சனி, செப்டம்பர் 22, 2012

வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident Fund & Family Pension Scheme)


இனிய நண்பர்களே,
வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident  Fund & Family Pension Scheme) பற்றிய சில தகவல்களை, எனது மனக்குமுறல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த ஒரு திட்டம் தான் ‘தனியார் தொழிலில்’ உள்ள தொழிலாளர்களுக்கு கொஞ்சம் பயனளிக்கும் திட்டம்.  அதாவது = Something is better than Nothing.  அவ்வளவு தான் வேறொன்றுமில்லை
நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் உங்கள் சம்பளத்தில் ரூ.6500க்குத் தான் வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படும்.  தொழிலாளர் 12% செலுத்த வேண்டும், நிர்வாகம் 12% செலுத்தும்.  இந்த ரூ.6500க்குத் தான் உங்களுக்கு ஓய்வூதியம் கணக்கிடப்படும்.  தொடர்ச்சியாக 10 வருட பணிக்காலம் (Service Period) இருக்க வேண்டும்உங்களது 50ஆவது வயதில் ஓய்வூதியம் மனுச் செய்து பெறலாம்அது Short Service Pension எனப்படும்.  58வது வயதில் மனுச் செய்து பெறலாம்அது அவர்கள் கணக்கீடு படி கிடைக்கும்.
இது எங்கள் தீப்பெட்டித் தொழில் போல் உள்ளவர்களுக்கு, உழைப்பும் குறைவாக இருக்கும், ஊதியமும் குறைவாக இருக்கும்.  இவர்கள் கணக்குப் பார்த்து ஏதோ பிச்சை போடுவது போல் போட்டு தருவார்கள்.
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 ஆக நிர்ணயம் செய்யப் போவதாக இரண்டு வருடங்களாக செய்தி வந்து கொண்டேயிருக்கிறது.  அந்த கூட்டத்தில் இந்த பிரச்னை எடுக்கப் படவில்லை; பேச்சு வார்த்தை முறிந்து விட்டது போல, ஏதாவது ஒரு செய்தி; இதெல்லாம் கண் துடைப்பு.
நான் கேட்கிறேன், அரசு கவிழ்வது போல் இருக்கும் நிலைமை, பாராளுமன்றத்தில் கத்தி கூச்சல் போட்டுக் கொண்டிருப்பார்கள், சட்ட சபையில் வெளி நடப்பு செய்வார்கள் – எதற்காக? மக்கள் பிரச்னைக்காக.  ஆனால் இவர்களுக்கு – சம்பளம் கூட்ட வேண்டும், ஓய்வூதியம் உயர்த்த வேண்டும், ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், மற்ற அமைச்சர்களுக்கு ஏதாவது விசேஷ சலுகைகள் வழங்க வேண்டும் – என்றால் இவர்கள் ஒற்றுமையாகி 5 நிமிடங்களில் சட்டத்தை நிறைவேற்றி அவர்களுக்கு வேண்டியதை பெறுகிறார்கள்.
இங்கு 100, 200 ஓய்வூதியம் வாங்கும் தொழிலாளர்கள் நிறைய செத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு செய்தி படித்தேன், முதியவர்களில் 500 ரூபாய்க்கு குறையாமல் (மிகவும் குறைந்த பட்சம்) மருந்து மாத்திரை செலவு இருக்கிறதென.
எனவே, அரசியல் வாதிகளே, அதிகாரிகளே, குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 என பேசிக் கொண்டிருக்கிறீர்களே, அதையாவது தொழிலாளர்கள் சாகுமுன் கொடுங்கள்.  உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.
நன்றி.


10 கருத்துகள்:



  1. Madasamy Shanmugaswami
    சார் தொழிலாளர் வைப்புநிதியில் இருந்து கொடுக்கும் பென்சன் மிகவும் குறைந்தது முதலில் சட்டம் 6500 இக்கு தான் போட்டார்கள். பின்னர் அதை விரிவு படுத்தவும் செய்து விட்டார்கள். முதலாளி போடும் பன்னிரண்டு சதவீதத்தில் 8 .33 சதவீதம் பென்சனுக்காக எடுத்துக் கொள்வார்கள் இப்போது சட்ட திருத்தம் 8 .66 சதவீதம் எடுத்துக் கொள்கிறார்கள். இதன் ஆரம்பகலகட்டம் என்பது 1972il குடும்பபென்சனின் விரிவாக்கம்தான். இது. 1995 இது சட்டம் ஆக்கப்பட்டது. தொளில்லாலர்களின் தோழர்களும் இதற்க்கு ஆதரவு தந்து சட்டவடிவம் ஆக்கப்பட்டது. சட்டம் போட்டபின் சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்தார்கள். இன்னும் நிலுவையில் உள்ளது. சட்டம் தெரிந்த நீதிபதிகளே இத்தனை காலம் கடத்தி வருகிறார்கள். சட்டம் போட்டபின் ஒவ்வொரு வருடமும் அந்த பொறுப்பில் உள்ள வர்கள் கூடி அதனை அதிகப்படுத்தவேண்டும் என்று முடிவுகள் தீர்மானங்கள் உள்ளது. அடுத்து வந்த மூன்று வருடங்களில் முறையே ஐந்து, நன்கு, நன்கு சதவீதங்கள் கூட்டப்பட்டது. அது பஞ்சப்படியோடு இணைக்கப்படவில்லை. அதன் பின் எந்த அறிவிப்பும் இல்லை. அவர்கள் முறையாக அறிவித்து இருந்தால் அதிகபட்சம் கிடைத்து இருக்கும். இன்னும் இதன்பேரில் போராடுகிறேன் பேர்வழி என்று அரசியல் கட்சிகள் பம்மாத்து செய்து கொண்டு இருக்கிறது

    எனக்கு மதம் இரண்டாயிரம் ரூபாய் பென்சனுக்காக பிடித்தம் செய்கிறார்கள் எனக்கு எதிர்வரும் மதத்தில் கிடைக்கும் பென்சன் இரண்டாயிரமாக இருக்கலாம் என்று ஒரு அனுமானம் கிடைக்காது என்று தெரிகிறது. முதியோர் பென்சன் குறைந்தது ஆயிரம் வாங்குகிறார்கள். அனால் நீண்ட நாட்கள் இவர்களுக்கு பாடுபட்ட பணத்தை கொடுத்துவிட்டு பென்சனும் குறைவாக வாங்குகிறோம். இதில் யாருக்கும் வருத்தம் இல்லை. நான் பென்சனுக்காக போட்டதொகை வங்கிகளில் போட்டு இருந்தால் இப்போதுமதாம் இருபதயிரத்திர்க்குமேல் வரும். சட்டம் நம்மை கட்டிபோட்டு உள்ளது. ஏழை சொல் அம்பலம் ஏறாது. அரசியல் வாதிகள் தங்களுக்கு சம்பளம் உயர்த்திக் கொள்ள முடிகிறது. தொழிலாளர்களை பற்றி சிந்திக்க நாதி இல்லை. யாரிடம் போய் சொல்வத்வது. இன்று நாம் எல்லோரும் போர்குணத்தை மழுங்க அடித்துக் கொண்டோம். போராட வக்கில்லை. சமரசம் செய்துகொண்டு இருந்து விடுகிறோம். கம்முனிச தொழிற்சங்கங்கள் இதைப்பற்றி பேசுவதே இல்லை. சும்மா ஹர்த்தால் பந்த் என்று நாடகமாடி வருகிறது.

    கம்முனிச கட்சிகள் அரசுக்கு ஆதரவு தரும்போதே இவர்களுக்கு இதை செய்யவேண்டும் என்று கேட்பது இல்லை. இவர்களும் முதலாளிகளிடம் இருந்து பணம் வாங்குகிறார்கள் எப்படி அவர்கள் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் பதிவு ,வருங்கால வைப்பு நிதி தரும் நிறுவனங்களுக்கு ஒரு வழிக்காட்டுதலாக அமையும் என்று எதிர்பார்கிறேன் .
    மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பான அரசியல்வாதிகளே அறிவான உச்சநீதிமன்ற நீதிபதிகளே மத்தியில் ஆளும் பிரதமர் மற்றும் அமைச்சர் பெருமக்களே மனிதாபிமானம் உள்ள மனிதர்களே குடும்ப பென்சன் என்றால் ஒரு தொழிலாளி அவர் மனைவி அவர்கள் இருவரும் மூன்று வேளை உணவுமட்டும் சாப்பிடுவதற்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு செலவாகும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் ஆனால் மூன்று வேளை டீ சாப்பிடத்தான் பென்சன் தொகை வழங்கப்படுகிறது என்பதே வேதனையான உண்மை அதே சமயம் எந்த முதலீடும் தராத முதியோர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய்தநது காக்கும் அரசுகள் தொழிலாளி தன் வாழ்நாளில் சம்பாதித்த பணத்தின் ஒரு பகுதியைபிடித்து வைத்துக்கொண்டு பென்சன் தருவதாக ஏதோ ஒரு தொகையை தருவது என்ன நியாயம் என்பதை மாண்புள்ளவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் நாங்கள் மூன்று வேளை சாப்பிட்டு உயிர்வாழ்வற்காகவாவது அடிப்படை ஓய்வூதியம் வழங்குங்கள் உழைத்து உழைத்து ஓடாய்ப்போன தொழிலாளி முதுமையிலாவது நிம்மதியாய் வாழவிடுங்கள் அய்யா எங்கள் குடும்பம் மூன்றுவேளை சாப்பிட மட்டும் வழிவகை செய்யுங்கள் மற்ற செலவுகளுக்கு எங்கள் சுண்டிப்போன ரத்தத்தின்.மிச்சமிருக்கும் வியர்வையைச்சிந்தி சம்பாதித்துக்கொள்கிறோம்.நியாயமான ஓய்வூதியம் தாருங்கள் தொழிலாளி சமூகத்தை வாழவிடுங்கள் என்பதே என் பணிவான வேண்டுகோள்.நன்றி.ஜி.வரதராஜ் கோவை.

      நீக்கு
  3. அருமை நண்பர் மாடசாமி சண்முக சாமி அவர்களே! மே.வங்கம்,கேரளா,திரிபுரா மாநிலங்களில் அணு உலைகள் வரவில்லை.வராது.இந்த மானிலங்களில்சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வராது.இடது சரிகள் பலமாக இருக்கும் இடத்தில் மக்கள் நலன் பாதுகாகப்படும் வாய்ப்பு உண்டு. பிரதமர் பதவி தேடிவந்த பொது ஏற்காதவர்கள் இடதுசாரிகள். தேர்தல் நிதியாக டாடா கொடுத்த 50 லட்சம் காசோலையை திருப்பி அனுப்பியவர்கள் இடது சாரிகள்.வாய் புளித்ததோ மாங்காய் .புளித்ததோ என்று பெசுவது சரியல்ல என்று கருதுகிறேன்.---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  4. சரியா சொன்னீங்க .
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பலருக்கு இது உதவட்டும். மிக்க நன்றி ஐயா.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  6. குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.1000 என பேசிக் கொண்டிருக்கிறீர்களே, அதையாவது தொழிலாளர்கள் சாகுமுன் கொடுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.

    பதிலளிநீக்கு