சனி, ஜூலை 09, 2011


ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் திருவிழா

 எங்கள் ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஒரு வித்தியாசம்.  எல்லா ஊரிலும் அழகர் மட்டும் ஆற்றில் இறங்குவார்.
எங்கள் ஊரில் ஸ்ரீ ஆண்டாள் பிரதானம்.  எனவே ஸ்ரீ ஆண்டாளும் கூடவே ஸ்ரீ ரெங்க மன்னாரும் ஆற்றில் இறங்குவார்கள். இந்த வருடம் சித்திரா பௌர்ணமி (18.4.2011) அன்று நடந்த திருவிழாவை புகைப்படங்களுடன் தொகுத்தளிக்கிறோம்
அன்று காலையில் பதினோரு மணிக்கு மேல் ஸ்ரீ ஆண்டாளும் ரெங்கமன்னாரும் ஆற்றில் இறங்குவார்கள் என்று சொன்னார்கள்.



நாங்கள் காலை பத்து மணிக்கும் விழா நடக்கும் பகுதிக்கு வந்து விட்டோம்.ஒரு அம்மா மட்டும் சிறிய மண்பானை, அடுப்பு வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். முன்பு நிறைய பேர் இந்த வியாபாரத்தில் இருப்பார்கள். இப்போது அந்த தொழில் செய்வதற்கும் ஆள் இல்லை. வாங்குவதற்கும் குழந்தைகள். இல்லை. குழந்தைகளின் விளையாட்டுக்கள், ரசனைகள் எல்லாம் மாறி விட்டன.இனிமேல் இவைகள் எல்லாம் காட்சிப் பொருட்கள் தாம்.




 



திரு வி.பி.எம்.சங்கர் (வி.பி.எம்.கல்லூரி குழுமம் தலைவர்) அவர்களின் வீட்டின் அருகில் கோலம் போட்டு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. அங்கு நிறைய ஆட்கள் குழுமியிருந்தார்கள்







 திரு. வி.பி.எம்.சங்கர் அவர்கள் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்கள்.



அந்த ரோட்டில் வெப்பத்தை தணிக்க தண்ணீர் லாரி வைத்து தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.  நல்ல ஏற்பாடு.  காவல் துறையினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர்.  இரண்டு சக்கர வாகனங்களை அனுமதிக்கவில்லை,  ஆட்டோ, பேருந்து போன்றவைகளை போக்குவரத்து வேறு பக்கத்திற்கு மாற்றி விட்டார்கள்.  எனவே பொது மக்களுக்கு திருவிழா பார்ப்பதற்கு பாதுகாப்பாக வசதியாக இருந்தது.


நாங்கள் முன்பு இருந்த கூட்டத்தில் சேர்ந்து உட்கார்ந்து கொண்டோம்.  சாலியர் சமூகத்தை சேர்ந்த மூதாட்டி (80 வயது இருக்கும்) சொல்லிக் கொண்டிருந்தார்.  "கோவிலிலிருந்து ஸ்ரீ ரெங்கமன்னாரும் ஸ்ரீ ஆண்டாளும் கிளம்பி வருவார்கள்.  ஆற்றுக்கு வரும் வரை ரெங்கமன்னர் முன்பும் பின்னால் ஆண்டாளும் வருவார்கள்.  ஆற்றுக்குள் வரும்போது ஆண்டாள் முன்பு வருவார், பின்னால் ரெங்கமன்னார் வருவார்.  இங்கு ஆண்டாள் தான் பிரதானம், அதனால் தான்" என்றார்.  அது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்றார்.  இது எங்களுக்கு புதிய செய்தியாக இருந்தது.

அந்த மூதாட்டியிடம் கதை கேட்டதே எங்களுக்கு திருவிழா பார்த்த மாதிரி மகிழ்ச்சியாக இருந்தது.  முடிவில் அவரை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம்; அதன்பின் பார்க்க முடியவில்லை.

அவர் சொன்ன மாதிரி ரெங்கமன்னாரும் ஆண்டாளும் முன்னும் பின்னுமாக வந்தார்கள்.  ஆற்றில் இறங்கும்போது ஆண்டாள் முன்பாகவும், பின்னால் ரெங்கமன்னாரும் வந்தார்கள். 










இவர்களை வரவேற்க மங்காபுரம் தெருவிலிருந்து தேவர் சமூகத்தினர் வந்து வரவேற்பு கொடுக்க வேண்டுமாம்.





  






 





அவர்கள் கொட்டு மேளங்கள் முழங்க, பேண்டு வாத்தியங்கள் அதிர, அவர்களது வமையான மற்ற ஆயுதங்கள், வித்தியாசமான உடைகளுடனும் ஆண், பெண் ஆக நிறைய கூட்டமாக வந்தார்கள்.  அருமையாக இருந்தது. 









ஆண்டாளும் ரெங்கமன்னாரும் காத்திருந்தார்கள்.



அதிர் வேட்டுக்கள் முழங்க தீப்பந்தங்களுடன் வந்தார்கள்.  வந்து வரவேற்பு கொடுத்தார்கள்.  பின்பு ஆற்றில்  இறங்கினார்கள்.  மற்ற ஜனங்கள் செம்பில் சர்க்கரை வைத்து அதில் சூடம் கொளுத்தி அவர்களாகவே ஆரத்தி எடுத்து பின்பு அங்கு கூடியிருக்கும் பக்தர்களுக்கு சர்க்கரை கற்கண்டு வழங்கினார்கள்.  பின்பு சாலை திருப்பத்தில் வைத்து ஸ்ரீ ஆண்டாளை ஸ்ரீ ரெங்கமன்னார் மூன்று தடவை சுற்றி வந்தார்.  அது என்ன சம்பிரதாயம் என்று தெரியவில்லை.  




பின்பு கிளம்பி திரு வி.பி.எம்.வீட்டு வாசலில் பந்தலில் வைத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. 




அங்கு அன்னதானம் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.













பின்பு திரு எஸ்.எம்.தங்கமுடியா பிள்ளை அவர்கள் வீட்டு வாசலின் முன்பு உள்ள பந்தலில் வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.   


ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலின் முன்பு நிறைய மக்கள் குழுமியிருக்கிறார்கள்.  அங்கும் வைத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.  அதன்பின்பு இல்லத்து பிள்ளைமார் கல்யாண மண்டபத்திற்கு (மதுரை ரோட்டில் இருப்பது) புறப்பட்டு சென்றார்கள்




இந்த திருவிழா எல்லா ஜனங்களும் காத்திருந்து கலந்து கொள்வதும், கூடவே கோவில் வரை செல்வதும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும், கண் கொள்ளாக் காட்சியாகவும் இருக்கிறது. 


திருவிழாவை ரசித்துப் பார்த்திருப்பீர்கள்.

இந்த திருவிழா புகைப்படங்களை எடுக்க உதவிய எனது மனைவி
திருமதி உமா காந்தி அவர்களுக்கும், இந்த பதிவை கணினியில் ஏற்ற உதவிய
திருமதி ரமாமணி அவர்களுக்கும் மனப்பூர்வ நன்றி.


இந்த பதிவை படித்து நிறை குறை எழுதுங்கள்.  Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் அடுத்தடுத்து பதிவுகள் போடும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும். 
நீங்கள் தொடர்ந்து படிக்க வசதியாக இருக்கும்.


மிக்க நன்றி.





17 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா, ஆண்டாளும், ரெங்கநாதப் பெருமானும் அருள் பாலிப்பதற்காக ஆற்றில் இறங்கும் அற்புதமான நிகழ்வினைப் பார்க்க முடியாத எம் போன்றோருக்காப் பதிவில் தொகுத்து தந்திருக்கிறீங்க.

    பக்தி ரசம் சொட்டும் நனி சிறந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு
    புகைப்படங்களும் அதற்கான விளக்கங்களும் அருமை
    திருவிழாவை நேரடியாக பார்ப்பதைப்போலவே இருந்தது
    தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் உடன் உதவிய
    திருமதி ரமாமணி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்ி

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு. புகைப்படங்களுடன், விளக்கங்களும் அருமை. நாங்களே நேரில் பார்த்த திருப்தி கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. //"கோவிலிலிருந்து ஸ்ரீ ரெங்கமன்னாரும் ஸ்ரீ ஆண்டாளும் கிளம்பி வருவார்கள். ஆற்றுக்கு வரும் வரை ரெங்கமன்னர் முன்பும் பின்னால் ஆண்டாளும் வருவார்கள். ஆற்றுக்குள் வரும்போது ஆண்டாள் முன்பு வருவார், பின்னால் ரெங்கமன்னார் வருவார். இங்கு ஆண்டாள் தான் பிரதானம், அதனால் தான்" என்றார். அது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்றார். இது எங்களுக்கு புதிய செய்தியாக இருந்தது.//
    எங்களுக்கும்தான்!
    ரொம்ப இயற்கையான எழுத்தோட்டம்,அருமையாக இருக்கிறது. பகிர்விற்கு நன்றிங்க ஐயா.

    பதிலளிநீக்கு
  5. கோவிலுக்கு உங்களுடன் வந்தது போல் உள்ளது

    பதிலளிநீக்கு
  6. கோவிலுக்கு உங்களுடன் வந்தது போல் உள்ளது

    பதிலளிநீக்கு
  7. பக்தி மனம் கமழும் இது போன்ற படைப்புகளை படைக்கும் உங்கள் ஆர்வத்தை நான் மிக பாராட்டு கிறேன். தொடரட்டும் உங்கள் எழித்து பணி, தொடர்கிறோம் உங்கள் வலையை இனி

    பதிலளிநீக்கு
  8. 2007 ஆம் ஆண்டு மாதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்திருந்தேன். அருமையான ஆண்டாள் ரங்கமன்னார் தரிசனம். மீண்டும் அந்த நினைவுகளை உங்கள் பதிவு கிளறி விட்டுவிட்டது. நன்றி!

    பதிலளிநீக்கு
  9. "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார்" என்ற பெயர் மட்டும் சின்ன வயதில் (சைவ)சமயப் பாடப் புத்தகத்தில் வாசித்த ஞாபகமுள்ளது. அடுத்தமுறை இந்தியா வரும்போது கோவிலையும் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வு. புகைப்படங்களுடன் விளக்கங்களும் அருமை ...

    பதிலளிநீக்கு
  11. நேரடி ஒளிபரப்பு போல் மிக நன்றாக இருந்தது. வாழ்த்துகள் ஐயா.
    ரிஷி ரவீந்திரன்

    பதிலளிநீக்கு
  12. படங்களைப் பார்க்க பக்தி தானாவே வருது ஐயா !

    பதிலளிநீக்கு
  13. படங்களுடன் பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் ரத்னவேல் சார். என் பதிவிர்க்கு வந்து கருத்து சொன்னதர்க்கு நன்றி.
    அழகர் ஆற்றில் இறங்குவதைதான் பார்த்திருக்கிறோம்.உங்களுடைய பதிவை பார்த்து ஆண்டாள் ரங்கமன்னார் ஆற்றிலிறங்கும் விழாவை பற்றி தெரிந்துகொண்டேன்.படங்கள் மிகவும் அழகாக உள்ளது. நன்றி...

    பதிலளிநீக்கு
  15. படங்களுடன் பதிவு அருமையாக இருக்கிறது ஐயா. வாழ்த்துக்கள். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருபத்தைந்து வருடங்கள் இருந்திருக்கிறேன்.
    இந்த விழாவைப் பற்றி எனக்கு எந்த விபரமும் தெரியாது. தற்போது தங்களது பதிவைப் படித்து தான் தெரிந்து கொண்டேன்.
    தகவலுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  16. படங்களுடன் தொகுத்து தந்தது நேரில் பார்க்கும் அனுபவமாய்..

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லாபுதன், ஜூலை 27, 2011

    கண் கொள்ளாக் காட்சி. மகிழ்ச்சி. நல்வாழ்த்துகள்.
    vetha.Elangathilakam.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு