வெள்ளி, செப்டம்பர் 21, 2012

மதுரை சந்திப்பு


7.9.2012 எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நாள்.  அன்று காலை எங்கள் மூத்த மகன் திரு விஜயவேல் – திருமதி தில்லை நிவேதா தம்பதியினருக்கு 2வது பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வந்த்து.  தாயும் சேயும் நலம் எனவும் தகவல் கொடுத்தார்கள்.  எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அன்று காலை ரயிலில் மதுரை சென்று எங்கள் புதிய பேத்தியை பார்ப்பதற்காக கிளம்பினோம். மதுரை ரயில் நிலையத்திலிருந்து வடமலையான் மருத்துவமனைக்கு எப்படி செல்வதென எங்கள் பாசமகள் திருமதி தீபா நாகராணி அவர்களிடம் முந்தைய நாள் போனில் கேட்டுக் கொண்டோம். அவரும் அவர்கள் வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.  நேரம் இருந்தால் வருகிறோம் என்றோம்.

மதுரை ரயில் நிலையத்தில் காலை சுமார் 11 மணியளவில் வந்து சேர்ந்தோம்.  ரயிலில் வந்து மதுரைக்குள் செல்வது இது தான் முதல் தடவை.  மாலை ரயிலில் திரும்புவதென்று முடிவெடுத்தோம்.  திரும்புவதற்கு பயணச்சீட்டு வாங்குவதற்கு என் மனைவி வரிசையில் நின்றார்கள்; (பெண்கள் வரிசையில் கூட்டம் குறைச்சலாக இருந்தது) எப்படியும் 20 நிமிடங்கள் ஆகும் என்பதால் நான் வெளியே நிலவரம் எப்படி இருக்கிறதென பார்த்து வரலாம் என வெளியே சென்றேன்.

ஊருக்குள் செல்லும் பேருந்து எங்கிருந்து கிளம்புகிறது, ஆட்டோ நிலையம் எங்கிருக்கிறது என்று பார்க்க சென்றேன்.  ரயில் நிலையத்தில் ஒரு அருமையான ‘குப்பைத்தொட்டிக்கான விளம்பரம் இருந்த்து; அதை கீழே கொடுத்திருக்கிறேன். 



அதில் வரைந்தவர் V.ராதா என இருந்தது.  எனக்கு திரு வன்னித்தங்கம் ராதா எனும் முகநூல் நண்பரின் தகவல்கள் படித்த ஞாபகம் வந்தது.  ரயிலில் குழுவாக பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்ய விபரம் கேட்டு ஒரு நிலைத்தகவலுக்கு முழு விபரங்கள் கொடுத்திருந்தார்; கைபேசி எண்ணும் கொடுத்திருந்தார்.  அவர் ரயில்வேயில் இருக்கிறார் என தெரியும். மதுரையில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை.

எனவே வரைந்தது அவர் தானா என தெரிந்து கொள்வோம் என அவரிடம் பேசினேன்.  எங்கள் அதிர்ஷ்டம் அவர் மதுரை ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தலைமை நிலையத்தில் இருக்கிறேன் என்று சொன்னார்.  பார்க்க வருகிறேன் என்று சொன்னார்; நாங்கள் மாலை வரும்போது சந்திக்கிறோம் என்று சொன்னோம்.
கைபேசி எண்ணும்  கொடுத்திருந்தார்.  அவர் ரயில்வேயில் இருக்கிறார் என தெரியும். மதுரையில் தான் இருக்கிறாரா என தெரியவில்லை.


எனவே வரைந்தது அவர் தானா என தெரிந்து கொள்வோம் என அவரிடம் பேசினேன்.  எங்கள் அதிர்ஷ்டம் அவர் மதுரை ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தலைமை நிலையத்தில் இருக்கிறேன் என்று சொன்னார்.  பார்க்க வருகிறேன் என்று சொன்னார்; நாங்கள் மாலை வரும்போது சந்திக்கிறோம் என்று சொன்னோம்.

அங்கிருந்து ஆட்டோவில் கிளம்பினோம்.  வடமலையான் மருத்துவமனை சென்றோம்.  எங்கள் மருமகளையும், புதிய வரவான பேத்தியையும் பார்த்தோம்.  இருவரும் நன்றாக இருந்தார்கள்.  எங்களுக்கு மகிழ்ச்சி.  எங்கள் மூத்த மகனும் சிறிது நேரத்தில் வந்தார்.  நாங்கள் திருமதி தீபா நாகராணி வீட்டுக்கு சென்று ஊருக்கு திரும்புகிறோம் என்று சொல்லி கிளம்பினோம்.  எங்கள் மகளிடம் எப்படி வருவதென என்று வழி கேட்டோம்.  ஆட்டோவில் கிளம்பினோம்.  எங்கள் மகன் விஜயவேல் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார்.  அவர்கள் வீட்டருகில் கொண்டு வந்து விட்டு திரும்பிச் சென்றார். 

தீபா நாகராணி அவர்கள் வாசலில் இருந்து எங்களை அழைத்துச் சென்றார்; எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  தொலைபேசியிலும், கணினியிலும் பேசிக் கொண்டிருந்தவர்களை நேரில் பார்ப்பதால். 
 அவர்கள் அவரது பெற்றோரை அறிமுகப்படுத்தினார்கள்.  எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
தீபா நாகராணி  வீட்டுக்கு சென்று ஊருக்கு திரும்புகிறோம் என்று சொல்லி கிளம்பினோம்.  எங்கள் மகளிடம் எப்படி வருவதென என்று வழி கேட்டோம்.  ஆட்டோவில் கிளம்பினோம்.  எங்கள் மகன் விஜயவேல் காரில் கொண்டு வந்து விடுகிறேன் என்று எங்களை அழைத்துச் சென்றார்.  அவர்கள் வீட்டருகில் கொண்டு வந்து விட்டு திரும்பிச் சென்றார். 


அவர்கள் புத்தக சந்தையில் வாங்கியிருந்த புத்தகங்களை காண்பித்தார்கள்.  எனக்கு புத்தகங்களைப் பார்த்தவுடன் மட்டற்ற மகிழ்ச்சி.  நான் அவர்களிடம் சொன்ன அறிவுரை – புத்தகங்களை இரவலாக யாரிடமும் கொடுக்காதீர்கள், இனாமாக கொடுப்பதனால் கொடுங்கள், இரவலாக கொடுத்தால் மறந்து விடும், திரும்பி வராவிட்டால் நட்பு கெடும் என்று.  வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் அருமை (good collection of books, good purchase).   வாங்கிய புத்தகங்களை ஒவ்வொன்றாக படியுங்கள் என்று சொன்னேன்; அதிலிருந்து நல்ல செய்திகளை – பதிவாகவும், முகநூலிலும் பகிரும்படி கேட்டுக் கொண்டேன்.  அவ்வளவையும் படித்து முடிக்க அவர்களுக்கு 5 வருடங்கள் ஆகும்.  நிறைய வாங்கியிருக்கிறார்கள்.

ஊர் திரும்புவதற்கு விடை பெற்று கிளம்பினோம்.  அவர்கள் அருகிலிருந்த ஆட்டோ ஒன்றை ஏற்பாடு செய்தார்கள்.  கிளம்புமுன் படம் எடுத்துக் கொண்டோம்.  நாங்கள் அவர்கள் வீட்டு முன்னால் இருப்பது போன்ற படம்.  எனது பாசமகள் காமிராவின் பின்னால் இருக்கிறார்கள்.  நாங்கள் அனைவரும் சேர்ந்து எடுக்க வசதியில்லை; ஆள் இல்லை.  இது தான் அந்தப் படம்.


ரயில் நிலையம் வந்தோம்.  திரு வன்னி தங்கம் ராதா அவர்களுக்கு பேசினோம்.  8வது நடைமேடை அருகில் இருக்கிறோம் என்று சொன்னோம்.  நாங்கள் காத்திருந்தோம்.  நாங்கள் 30 வயதிற்குள் உள்ள இளைஞரை எதிர்பார்த்தோம். 50 வயதுகளில் உள்ள இருவர் வந்தனர்.  திரு வன்னிதங்கம் ராதா அவர்களும், திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்களும் வந்தார்கள்.  எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.


திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்களைப் பற்றி –

எனக்கு முகநூலில் நிறைய நண்பர்கள் இருப்பதால் தினம் அவர்கள் சுவற்றில் போய் செய்திகளை பார்க்க முடிவதில்லை; எனவே எனது நண்பர்களை நான் கேட்டுக் கொள்வது, மிக முக்கியமான செய்தியென்றால் எனது in box க்கு செய்தியாக அனுப்புங்கள் என்று.
இன்னொரு வழி, நான் காலை கணினிக்கு முன் வரும் போது அன்று யார் யாருக்கு பிறந்த நாள் என்று பார்ப்பது, அவர்களுக்கு பிறந்த நாள் செய்திகள் அனுப்புவது, தொடர்பில் இருப்பவர்கள் என்றால் அவர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து சொல்வது, அவர்களது பக்கத்தில் சென்று பார்ப்பது என்று.  அப்படி பார்க்கும் போது திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்கள் கவிஞர் என்று பார்த்தேன், 3.9.2012 அன்று அவரது புத்தகத்தில் படத்தைப் போட்டு, மதுரை நண்பர் என்று போட்டு வாழ்த்து செய்தி போட்டிருந்தேன்.  செய்தி போட்டு 4 நாட்களுக்குள் அந்த நண்பரை பார்த்த்து மிக்க மகிழ்ச்சி.  எதிர்பாராத சந்திப்பு.


திரு முகமது ஆதம் பீர் ஒலி அவர்கள் அவரது கவிதை புத்தகம் 15.9.2012 கோவையில் வெளியீடு இருப்பதாக சொன்னார்கள், விழாவுக்கு அழைத்தார்கள்.  மகிழ்ச்சி தெரிவித்தேன்.

திரு வன்னி தங்கம் ராதா அவர்கள் நல்ல ஓவியர், நல்ல திறமையிருக்கிறது.  செய்தியை ஓவியத்தில் இணைக்கும் திறமை இருக்கிறது.  அலுவலகப் பணிகளுக்கு இடையிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் மிகவும் அருமை.  நன்கு பயன்படுத்துகிறார்.  வாழ்த்துகள்.
திரு வன்னி தங்கம் ராதா அவர்களிடம் அவரது முகப்பு படத்தை மாற்றும்படி யோசனை சொன்னேன்.  ஒரு இனிய மாலைப் பொழுது. 


அவர்களை எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் வருகை தரும்படி அழைத்தேன்.  அவர்களை அவர்களது குடும்பத்துடன் எங்கள் விருந்தினராக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் செய்ய அன்புடன் எதிர்பார்க்கிறோம்.
நண்பர்கள் இருவரும் ரயில்வேயில் நல்ல உயர்பதவியில் இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடனும், அவர்கள் நட்பு கிடைத்த்தை மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.

பின்பு அன்று மாலை ரயிலில் திரும்பினோம்.  நல்ல கூட்டம்.  பெண்களும், மாணவ, மாணவிகளும் ஏறிக் கொண்டேயிருக்கிறார்கள்.  சிரமம் தான்.  வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கூட்டம் இருக்கும் என்கிறார்கள்.  தினமும் பயணம் செய்பவர்கள் பாடு சிரமம் தான்.

ரயில் திருப்பரங்குன்றத்தில் நிற்கும் போது எடுத்த படம்.  மலை பிரமிப்பாக இருக்கிறது. 



நன்றி நண்பர்களே.








20 கருத்துகள்:

  1. அருமை.
    பகிர்வுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. good share....

    oru phone seithirukkalaame... naamum santhikka vaaippaaga irunthirukkume aiyaa....

    பதிலளிநீக்கு
  3. புதிய வாரிசைப்பார்த்து புளகாங்கிதம் அடைந்து, முகநூல் நட்புக்களையும் சந்தித்து வந்த மகிழ்ச்சியில்,தங்கள் வயது இரண்டு குறைந்ததுபோல் உள்ளது அய்யா.மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் பிரயாண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிற்க்காக மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. ரயில் பயணம், அருமையான விளக்கம்..

    பதிலளிநீக்கு
  6. மதுரை சந்திப்பு ... நன்றாக இருக்கிறது அப்பா.
    ரயிலில் ஏறியதில் இருந்து மதுரை வந்து, பின், ஊர் செல்வது வரை தொகுத்து இருக்கிறீர்கள்.
    அன்று நிகழ்ந்த அனைத்து விசயங்களையும், ஒன்று விடாமல் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு, மீண்டும், நீங்களும், அம்மாவும், வீட்டின் உள்ளே அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
    ரயில்வே ஸ்டேஷனின், உள்ளே நுழையும் யாரும் தவற விட முடியாத படி, முக்கியமான, இடத்திலயே இந்த குப்பைத்தொட்டி படம் இருக்கும். இன்று தான், அதை வரைந்தவரையும் தெரிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி.
    இன்னும், இன்னும், நீங்கள் இருவரும் அடிக்கடி பிரயாணம் செய்து, பல இடங்களுக்கு சென்று வருவதற்கான, நீண்ட ஆரோக்கியம், நிம்மதியான வாழ்வு நீடிக்க பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமை சார். நாங்களும் உங்கள் கூடவே பயணம் செய்தது போல் இருந்தது. வன்னி தங்கம் ராதா அவர்களுக்கும், பீர் அவர்களுக்கும் தீபா ராணிக்கும் வாழ்த்துக்கள்.:)

    பதிலளிநீக்கு
  8. இனிய பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  9. ஐயா.. தங்களின் நட்பு வட்டம் விரியட்டும். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  10. அய்யா தங்கள் மதுரை பயணக் கட்டுரை அருமையாக அமைந்துள்ளது. பல்வேறு வகையான செய்திகள் படங்களுடன் ஒரு இதழிலியாளர் தொகுத்தது போல் கோர்வையாக படித்து பரவசம் அடையும் படி உள்ளது நன்றி எல்லாம் உங்களது ஆசிகள் வாழ்த்துகள் நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  11. அய்யா, தங்களது மதுரை பயணக் கட்டுரை அருமையாக உள்ளது. பல்வேறு செய்திகள் பொருத்தமான படங்களுடன் ஒரு இதழியலாளருக்கான நேர்த்தியுடன் வெளியீட்டுள்ளீர்கள். படித்து பரவசமடைந்தோம். மிக்க நன்றி. எல்லாம் உங்களது ஆசிர்வாதங்கள் வாழ்த்துகள். மிக்க நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  12. felt very happy when read your expressions....the photographs very nice...thanks madam and sir for the kind remembrance.

    பதிலளிநீக்கு
  13. ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்து எழுதியதற்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துகள்.

    இனிய அனுபவங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. அன்பின் ரத்னவேல் - அழகான அருமையான சுற்றுல பற்றிய கட்டுரை. பேத்தியினைப் பார்க்கச் சென்று - மருத்துவ மனை - மகனின் வீடு - முகநூல் நண்பர்களைக் காண புகைவண்டி நிலையம் - என அனைத்து இடங்களூக்கும் சென்றூ அனைவரையும் கண்டு மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு - கட்டுரையைத் தந்தமை நன்று. பேத்தி உட்பட அனைவருக்கும் நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  16. மிக மகிழ்வாக உள்ளது தங்கள் பயண விவரம் அறிந்து .தெரிந்தவர்களைச் சந்திப்பது மிக மகிழ்வு தானே. பயணம், ஆரோக்கியம் பெருகட்டும். இறையருள் கிட்டட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  17. நண்பரின் பதிவு அருமை.எங்களின் சந்திப்பை காட்ச்சிப்படுத்திய விதம் மிகவும் சிறப்பாக உள்ளது. நண்பர் ராதா ஓவியம் கண்டு முகநூலில் பழகிய நிணைவு கொண்டு உடனே பாராட்ட வேண்டும் என்று உணர்வுடன் அழைத்து பேசியதும் பின் அந்த சந்திப்பு நிகழ்வை குறிப்பிடும் போது உடன் வந்த நபரையும் நிணைவு கூர்ந்து பதிவிட்ட விதமும் இவர்களின் உண்மையான அன்பையும் நேசத்தையும் பிரதிபலிக்கிறது.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு