புதன், மே 30, 2012

பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு


எனது மதிப்பிற்குரிய இனிய நண்பர் திரு ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்கள் பக்கவாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றி முகநூலில் ஒரு அருமையான, பயனுள்ள கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.  அவரது அனுமதியின் பேரில் எனது பதிவாக வெளியிடுகிறேன்.  திரு ராமசுப்ரமணியம் நாகேஸ்வரன் அவர்களுக்கு எங்களது மனப்பூர்வ நன்றி.

உலக அளவில் மரணத்திற்கு காரணமான் நோய்களில் பக்கவாதம் என்று அழைக்கப்படும் "ஸ்ட்ரோக்"..2ம் இடத்தை பிடித்திருக்கிறது.!

ஸ்ட்ரோக் (STROKE) என்றால் என்ன : 

ரத்தக் குழாய்களின் மூலம் மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் ஆக்சிஜன் அளவு..(பிளாட்டிலட் அக்ரிகேஷன்) ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக தடைபட்டு...அதன் காரணமாக ஏற்படும் பிரச்சினையே பக்கவாதம் என்று அழைக்கப் படுகிறது.!

காரணிகள் என்ன:‍

பொதுவான காரணிகளாக...உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை, உயர் கொழுப்பு மற்றும் மனஅழுத்தம் (ஸ்ட்ரெஸ்..STRESS) போன்ற மரபு சார்ந்த மற்றும் இயல்பு சார்ந்த பிரச்சினைகளால் மட்டுமன்றி(என்டோஜீனியஸ்..ENDOGENEOUS)..மாறிவரும் சமூகநிலைகளால்...சிறு வயது முதல்...வயதானவர்கள் வரை ( பெரும்பாலும் ஆண்கள்)...உள்ள தேவையற்ற பழக்கங்களான...தொடர்ந்து மது அருந்துதல், சிகெரெட், புகையிலை..இன்னபிற லாகிரி வஸ்துக்கள்
(எக்ஸோஜீனியஸ்..EXOGENEOUS)...பயன்பாடும்...மேற்கூறிய சிக்கல்களை நாள‌டைவில் ஏற்படுத்தி..எண்ட் ஆர்கன் டேமேஜ் என்று அழைக்கப்படுவதில் ஒன்றான "மூளையின் செயல்பாடு"..பாதிக்கப் படுவதை...பக்கவாதம் ஏற்படுத்தும் காரணிகளாக கொள்ளலாம்.!

விளைவுகள்:

பொதுவாக ஒருவருக்கு மேற்கூறிய காரணங்களில் ஏதாவது ஒன்றின் மூலம்
பக்கவாதம் ஏற்பட்டால்...கை அல்லது கால் செயல்படாமல் போவதையும் (பராலிசிஸ்..PARALYSIS)..மூளையின் ஒருபகுதி செயலிழப்பதால்..முகம் / வாய் கோணலாவதையும் (பேசியல் பிளஷிங்..FACIAL FLUSHING)...ஞாபகசக்தி இழப்பு (மெமரி லாஸ்) மற்றும் பார்த்து புரிந்து கொண்டு செயல்படாமல் போகும் நிலையும் ( டிமென்ஷியா..DEMENTIA)... ஏற்படுவதை நாம் காண்கிறோம்.!


பக்கவாதம் யாருக்கு ஏற்படும்:

முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதித்து வந்த இந்தப் பிரச்சினை..பல்வேறு காரணிகளால்..15 வயது முதலே ஏற்படும் நிலையினால் (விபத்துக்களால் ஏற்படும் தலைக்காயம்)..ஆண்டுதோறும்...60 லட்சம் மக்கள் இறப்பதாக...உலக சுகாதார மையத்தின் அறிவிப்புகளும்..மருத்துவ நிபுணர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தெரிவிக்கின்றன.!

தீர்வு :

 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்...தங்களது ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும்
கொழுப்பின் அளவை..மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி.. பரிசோதித்துக் கொண்டு..சரிவிகித உணவு, மிதமன உடற்பயிற்சி ( நடைப்பயிற்சி....BARISK WALK) தேவையற்ற‌ பழக்கவழக்கங்களை கைவிடுதல் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.! தேவை ஏற்பட்டால்..நிபுணரின் பரிந்துரைகளின் படி
மருந்துகளை சரியான கால அவகாசத்தில் எடுத்துக் கொள்வதன் மூலமும்..சரியான பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி...உயர் ரத்த அழுத்தம், அதிக சர்க்கரை மற்றும் அதிக கொழுப்பு இவற்றை கட்டுப்படுத்தி வைத்து...சீரான வாழ்க்கையினை நடத்தலாம்.!

சரிவிகித உணவு மற்றும் பயிற்சிகள்:


1. நாம் அருந்தும் உண‌வில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க...வறுத்த உணவுக்கு பதிலாக...வேகவைக்கப்பட்ட உணவுகளையும், நார்ச்சத்து மிக்க பழங்களையும் ( சர்க்கரை நோயாளிகள் பழங்கள் உட்கொள்வதில் மருத்துவ ஆலோசனை தேவை)..எடுத்துக் கொள்வதுடன்...உணவில் தாவர எண்ணைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.!


2. மிதமான நடைப் பயிற்சியினை (பிரிஸ்க் வாக்..) தினமும் 30 நிமிடம்..முடிந்தால்.. காலை / மாலை இரு வேளைகளிலும் (அல்லது ஏதாவது ஒரு வேளையிலாவது) மேற்கொள்ள வேண்டும்.!இவை நம் உடலினை சீரான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.!

LAST BUT NOT THE LEAST...
வாதநோயின் அறிகுறிகள் தெரிந்தால்...கைவைத்தியம் ஏதும் பார்க்கமல் அருகிலுள்ள அரசு தலைமை மருத்துமனையினையோ ( இதற்கென தனிப் பிரிவு ஒவ்வொரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும் இயங்குகிறது) அல்லது மருத்துவ நிபுணரையோ..உடனே அணுகி சிகிச்சை பெறுவது சாலச் சிறந்தது.!

நண்பர்களே..இன்று உலக பக்கவாத தினம்...அது குறித்து சில தேவையான குறிப்புகள்...இனிய மதியம் / மாலை வணக்கத்துடன்...:-)
இந்த கட்டுரையை படித்து உங்கள் கருத்துகளை பின்னூட்டப் பெட்டியில் (Commentary Box) பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இந்த பதிவின் link களை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி படிக்க சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதன் link ஐ மற்ற திரட்டிகளில் இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Google Connect இல் உங்கள் பெயரை பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் Dash Board க்கு எங்கள் பதிவு வந்து விடும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியினை அதற்கான கட்டத்தில் பதிந்து கொள்ளுங்கள்.  நாங்கள் பதிவு வெளியிடும்போது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் inbox க்கு வந்து விடும்.

மிக்க நன்றி.16 கருத்துகள்:

 1. மிகவும் பயனுள்ள பதிவு.நமக்கு அவர் இருக்கின்றார் இவர் இருக்கின்றார் என்றில்லாது... ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி அக்கரை கொள்ளவேண்டிய அவசியத்தினை உணர்த்துகின்றது.

  பகிர்வுக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 2. பக்க வாதம் எனும் ஸ்ட்ரோக் பற்றிய பதிவு மிகவும் பயனுள்ளது..

  பகிர்வுக்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 3. மிகவும் பயனுள்ள தகவல், நன்றி அய்யா....!!!

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லாபுதன், மே 30, 2012

  ஆம் பயனுள்ளது அனைவரும் உணர வேண்டியது. தாங்கள் இதை எடுத்துப் பிரசுரித்தமைக்கு நன்றி. திரு இராமசுப்பிரமணியம், நாகேஸ்வரன் அவர்களுக்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 5. பக்கவாதம் பற்றிய தகவல்களுடன் நல்லதொரு கட்டுரை. பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. பயனுள்ள தகவல் அண்ணாச்சி!

  பதிலளிநீக்கு
 7. பயனுள்ள பதிவு. நன்றி...

  பதிலளிநீக்கு
 8. மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு ,
  தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளது.தற்காலத்தில்,இள வயதினர் ,தவறான பழக்க வழக்கங்களினால் ,இந்த நோய்க்கு ஆளாகிறார்கள் .உரிய நேரத்தில் பிரசுரிததமைக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. அருமையான விளக்கங்களுடன் கூடிய
  பயனுள்ள பதிவு ஐயா.
  பகிர்வுக்கு நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 10. பயனுள்ள தகவல்கள் ஐயா . தேடித் தினம் நல்ல தகவல்களை தந்துதவும் உங்கள் பணிக்கு மிக்க நன்றிகள் .

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் தேவைப்படும் தகவல்கல் நிறைந்த பதிவு.....மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 12. பயனுள்ள பதிவு. மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. பக்கவாதம் பற்றி அறிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு