமையுடன் எச்சரித்தார்.  திரு டி.என்.ஷண்முகம் என்னும் முகநூல் நண்பர் ஒருவரும் மிகவும் கடுமையாக எச்சரித்தார், இன்னும் தூங்கப் போகவில்லையா என்று.  மதிப்பிற்குரிய நண்பர்களே, உங்கள் கருத்துகளுக்கு தலை வணங்குகிறேன்.  இனி மேல் முகநூலில் கழிக்கும் நேரத்தை ஒரு முறைப்படுத்திக் கொள்கிறேன்.

திரு வை.கோபாலகிருஷ்ணன் என்னும் பதிவர், எனக்கு வயதில் மூத்தவர், மாமனிதர் எனக்கு இரண்டு அவார்டுகள் வழங்கி என்னை எழுத ஊக்குவித்தார்.  அவருக்கும் சொன்னேன்,  ஐயா, மன்னித்துக் கொள்ளுங்கள், நீங்கள் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி, இனி மேல் வாரத்திற்கு 2 பதிவுகள் எழுதுகிறேன் என்றேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக எனது மனைவியின் இனிய சொற்கள் கடுமையாக சாட்டையடி போன்று இருந்தது .  நீங்கள் முகநூலில் மட்டும் இருந்தால் , பதிவுலகில் காணாமல் போய் விடுவீர்கள் என்றார்.  நிஜம் தான்.

இனிமேல் வாரத்துக்கு 2  பதிவுகள் எழுதுகிறேன்.  இன்று திரு ரவி நாக் அவர்களின் 'ஓம்' என்ற கட்டுரையுடன் மீண்டும் வருகிறேன்.  அவருடைய கட்டுரையை எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாம் என்று பாசத்துடன் அனுமதித்திருக்கிறார்.  திரு ரவி நாக் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.  இவ்வளவு வேலைப்பளு இடையிலும் அற்புதமான கட்டுரைகள் எழுதும் திரு ரவி நாக் அவர்களுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துகள்.  அவரை எனது மூத்த மகனாக நினைக்கிறேன்.  வாழ்த்துகள் எனது அருமை மகன் ரவி நாக் அவர்களே.


ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?
என்னது உலகமயமாக்கபட்ட சொல்லா, இது நம்மூர் ஹிந்துக்கள் தானே உபயோகிக்கும் ஒரு தமிழ் சொல் அல்லது எனக்கு தெரிந்த வரை ஓம், அல்லது அவும் அல்லது அம் என்ற வட மொழி சொல்லின் மறுவலே இந்த ஓம் என்ற சொல் இது எப்படி உலகம் முழுவதும் என்று கேட்பவர்களுக்கான விளக்கத்தை இரண்டாம் பாராகிராஃபில் தெரிவித்துள்ளேன்





அதற்கு முன் இந்த ஓம் என்ற சொல் நம் மனித வாழ்வில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்தாலும் இதை நவீன விஞ்ஞானம்- இந்த சொல்லுக்கு ஒரு சூப்பர் பவர் என நிருபித்து உள்ளது……….ஓம் என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கப்பட்டதன் காரணம் அதற்குள் அடங்கிய பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் ஒரு நல்ல விஷயங்களுக்கான அதிர்வு தான் அந்த வார்த்தை.

ஆம் ஒரு சில கோயில்களிலும், அரண்மனைகளிலும், சில வீடுகள் மடங்கள் இந்த மாதிரி இடத்திலும் நீங்கள் காணக்கூடிய ஒரு ஸ்ரீ சக்கரம் (யந்த்ரம்) என்னவென்று பலருக்கு தெரியாது. பலர் இதை ஒரு செப்புத் தகடின் கிறுக்கல்கள் என நினைத்திருக்கலாம். ஓம் என்ற சொல்லின் உருவம் அல்லது படிவம் தான் என்று சயின்ஸ் நிருபித்துள்ளது.

ஆம் ஹான்ஸ் ஜென்னி என்னும் விஞ்ஞானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர்தான் ஒலியின் பரிமாணத்தை நம் பார்வைக்கு கொண்டுவந்தவர். இவர் கண்டுபிடித்த சாதனம் தான் டோனோஸ்கோப் (Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி. இந்த டோனோஸ்கோப்பில் ஓம் என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை .காண முடியும் அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். நீங்களும் உச்சரித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்திருப்பதை அதுவும் பல ஆயிரகணக்கான ஆண்டுகளூக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமாணம் இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இதன் அர்த்தத்தை உணர்ந்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை.

சரி நம் ஓம் சொல்லுக்கு வருவோம்

ஒம் பல மொழிகளின் பிரணவ மந்திரமாக, வடிவ, உருவ அளவில் வேறுபட்டாலும் இதன் ஒலி ஓங்கார நாதமாக ஒன்றாக இணைந்த அளவில் உள்ளது. ஒம் என்ற தமிழ் சொல்லிற்கு ஒ = அ + உ + ம் (அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்).

இதை பிராமண சொல் என்று கூறுபவர்களுக்கு,  இந்த ஓம் வடிவம் சட்டைமுனி சூத்திரத்தில் – ” ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு ” என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார். ஓ என்ற சொல் தாழ்ந்தும் ம் என்ற சொல் நீண்டும் இருந்தால் ஒருவித ஒலி அதிர்வுகள் கிடைக்கும். அது போக ஒ என்ற வார்த்தை உச்சரிக்கும் போது மூச்சை உள்ளே இழுத்து ம் என்றும் கூறும் போது எல்லா வாயுவையும் வெளியே அனுப்பும் இன்னொரு சான்றோரின் மூச்சு பயிற்சியின் சீக்ரெட்.


அது போக ஓ என்று ஜெபிக்கையில்,  நினைத்த நல்ல விஷயத்தை/உருவத்தை/விரும்பும் கடவுளை நிலை நிறுத்தினால்,  ம் என்று கூறும்போது அது அப்படியே அந்த அதிர்வலை நம்மை சுற்றி சூழ்ந்து கொண்டு நல்லது நடக்கும் என உறுதியாகிறது. அது போக ஓம் என்ற ஒலியை நாம் கேட்கும் போது சயின்டிஃபிக்காய் கெட்ட விஷயங்கள் தோன்றுவது தடைப்படும்.  நிறைய குழப்பங்கள் இருக்கும் போது இந்த ஓம் ஒலி அதிர்வின் எல்லையில் நாம் இருந்தால் நம் மனதும் தெளிவு பெறும் என்பது தெளிவாகிறது.

பகவத் கீதை ஒரு கற்பனை கதை அல்லது அது கிருஷ்ணனின் அவதாரத்தை குறிக்கும் ஒரு வரலாற்று உண்மை என கூறுபவர்களுக்கு,  இதோ கீதையில் கூட ஓம் என்ற வார்த்தை வருகிறது பாருங்கள்,  கீதை – 8 – 13 “எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்.
 ஓம் என்ற சொல் ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.

ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன. இவை மூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை, இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.


சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதி கூட தன் மனைவிக்கும் குடும்பத்தாருக்கும் கடிதம் எழுதும் போது ஓம் என்று முதலில் எழுதி தான் இந்த கடிதத்தை எழுதவே ஆரம்பிப்பானாம்.  இதை விட இதை 108  தடவை உச்சரிக்கும் ஒரு விஷயமும் அறிவியல் பூர்வ உண்மையை பல ஆண்டுகளுக்கு முன் கணித்த நம் மாமுனிவர்களின் விளக்கமும் சில ஆண்டுகளுக்கு முன் வான் வெளி ஆராய்ச்சி உண்மையும் ஒன்று தான்.

அதாவது சூரியன், சந்திரனின் சராசரி டயாமீட்டர்களின் அளவு தான் பூமியின் தூரம். இது 0.5% சூரியனுக்கும் 2.0% சந்திரனுக்கும் என்ற சமீபத்திய புள்ளிய தூர விவரம் பல்லாயிர ஆண்டு இந்தியர்களின் அறிவை மெச்சுகின்றன.

ஓம் என்ற வார்த்தை பிராமணர்களின் சொல், அல்லது வட மொழி சொல், அல்லது இது ஆர்யர்களின் சொல் என்று சிலர் கூறலாம். இது உண்மையல்ல. பிரபஞ்சம் எப்படி கடவுளின் வடிவமைப்போ அது போலத்தான் இந்த ஓம் என்ற சொல்லும். சிந்து வெளி நாகரிகம் என்ன என்பது நம் எல்லோருக்கு தெரிந்ததே, பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அருமையாக கட்டப்பட்ட கட்டிடங்கள், நவீன மாட மாளிகைகள், பிரமாண்டமான வேலைப்பாடுகள் நிறைந்த நவீன கட்டமைப்பை கொண்டு வந்தவர்கள் தான் இந்த சிந்து வெளி சமூகம்.

இந்த சிந்து வழி சமூகத்தின் செங்கல்களில் கூட இந்த ஓம் என்ற சொல் இருந்ததாக தொல் பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது பல நாடுகளில், பல மாதிரி கூறினாலும் இதன் வலிமையை உணர்ந்த முதல் ஐரோப்பிய மனிதன் ஹிட்லர் தான். சிந்து நதிக்கரையில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களைக்  கொண்ட உலக பெருமைகள் கொண்ட நாடென்றால் அது இந்தியா என்னும் மாபெரும் நாடுதான்.


உலகத்தின் ஒவ்வொரு ஆளும் கண்களுக்கு, இந்தியா தான் டார்க்கெட். அது பிரிட்டிஷ் ஆகட்டும், போர்ச்சூகீஸ் ஆகட்டும், பிரஞ்சு ஆகட்டும், ஜப்பானியர்கள் ஆகட்டும், மொகலாயர்கள் ஆகட்டும் இந்தியாவின் மீது கொண்ட ஆசை இங்கிருந்த கலாச்சாரம், விலை மதிப்பில்லா பொருட்கள் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். அதன்படி பார்த்தால் ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னமும் இந்த ஓம் என்ற சொல்லின் தழுவல் தான். இது ஹிட்லர் உபயோகிக்கும் முன் இந்துக்கள் இப்படி இருக்க காரணம், அவர்களிடம் உள்ள முதல் மந்திரமான ஓம் என்ற எழுத்துதான் என மேடிசன் கிரான்ட் என்பவரின் நூலே (தி பாஸிங் ஆஃப் கிரேட் ரேஸ்)  இதற்கு சான்று.

அதை நிலை நிறுத்தி ஹிட்லரின் மூளையாக செயல் பட்ட ஹென்ரிச் மூலரும் இதை கூறியுள்ளார். இதை விட அவர் கூறிய வார்த்தைகள் தான் மிகுந்த ஆச்சரியத்தில் உண்டாக்கியது. அது அவர் எப்படி யூத இனத்தை அழிக்க ஹிட்லர் கமான்டை நான் உபயோகித்தேன் என்றால், ஒரு கையில் பகவத் கீதை மற்றும் ஹிட்லர் வார்த்தை, கிருஷண பகவான் அர்ஜுனனுக்கு எப்படி ஒரு சத்திய வாக்கோ அதே தான் என்னுடைய பணியும், அது போல ஹிட்லரை நான் 11ஆவது கிருஷ்ண அவதாரமாக காண்கிறேன் என்று அவர் மட்டுமல்ல, மேக்ஸ்னியானி போர்ட்டஸ் எனற பிரஞ்சு பெண் (பின்பு தன்னை சாவித்ரி தேவி என்று மாற்றி கொண்டவர்) கூட கூறுகிறார்.

இதற்கு மேலே இதை பற்றி நாம் பேசினால் பவர்ஃபுல் ஆர்யர்கள் நாங்கதான் என்ற குரல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒலிக்க இதற்கு போட்டி இருந்தது- இருக்கிறது.

ஓம் என்ற வார்த்தை, ஒரு காலத்தில் நல்லது நினைத்து தியானம் கொண்ட முனிவர்களுக்கும், கெட்டது நினைத்து தவம் கொண்ட சில அரக்கர்களுக்கும்,  உருவான ஒரு காமன் லேங்குவேஜ்  இந்த ஒம்.

ஓம் என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாதவர்கள், அவர்கள் மனதுக்குள்  தியானம், யோகா, உடற்பயிற்சி செய்யும் போது கூட இதை ஃபாலோ பண்ணினாலே  நிறைய மாறுதல்கள் உண்டாகும் என சவுன்ட் ஆஃப் ஹீலீங் கோட்பாடுபடி இது மரணத்தை கூட தள்ளி வைக்கும் ஒரு அற்புத செயல் என ஜொனாதன் கோல்ட்மேன் என்ற அமெரிக்க டாக்டர் கூறுகிறார்.
 ஓம் ஓம் ஓம்…………. நன்றியுடன் ரவி நாகராஜன் …..
என் இனிய நண்பர்களே, இந்த பதிவை படித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.  மீண்டும் அடுத்து ஒரு நல்ல பதிவில் சந்திப்போம்.
மிக்க நன்றி.







14 கருத்துகள்:

  1. ஓம் என்ற மந்திரத்தில் இவ்வளவு விசயங்களா! என ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு விசயங்கள். பகிர்ந்துகொண்ட் ஐயாவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. இரண்டு மாதத்திற்குப்பின் வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஓம் என்ற சொல்லுக்கு ஒரு அதீத சக்தி உண்டு என, விவேகானந்தரின் ஜனதீபம் நூலில் படித்த நியாபகம். கட்டுரை அருமை, ரவி அண்ணாவுக்கும், பகிர்ந்த உங்களுக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு
  4. நீண்ட நாட்களுக்குப் பின் சிறப்பான பகிர்வுடன் தொடக்கி உள்ளீர்கள்... நன்றி ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. இனிய காலையில் ஓம் என்ற மந்திரத்திற்கு இவ்வளவு விளக்கங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி ! நன்றியுடன்,அன்பு வாழ்த்துக்கள் ! இனிய காலை வணக்கம் !முகநூல் நண்பர்கள் கூட்டம் எப்படி இருந்தது உங்கள் வீட்டில் ?
    இரா.சி.பழநியப்பன்.

    பதிலளிநீக்கு
  6. Dear Sir, Your concept about 'Om' is really very good. I enjoyed this.

    Yours
    T. Ramadass

    பதிலளிநீக்கு
  7. அய்யா,

    ஓம் குறித்த தெளிவான விளக்கம். தங்கள் நண்பர்கள் கூறியதுபோல் முகநூலைவிட பதிவுகள் அதிகம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  8. விருதுகள் இரண்டையும் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு நன்றிகள், ஐயா.

    ஓம் பற்றிய தங்களின் விளக்கப்பதிவு நன்றாக இருக்கும் போலத் தோன்றுகிறது.

    ஆனால் என்னால் அதனைப் படிக்க முடியவில்லை.

    எழுத்தின் அளவும், High Light செய்து காட்டியுள்ள கலரும் என்னால் என் கணினியில் படிக்கவே முடியாதபடி உள்ளன. என் கண் கோளாறா அல்லது கணினி கோளாறா அல்லது தாங்கள் வெளியிட்டுள்ள எழுத்துருவில் கோளாறா என எனக்குப்புரியவும் இல்லை.

    இது தங்கள் தகவலுக்காக மட்டும்.

    அன்புடன்
    VGK

    பதிலளிநீக்கு
  9. அன்புடன் வணக்கம்
    பதிவு சரிவர படிக்க முடியவில்லை கொஞ்சம் தெளிவாக பதிவிட்டிருக்கலாம் நன்றி..
    ஹிட்லர் உபயோகித்த ஸ்வஸ்தி சின்னம் நமதி பாரத தேசத்தில் இருந்து எடுக்க பட்டதே!!! நமது சமய சாஸ்திரங்களில்
    சமஸ்க்ரித்த மொழிகளில் எழுதப்பட்ட ஓலை சுவடிகல் இன்னமும் அவர்களிடம் உள்ளது ஸ்வஸ்திக் சின்னம் =பஞ்ச பூதங்களில் நெருப்பின் சின்னம் ...அனால்.ஹிட்லர் உபயோகித்தது தலை கீழாக .!!!!ஆகவேதான் அழிவை சந்தித்தான் ...ஏர் உழவன கலப்பை குறுக்காக வைத்தது போல் அமையபெற வேண்டும்.!!!.இடப்புறம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் (தற்போது மக்கள் அனைவரும் மாற்றியே வரைகிறார்கள்.. ) .. நடப்பது எல்லாம் சிவன் செயலே

    பதிலளிநீக்கு