ஞாயிறு, மே 20, 2012

சூரிய கிரகணம் – மே 20, 21 – 2012 வருடம் – நமது நாட்டில் தெரியாது

பேராசிரியர் திருமதி மோகனா அவர்களின் சூரிய கிரகணம் பற்றிய பதிவு அவர்களின் பதிவு.  அவர்களின் அனுமதியுடன் வெளியிடுகிறேன்.  பேராசிரியர் திருமதி மோகனா அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றிகள்.


வணக்கம் நண்பர்களே.  2012 , மே  20 -21    ல்  ஒரு  சூரிய கிரகணம்  வரப்போவுது. அதுவும் இரண்டு நாளைக்கு நீடிக்கப் போவுது.


இப்போது தான் ஒரு சூரிய  கிரகணம்  பார்த்து  முடிச்சோம்.  அது 2011, ஜனவரி 4 ம் நாளும், ஜூலை முதல் தேதியும் பகுதி சூரிய கிரகணங்களாக வந்தன.

 

  ஒவ்வொரு  சூரிய கிரகணமும்,  ஒவ்வொரு 177  நாட்களுக்கு  ஒரு தடவை,  4 மணி நேரம் மாற்றிய நோடுகளிலும் வரும்.  இப்போது நாளைக்கு ஒரு சூரிய கிரகணம் நிகழ உள்ளது.ஆனால் நாம், இந்தியாவில் இருப்பவர்கள் இந்த சூரியக் கிரகணத்தைப்  பார்க்க மாட்டோம். இது, இதன் பாதை  நம் ஊர் வழியே செல்லாது. இது கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் 2010 , ஜனவரி 15 ல் ராமேஸ்வரத்தில் நிகழ்ந்தது போல  ஒரு கங்கண /வளைய சூரிய கிரகணம்.ஆனால் இது தென்-கிழக்கு ஆசியாவைக் கடந்து செல்லும்.  வட பசிபிக் பெருங்கடல் இந்த சூரிய கிரகணத்தைச் சந்திக்கும். அதுபோல தென்-மேற்கு அமெரிக்க மக்களும் கங்கண சூரிய கிரகணத்தைப் பார்ப்பார்கள் 
இந்த வளைய சூரிய கிரகணம்,  2012 மே 20 ம்  நாள், 
சர்வதேச நேரப்படி,  சரியாக  22 .06 .17  மணிக்கு  சந்திரனின் நிழல் சூரிய வளையத்தைத் தொடத்  துவங்குகிறது.  கிரகண மறைப்பு என்பது, டோங்கிங் வளைகுடாவில் (Gulf of Tongking) தான் துவங்குகிறது. அங்கிருந்து நகர்ந்து வரும் கிரகணப் பாதை,  வளையமடித்து சரியாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் முடிகிறது. அப்போது நேரம் சர்வதேச நேரப்படி இரவு  01 .39 11. அதாவது மே மாதத்தின்  அடுத்த நாள் 21 ம் தேதி பிறந்திருக்கும்.  இந்த சூரிய கிரகணம் இரண்டு நாட்கள் நடக்கிறது என்று சொல்லலாமா? அப்படித்தான் சொல்லவேண்டும், ஏனெனில் மே 20௦ம் நாள் கிழக்கே துவங்கிய கிரகணம்,  நகர்ந்து வட்டமடித்து மே 21 ம் நாள் மேற்கே அமெரிக்காவில் முடிந்தால் இரு நாட்கள் கிரகணம் என்றே கருதத் தோன்றும்.  இந்த கங்கணக் கிரகணம் சரியாக 5  1/2 நிமிடம் மட்டுமே நீடிக்கும். இந்த கிரகணம்,  மிகவும் அகலமான பாதையில் பயணிப்பதால்,  நீண்ட நேரமும் இருப்பதால், இதில் சூரியன் கருப்பாகத் தெரியாது.  குறைவான நிமிடங்கள் சூரிய மறைப்பு நிகழும் போதுதான்,  சூரியன் கருப்பு சூரியனாக மாறும்.  இருந்தாலும் கூட,  இந்த சூரியனையும், நாம் வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. 


 மே 20 நாள் வரும் சூரிய கிரகணம், பெரும்பகுதி ஆசியா,  ரஷ்யா, வடமேற்கு  அமெரிக்கா போன்ற இடங்களில்,  பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும். இது இவ்விடங்களில் மே 20 ம் நாள் 20 .56 .07 மணிக்குத்  துவங்கி, மே 21 ல்,  நடு இரவு /அதிகாலை  02 .49 .21 க்கு முடிகிறது.  இந்த முறை வரும் சூரிய கிரகணம் 5 1 /2 நிமிடநேரம் நீடித்தாலும்,  இது  மே 20 -21 என இரு நாட்கள் நீடிக்கிறது.  இந்த வளைய/கங்கண கிரகணம் சரியாக சீனாவில் ஓட்டத்தை துவக்குகிறது.  பின் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து,  ஜப்பானின் மீது ஊர்ந்து வருகிறது.  அங்கே, அலூடியன் தீவுகளைத் தாண்டி, பின் வட அமெரிக்காவை எட்டிப்பார்க்கிறது.  அங்கே வளைய கிரகணம் தெரியும் இடம் வட கலிபோர்னியா தான்.  அங்கிருந்து கிரகணம், ரெனோ(  Reno ) வை  ஒரே எட்டாகத்  தாவி, தெற்கு  உடாக்கில்(Southern Utah)  உள்ள  சியான் தேசியப் பூங்கா (Zion National Park) வழியே செல்கிறது.  அங்கிருந்து தெற்கு அரிசோனாவிலுள்ள   கிரான்ட்  கான்யனைப் பார்க்கப் போகிறது. அது பிறகு அல்புகுவிர்க் க்கும் , நியூ மெக்சிகோவுக்கும்  சென்று இறுதியில் டெக்சாசிலுள்ள  லும்போக்கா என்ற இடத்தில் சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனிலிருந்து ஓடியே போய்விடுகிறது.இந்த கிரகணத்தில் சூரியனின் வளையத்திற்குள் சந்திரனின் நிழல் படுகிறது.  எனவே, மீதமுள்ள சூரிய வட்டம் வளையமாகக் காட்சியளிக்கும்.   இதனையே நாம் வளைய சூரிய கிரகணம் என்கிறோம். வளைய கிரகணப் பாதை,  சந்திரன்,  சூரியன்  சீண்டல் விளையாட்டு/  தொட்டுப் பிடி விளையாட்டு / கண்ணா மூச்சி விளையாட்டு சீனக் கடற்கரையில் துவங்குகிறது. அது அப்படியே தைவான், தென் ஜப்பான், அமெரிக்காவின் வட மேற்குப் பகுதி, கனடாவினை முத்தமிட்டு  முடிகிறது. இதில் குவான்ஷோவு, டாய்பேர். டோக்கியோ மற்றும் அல்பூகுயிர்க் (Guangzhou, Taipei, Tokyo andAlbuquerque) போன்ற இடங்களில் தான் கிரகணத்தின் மையப் பகுதி இருக்கும். இதன் அதிக பட்ச மறைப்பு நேரம் வடபசிபிக் பெருங்கடலில்தான் அதுவும், அல்லூதியன் தீவுகளில் சரியாக
 5 நிமிடம், 45.3 நொடிகள் நீடிக்கும்.  பின் வட அமெரிக்காவில் சந்திரன் கோபித்துக் கொண்டு சூரியனை விட்டு விலகும். இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.

18 கருத்துகள்:

 1. சூரிய கிரகணம் பற்றி விரிவாக விளக்கப்படங்களுடன் பதிவிட்ட பேராசிரியர் திருமதி மோகனா அவர்களுக்கும், இதை வெளியிட்ட தங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 2. நல்ல அறிவியல் தகவல்.நன்றி வணக்கம்.

  பதிலளிநீக்கு
 3. சூரிய கிரகணம் பற்றி தமிழில் விளக்கங்கள் அளித்த மோகனா மற்றும் பதிவினை வெளியிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. நல்ல தகவல்கள்.பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. சீனக் கடற்கரையில் துவங்குகிறது. அது அப்படியே தைவான், தென் ஜப்பான், அமெரிக்காவின் வட மேற்குப் பகுதி, கனடாவினை முத்தமிட்டு முடிகிறது. இதில் குவான்ஷோவு, டாய்பேர். டோக்கியோ மற்றும் அல்பூகுயிர்க் (Guangzhou, Taipei, Tokyo andAlbuquerque) போன்ற இடங்களில் தான் கிரகணத்தின் மையப் பகுதி இருக்கும். இதன் அதிக பட்ச மறைப்பு நேரம் வடபசிபிக் பெருங்கடலில்தான் அதுவும், அல்லூதியன் தீவுகளில் சரியாக
  5 நிமிடம், 45.3 நொடிகள் நீடிக்கும். பின் வட அமெரிக்காவில் சந்திரன் கோபித்துக் கொண்டு சூரியனை விட்டு விலகும்.


  சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 6. சூரிய கிரகணம் பற்றி அழகான பதிவிட்ட பேரா. மோகனா மற்றும் பதிவினை வெளியிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. தில்​லைஇராதாஞாயிறு, மே 20, 2012

  தமிழில் விளக்கங்கள் அளித்த ​​மோகனா
  அவர்களுக்கும்அதன் பதிவி​னை ​வெளியிட்ட
  தாங்களும்நன்றி
  வாழ்த்துக்கள்
  அன்று ​கோவில் ந​டைதிறப்பதில்​லை​யே ஏன்
  கர்ப்பினி​பெண்அந்த​​நேரம்​​வெளி​யே
  வரூவதில்​லை​யே ஏன்
  இன்னும் பல விவரங்கள்
  இரூக்கலாம்
  அரூ​மை

  பதிலளிநீக்கு
 8. அருமையான விளக்கமும் படங்களும் கிரகணத்தை கிரஹிக்க வைத்தது

  பதிலளிநீக்கு
 9. வணக்கம். பேராசிரியர் அவர்களே! அக்கறையுடன் தமிழில் சுவையாக எழுதிப் பகிர்ந்திருப்பதற்குப் பாராட்டுகள். வளர்முகமாக அணுகுவீர்கள் என்னும் நோக்கில் என் சில கருத்துகளைச் சொல்ல விழைகிறேன் (ஏனெனில் தங்களைப் போன்றவர்களே நன்கு இவற்றைச் செப்பம் செய்ய இயலும்). கிரகணம் என்றால் என்ன? கிரகணப் "பாதை" என்றால் என்ன? "ஒவ்வொரு சூரிய கிரகணமும், "ஒவ்வொரு 177 நாட்களுக்கு ஒரு தடவை, 4 மணி நேரம் மாற்றிய நோடுகளிலும் வரும். " என்ற உங்கள் கூற்றின் பொருள் என்ன ? நோடு என்றால் என்ன? (நீங்கள் கூறுவது node என்று தெரியும்) இவற்றை எல்லாம் சுருக்கமாகவேணும் கூறாமல், அல்லது இவற்றுக்கான உதவித் தொடுப்புகள் தராமல் மற்ற செய்திகளைத் தருவதால் அதிகம் பயன் இல்லை !! "புரிந்துகொள்ள" அதிகம் ஏதும் இல்லை!! நீங்கள் கூறியவற்றோடு பொருளுறவு கொண்டு உள்வாங்கவும் இயலாது. நம் சூழலில் மாற்றுக்கருத்துகள் கூறவே பலரும் தயங்குகின்றார்கள். கோபம் கொண்டு விடுகின்றார்கள்!! இப்படியான அறிவியல் சார்ந்த எழுத்துகளில் சிந்தனையைத் தூண்டுமை, சில அடிப்படைகளையாவது புரியத் தருதல் கட்டாயம் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். தாங்கள் புகழ் ஈட்டிய பேராசிரியர் என்பதால், வாசகன் என்னும் என் கருத்துரைகளை வளர்முகமாக அணுகுவீர்கள் என்று நம்புகின்றேன். நன்றி. மேலும் சிறக்கவே என் கேள்விகள்/கருத்துகள்.

  பதிலளிநீக்கு
 10. கட்டுரையை எழுதிய அம்மா மோகனா அவர்களுக்கும், பெரும்பாலானோரைச் சென்றடைய பகிர்ந்திட்ட ஐயா ரத்னவேல் அவர்களுக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
 11. சூரிய கிரகணம் பற்றி தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 12. உபயோகமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி சார்.மோகனாம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. அன்பின் இரத்தின வேல் - பேராசிரியர் மோகனா அவர்களின் பல தகவல்கள் அடங்கிய கட்டுரை அருமை. அவர்களின் அரிய நேரத்தினை இதற்காகச் செலவிட்டு - சூரிய கிரக்னத்தினைப் பற்றிய கட்டுரை பதிவிட்டது நற்செயல். அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் பாராட்ட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 14. தில்லை ராதா அவர்களுக்கு

  வானியல் பற்றி நிறைய கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம். அதன் இணைப்புகள் கீழே கொடுத்திருக்கிறேன். அனைத்தையும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
  வானியல் கட்டுரைகள்
  பாகம்-1
  http://rathnavel-natarajan.blogspot.in/2011/07/1.html?showComment=1312019865675#c3258932435561801682

  வானியல் கட்டுரைகள்
  பாகம்-2
  http://rathnavel-natarajan.blogspot.in/2011/07/2.html?showComment=1312029589291#c5495539125686746806

  சந்திர கிரகணம் (10.12.2011) பற்றிய பதிவு
  http://rathnavel-natarajan.blogspot.in/2012/01/10122011.html?showComment=1327225295672#c5759411947378744462

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 15. திரு செல்வா அவர்களுக்கு

  வானியல் பற்றி நிறைய கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம். அதன் இணைப்புகள் கீழே கொடுத்திருக்கிறேன். அனைத்தையும் படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
  வானியல் கட்டுரைகள்
  பாகம்-1
  http://rathnavel-natarajan.blogspot.in/2011/07/1.html?showComment=1312019865675#c3258932435561801682

  வானியல் கட்டுரைகள்
  பாகம்-2
  http://rathnavel-natarajan.blogspot.in/2011/07/2.html?showComment=1312029589291#c5495539125686746806

  சந்திர கிரகணம் (10.12.2011) பற்றிய பதிவு
  http://rathnavel-natarajan.blogspot.in/2012/01/10122011.html?showComment=1327225295672#c5759411947378744462

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. விளக்கமான பதிவு. கிரகணம் பற்றி அதிகமாக தெரியாமல் , சடங்குகளை மாத்திரம் கடைபிடிக்கிறோம்.

  இனை பற்றன, தகவல்களால், பல செய்திகளை அறிய முடிகிறது.

  நன்றி.

  பதிலளிநீக்கு