வெள்ளி, நவம்பர் 25, 2011

இருதய நோய் (மாரடைப்பு) – ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை


திரு ரவி நாக் அவர்கள் எனது முக நூல் நண்பர்.  இருதய நோய் பற்றிய ஒரு அற்புதமான கட்டுரை எழுதியிருக்கிறார்.  முன் பரிசோதனை செய்வதற்காக ஒரு மென்பொருள் (software)  தயார் செய்திருக்கிறார்.  அந்த மென்பொருள் பரிசோதனை செய்யப்பட்டு மிக சிறப்பாக கனடா நாட்டில் செயல் பட்டு வருகிறது.  அந்த மென்பொருளை நமது மக்களுக்கு பயன்பாட்டிற்கு தர தயாராக இருக்கிறார்.  அவரது நல்முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.
நான் கடந்த 10.11.2010 அன்று காலை ஏழே கால் மணி அளவில் செய்தித்தாள்கள் படித்து கொண்டிருந்தேன்.  இடது  தோளில் வலி இருந்து முன் கை வரை பரவியது.  உடல் முழுக்க வேர்த்த்து.  உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனை சென்று ஊசி போட்டு இ.சி.ஜி. எடுத்தோம்.  அந்த மருத்துவர் உடனடியாக இருதய மருத்துவ மனைக்கு செல்ல சொன்னார்.  நாங்கள் எங்களது குடும்ப மருத்துவரும் இருதய மருத்துவருமான டாக்டர் திரு கே.காமராஜ். எம்.டி. சிவகாசி அவர்களை பார்க்க சென்றோம்.  காலை ஒன்பதே கால் மணிக்கு சிவகாசி சென்று விட்டோம்.  (அந்த இரண்டு மணி நேரங்கள் – Golden Hours).  அவரது சிகிச்சையால் என்னை பிழைக்க வைத்து விட்டார்.  நான் இன்று உங்கள் முன்னே இருக்கிறேன்.
திரு ரவி நாக் அவர்களின் கட்டுரை இதை தான் பெரிதும் விளக்குகிறது.  திரு ரவி நாக் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும்,  மனமார்ந்த வாழ்த்துகளும்.  அவரது சேவை பெரிதும் பெருகட்டும். 

வணக்கம் - இந்த ஒர் நாளுக்காக இரண்டு வருடம் காத்திருந்தேன். ஆம்  மாரடைப்பு எனும் ஒரு கொடிய நோய் முன்பெல்லாம் பணக்காரர்களின் நோயாக இருந்து,  இப்போது ஏழை பணக்காரன்,  ஜாதி, மதம், சின்னவர், பெரியவர் என பாகுபாடின்றி இனறளவில் விஸ்வரூபமாய் இருக்கும் ஹார்ட் அட்டாக் எனும் அழையா விருந்தாளி தான். ஆம் ஹார்ட் அட்டாக் 87% சதவிகித மக்களுக்கு எப்பொழுது  வரும் என தெரியவே தெரியாது. முக்கால்வாசி பேர் ஹார்ட் அட்டாக் சிம்ப்டம்ஸ் (அறிகுறிகள்) கொஞ்சமும் தெரியாமல் சிலர் கை வலி,  சிலருக்கு வாயுத் தொல்லை எனவும்,  சில பேர் உஷ்ணத்தால் வியர்க்குது என நினைத்து ஹார்ட் அட்டாக்கில் மரணிப்பது ஒரு தினம் தோறும் நடக்கும் நிகழ்ச்சி. 13% சதவிகித மக்கள் தூக்கத்திலேயே என்ன நடக்குது என தெரியாமல் இறந்து போகின்றனர். சிலர் மட்டும் அதை சரியாக கவனித்து சரியான நேரத்தில் மருத்துவமனை செல்வதால் அந்த "கோல்டன் ஹவர்ஸ்" எனும் நேரத்திற்குள் அவர்கள் காப்பாற்றப்பட்டு செகண்ட் அட்டாக்,  மூன்றாவுது , நான்காவது அட்டாக் வரை தாங்குகின்றனர்.  ஹார்ட் அட்டாக் தவறான உணவு பழக்க வழக்கம்,  உடற்பயிற்சியின்மை,  அதிக பருமன் ஆட்களுக்கு மட்டும் தான் வரும் என கூறுவது தவறு. சிலருக்கு வம்சா வழி பிரச்சினைகள்,  சில ஷாக்கிங் செய்திகள்,  அதிக ஸ்ட்ரெஸ் எனப்படும் ஒரு நவீன பிரச்சினை மூலமாகவும் இந்த ஹார்ட் அட்டாக் வருவதுண்டு. ஒரு காலத்தில் ஹார்ட் அட்டாக்,  பைபாஸ் சர்ஜரி,  ஆஞ்ஜியோ பிளாஸ்ட்,  ஸ்டென்ட்,  வால்வு ரீபிளேஸ்மென்ட்,  ஃபேஸ்மேக்கர் எல்லாம் ஏதோ அன்னிய சக்திகள் மாதிரி கேட்ட நாம் இதை இப்பொழுது ஒரு டிரென்டாகி போனாலும் ஒரு தடவை அட்டாக் வந்தவர்கள் மிகவும் பாதுகாப்பாகி அதன் சிந்தனையுடன் தன்னை பேணி காக்கின்றனர். இது ஒரு உலக அளவில் பேசப்படும் ஒரு விஷயம். இந்தியாவில் இந்த நோய் விழிப்புணர்வு மிகவும் மோசம். இதில் பிழைப்பவர்களை விட இறப்பவர்கள் தான் மிக அதிகம். ஆம் இந்த நோய்க்கு காரணம் நாம் இதை பற்றி முதல் அட்டாக் வரும் வரை நாம் அதை பற்றி கவலைப் படுவதில்லை.   ஆம் 25 வயதுக்கு மேல் எல்லா ஆண் பெண்ணும் கண்டிப்பாக வருடத்திற்க்கு ஒரு முறை பிளட் டெஸ்ட் செய்து அதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது - LDL Bad Cholestrol - கெட்ட கொலஸ்ட்ரால்,  Triglycerides - டிரைகிளைசிரய்ட்ஸ்,  Diabates - I - II டயாபட்டீஸ் மற்றும் Blood Pressure -  ரத்த கொதிப்பு.  இது நான்கும்  தெரிந்தால் ஒரளவுக்கு உங்களுக்கு ஹார்ட் அட்டாக் பற்றி அதன் தாக்கம் உங்களுக்கு இருக்கிறதா என்று டாக்டரின் உதவியோடு தெரிய வரும். இதை நாம் ஏனோ செய்வதில்லை அதற்கு மாறாக ஒரு அட்டாக் வந்த பிறகு அந்த குடும்பம் படும் அவஸ்தை சொல்லி தெரிவதில்லை.

கனடா போன்ற நாடுகள் அந்த நாட்டில் வசிக்கும் அனைவருக்கு இலவச மருத்துவம் அளிக்கிறது.  அந்த வகையில் அவர்கள் 2006 முதல் பிரவென்டிவ் மெடிசன் (Preventive Medicine)  எனும் ஒரு விஷயத்திற்கு நிறைய செலவு செய்து அதன் மூலம் வரும் நோய்களை முன்பே அதை பற்றி தெரிய வைத்து அதன் அவார்னஸ் (விழிப்புணர்வு) பற்றி நன்கு எடுத்துரைத்து மற்றும் அதற்கு எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என  கூறுவதால் வரும் முன் நோய் காக்கும் திட்டம் நன்கு பிரபலம்.  இதற்காக என்னை 2009 ஆம் ஆண்டு சி எம் ஏ எனப்படும் கனடியன் மெடிக்கல் அசோசியேஷன் ஒரு மென்பொருளை செய்ய ஆர்டர் கொடுத்தது. ஆம் இந்த சாப்ட்வேர் மிகவும் எளிமையானது. இதை வைத்து இரன்டு நிமிடத்தில் நமக்கு எப்பொழுது ஹார்ட் அட்டாக் வரும் எந்த சதவிகிதம் நம்க்கு சான்ஸ் இருக்கிறது என தெரியப்படுத்தும்.  இதை சுமார் 600 மருத்துவமனையில் டச் ஸ்கிரீன் கியாஸ்க் எனும் தொடு கணினி மூலம் மக்களே அறியும் வகையில் உருவாக்கப் பட்டது. என்னுடைய ஹெல்த்கேர் (Health Care) டிவிஷன் இந்த பொறுப்பை ஏற்று சுமார் 3  மாதத்திற்குள் செய்து சமர்ப்பித்தது. இதில் டெஸ்ட் செய்யப்பட்ட 100 பேரில் 96.7 பேருக்கு சரியான ரிஸல்ட் வந்தது தான் என்னுடைய சக்ஸஸ்.  இதை நானும் என்னுடைய டீமும் செய்ய உறுதுனையாக இருந்த இன்னொரு முக்கிய பங்கு யுனிவர்ஸிட்டி ஆஃப் நாட்டிங்காம் - University of Nottingham.   இது செய்து கொடுத்த போதே இது நம்ம ஊருக்கு கொண்டு சேர்த்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.  ஆனால் இரண்டு வருட எக்ஸ்குலிஸ்வ் கான்டிராக்ட் (Exclusive Contract)  மற்றும் என் டி ஏ (NDA - Non Disclosure Agreement) காரணம் தான். இது இன்றோடு இரண்டு வருடம் முடிவதால் இன்றிலிருந்து  நான் யாருக்கும் ஷேர் செய்யலாம். இது பேஸிக் வர்ஷன் தான்.   இதன் அட்வான்ஸ் வெர்ஷன் சீக்கிரம் வெளியிடுவேன். மற்றும் இதை இலவசமாக நீங்கள் உபயோகப் படுத்த ஒரு பெர்மிஷனும் தேவை இல்லை. இதை உங்கள் கிளினிக்குகோ அல்லது மருத்துவமனைக்கோ பயன்படுத்த என்னிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.  இதன் காப்புரிமை (PATENT) என் பெயரிலும் என்னுடைய கம்பெனியான "இன்ஸைட் ஹெல்த்கேர்" - Insight Healthcare மற்றும் "இன்ஸைட் குளோபல் குருப் - அமெரிக்கா" Insight Global Group - USA, " நாம்ட் - நார்த் அமெரிக்கன் மெடிக்கல் டெக்னாலஜி" - NAMT - North American Medical Technologies - Canada க்கு சொந்தமானது. இதை வியாபார ரீதியாக பயன்ப்டுத்த மற்றும் இதன் லைசன்ஸை உங்கள் மருத்துவமனை இனையதளத்தில் யூஸ் பண்ண கண்டிப்பாக அனுமதி தேவை.

இன்றே நீங்கள்  மற்றும் உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் நண்பர்கள் எல்லோரும் இதை ஃப்ரீயாக டெஸ்ட் செய்து ஹார்ட் அட்டாக்கில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது ஒரு அறிவியல் ஆய்வு தான் இது மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்று வழி இல்லை. 

நீங்கள்  முப்பதிலிருந்து நாற்பது வயதிற்குள் 8% அல்லது அதுக்கு மேல் வந்தால் நீங்கள் உடனே உங்கள் ஃபேமிலி டாக்டர் அல்ல்து கார்டியோ ஸ்பெஸலிஸ்டிடம் உடனே செல்லுங்கள்.   அட்வான்ஸ் வெர்ஸனில் மட்டுமே எந்த வயதில் உங்களுக்கு வரும் என தெரியவரும். அதை சீக்கிரம் அப்லோடு செய்கிறேன்.

இதற்காக இரண்டு நாட்டின் செர்வர்களில் லோட் செய்துள்ளேன் -

USA - www.asknagravi.com/heart
Canada - www.namt.ca/heart

Very Soon I am developing this i-phone app and android app also to check without Internet. YOu may lod this in your clinics and Hospitals without internet after obtaining a LEGAL permission from me.

Thanks & Regards - Nag Ravi on 23rd November 2011.

Copyright © 2009-11 Insight Global / NAMT / Ravi Nagarajan. ALL RIGHTS RESERVED.

Materials on this web site are protected by copyright law. This software is developed with a formula from University of Nottingham - UK with proper license and copyright protected. Access to the materials on this web site for the sole purpose of personal educational and research use only. Where appropriate a single print out of a reasonable proportion of these materials may be made for personal education, research and private study. Materials should not be further copied, photocopied or reproduced, or distributed in electronic form. Any unauthorised use or distribution for commercial purposes is expressly forbidden. Any other unauthorised use or distribution of the materials may constitute an infringement of Insight Health Care's or it's inventor Ravi Nagarajan copyright and may lead to legal action.

For avoidance of doubt, any use of this site as a web service to obtain a Insight Health Care's Cardio Forecast®  for any purpose is expressly forbidden. Similarly, use of this website for developing or testing software of any sort is forbidden unless permission has been explicitly granted.

Insight Health Care - A Division of Insight Global Group
இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.

30 கருத்துகள்:

 1. மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி நண்பரே.

  maharaja

  பதிலளிநீக்கு
 2. உபயோகமான தகவலுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 3. மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி சிறப்பான தகவல் பகிர்வுக்கு.

  இந்தியாவில் எந்தெந்த மருத்துவ மனைகளில் இந்த வசதி உள்ளது என தெரிய படுத்தவும்,ஐயா.

  பதிலளிநீக்கு
 4. மிக தேவையான பகிர்வு நன்றி சார்

  பதிலளிநீக்கு
 5. அன்பு திரு ரத்னவேல் ஐயா, தங்களுக்கு இடர் வந்தது குறித்து மிக வருத்தம் அடைந்தேன். தாங்கள் உடல் நலம் அடைந்ததும் நிம்மதி யாக இருக்கிறது. நீங்கள் கொடுத்து இருக்கும் விவரம் மேலும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
  பத்ரமாக இருங்கள்.

  பதிலளிநீக்கு
 6. ஐயா இப்போ உடம்பு பரவாயில்லையா? நல்ல தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. மிக வித்யாசமான, அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.

  பதிலளிநீக்கு
 8. திரு ரவி நாக் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும், மனமார்ந்த வாழ்த்துகளும். அவரது சேவை பெரிதும் பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
 9. மிகவும் பயனுள்ள பகிர்வு.

  பதிலளிநீக்கு
 10. பயனுள்ள தகவல்கள்.
  பகிர்வுக்கு நன்றி .
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. மிகவும் பயனுள்ள பதிவு
  பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 12. பதிவுக்கு நன்றி.
  உங்கள் நலம் குறித்து பெருமகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 13. ஐயா,
  திரு ரவி நாக் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகளும், மனமார்ந்த வாழ்த்துகளும்.
  ஐயா, தங்களுக்கு இடர் வந்தது குறித்து மிக வருத்தம் அடைந்தேன். தாங்கள் உடல் நலம் அடைந்ததும் நிம்மதி யாக இருக்கிறது. மிகவும் பயனுள்ள,மிக வித்யாசமான,மிக தேவையான பகிர்வு,..நன்றி

  பதிலளிநீக்கு
 14. நல்தோர் விழிபுணர்வுபதிவு பாரட்டுக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 15. அய்யா, உங்க உடம்புக்கு இப்போ பரவாயில்லையா...?

  பதிலளிநீக்கு
 16. மக்களுக்கு மிகவும் உபகாரமான தகவல் அய்யா, பகிர்வுக்கு மிக்க நன்றி...!!

  பதிலளிநீக்கு
 17. வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க

  சமுதாய சிற்பிகள் நம்முடன் - பெருமைகொள் வலையுலகே-பலே பிரபு

  பதிலளிநீக்கு
 18. ஐயா ... உங்கள் உடல்நலமின்மை மனதிற்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. உரிய நேரத்தில் நீங்கள் கொண்ட சிகிச்சை நல்ல ஆறுதலைத் தந்தது. எல்லாம் சரியாகி விடும். உங்கள் அனுபவங்கள் மற்றவர்களுக்கு நிச்சயம் பயன்படும்...

  பதிலளிநீக்கு
 19. இரண்டு கிழமை இடைவேளையின் பின் மறுபடி தொடர்கிறேன் நல்ல பயனான இடுகை . சம்பந்தப் பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 20. பயனுள்ள பகிர்வு.

  அந்த இரண்டு மணி நேரங்கள் – Golden Hours). அவரது சிகிச்சையால் என்னை பிழைக்க வைத்து விட்டார். நான் இன்று உங்கள் முன்னே இருக்கிறேன்.

  கடவுளுக்கு நன்றி.
  இப்போது நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி சார்.

  பதிலளிநீக்கு
 21. அன்புள்ள அய்யா அவர்களுக்கு ,
  வணக்கம் .தங்களின் இந்த பகிர்வு மிகவும் பயனுள்ள ஒன்று .மக்களுக்கு இன்று வரை விழிப்புணர்வு வரவில்லை .இன்றைய நவீன நாகரிகப்படி ,கொழுப்ப்பு பதார்த்தங்களை உண்டு விட்டு ,அதற்குப்பின் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் உள்ளனர் .இதுபோன்ற ஆய்வு கட்டுரைகளை தெள்ள தெளிவாக தாங்கள்
  தர வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன் .
  அன்புடன்,
  தமிழ் விரும்பி

  பதிலளிநீக்கு
 22. விழிப்புணர்ச்சி பதிவிற்கு நன்றி ஐயா. இருதய நோய் தாக்குதலில் இருந்து தாங்கள் மீண்டதற்கு ஆண்டவனுக்கும், உடன் இருந்து சரியான நேரத்தில் கவனித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அக்கறை உள்ள பதிவிற்கும் நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 23. http://siragu.com/?p=1364

  அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல் மருத்துவ பல்கலை கழகத்தில் இதய தொற்றுக்கும் பல் தொற்றுக்கும் நேரடி தொடர்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஈறுகளின் நோய்க்கும் பாதகமான பேருகாலத்திர்க்கும், பக்கவாதம், மாரடைப்பு நோய்க்கும் நேரடி தொடர்புள்ளது பற்றியும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

  பதிலளிநீக்கு
 24. Very good post

  http://mahibritto.blogspot.in/2016/03/blog-post_96.html

  பதிலளிநீக்கு