திங்கள், அக்டோபர் 24, 2011

இலவச தங்க நாணயம், இலவச வெள்ளி நாணயம் பரிசு - ஏமாறாதீர்கள்


திரு ரவி நாக் அவர்கள் நியூயார்க்கில் இருக்கிறார்.  எனது முக நூல் நண்பர்.  விழிப்புணர்வு கட்டுரைகள் நிறைய எழுதியிருக்கிறார்.  இப்பொழுது தீபாவளி மற்றும் விசேஷங்களுக்காக - தங்க நாணயம், வெள்ளி நாணயம் பரிசு என நிறைய அறிவுப்புகள் வருகின்றன.  அதைப்பற்றிய அவர் எழுதிய விழிப்புணர்ச்சி கட்டுரை முக நூலில் 24.10.2001 அன்று வெளியானது.  அவர் அனுமதியுடன் வெளியிட்டிருக்கிறேன்.  படித்துப் பார்த்து உங்களது கருத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.


இப்பொழுதெல்லாம் ஒரு பெரிய ஃபேஷன் கோல்ட் காயின் கிப்ட், மற்றும் சில்வர் காயின் கிப்ட். மொபைல் போன் சேல்ஸிருந்து மாருதி கார் வாங்கும் வரை இந்த கோல்ட் அல்லது சில்வர் காயினுக்கு ஆசைபட்டு முதலுக்கு மோசம் கதை தான் இங்கு தமிழ் நாட்டில் நடக்கிறது. இரண்டு ரூவாய்க்கு வெத்திலை வாங்கினால் நம்மாளூங்க பார்த்து இளம் வெத்தலை வேணும்னு கில்லி கில்லி பார்த்து மற்றும் இருபது ரூபாய்க்கு வாங்கும் வெண்டைக்காயை இளசா வேனும்னு நுனியை ஒடிச்சு ஒடிச்சு வாங்கும்  நாம், அந்த அன்றாடகாச்சியை உண்டு இல்லை என ஆக்கி ஒரு வெற்றி சிரிப்புடன் வீட்டுக்கு வந்து அந்த புராணத்தை எபிஸொடு எபிஸொடாக ஸ்பான்ஸர்ஸிப் இல்லாமல் எல்லோரிடமும் சொல்லி பீத்திப்போம் ஆனால் கிடைக்கும் இந்த அல்ப வெள்ளி தங்க வெள்ளி காயினுக்கு அடிமை ஆகி முதலுக்கே மோசமாகி லட்சகணக்கில் ஏமாறுகிறோம். சரி கிடைத்த காயினாவது நல்லதா என டெஸ்ட் செய்யுங்கள் 50 - 60% டூப்ளிகேட் காயின்கள் தான். முக்கால் வாசி வெள்ளி காயின்கள் - அலுமினியத்தில் செய்யப் பட்டு வெள்ளி முலாம் பூசப்படுகிறது. அதே மாதிரி தங்க காயின்களும் லஷ்மி படம் போட்டு அம்பாள் பூசாரி கணக்கா சாமி படத்தில் ஒத்தி எடுத்து கொடுத்த உடன் நாம் மதி மயங்கி அப்படியே பூஜை ரூமில் அல்ல்து லாக்கரில் பதுக்கி வைப்போம். அரை கிராம், ஒரு கிராம் இரண்டு கிராம் வரை நாம் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. என்றாவது அந்த காயினை எடுத்து நகை கடையில் கொடுத்தால் தான் நமக்கு சொல்லுவார்கள் சார் இது உண்மையான வெள்ளி தங்கமில்லை என்று. இவர்களின் மெயின் டார்கெட் புதிதாக முளைத்து இருக்கும் நவீன ஃபிராடு கல்ச்சர் - "அக்ஷய திருதி" இது நகை கடைக்காரகளின் நவின பிராட் ஆகும். அந்த ஒரு நாள் மட்டும் நம் வாழ்க்கையின் தரம் உயர்ந்து விடாதா என தங்கம் வாங்க வழியில்லாதவர்கள் கூட எப்படியாவது ஒரு கிராம் இரண்டு கிராம் என அவர்களின் சுளையாக பணத்தை கொடுத்து இந்த மாதிரி காயினை வாங்கி பூஜை அறையில் வைத்து என்றாவ்து அதை மாற்ற நினைக்கும் போது அந்த குட்டு வெளிப்படும். த்ங்க காயின் பிராடுகள் நான் கீழே இணைத்துள்ள  தங்க காயின் டிசைன் தான் ஒரிஜினல் டூப்ளிகேட் - இந்த சாமி படம் தவிர வேறு எந்த டீடெய்லும் இருக்காது. இது இவர்கள் மட்டுமல்ல ஐ சி ஐ சி ஐ, ரிலயன்ஸ் மற்றும் பெரிய தங்க வியாபாரிகளும் இந்த ஏமாற்று வேலையில் பங்குண்டு. உங்களூக்கு ஒருத்தர் வெள்ளி அல்லது கோல்டு காயின் கிஃப்டாக கொடுத்தால் தயவு செய்து நீங்கும் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் அன்றைய தங்க வெள்ளி விலையில தயங்காமல் தள்ளூபடி செய்து பாக்கி பணம் பெற்று கொண்டால் அவர்கள் தான் உண்மையானவர்கள். ஆனால் 90 % வெள்ளீ மற்றும் கோல்டு காயின் கிப்டாக கொடுப்பவர்கள் வேண்டுமென்றால் கிப்ட் வாங்கி கொள்ளுங்கள் நாங்கள் உங்கள் விலையில் குறைக்க முடியாது என்று சொன்னால் தயவு செய்து அந்த பக்கம் கூட தலை வைத்து படுக்காதீர்கள். இந்த அரை, ஒண்ணு, இரண்டு கிராமுக்கு கூட உண்மை இல்லாத இவர்கள் எப்ப்டி உங்கள் லட்ச க்கணக்கான பர்சேஸ்க்கு உண்மையாக இருப்பார்கள். சரி இப்படியே இந்த தங்க ப்ர்ச்சேஸ் பற்றியும் பார்த்து விடலாம்

கோல்ட் காயின் எவ்வளவு இருந்தாலும் ஆத்திர அவசரத்திற்கு வங்கியில் அடகு வைக்கமுடியாது  - Thanks Madhan for the info

வந்தே வந்து விட்டது தீபாவளி. ஒரு காலத்தில் தீபாவளி பண்டிகை என்றால் புது துணி, பட்டாசு, பட்சணங்கள் எண்ணை குளியல், மற்றும் அசைவ பிரியர்களுக்கு கறி குழம்பு என்று எழுதபடாத தீபாவளி விதிகள் சமீப காலமாக ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகி போனது என்னமோ மறுக்கமுடியாத உண்மை. இதற்க்கு மூன்று காரணம்,

1.வருமானம் அதிகம்,
2.அடுத்தவரை பார்த்து கொண்டாடும் ஸ்டைல் 
3.தவறாக சம்பாதித்த பணம்

 இது மூன்றும் இந்த தீபாவளி பண்டிகையை டோட்டலாக மாற்றியது. மேல் கூறிய பர்சேஸ் போக புது அப்ளையன்ஸஸ் மற்றும் புது நகை ப்ர்சேஸ் இன்றியமையானது. நகை வாங்கும் கலை ஏனோ சில பரம்பரை ஷாப்பிங் ஜித்தர்களுக்கு மட்டுமே  எளிதாகிறது, மற்றவர்களுக்கு மைக்ரேன் வந்தவனை ரோலர் கோஸ்டரில் ஏற்றி விட்ட கதை தான் - இதை ஏன் கூறுகிறேன் என்றால் நூற்றில் மூன்று சதவிகித பேர் தான்  ரோலர்கோஸ்டரில் ஏறி இறங்கும் வரை சுற்றி என்ன நடக்கிறது என கண் இமைக்காமல் பார்ப்பார்கள், மீது உள்ள 97% சதவிகித மக்கள் ஏறியது தான் தெரியும், அது சுற்றி நிற்கும் வரை கண்ணை திறக்கவே மாட்டார்கள். அந்த கதை தான் நகை விற்கும் கடைகளின் அலிபாபா குகை எக்ஸ்பீரியன்ஸ். தங்கம் என்னை பொறுத்த வரை நிறைய பேர் டிசைனுக்கு கொடுக்கும் இம்பார்டன்ஸ் அதன் தரம், அதன் உண்மையான வேல்யு பற்றி கவலை படாமல் குருட்டாம் போக்கில் வாங்குகின்றனர். கடைக்குள் போன உடனேயே உலகத்தில் எங்கு பவர் கட் இருந்தாலும் இந்த தி நகர் திருட்டு அண்ணாச்சிகள், பாரிமுனை பஜன்லால்கள், புரசை பெர்னான்டோக்கல் ஒரு வசிய சக்தியை நம் மீது தெளித்து பக்ரீத்துக்கு ரெடியாகும் பலி ஆடுகளை போல் நடத்துவார்கள்.

Please CONSIDER THIS FACTS before you purchase. 
1. தங்கம் 16 கேரட் / 18 கேரட் / 20 கேரட் / 22 கேரட் / 24 கேரட் தரம் பற்றி நன்கு விசாரித்து வாங்குங்கள். 
2. மெஷின் கட் வாங்கவே வாங்காதீர்கள் சீக்கிரம் உடைந்து விடும்.
3. குறைந்த வெயிட்டில் பெரிதாக தோன்றும் நகைகள், மற்றும் தோடு, வளையல்கள் வாங்கவே வாங்காதீர்கள். அதற்கு உள்ளே மெழுகு, செம்பு மற்றும் வெள்ளி ஃபில்லிங் இருக்கும்.
4. கண்டிப்பாக கல் வைத்த நகைகளை வாங்க வேண்டாம், வாங்கினால் 30 - 45% உங்கள் பணம் பச்சா. 
5. தயவு செய்து ஒயிட் மெட்டல் நகைகளை தெரியாத கடைகளிடம் வாங்கவே வேண்டாம். பாதி ஒயிட் மெட்டல் நகைகள் ஒரிஜினல் அல்ல. 

6. சிங்கப்பூர், மலேஷியா, துபாய் மற்றும் நிறைய நாடுகளில் தங்கத்தின் விலையை வெளியே போட்டிருப்பார்கள். அந்த விலை மற்றும் எவ்வளவு கிராமோ அவ்வளவு தான் விலை, நம்மூர் கொள்ளை ஃபார்முலா கிடையாது, இங்கு தான் செய்கூலி / சேதாரம் / கல் சார்ஜ் அப்புறம் லொட்டு லொசுக்கு இத்யாதி இத்யாதி போட்டு தங்கத்தின் விலையில் 30 - 45% எக்ஸ்ட்ரா போட்டு ஒரு ஜெர்க் கொடுத்து உங்களுக்கு ஆபத்பாந்தவர் போல சரி பில் போட்டா இன்னும் காஸ்ட்லி என்று புருடா விட்டு 70% நகைகள் பில் இல்லாமல் தான் விற்பனை ஆகிறது. இதனால் விற்க அல்லது மாற்ற செல்லும் போது இன்னுமொரு 30 - 40% லாஸ். 916, கேடி எம், கடை சீல் எனும் அல்வாவை கண்டிப்பாக நம்பவேண்டாம், ஆக மொத்தம் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பத்தாயிர ரூபாய்க்கு மூனாயிரம் தான் ஹேன்ட் இன் வேல்யு. சோ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆனாலும் பராவாயில்லை தயவு செய்து பிராப்பர் பில்லை வாங்குங்கள் அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நகை தரம் குறைந்தால், இல்லை உடைந்தாலோ அல்லது கலப்படம் இருந்தாலோ அவர்கள் உங்களுக்கும் அன்றைய தேதிக்கு முழு பணமோ அல்லது தங்கமோ தர வேண்டும் இல்லையென்றால் நீங்கள் கன்ஸுமர் கோர்ட்டுக்கு சென்றால் அவர்கள் நஷ்ட ஈடு தந்தே ஆகவேண்டும். வெள்ளை பேப்பரில் அல்லது ரப்பர் ஸ்டாம்பில் பில் போட்டு கொடுத்தால் கண்டிப்பாக வாங்க வேண்டாம். ஆஸ் இஸ் (AS  IS) என போட்டு கொடுத்தாலும் வாங்க வேண்டாம்.தங்கம் வாங்குவது ஒரு நல்ல சேமிப்பு ஆனால் பார்த்து வாங்கி உங்கள் முழு வேல்யு இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
"எங்களது மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்"
மிக்க நன்றி.

47 கருத்துகள்:

  1. அருமையான விழிப்புணர்வு பதிவு ஐயா.நன்றி பகிர்வுக்கு.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல விழிப்புணர்வு பதிவு.தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    பதிலளிநீக்கு
  4. பல விஷயங்களை வெளிப்படுத்தும், பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. தங்கத்துல இவ்வளவு விஷயம் இருக்கா!!! தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா!!

    பதிலளிநீக்கு
  6. அருமையான விழிப்புணர்வு பதிவு.பகிர்வுக்கு நன்றி ஐயா.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல விழிப்புணர்வு ஊட்டிப் போகும் பதிவு
    அருமையான பயனுள்ள பதிவாகத் தேர்ந்தெடுத் தரும் தங்களை
    எவ்வளவு பாராட்டினாலும் தகும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அருமையான விழிப்புணர்வு கட்டுரை..தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. தங்க வியாபரம் என்றாலே தில்லுமுல்லுதான். தங்க காசுதான் சுத்தமான தங்கம் என்று ஒரு காலத்தில் சேமித்தோம். ஓரளவிற்கு சேர்ந்தபின் நகையாக மாற்றிக்கொள்ளும் பழக்கமும் இருந்தது, கடைகளில் வாங்குவதைவிட தெரிந்த நகை ஆசாரியிடம் செய்வது நல்லதோ?.

    பதிலளிநீக்கு
  10. பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா. தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. நல விழிப்புணர்வுப் பதிவு. இப்பொழுதும் தங்கம்
    வாங்குபவர்களைப் பார்த்துக் கவனமாக இருங்கள்
    என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். நம் ஊர்த் தங்கத்தை வெளிநாட்டில் மதிப்பதே இல்லை. இங்க 22 காரட் தங்கம் அங்கே போனால் 18 ஆகிறது.

    பதிலளிநீக்கு
  12. விழிப்புணர்வு பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி சார்

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. விழிப்புணர்வு மிக்க கட்டுரை.

    தீபாவளி வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  14. அன்புள்ள ஐயா! பயனுள்ள பதிவு ...காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  15. எப்பிடியெல்லாம் ஏமாத்துறாங்கே ஹூம் கலிகாலம் நாம தான் உஷாரா இருக்கணும்

    தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
    அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. //கோல்ட் காயின் எவ்வளவு இருந்தாலும் ஆத்திர அவசரத்திற்கு வங்கியில் அடகு வைக்கமுடியாது//

    தவறான தகவல், ரேப்கோ வங்கியில் அப்படியே வாங்கி கொள்வார்கள், பிற வங்கிகளில் துளை போட்டு எடுத்து வரச்ச் சொல்வார்கள் என்று ரேப்கோ வங்கியின் நிர்வாகி ஒருவர் கூறினார்...

    மற்றபடி நீங்கள் கூறிய அனைத்து விஷயங்களும் உண்மை, ஊடகங்கள் இதை பொருட் படுத்துவதில்லை..

    பதிலளிநீக்கு
  18. நல்ல பதிவு ஐயா. உங்கள் திரட்டும் பணி பாராட்ட பட வேண்டியது.
    கட்டுரை மிக அருமை.முக்கியமாக பெண்கள் படிக்க வேண்டியது.
    நாம் தீபாவளி கொண்டாடும் விதம் மாறிப் போனதற்கு கட்டுரையாளர் தரும் காரணங்களே , நமது திருமணம்-நிகழ்த்தும் முறையும் , மேல்-படிப்பு தேர்ந்தெடுக்கும் முறையும் மாறி போனதற்கான காரணங்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. நம்ப ஊர் தங்கத்தை அரபு நாடுகளில் மதிப்பதே இல்லை. கிராமுக்கு நாம குடுக்கும் விலையை விடவும் அவர்களுக்கு லாபத்தை அள்ளித் தருவது இந்த செய்கூலியும் சேதாரமும் தான். சேதாரமே அவர்களுக்கு ஆதாரம். அரபு நாடுகளில் வாங்கும் நகைகளுக்கு செய்கூலி மட்டுமே உண்டு சேதாரம் போடப்படுவது இல்லை & தங்கத்தின் தரம் குறையும் பட்சத்தில் கடுமையான அபராதமோ அல்லது கடையை மூடும் தண்டனையோ வழங்கப்படும்.

    பதிலளிநீக்கு
  20. நல்ல விழிப்புணர்வு பதிவு
    நன்றி

    பதிலளிநீக்கு
  21. நல்ல விழிப்புணர்வு கட்டுரை. ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுகிறவனும் உண்டு. கட்டுரை அருமை. வாழ்த்துகள் சார்.

    என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. நல்ல விழிப்புணர்வு கட்டுரை ஐயா.. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்..


    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  23. நல்ல பகிர்வுக்கு நன்றி.
    தீபாவளி நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. விழிப்புணர்வுப் பதிவு.

    இனிமையான தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. ரத்னவேல்,

    நல்லப்பதிவு,தங்கம் , தங்க நகை, வியாபாரம் நம் மக்களை ரொம்பவே பாடாப்படுத்துது.

    // தி நகர் திருட்டு அண்ணாச்சிகள், பாரிமுனை பஜன்லால்கள், புரசை பெர்னான்டோக்கல் ஒரு வசிய சக்தியை நம் மீது தெளித்து பக்ரீத்துக்கு ரெடியாகும் பலி ஆடுகளை போல் நடத்துவார்க//

    இந்த ஜோஸ் ஆலுக்காஸ், ஜாய் ஆலுக்காஸ் எல்லாம் விட்டிங்க அவங்க தான் ரொம்ப மோசமா இருக்காங்க, கடை பெருசா இருக்குனு மக்கள் அங்கே ஒடுறாங்க.அவங்க கிட்டே ரொம்ப கேள்வி கேட்டா நீங்க வேற எங்கேவாது வாங்கிக்கோங்க சொல்வாங்க, அப்புறம் ஒரு தடவை வாங்காம சும்மா விலைக்கேட்டு போய் கொஞ்ச நேரம் கழித்து மீண்டும் போனால் தர மாட்டேன் சொல்வாங்க.

    //நம்மூர் கொள்ளை ஃபார்முலா கிடையாது, இங்கு தான் செய்கூலி / சேதாரம் / கல் சார்ஜ் அப்புறம் லொட்டு லொசுக்கு இத்யாதி இத்யாதி போட்டு தங்கத்தின் விலையில் 30 - 45% எக்ஸ்ட்ரா போட்டு ஒரு ஜெர்க் கொடுத்து உங்களுக்கு ஆபத்பாந்தவர் போல சரி பில் போட்டா இன்னும் காஸ்ட்லி என்று புருடா விட்டு 70% நகைகள் பில் இல்லாமல் தான் விற்பனை ஆகிறது. இதனால் விற்க அல்லது மாற்ற செல்லும் போது இன்னுமொரு 30 - 40% லாஸ். 916, கேடி எம், கடை சீல் எனும் அல்வாவை கண்டிப்பாக நம்பவேண்டாம், ஆக மொத்தம் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு பத்தாயிர ரூபாய்க்கு மூனாயிரம் தான் ஹேன்ட் இன் வேல்யு.//

    நான் இது போன்று எல்லாம் கேட்டதால் தான் எனக்கு அப்படி ஆச்சு.கார் வாங்கினா அதுக்கு செய்கூலி சேதாரம் போடுறாங்களா, நீங்க மட்டும் ஏன் கேட்டேன்.சேதாரமாகிற தங்கம் எங்கே, அது உங்க கிட்ட தானே இருக்கு அப்புறம் எங்ககிட்டே ஏன் காசு கேட்கிறிங்க கேட்டேன். நீ வேற கடையப்பார்த்டுக்கோ சொன்னான். சர்தான் போடானு வந்தாச்சு.

    பதிலளிநீக்கு
  26. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்ற ஆவல், இந்த கட்டுரையில் தெரிகிறது, இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. நல்ல விழிப்புணர்வு பதிவு . பகிர்வுக்கு நன்றி அய்யா .

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள ஐயா.

    தொடர்பணிகள். மட்டுமல்லாமல் தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக உங்களின் தகவல்கள் எதனையும் உடனுக்குடன் பார்க்கமுடியாமல் ஆகிவிட்டமைக்கு மன்னிக்கவும். இன்னொரு வேண்டுகோள் எப்படியாயினும் உங்கள் பதிவைப் பார்த்துவிடுவேன். எனவே தாங்கள உடன் பதில் இல்லை என்று எப்போதும் தவறாக எண்ணிவிடவேண்டாம். தஙக நாணயம் பற்றிய கட்டுரை மிகமிகப் பயனான ஒன்று. இன்றைய பெண்களுக்கு ஒரு பாட்ம்கூட இது. உமறுப்புலவர் பற்றிய படங்களும் கட்டுரையும் அருமை. எனக்கொரு உதவி செய்யவேண்டும். கிடட்த்தட்ட ஓராண்டாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். சீறாப்புராணம் உரையுடன் எங்கு கிடைக்கும்? தகவல் தெரிவித்தால் போதும். நன்றி. மறுபடியும் சந்திக்கும் வாய்ப்பில் சந்திக்கிறேன். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  29. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த தீபஒளி திருநாள் வாழ்த்துகள். இந்நன்னாளில் சந்தோசமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  30. நல்ல விழிப்புணர்வு பதிவு

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  31. நல்லதொரு அவசியமான பதிவு....

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  32. உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்"

    பதிலளிநீக்கு
  34. விழிப்புணர்வு ஊட்டக்கூடிய அவசிய பகிர்வு.நன்றி.

    பதிலளிநீக்கு
  35. நல்லதொரு பதிவு.இனிய தீபத்திருநாள் வாழ்த்த்கள் ஐயா !

    பதிலளிநீக்கு
  36. சிறந்த பதிவு ஏமாறாமல் இருக்கசிறந்த எச்சரிக்கை பாராட்டுகள் நன்றி

    பதிலளிநீக்கு
  37. என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.நல்ல அவசியமான பதிவு.

    பதிலளிநீக்கு
  38. ஏமாறுபவர் இருக்கும்வரை ஏமாற்றுபவ்ர்கள் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள். நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  39. வணக்கம்,உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  40. விழிப்புணர்வுப் பகிர்வு.. ஃபேஸ்புக்கில் பகிர்கிறேன் சார்..:)

    பதிலளிநீக்கு