ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் திருவண்ணாமலை கோவில் இருக்கிறது. அதன் அருகில் (சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில்) பெரிய மலை ஒன்று உயரமாக கம்பீரமாக இருக்கிறது. நீங்கள் மதுரையிலிருந்து வரும்போது கிருஷ்ணன்கோவில் தாண்டினால் ஒப்பிட்டு பார்க்க வசதியாக இருக்கும். திருவண்ணாமலை சிறிய மலையாகவும், இந்த மலை உயரமாகவும் இருக்கும்.
தரகுமலை மாதா கோவில் தோன்றிய வரலாறு:
1973 வருட வாக்கில் தரகுமலையில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையன்களுக்கு மலை உச்சியில் மாதா காட்சியளித்ததாக செய்தி பரவியது. நாளேடுகளிலும், பார்வையாளர்கள் (கேரளாவிலிருந்து நிறைய) வருகையினாலும் இந்த ஸ்தலம் பிரபலமாக்கப்பட்டது.
முதலில் ஏசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்ட சிலை மட்டும் ஒரு பீடத்தில் நிறுவப்பட்டது. பாதைகள் கிடையாது. அப்போது நான் உயர ஏறிச் சென்று பார்த்திருக்கிறேன். பிறகு மாதா சிலை நிறுவப்பட்டிருக்கலாம். மாதாவுக்கு உகந்த நாள் சனிக்கிழமை என்று சொன்னார்கள். மக்கள் திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை செல்வது வழக்கம். அங்கு முன்பு செல்வதற்கு சைக்கிளில் தான் செல்ல வேண்டும்.
நான் இந்த பதிவு எழுதுவதற்கு காரணம் - எனது இனிய நண்பர் கென்யா ராகவன் (மதுரைக்காரர் - எங்கள் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேல் தீராக் காதல் கொண்டவர் - ஸ்ரீ வில்லிபுத்தூரைப் பற்றி நிறைய கதைகள் எழுதியிருக்கிறார். பதிவுலகில் இருக்கிறார். முக நூலில் எனக்கு நண்பர் - நிறைய தடவைகள் என்னுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அவர் தம்பி இங்கு இருக்கிறார். ) எங்களது நரிப்பாறை பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தை பாருங்கள். நான் எழுதிய பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களில் என்னை மிகவும் நெகிழ வைத்த பின்னூட்டம் இது
அன்பு ரத்னவேல் அவர்களுக்கு,
மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது... எத்தனை நாளாச்சு தாய் தகப்பனைப் பாத்து, மனைவி குழந்தைகளை பாத்துன்னு ஒரு ஏக்கம் வருமே அது மாதிரி இருந்தது. அந்த பெரியவர்களின் பெயர்கள் வினோதமாயும் அழகாயும் இருந்தது... மதுரைன்னு பேர் பரவலாக புழங்குவது போல, ஸ்ரீவில்லிபுத்தூர்னு ஒரு பேரோ அல்லது பிள்ளையார் என்ற பேரோ நான் கேள்விப்பட்டதே இல்லை...
அந்த மேற்குத் தொடர்ச்சி மலை, ஆகாசத்துக்கே பாலூட்டுவது போன்ற அதன் திறந்த மாரும், அதன் கீழே தென்னைமரங்களும், திருநாமலையில் இருந்தாலும் தெளிவாய் தெரியும்... நரிப்பாறையின் தொன்மை போலவே அதில் இருக்கும் அந்த பழுத்த பெரியவரின் முகமும். ரொம்பவும் முன்னால் போயிருக்கிறேன்... நரிப்பாறைக்கு, ஆனால் நீங்கள் சொன்னது போல இத்தனை சிறுதெய்வங்களை பார்த்தது இல்லை... அல்லது ஞாபகம் இல்லை... தரகுமலை வேதக்கோயில் பற்றித் தெரியும் ஆனால் போக வாய்த்ததில்லை இது வரை... நீங்க போயிட்டு வாங்க! நாங்களும் போயிட்டு வர்றோம்... பதிவினூடே...
அன்புடன்
ராகவன்
1 ஆகஸ்ட், 2011 6:27 pm
http://koodalkoothan.blogspot.com/
இந்த பதிவை திரு ராகவன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவரது புகைப்படமும் கொடுத்திருக்கிறேன். அவரது தளத்திற்கான இணைப்பும் கொடுத்திருக்கிறேன்.
தளத்தின் பெயர் ராகவன்
நாங்கள் நரிப்பாறையிலிருந்து கிளம்பும் போதே கேமரா பேட்டரி முழுவதும் சக்தி இழந்து விட்டது. அதற்குப் பிறகு எடுத்த படங்கள் எல்லாம் செல் போன் வழியே எடுத்த படங்கள் தான். அதனால் இந்த கோவிலுக்கான வலைத்தளத்திலிருந்தும் சில படங்களை எடுத்திருக்கிறோம்.
கோவிலின் வலைத்தள முகவரி.
www.tharagumalaishrine.com
வரும் வழியில் சித்தர் பீடம் என்று ஒரு இடம் இருந்தது. வெளியிலிருந்து புகைப்படம் எடுத்திருக்கிறோம். விபரங்கள் தெரியவில்லை. பின்பு மாதாமலைக்கு வந்தோம். திருவண்ணாமலையிலிருந்து சித்தர்பீடம் வழியாக மாதாமலை முடிய அருமையான தார் சாலை போடப்பட்டிருக்கிறது. இது தற்போது தான் போடப் பட்டிருக்கும். அந்த புகைப்படங்களை கீழே கொடுத்திருக்கிறோம்.
ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து சித்தர்பீடத்திற்கு திருவண்ணாமலை வழியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை மினிபஸ் இருக்கிறது. அரசாங்க நகர் பேருந்தும் இருக்கிறது. அது எத்தனை தடவை வருகிறது என்ற விபரம் தெரியவில்லை. ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ஆட்டோ வசதி இருக்கிறது. திருவண்ணாமலை அடிவாரத்திலும் ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கிறது. எனவே போக்குவரத்துக்கு பிரச்னை இல்லை.
இங்கு கடைகள் எதுவும் இல்லை. எனவே உங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், நொறுக்குத்தீனிகளை அங்கிருந்தே கொண்டு வந்து விடுவது நல்லது. பாலிதீன் உபயோகிக்காதீர்கள்.
மலைக்கு உயரே செல்லும் வழி, இடையிலுள்ள சிறு சிறு ஆலயங்கள், உயரே உள்ள ஆலயங்கள், மலையிலிருந்து திருவண்ணாமலை காட்சி, நகர்ப்புற காட்சி அனைத்தையும் கீழே கொடுத்திருக்கிறோம்.
www.tharagumalaishrine.com
திருவிழா ஒன்று நடைபெற இருக்கிறது. அந்த அழைப்பிதழை ஸ்கேன் செய்து இத்துடன் கொடுத்திருக்கிறோம். தமிழிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் அச்சடிக்கப் பட்டிருக்கிறது.
போக்குவரத்து:
ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து சித்தர்பீடத்திற்கு திருவண்ணாமலை வழியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை மினிபஸ் இருக்கிறது. அரசாங்க நகர் பேருந்தும் இருக்கிறது. அது எத்தனை தடவை வருகிறது என்ற விபரம் தெரியவில்லை. ஸ்ரீ வில்லிபுத்தூரிலிருந்து ஆட்டோ வசதி இருக்கிறது. திருவண்ணாமலை அடிவாரத்திலும் ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கிறது. எனவே போக்குவரத்துக்கு பிரச்னை இல்லை.
மலை நல்ல உயரம். எனவே வயதானவர்கள் உயரே செல்ல முயற்சி செய்து சிரமப்படாதீர்கள். ஒரு பெண்மணி இறங்க முடியாமல் வழியில் இருக்கும் படத்தை பாருங்கள்.
இங்கு கடைகள் எதுவும் இல்லை. எனவே உங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், நொறுக்குத்தீனிகளை அங்கிருந்தே கொண்டு வந்து விடுவது நல்லது. பாலிதீன் உபயோகிக்காதீர்கள்.
மலைக்கு உயரே செல்லும் வழி, இடையிலுள்ள சிறு சிறு ஆலயங்கள், உயரே உள்ள ஆலயங்கள், மலையிலிருந்து திருவண்ணாமலை காட்சி, நகர்ப்புற காட்சி அனைத்தையும் கீழே கொடுத்திருக்கிறோம்.
இந்த தொகுப்பில் எங்களது பேரன் தீபன் சக்ரவர்த்தியின் படங்களையும் தொகுத்திருக்கிறோம். இந்த பதிவிற்காக புகைப்படங்கள் எடுத்த எனது தங்கை மகன்கள் - அருண் ஸ்ரீராம், அசோக் குமார் (இரட்டையர்கள்) - அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.
இந்த பதிவை கணினியில் ஏற்ற, இந்த பதிவு மேம்பாட்டிற்காக ஆலோசனைகள் சொல்லும் திருமதி ரமாமணி அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.
எங்களது அணியினரை திறம்பட நடத்திச் சென்ற எனது மனைவி திருமதி உமாகாந்திக்கு மனப்பூர்வ வாழ்த்துக்களும் நன்றியும்.
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை - நிறை குறை - பின்னூட்டத்தில் எழுதுங்கள். எங்களை சீர்திருத்திக் கொள்ள உதவும். உங்களது பெயரை Followers Widget இல் பதிந்து கொள்ளுங்கள். தமிழ் மணத்தில் ஓட்டு போடுங்கள்.
உங்களது மின்னஞ்சல் முகவரியை அந்த கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் அடுத்தடுத்து பதிவு போடும்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கே வந்து விடும்.
மிக்க நன்றி.








































