வியாழன், நவம்பர் 03, 2011

அல்சீமியர் - ஒரு பார்வை


அல்சீமியர் டிசீஸ்:  Alzheimer's Disease: 

இது அல்சீமியர் என்னும் முதியோர்களுக்கு வரும் நோயைப் பற்றிய பதிவு.

திரு இராம சுப்ரமணியம் நாகேஸ்வரம் என்பவர் எனது முகநூல் நண்பர்.  அவர் அவரது முக நூல் பக்கத்தில் 22.10.2011 அன்று இந்த கட்டுரையை வெளியிட்டிருந்தார்.  அவரது அனுமதியுடன் இந்த கட்டுரையை இன்றைய பதிவாக வெளியிடுகிறேன்.  அவருக்கு எனது மனப்பூர்வ நன்றி.



இன்றைய நாகரீக உலகில் தீர்மானிக்கப்பட்ட பல் விதமான நோய்களுக்கு மருத்துவ ரீதியாக சிகிச்சைகளும்..மருந்துகளும் இருந்தாலும்...விடை தெரியாத சில சிக்கல்கள் நோய்களாக..மக்களை தொடர் கதையாக வாட்டுவதும்...மருத்துவ உலகிற்கு சவாலாக இருந்து வருவதையும்..நாம் காண்கிறோம். அத்தகைய பிரச்சினைகளில் ஒன்றான மூளையின் செயல்பாடுகள் சார்ந்த முக்கிய சிக்கலான...இந்த அல்சீமியர் என்ற நோயினைப்பற்றி சில சுருக்கமான குறிப்புகள்.! 

1. மூளை நரம்பு பகுதிகளில் மனிதர்களில் ஒரு சாராருக்கு ஏற்படும் மாற்றங்களாக மருத்துவ ரீதியாக கருதப்படும்..சுற்று சூழல் மாற்றங்களை புரிந்துகொள்ள முடியாத தன்மை..உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் குறித்து ஆய்வு செய்து..தனது ஆராய்ச்சி கட்டுரைகளை 1906ம் ஆண்டு வெளியிட்ட டாக்டர் அலோயிஸ் அல்சீமியர் ( Alois Alzheimer)...என்பவரின் நினைவாக..மருத்துவ உலகில்..இந்தப் பிரச்சினை "அல்சீமியர் நோய்"...என்று அழைக்கப் படுகிறது.!

2. மனித மூளையின் செயல்பாட்டினை பாதிக்கும் பல வகையான சிக்கல்களில்...இந்த அல்சீமியர் நோய்..பொதுவாக முதியோர்களை பாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும்.!

3. அம்னீஷியா...டிமென்ஷியா..பாரனாய்டு என்பது போன்ற..உளவியல் ரீதீயான பிரச்சினைகளில் ஒரு அங்கமாக...இந்த அல்சீமியர்...கருதப்படுகிறது.!

4. பொதுவாக..உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உயர் கொழுப்பு போன்ற‌
தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை தேவைப்படும்..பிரச்சினைகளால்...மனித உடலிலும்..வாழ்க்கை முறைகளிலும் ஏற்படும்.. இயல்பான மாற்றங்களின் காரணமாக பாதிக்கப் படுபவர்களே..பின்னாளில் அல்சீமியரின் தாக்கத்துக்கு ஆளாகிறார்கள் என்பது மருத்துவ உலகின் கருத்து.!

5. மேற்கூறப்பட்ட பிரச்சினைகளுக்கு தொடர்ச்சியாக  எடுத்துக் கொள்ளப்படும்
சிகிச்சை முறைகளும்( மருந்துகளும்)...இரு பாலருக்கும்..பொதுவாக..அல்சீமியர் தாக்கத்துக்கு ஆளாக வாய்ப்புகள் இருக்கும் நிலையில்...பெண்களுக்கு கூடுதலாக..மாதவிலக்கு சார்ந்த ஈஸ்ட்ரோஜன் மருந்துகளும்..காரணிகள். வயது முதிர்ந்தவர்களுக்கு..திடீரென ஏற்படும் சுற்று சூழல் மாறுபாடு மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள்..அல்சீமியர் தாக்கத்திற்கு முக்கிய‌
அம்சங்களாக மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.!

6. பொதுவாக மூளை..நியூரோனல் டிரான்ஸ்மிஷன்ஸ் ( Neuronal Transmission's) என்றழைக்கப்படும்...மூளை செல்களின் வேதித் தகவல் பரிமாற்றம் பாதிக்கப் பட்டு..ஏற்படும் இந்த அல்சீமியரின் பாதிப்பு...நாள் செல்லச் செல்ல...சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாத நிலையில்..அதிகரித்து...நியூரான்களின் அளவு குறைவதுடன்..அவை அழியத் தொடங்குகின்றன. அந்த சமயத்தில்..நியூரான்களின் தகவல் பரிமாற்ரத்திற்கு தேவைப்படும் முக்கிய கிரியா ஊக்கியான..அசிட்டைல்கோலின் என்ற வேதிப் பொருளின் அளவும்
குறைவாக இருப்பதை மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் நாம் அறியலாம்.!

7. வயோதிகத்தால் ஏற்படும் முதிர்ச்சி மட்டுமன்றி...தலைப் பகுதியில் விபத்துக்களின் மூலம் ஏற்படும் காயங்களால் உண்டாகும் நிரந்தரமான பிரச்சினைகளின் மூலமாகவும் இந்த அல்சீமியர் நோயின் தாக்கம் ஏற்படுகிறது. இதனால்..பதிக்கப் பட்டவர்கள்...உறவினர்களையோ அல்லது நண்பர்களையோ...சார்ந்து வாழும் நிலை தான்..இந்த அல்சீமியரின் பாதிப்புகளில் முக்கிய சிக்கலான பகுதியாக நாம் காண்கிறோம்.!

8. அல்சீமியரால் பாதிக்கப் பட்டவர்கள்...நோயின் வீரியத்தை..ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் ( Anti Oxidants)...கோலினைஸ்டீரேஸ் இன்ஹிபிட்டார்ஸ் ( Choliesterase Inhibitor's) என்றழைக்கப்படும்..காலன்டமைன்( galantaminine)..நியோஸ்டிக்மைன்( neostigmine)...மிமான்டைன் (memontine..N-methyl D-Asparate antogonist-NMDA)..இன்னபிற..மருந்துகளால்..கட்டுப்படுத்த முடியுமே தவிர...நிரந்தரமாக ( மற்ற கன்காமிடன்ட் டிசிசஸ் போன்றே) குணப்படுத்த இயலாது என்பது மருத்துவ உலகம் சார்ந்த தகவல்கள்.!

9. இது போன்ற...மருத்துவ ரீதியாக  ( அனைத்து விதமான பிரிவுகளிலும்) சிகிச்சைகளுக்கு பின்னரும்... தீர்வு காண இயலாத பிரச்சினைகளை...ஆல்டர்நேடிவ் தெரபி என்று அழைக்கப் படும்...யோகா..தியானம்..மற்றும் மிதமான உடற்பயிற்சிகள் மூலம்..மூளை செல்களான நியூரான்களுக்கு பலமளித்து அல்சீமியரின் தீவிரத்தை கட்டுப் படுத்தலாம் என மருத்துவ..உலகமும்..ஆராய்ச்சியாளர்களும்..நம்புகின்றனர்.!

இந்த பதிவை படித்து பார்த்து உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.  அதற்கான அவரது விளக்கங்களை அவரிடம் வாங்கி இந்த பதிவின் பின்னூட்டம் பகுதியில்  பதிலாகவும் உங்களுக்கு தனியாகவும் எழுதுகிறேன்.

இந்த பதிவை படித்து உங்களது கருத்துக்களை ‘Commentary Box’ இல் பதிவு செய்யுங்கள்.  இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களும் படிக்க link அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்.  மற்ற திரட்டிகளில் இணைத்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன். Google Widget இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் Dash Board க்கு வந்து விடும்.  உங்களது Email id ஐ அதற்கான கட்ட்த்தில் பதிந்து கொள்ளுங்கள். நாங்கள் பதிவு எழுதும்போது உங்கள் inbox க்கு வந்து விடும்.
மிக்க நன்றி.










34 கருத்துகள்:

  1. பயனுள்ள குறிப்புகள் கொண்ட பதிவு. பாராட்டுக்கள். இங்கும் இதை குறித்த விழிப்புணர்வையும் தகவல்களையும் அதிகமாக பரவச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறித் துவங்குகிறேன். முதுமையின் நினைவு மறதி நோய் தொடர்பான கட்டுரை மிக நன்று. எழுதிய திருமிகு இராம சுப்ரமணியம் நாகேஸ்வரம் அவர்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. உபயோகமுள்ள நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா....

    பதிலளிநீக்கு
  4. அல்சீமியர் என்ற நோயினைப்பற்றி அரிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் ஐயா,மிக்க நனறி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  5. அல்சீமிரின் அறிகுறியாக மறதி குறிப்பிடப்படுகிறது. மிக சமீபமாக நடந்தது கூட மறந்துவிடும். எதையோ எடுக்க மேஜை இழுப்பறையை இழுப்போம், எதற்காக இழுத்தோம் என்பதுகூட மறந்துவிடும். சதாரண சமயங்களிலும் குளிர்வதுபோல் உணரமுடியும். வழக்கத்தைவிட சோம்பி இருப்பார்கள். நாளாக ஆக மூளை செல்களின் பாதிக்கலாம்.அதற்கான இந்த பதிவு மிகவும் நன்று. பகிர்விற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. அரிய பல தகவல்களுக்கு மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு... ஆனால் தற்பொழுது இந்த துறையில் பெரும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.. இந்த நோயின் பிரச்சினை என்ன என்றால் இதன் அறிகுறி காட்டும் பொழுதே நாம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணப் படுத்தி விடக்கூடிய அளவு மருந்துகள் உள்ளன... ஆனால் அறிகுறி கண்டுபிடிக்க தாமதமாவதால், நோய் முற்றிய பிறகு இன்ன நோய் தான் வந்திருக்கிறது என்று அறிய முடிகிறது.. பேயர் என்னும் ஜெர்மன் நிறுவனம், இந்த நோயின் அறிகுறியை கண்டு பிடிக்கும் மருந்தினை, நாம் ரத்தத்தை டெஸ்ட் செய்து தெரிந்து கொள்வது போல் தெரிந்து கொள்ள, சீரம் கண்டு பிடித்து வருகிறது... ஆனால் கண்டிப்பாக சந்தையில் கிடைக்கும் பொழுது விலை உயர்ந்த நிலையில் தான் இருக்கும்...

    பதிலளிநீக்கு
  8. ரைஸ் ஆப் தி ஏப்ஸ் படத்தில் இந்த வியாதியை பற்றி சொல்வார்கள். அதை பற்றிய முழு விவரங்களியும் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. இது வயதானவர்களின் ஒரு முக்கியமான வியாதி.
    இந்த வியாதியின் அறிகுறிகளைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தால் கட்டுரை முழுமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. அருமையான அவசியமான தகவல் ஐயா ,பகிர்வுக்கு நன்றி , த.ம 6

    பதிலளிநீக்கு
  11. உபயோகமுள்ள நல்ல தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  12. thank you,sir,for the post.The facts given in the article are simple and direct that it will give a clear account for any lay person. i also would suggest/request the same author to give an account of the symptomatology of the disease that would be of much help for the general public.

    பதிலளிநீக்கு
  13. பயனுள்ள கட்டுரை. நன்றி.

    ஒன்று: தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

    சரியான ஆங்கில உச்சரிப்பு: "அல்ஸ்ஹைமர்"

    பதிலளிநீக்கு
  14. என்னதான மனிதன் வளர்ச்சி கண்டாலும் திர்க்கப்படாத பல விடயங்களால் மண்டையை குழப்பப் பட்டுக் கொண்டே தான் இருக்கிறான்...

    பகிர்வுக்கு நன்றி ஐயா...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

    பதிலளிநீக்கு
  15. பயனுள்ள தகவல் நன்றி.............

    பதிலளிநீக்கு
  16. பிறருக்கு உதவும் என்ற எண்ணத்தில் இதனை இங்கு எங்களுடன் பகிர்ந்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி....

    பதிலளிநீக்கு
  17. விழிப்புணர்வு ஏற்படும் பதிவு. மிக நல்ல தகவல்கள். மிக்க நன்றி இதில் பங்குடைய அனைவருக்கும். வாழ்த்துகள் ஐயா.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  18. பயனுள்ள அரிய நல்ல தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள் ஐயா .இதை உருவாக்கியவருக்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ........

    பதிலளிநீக்கு
  19. மிக அருமையான தகவல் சார். மறதி நோயால் வருந்துபவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். முன்னெச்சரிக்கயாய் இருந்தால் தடுக்கலாம் என கூறியது சிறப்பு

    பதிலளிநீக்கு
  20. அரிய தகவல்கள்.அவசியம் அறிந்து வைத்து இருக்க வேண்டிய விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  21. மனிதனுக்கு நினைவு தப்பினால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையே.

    பதிலளிநீக்கு
  22. சொல்கேளான் ஏ.வி.கிரி
    தேவையற்ற தகவல்களையும் செய்திகளையும் உணர்வுகளையும் பதிவு செய்யும் முகநூல் நண்பர்களுக்கு இடையில் மக்களுக்குத் தேவையான உடல் நலம் சார்ந்த மருத்துவ அறிவியல் செய்திகளை வெளியிடும் தங்கள் பணி பாராட்டத்தக்கது. தொடரட்டும் உங்களின் நற்பணி.
    வெள்ளைக் குச்சி பற்றிய உங்களின் கட்டுரை படித்து மனம் நெகிழ்ந்தேன். நம்மில் பலருக்கு பார்வையின் அருமை தெரியாது. ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு இந்த உலகைப் பார்த்தால்தான் அதன் அருமை தெரியும். தங்களின் கட்டுரையின் இறுதியில் கண் தானத்தை பற்றி விளக்கி வலியுறுத்தி வேண்டுகோள் வைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  23. என்னைப் போன்ற முதியவர்களுக்கு முத்தான
    இப் பதிவு பயனுள்ளதய்யா நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  24. அல்சீமியர்- தெரியாத பல செய்திகள். நல்ல பதிவு. நன்றி

    பதிலளிநீக்கு
  25. மிக நீண்ட தேடலுக்குப்பின் இந்தப்பதிவை கண்டு பிடித்தேன். பகிர்வுகு மிக்க நன்றி சார். மருத்துவ ரீதியாக சில த்கவல்களை இணைக்கவில்லை. காரணம் சாதாரண மக்களுக்கும் புரியுமாறு எளிமையாக விளக்குவது வழக்கம். மீண்டும் ஒரு முறை பதிவை தங்க்ல் பிளாக்கில்பதிவு செய்த்மைக்கு மிக நன்றி.

    பதிலளிநீக்கு